Digital-Divide/D0/First-aid-measures-for-ChickenPox/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
00:06 | அசோக் வயல்வெளியில் இருந்து வீட்டுக்கு வருகிறார். காய்ச்சலும் உடல்வலியும் இருப்பதாக கூறுகிறார். |
00:12 | அவர் மனைவி அனிதா அவரை பார்த்து அவரது கைகளிலும் கால்களிலும் கொப்புளங்களை கவனிக்கிறார் |
00:18 | அம்மனில் உக்கிரம் தன் கணவனின் மீது விழுந்துள்ளதாக பயந்து கூறிகிறார். |
00:24 | அவளது குழந்தைகளை உடனே வீட்டை விட்டு செல்லுமாறு கூறுகிறார். |
00:29 | அம்மாவும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வந்து கதவை வெளிப்புறமாக தாளிடுகின்றனர். |
00:35 | இதற்கிடையில், கிராம மருத்துவமனை மருத்துவர் அவர்களின் வீட்டைக் கடக்கும்போது அனிதாவிடம் பேசுகிறார். |
00:43 | அனிதா மற்றும் அவரின் குழந்தைகளின் கவலையடைந்த முகத்தைப் பார்த்து என்ன நடந்தது என அனிதாவிடம் அவர் கேட்கிறார். |
00:51 | அம்மனின் உக்கிரம் தன் கணவனின் மீது விழுந்துள்ளதாக அனிதா மருத்துவரிடம் கூறுகிறார். |
00:57 | அவரது கணவரை காண விரும்புவதாக மருத்துவர் கூறுகிறார். |
01:02 | ஆனால் தன் கணவரை காணக் கூடாது என அனிதா மறுக்கிறார். |
01:07 | மருத்துவர் அனிதாவை புறக்கணித்துவிட்டு வீட்டின் உள்ளே செல்ல பின் அனிதா தயக்கத்துடன் பின்தொடர்கிறார். |
01:15 | மருத்துவர் அசோக்கை பரிசோதித்து அவருக்கு சின்னம்மை இருப்பதாக தெரிவிக்கிறார். |
01:21 | ஆனால் அசோக் மற்றும் அனிதாவிற்கி சின்னம்மை பற்றி தெரியாது. |
01:26 | அவர்கள் மருத்துவரை புரியாதவாறு பார்க்கிறார்கள். |
01:29 | டிஜிடல் டிவைடை இணைப்பதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
01:34 | இங்கே நாம் பார்க்கபோவது சின்னம்மை, அதன் அறிகுறிகள், காரணங்கள், செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. |
01:42 | முதலில் சின்னம்மை என்றால் என்ன என பார்ப்போம். |
01:46 | சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோய். இது உடலில் அரிக்கும் கொப்புளங்களை உருவாக்கும். |
01:53 | இந்த நோயை தடுப்பதில் சின்னம்மை தடுப்பூசி நன்றாக வேலை செய்கிறது. |
01:58 | ஒரு சிலர் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் இன்னும் சின்னம்மை உள்ளது. |
02:03 | ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவே. |
02:06 | பொதுவாக, சின்னம்மை வீரியம் குறைந்தது. உயிருக்கு ஆபத்தானது அல்ல. |
02:10 | ஆனால் சில சமயங்களில் மிக தீவிரமாக இருக்கும். மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். அல்லது இறக்கவும் கூடும். |
02:18 | சின்னம்மை பாதிக்கக்கூடியவர்கள் |
02:20 | * கர்ப்பிணி பெண்கள், |
02:22 | புதிதாய் பிறந்த குழந்தைகள், |
02:25 | இளம்வயதினர் மற்றும் பெரியவர்கள் மற்றும் |
02:28 | குறைந்த நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவர்கள். |
02:32 | ஒருமுறை சின்னம்மையால் பாதிக்கப்பட்டால், பொதுவான அந்த வைரஸ் மீண்டும் வெளிப்படாது. |
02:38 | ஒருவர் சின்னம்மையால் மறுமுறை பாதிக்கப்பட்டால் அது ஷிங்கிள்ஸ் (shingles) எனப்படும். |
02:45 | சின்னம்மைக்கான சில அறிகுறிகளை இப்போது காண்போம். |
02:50 | இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்க கூடிய காய்ச்சல் |
02:54 | சிவந்த வெப்பமான புண்பட்ட சருமம் |
02:58 | வீட்டு வைத்தியத்தால் குணமாக்க முடியாத தீவரமான அரிப்பு |
03:03 | 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கக்கூடிய அரிப்பு |
03:08 | இப்போது சின்னம்மையின் நோய்க்காப்பு காலம் மற்றும் தொற்றும் தன்மையைக் காண்போம். |
03:13 | சின்னம்மை கொப்புளங்கள் 3 லிருந்து 5 நாட்களிலும் மேற்பரப்பு புக்குகள் 7 லிருந்து 10 நாட்களிலும் உருவாகிறது |
03:22 | அது உருவாகிய ஒன்றிரண்டு நாட்களில் தொற்றக்கூடியதாகிவிடும். |
03:27 | இது அனைத்து கொப்புளங்களும் புக்காகி முடியாதவரை இது தொற்றக்கூடியதாக இருக்கும் |
03:33 | இது மிகவும் தொற்றக்கூடியது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக தீவிரமாக பரவக்கூடியது. |
03:39 | இப்போது சின்னம்மைக்கான காரணங்களைக் காண்போம். |
03:43 | பின்வரும் வழிகள் மூலம் சின்னம்மையை பெறுவோம் |
03:47 | * சின்னம்மை கொப்புளங்களின் நீர்க்கோவையைத் தொடுதல் அல்லது |
03:52 | * சின்னம்மை நோய் உள்ளவர் உங்கள் அருகில் இருமுதல் தும்முதல் |
03:57 | * ஏற்கனவே சின்னம்மையால் நீங்கள் பாதிக்கப்படாவிட்டாலும் |
04:03 | * சின்னம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் உங்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். |
04:08 | இப்போது சின்னம்மையால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என காண்போம். |
04:14 | அது கொசுக்கடி/பூச்சிக்கடியா அல்லது சின்னம்மைதானா என மருத்துவரை அணுகி உறுதிசெய்க |
04:20 | மிதமான உணவை உண்க. வீட்டில் சமைத்த உணவு சிறந்தது. |
04:26 | முதல் சில நாட்களுக்கு 3 4 மணிநேரங்களுக்கு ஒருமுறை குளிர்ந்த அல்லது இளஞ்சூடான நீரில் குளிக்கவும். |
04:33 | குளிக்கும் நீரில் வேப்பஇலையை போடவும். இது அரிப்பைக் குறைக்கும். |
04:38 | குளித்துவிட்டு உடலை துடைக்கவும். |
04:42 | அதிகமாக நீர் குடிக்கவும். இளநீர், பார்லி (barley) அல்லது ஏதேனும் குளிர்ச்சியானதை சாப்பிடவும். |
04:49 | நோய் பரவுவதை தவிர்க்க நோயாளியின் துணிகளை தனியாக துவைக்கவும். |
04:55 | உங்களை சின்னம்மை பாதிக்கவில்லை அல்லது தடுப்பூசி போடவில்லை எனில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். |
05:02 | இப்போது சின்னம்மையின் போது செய்யக்கூடாதவைகளைக் காண்போம். |
05:08 | சிவந்த அரிப்புள்ள கொப்புளங்களை கீறாதீர். |
05:10 | இது பாக்டீரியா தொற்றுக்கும் வடுவிற்கும் வழிவகுக்கும். |
05:15 | மற்றவருடன் பழகுவதை தவிர்க்கவும். ஏனெனில் அவர்களுக்கும் நோய் பரவலாம். |
05:22 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நினைவுகொள்க, எப்போது மருத்துவ உதவியை நாடுவது உதவிகரமானது. |
05:28 | இந்த டுடோரியரை கேட்டதற்கு நன்றி. |
05:32 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
05:35 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
05:39 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05:44 | ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05:49 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05:53 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06:01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:05 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:12 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:22 | இந்த டுடோரியலுக்கு அனிமே ஷன் ஆர்த்தி மற்றும் ட்ராயிங்ஸ் செளரப் காட்கில் |
06:30 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |