GIMP/C2/How-To-Fix-An-Underexposed-Image/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:48, 1 April 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.23 GIMP tutorial க்கு நல்வரவு.
00.25 வடக்கு ஜெர்மனி Bremen ல் இருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.


00.32 Norman இடமிருந்து மின்னஞ்சல் மூலம் இந்த படத்தைப் பெற்றேன்.
00.35 அவர் இதை சேமிக்க சொன்னார்.
00.39 இதுதான் raw convertor ஐ பயன்படுத்திய பிறகு அவர் பெற்ற படம். இங்கே இதுதான் உண்மை படம்.
00.48 படங்களை ஒப்பிடுவதில் Norman செய்தது தெளிவாக உள்ளது.
00.53 முதலில் படத்தை சுழற்றியுள்ளார். பின் foreground ல் நிறங்கள் மற்றும் பிரகாசத்தன்மையைக் கொண்டுவர curves tool ஐ பயன்படுத்தி படத்தை edit செய்துள்ளார். மேகங்களை கருமையாக்காமல் முயற்சித்துள்ளார்.
01.09 இங்கே இந்த படத்தை பார்க்கும்போது மேகங்கள் நன்றாக உள்ளது.
01.14 எனக்கு அவை பிடித்துள்ளது. இந்த tutorialலில் இந்த படத்தைக் காட்ட அவரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். இப்போது அவரது வேலையை திரும்ப செய்ய முயற்சிப்பேன். பின் அவரது படத்தில் மேகத்தை இன்னும் நன்றாக கொண்டுவர முயற்சிப்பேன்.
01.33 ஆனால் முதலில் EXIF information ல் இந்த படம் பற்றி ஏதேனும கிடைக்கிறதா என பார்ப்போம். அது எது தவறானது என்பதற்கு குறிப்பு தருகிறது.
01.43 இது ஒரு Panasonic camera என காணலாம், இந்த camera மிகச்சிறிய sensor ஐ கொண்டுள்ளது.
01.51 இந்த camera ஐ உங்கள் சட்டை பையில் வைக்கலாம்.
01.57 இங்கே exposure data உள்ளது.
02.02 ஒரு நொடிக்கு ஆயிரம் exposure time. Aperture 5.6.
02.09 flash செயலில் இருந்தது. படத்தினுள் flash ன் effect ஐ camera கணக்கிட்டது.
02.16 இம்மாதிரியான சிறிய camera ன் flash இதுபோன்ற காட்சியில் வேலை செய்யவில்லை.
02.24 படத்தின் இந்த பகுதியை பிரகாசமாக்க சிறிய அணுகுண்டு போன்றது உங்களுக்கு பின்னால் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.


02.36 இந்த படம் JPEG ல் சேமிக்கப்படுகிறது. அது மற்றொரு பிரச்சனையைக் கொடுக்கிறது.
02.42 JPEG compression காரணமாக இந்த படத்தின் மிக சிறப்பான இந்த பகுதி மிக கருமையாகிவிட்டது.
02.53 தொடுவானத்தை பெரிதாக்கும்போது நன்கு வரையறுக்கப்பட்ட விஷயங்களைக் காணலாம். ஆனால் சற்று அதிகமாக கூர்மையாக்கப்பட்டுள்ளது. தொடுவானத்தில் ஒரு கப்பலும் உள்ளது.
03.08 மேகங்கள் மிக தெளிவாக உள்ளன. ஆனால் கருமை பகுதியினுள் செல்லும்போது... இங்கே ஒரு மரத்தைக் காண்க. ஆனால் எதுவும் தெளிவாக தெரியவில்லை.
03.19 இது ஏனெனில் JPEG... படத்திற்கு வெளியே பகுதிகளை விடுகிறது. camera ல் computer program இதை நீங்கள் பார்ப்பீர்கள் என நினைக்கவில்லை.
03.32 ஆனால் இதை இங்கே நான் பார்க்க விரும்புகிறேன். JPEG compression ல் நான் சற்று மாட்டிக்கொண்டேன். ஏனெனில் இங்கே இழந்த தகவல்களை மீண்டும் காண முடியாது.
03.45 இந்த raw ஐ படம்பிடிக்கும்போது இதுமாதிரியான பிரச்சனைகளைத் தவிர்க்கவும். அடுத்த tutorial ல் UF raw converter மற்றும் அதை எவ்வாறு gimp ல் பயன்படுத்துவது என்றும் காட்டுகிறேன். அடுத்த tutorial க்கு இது ஒரு நல்ல விஷயம் என நினைக்கிறேன்.
04.06 படத்தை இங்கே tool box மீது இழுப்பதன் மூலம் GIMP னுள் ஏற்றுகிறேன். window ஐ பெரிதாக்குகிறேன்.
04.17 இப்போது என் முதலாவது படி இந்த படத்தை சற்று அளவு மாற்றம் செய்வது. ஏனெனில் இந்த படம் மிக பெரியது. முடிவு ‘XCF’ file 40 mega bytes ஐ விட அதிகமாக இருக்கும்.
04.29 tool bar ல் image மீது சொடுக்கி scale image ஐ சொடுக்குவதன் மூலம் அளவு குறைப்பது செய்யப்படும். 1000 pixel என width ஐ மாற்றுகிறேன். tab ஐ அழுத்தும் போது height... 750 pixels என பெறுகிறேன். சிறந்த interpolation ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே scale ல் சொடுக்குகிறேன்.


05.01 இங்கே frame னுள் முழு படத்தை பெற Press shift +ctrl+ E ஐ அழுத்துக. இப்போது இந்த படத்தை edit செய்ய தயாராக உள்ளேன்.
05.11 முதலாவது படி சுழற்றுவது.
05.14 முன் tutorialகளில் ஒரு படத்தை சுழற்றுவதற்கான இரு வழிகளைக் காட்டினேன். இப்போது இது மூன்றாவது வழிக்கான நேரம்.
05.23 எனவே நான் கிடைமட்ட கோட்டைப் பார்க்கக்கூடிய இடத்தில் படத்தை பெரிதாக்க அதே படியை பின்பற்றுகிறேன். கிடைமட்ட கோடு தொடுவானத்தின் மீது உள்ளது. ஏனெனில் தொடுவானத்தின் வரையறையில் இருந்து கிடைமட்டம் வந்தது. (is it right sir?)
05.39 பின் tool box லிருந்து measurement tool ஐ தேர்கிறேன். Info window ஐ தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் இது image frame க்கு இடையில் வெளிவருகிறது. ஆனால் அனைத்து தகவல்களையும் இங்கே status bar க்கு கீழே நான் பெறமுடியும்.


06.01 இப்போது தொடுவானத்தின் கோணத்தைப் பெறுவது எளிது, cursor ஐ தொடுவானத்தின் மீது வைத்து mouse button ஐ அழுத்தி அதை இழுக்கவும்.
06.15 அடுத்த பக்கத்திற்கு கோட்டை இழுத்து... கோட்டை தொடுவானத்திற்கு இணையாக்கி... button ஐ விடுவிக்கவும்.
06.25 status bar ல் கோணத்தின் தகவலை காணவும். கோணம் 1.64° என காண்கிறேன்.
06. 38 இப்போது rotate tool ஐ தேர்கிறேன், படத்தினுள் சொடுக்கி... அதில் எழுதுக -1.63°(degrees), minus... ஏனெனில் plus 1.63 °(degrees) க்கு எதிரே வைக்க விரும்புகிறேன்.
06.58 rotate ல் சொடுக்குக. சுழற்றப்பட்ட படத்தை பெறுகிறோம்.


07.05 தொடுவானத்தை சோதிக்க scale ஐ கீழே இழுக்கவும். இது கிடைமட்டமாக உள்ளது.


07.14 அடுத்த படி படத்தை crop செய்வது. ஆனால் இப்போது படத்தை என்னால் crop செய்ய முடியாது. ஏனெனில் படத்தின் இந்த பகுதி தெரியவில்லை. எனவே இங்குள்ளதை தீர்மானிக்க முடியவில்லை.
07.31 எங்கு crop செய்யவேண்டும் என எனக்கு தெரியவில்லை, எனவே முதலில் படத்தின் இந்த பகுதியை சற்று பிரகாசமாக்க வேண்டும்.
07.43 curves tool ல் வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் layer ஒரு பிரதி எடுக்கிறேன்.
07.50 ஏனெனில் curves tool ஐ பயன்படுத்தும்போது, படத்தின் தகவல்கள் இழக்கப்படுகின்றன.
07.56 எனவே திரும்ப எடுக்க முடியாத எதையும் படத்தில் செய்யாதீர்.
08.01 நன்று. சுழற்றிவிட்டேன். ஆனால் அடுத்த படிகளில்... எதையும் உண்மை படத்தில் செய்யாதீர்.
08.08 முதலில் நிலப்பகுதியை edit செய்கிறேன். எனவே இந்த layer ஐ பெயர் இருக்கும் field ல் double click செய்து Land என்கிறேன். பின் enter ஐ அழுத்துக.
08.22 இப்போது இந்த layer Land என பெயரிடப்படுகிறது.


08.25 curves tool ஐ தேர்ந்தெடுத்து, படத்துனுள் சொடுக்குகிறேன். இப்போது படத்தை ஆராய்கிறேன்.
08.34 படத்தின் இந்த பகுதி உண்மையில் மிக கருப்பான பகுதி. இதை எவரும் சுலபமாக செய்யலாம். ஆனால் இங்கே புல்வெளியும் மிக கருப்பாக உள்ளது.
08.46 நீர் இங்கே gray scale ன் இந்த பகுதியில் இருப்பதாக தெரிகிறது. வானம் இந்த பகுதியில் இருப்பது தெளிவாக தெரிகிறது.


09.01 எனவே படத்தில் நிலப்பகுதியை பிரகாசமாக்க வேண்டும். இதை மேலே இழுப்பதன் மூலம் இதை செய்கிறேன்.
09.15 இப்போது எனக்குள் எழும் கேள்வி... இதை எவ்வளவு தூரம் நான் இழுக்க வேண்டும். ஏனெனில் மிக தூரமாக செல்லும்போது இது செயற்கையாக தெரியும்.
09.28 வானம் மற்றும் நிலத்தை பெரிய வித்தியாசங்களுடன் curves ல் இணைக்க விரும்பினால், அது உண்மை படம் போல தெரியாது.
09.40 எனவே இதை சற்று கீழே இழுக்கிறேன்.
09.44 இதை முயற்சிக்கிறேன்.
09.49 இங்கே இது நன்றாக உள்ளது.
09.52 கடல் மிக பிரகாசமாக இல்லை. தேவாலயமும் தெரிகிறது.
10.00 எனவே OK ல் சொடுக்குகிறேன்.
10.06 நிலப்பகுதியை edit செய்த பிறகு, வானத்திற்கு செல்கிறேன்.
10.12 எனவே மீண்டும் உண்மை layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன். அதை மேலே நகர்த்தி... அதற்கு sky என பெயரிடுகிறேன்.
10.21 Layer மீது Double click செய்து, sky என பெயரிட்டு, enter ஐ அழுத்துக. sky உள்ளது.
10.28 மற்ற layerகளை பாதிக்காமல் sky layer ஐ மட்டும் edit செய்ய விரும்புகிறேன். அதை செய்ய ஒரு layer mask ல் வேலை செய்கிறேன்.
10.37 sky layer மீது வலது சொடுக்கி, add layer mask மீது சொடுக்கி... white layer mask அதாவது full opacity ஐ தேர்ந்தெடுக்கவும். அது சொல்வது இந்த layer முழுதும் தெரியும் மற்றும் இது வெள்ளை.
10.54 land layer ஐ மறைக்க விரும்புகிறேன். வானம் மற்றும் கடலுக்கு இடையே கூர்மையான விளிம்பும் எனக்கு வேண்டும். அதற்கு gradient tool ஐ பயன்படுத்துகிறேன்.


11.07 gradient என்பது கருப்பும் வெள்ளைக்கும் இடையில் இருப்பது.
11.13 இங்கே இதை ஒரு scrap layer ல் காட்டுகிறேன்.
11.34 gradient tool ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். tool icon ஐ double click செய்யும்போது, tool தேர்வுகள் தானாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது ஒரு புது விஷயம். தற்செயலாக இதை நான் கண்டுபிடித்தேன்.
11.50 இது உங்களுக்கு புது விஷயம் என நான் நினைக்கவில்லை. ஆனால் எனக்கு இது புதிது.
11.56 தெரிந்துகொள்ள நல்ல விஷயம்.
11.59 gradient tool க்கு திரும்ப வருகிறேன், இடது mouse button ஐ சொடுக்குவதன் மூலம் இங்கே இந்த கோட்டை இழுக்கும்போது.... இதை விடுவிக்கவும்.
12.09 ஆரம்ப புள்ளியின் இடப்பக்க பகுதி கருப்பால் நிரப்பப்படுகிறது. gradient ன் மற்றொரு பக்கமான முடிவு புள்ளியின் வலது பகுதி வெள்ளையால் நிரப்பப்படுகிறது.
12.26 கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையேயான பகுதியில் சாம்பல் நிறங்களின் வித்தியாசமான தொடர்கள் உள்ளன. இது gradient எனப்படும்.
12.38 மிக நீண்ட gradient அல்லது மிக குறைந்த gradient ஐ உருவாக்கலாம்
12.44 இங்கே வித்தியாசமான gradient toolகள் உள்ளன. நான் இந்த கருப்பு வெள்ளையை தேர்கிறேன்.
12.56 இங்கே வட்டத்தை உருவாக்கக்கூடிய radial போன்ற மேலும் பல தேர்வுகள் உள்ளன.
13.04 நீங்கள் பயன்படுத்தக்கூடிய மேலும் பல தேர்வுகள் உள்ளன.
13.10 இந்த toolன் இந்த தேர்வுகளை கண்டறிவது மிதிப்புடையது.
13.15 எனவே shape ஐ linear க்கு அமைக்கிறேன். இங்கே பழைய layer ஐ நீக்குகிறேன்.
13.25 இப்போது இங்கே sky layer ல் நான் வேலை செய்கிறேன். படத்தை transparent ல் இருந்து படத்தை வெளிக்காட்டும்படி உருவாக்குவதற்கு gradient கருப்பிலிருந்து வெள்ளைக்கு அமைக்கப்படுகிறது,(is it right?). Layer dialog க்கு திரும்ப சென்று அந்த layer ஐ தான் செயல்படுத்தியுள்ளேனா என சோதிக்கிறேன். ஏனெனில் உண்மை படத்தில் நான் வரைய விரும்பில்லை.
13.54 Layer mask ஐ வரைய ஆரம்பிக்கிறேன்.
13.59 படத்தை பெரிதாக்க zoom tool ஐ தேர்ந்தெடுக்கிறேன்
14.04 இதற்கு சற்று பயிற்சி வேண்டும்.
14.14 இங்கே இந்த புள்ளியுடன் ஆரம்பித்து.. இங்கே முடிக்கிறேன்.
14.20 நேரான gradient எனக்கு வேண்டும். ஏனெனில் இவ்வாறான gradient இவ்வாறான முடிவைக் கொடுக்கும். இது எனக்கு வேண்டும்.
14.32 படியை undo செய்ய ctrl + z ஐ அழுத்துக.


14.37 எனவே control key ஐ அழுத்துகிறேன். இப்போது இங்கே slider ன் இயக்கம் 5 degrees க்கு மட்டுப்படுத்தப்படுகிறது.


14.49 எனவே இங்கிருந்து... இந்த புள்ளிக்கு இதை உருவாக்க ஆரம்பிக்கிறேன்.


14.58 முழு படத்திற்கு திரும்ப போகும்போது இது என் gradient என்பதைக் காணலாம்.
15.06 மற்ற layerகளை செயல்நீக்கும்போது, மேல் layer ல் படத்தின் மேல் பகுதி மட்டும் தெரிகிறது. மற்றவை background ல் உள்ளன.
15.23 ஆனால் இது மிக திருப்தியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
15.27 இது சற்று செயற்கையாக உள்ளது. எனவே இந்த வானத்தை இப்போது சற்று பிரகாசமாக்க விரும்புகிறேன்.


15.34 அதை செய்ய, முதலில் layer mask ஐ செயல்நீக்க வேண்டும். அந்த layer ஐ மட்டும் அதை மீது வேலைசெய்ய செயல்படுத்த வேண்டும். மற்றபடி layer mask ல் curves tools பயன்படுத்தியிருக்க வேண்டும்.
15.48 Layer ன் செயல்படும் பகுதியை அதன் மீது வெள்ளை frame இருப்பதைக் கொண்டு எப்போதும் கண்டறியலாம்.
15.56 எனவே இதை இங்கே முயற்சிக்கலாம்.
15.59 இப்போது வானத்தை பிரகாசமாக்க நினைக்கிறேன். எனவே இதை மேலே இழுக்கிறேன்.
16.12 இது மிக திருப்தியாக இருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் வானம் பிரகாசமாக உள்ளது. வானம் மற்றும் கடலுக்கு இடையேயான செயற்கை விளிம்பு மறைந்தது.
16.29 இது வேலை செய்யும் என நினைக்கிறேன்.
16.32 எனவே sky layer ஐ செயல்நீக்குவதன் முலம் படத்தை கீழுள்ள layerகளுடன் ஒப்பிடுவோம்.
16.42 வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.
16.46 இது உண்மையான படம்.
16.50 இந்த layer ல் புதிய வானம். இது கீழே புது நிலப்பகுதி.
16.57 நிலத்தில் மேலும் contrast ஐ பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். ஆனால் எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. எனவே இதை நான் முயற்சிக்க வேண்டும்.


17.07 எனவே land layer ஐ double click செய்க. மேலும் அதிக contrast ஐ கொடுக்கும் Overlay mode ஐ தேர்ந்தெடுக்கவும். ஆனால் இது உண்மையில் அதிகம். எனவே opacity ஐ குறைக்கிறேன்.


17.25 இது நன்றாக உள்ளதா இல்லையா? ஆனால் நன்றாக உள்ளது என நான் நினைக்கிறேன்.
17.33 இப்போது நான்கு layerகள் உள்னன.
17.36 background ஆன உண்மை படம். அது இனி நமக்கு உண்மையில் தேவையில்லை. land layer, ஒரு land copy மற்றும் layer mask உடன் sky.
17.50 படத்தின் தகவலை இழக்காமல் இந்த அனைத்து மதிப்புகளையும் மாற்ற முடியும்.
17.58 இதுதான் Layerகளை பயன்படுத்துவதன் நன்மை.
18.03 இப்போது கடைசி பகுதி... cropping. Norman இதை 7:5 ratio ல் crop செய்ய விரும்பினால். ஏனெனில் அவரது printer 7/5 inch paper ஐ பயன்படுத்துகிறது.
18.18 எனவே அதை செய்யலாம், 7/5. fixed aspect ratio .
18.27 எங்கே crop செய்வது? இந்த படத்தில் எங்கே Norman crop செய்தார் என நான் மறந்துவிட்டேன் என நினைக்கிறேன்.
18.34 எனவே இங்கே அதை முடிவு செய்யலாம்.
18.36 மரத்தை சேர்க்க வேண்டும்... காய்ந்த புல்வெளியையும் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
18.43 எனவே வலது மூலையில் ஆரம்பிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். Crop tool... மேலே இழுக்கவும்.
18.58 இது ரசனையைப் பொருத்தது. உந்துதலுடன் செய்ய ஒன்றும் இல்லை. ஒருவரால் கற்க முடியும்.
19.06 இவை rules of thirds
19.08 இதை உள்ளே வைக்கிறேன்.
19.13 இங்கே தேவாலயத்தின் முன் பக்கம் இப்போது சுவாரசியமான ஒரு பகுதியான இருப்பதைக் காண்க.
19.20 இங்கே மிக கலைத்திறனுடன் பொன்னான பகுதி உள்ளது. இது உதவிகரமாக இருக்கும். உங்கள் கண்களே சிறந்தது என நினைக்கிறேன்.
19.33 இது வேலைசெய்யும் என நான் நினைக்கிறேன்.
19.37 இந்த படத்தை JEPG படமாக சேமிக்க விரும்புகிறேன்.
19.42 அதற்கு முன் இதை சற்று கூர்மையாக வேண்டும்.
19.47 கூர்மையாக்கலின் தடயங்கள் முன்னர் தெரிந்தன. நான் செய்த் அனைத்து வேலைகளும் போய்விட்டன. (it gives proper meaning of that?)
19.55 Halos ஐ காண வெள்ளைக் கோடுகள் தெரிந்தன.
20.00 இந்த முறையும் filters... enhance... sharpen mode ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன்
20.16 இது அடிப்படையில் ஒரு கூர்மையாக்கப்படாத mask, சில நிலையான மதிப்புகளுடன் கூர்மையாக்குவது சிறந்தது. (right? the direct translation is not giving proper meaning)
20.24 பின்வரும் tutorialலில் கூர்மையாக்கப்படாத mask பற்றி காண்போம்.
20.30 நான் அதை பயன்படுத்தியதில்லை. அதற்கு நானே கற்க வேண்டும்.
20.37 அப்போதுதான் அதுபற்றி ஏதேனும் என்னால் விவரிக்க முடியும்.
20.44 இங்கே இது நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன்.
20.50 நான் சென்று படத்தை சேமிக்க முடியும்.
21.02 இப்போது நகைச்சுவையானதை எழுதுகிறேன்.
21.10 சரி. பல layerகளுடன் படத்தை jpeg ஆல் கையாள முடியாது. எனவே படம் இப்போது export செய்யப்படுகிறது. அனைத்து Layer தகவல்களும் போய்விட்டன.
21.22 gimp ஒரு எச்சரிக்கையை மட்டும் தருகிறது.
21.26 85% தரம் நன்று என நினைக்கிறேன்.
21.31 file அளவு மற்றும் படத்தின் தரத்திற்கு இடையேயான சரியான இணக்கம்.
21.39 இப்போது படத்தை கூர்மையாக்கவும் மறுஅளவாக்கவும் செய்ய திரும்ப போகிறேன். பின்தான் என் blog ல் show note ஆக சிலவற்றை போட முடியும்.
21.55 image பின் scale image செல்க. width 600 pixels வேண்டும்.
22.08 scale ல் சொடுக்குக.
22.11 இப்போது இதை மீண்டும் கூர்மையாக்குகிறேன், ஒரு படத்திற்கு நீங்கள் செய்யும் செயல்களில் கூர்மையாக்குவது கடைசி படியாக இருக்க வேண்டும்.
22.23 இது உண்மையில் கடைசி படி.
22.33 Algorithm க்கு பின் நீங்கள் எதையும் மாற்றாமல் இருந்தால் அது நன்றாக வேலை செய்யும்.
22.39 மறுஅளவாக்குதலும் கூடாது.
22.41 இதை காணலாம்.
22.47 மேலும் அதிகரிக்கலாம் என நினைக்கிறேன்.
22.52 அடிப்படையில் முடிவது அதே அளவில்.
22.57 இப்போது இந்த படம் நன்றாக உள்ளது. .(dot)600 என இதை சேமிக்கிறேன். இதனால் என் படத்தை நான் block ல் போடுவது என எனக்கு தெரியவரும்.
23.20 இரண்டு படங்களையும் ஒப்பிடுவோம்.
23.23 இது Norman உருவாக்கியது. இது நான் உருவாக்கியது.


23.30 உண்மையில் என் வானம் நன்றாக உள்ளது. கடல் மற்றும் தேவாலயத்தில் Norman நல்ல வேலை செய்துள்ளார் என நினைக்கிறேன்.
23.40 இவற்றின் கலவை உண்மையில் ஒரு நல்ல படமாக இருக்கும்.
23.47 இங்கே பிரகாசமாக்குதலில் சற்று அதிகமாக செய்துள்ளேன் என நினைக்கிறேன்.
23.54 நன்று. Sea layer ஐ சுலபமான வழியில் சரிசெய்ய இங்கு மீண்டும் வருகிறேன்.
24.00 உண்மை படம்.... Background layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன்.
24.06 Sea என மறுபெயரிடுகிறேன்.
24.10 இப்போது இதை land copy க்கு மேலே sky க்கு கீழே இழுக்கிறேன்.
24.16 இதனால் sky layer பாதிக்கப்படவில்லை. இப்போது land மட்டுமே பாதிக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.
24.25 ஆனால் அதற்கு mask ஐ இடுகிறேன்.


24.27 அதை செய்ய ஒரு ஒரு layer mask ஐ சேர்கிறேன்.
24.31 வலது சொடுக்கி, add layer mask. இப்போது grayscale copy of layer ஐ எடுக்கிறேன் .
24.40 இப்போது இங்கே நிலம் பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.
24.45 இது இங்கு இருந்தது போல இல்லை. ஆனால் நீரில் பெரிய மாற்றம் இருப்பதைக் காணலாம்.
24.54 இப்போது இங்கே layer mask ல் சற்று வேலை செய்வோம்.
24.58 show the layer mask ல் சொடுக்குக.
25.01 இதை இங்கே காண்க. sky ஐ செயல்நீக்குக.


25.05 இப்போது curves tool ஐ தேர்கிறேன். நிலம் கருமையாகுமாறு வளைவை சரிசெய்கிறேன்.
25.17 கடலும் வானமு பிரகாசமடைகிறது.
25.29 இப்போது படத்தைக் காண்போம்.
25.33 show layer mask ஐ தேர்வுநீக்குக.
25.39 இப்போது நிலத்தில் கிட்டத்தட்ட ஒரு வித்தியாசமும் இல்லாது முற்றிலும் நன்றாக இருப்பதைக் காண்க. கடல் நன்றாக உள்ளது.
25.51 இப்போது sea layer ஐ தேர்ந்தெடுக்கும்போது கடல் நன்றாக இருப்பதைக் காணலாம்.
25.59 இப்போது curves tool ஐ பயன்படுத்துவதன் மூலம் படத்தில் மதிப்புகளை மாற்றலாம்.
26.09 நான் அதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்
26.16 கடலுக்கு மேலும் contrast ஐ கொடுக்கவும்.


26.24 இங்கு சற்று இது போல.
26.31 இங்கே இந்த சாய்வின் செங்குத்து படத்தில் மிக contrast உள்ளது.
26.37 Histogram ன் இந்த பகுதி கடலாக இருந்தது.
26.41 எனவே இங்கே அதிகமாக contrast ஐ பெறுகிறேன்.
26.49 வளைவைக் கொண்டு இது சற்று பொருந்துவரை நிரப்புக.


26.56 இதை முன்னர் நான் முயற்சித்ததது இல்லை. எனவே இங்கே சற்று நான் சோதிக்க வேண்டும்.


27.10 இப்போது இது முன்பை விட நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.


27.17 இப்போது இங்கே பாறைகளுக்கும் கடலுக்கும் இடையேயான விளிம்பைக் காணலாம்.
27.24 முன்னர் அங்கே ஒரு பெரிய பிரச்சனை இருந்தது.


27.28 எனவே இந்த முறை கிட்டத்தட்ட ஒரு halo உம் தென்படவில்லை.
27.34 இங்கே பெரிதாக்கும்போது.
27.41 Halo போன்று சிலதைக் காணலாம். ஆனால் கரையில் இது அலை மட்டுமே.
27.51 Halo ஏதும் இல்லை.


27.56 என் முதல் முயற்சியில், நிலம் கடல் மற்றும் வானத்திற்கு இடையே சற்று மேலும் வித்தியாசங்களை பெற முயன்றேன்.
28.05 இதை சற்று முடித்துள்ளேன்.
28.08 ஆனால் இங்கே இது நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன். எனவே செய்ய வேண்டியதை ஏதேனும் விட்டுவிட்டேனா?


28.18 மேலும் விவரங்கள் http://meetthegimp.org ல் கிடைக்கும்
28.25 கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்
28.35 நன்றி. அடுத்த tutorial ஐக் காண்பீர்கள் என நிம்புகிறேன்.
28.41 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.

Contributors and Content Editors

Priyacst, Ranjana