C-and-C++/C2/Increment-And-Decrement-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:52, 11 December 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration


00.01 C மற்றும் C++ ல் Increment மற்றும் Decrement Operators குறித்த spoken tutorial க்கு நல்வரவு .
00.08 இந்த tutorial-லில் நாம் கற்க போவது:
00.10 Increment மற்றும் decrement operators
00.12
+ உதாரணமாக. a++ இது postfix increment operator.
00.18
+a இது prefix increment operator.
00.22
00.27
00.31 Type casting பற்றியும் அறியலாம்.
00.35 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10,
00.40 gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00.48 ++ operator... operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ அதிகரிக்கிறது.
00.54 a++ மற்றும் ++a என்பது a = a + 1 க்கு சமம்.
01.00 -- operator operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ குறைக்கிறது
01.06 a-- மற்றும் --a என்பது a = a - 1க்கு சமம்.
01.13 ஒரு C program-ன் உதவியுடன் increment மற்றும் decrement operatorகளின் பயன்பாட்டை விளக்குகிறேன்
01.19 ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். code ஐ விளக்குகிறேன்
01.25 C ல் increment மற்றும் decrement operators க்கான code ஐ வைத்துள்ளோம்
01.30 மதிப்பு 1 ஐ கொண்ட integer variable a ஐ எடுத்துள்ளேன்.
01.35 இவ்வழியில் a மதிப்பில் மாற்றங்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.
01.39 எனவே operatorகளின் வேலையைப் புரிந்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும்.
01.47 postfix increment operator எவ்வாறு வேலைசெய்கிறது என பார்க்கலாம்.
01.51 இந்த printf statement-ன் வெளியீடு 1.
01.55 மதிப்பு மாறாது.
01.57 ஏனெனில் Operand மதிப்பிடப்பட்டப் பிறகே postfix operation நடக்கிறது.
02.04 a++மீது ஒரு செயல் நடத்தப்படுகிறது எனில் அது a ன் நடப்பு மதிப்பில் செயல்படுத்தப்படும்.
02.10 அதன் பின் a ன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
02.17 இப்போது a ன் மதிப்பை இங்கு காண்கிறோம் எனில், இது 1 ஆல் அதிகரிக்கப்பட்டது.
02.27 மாற்றங்களைப் பிரதிபலிக்க, மீண்டும் a க்கு 1 ஐ initialize செய்கிறோம்.
02.35 இப்போது prefix increment operatorகளுக்கு வருவோம்
02.38 இந்த printf statement திரையில் 2 ஐ அச்சடிக்கிறது.
02.42 ஏனெனில் prefix operation... operand மதிப்பிடப்படுவதற்கு முன் நடைபெறுகிறது.
02.49 எனவே a ன் மதிப்பு முதலில் 1 ஆல் அதிகரிக்கப்பட்டு பின் அது அச்சடிக்கப்படுகிறது.
02.58 மேலும் மாற்றங்கள் இல்லை என்பதைக் காண மீண்டும் a ன் மதிப்பை அச்சடிப்போம்.
03.03 இந்த code ஐ இயக்கி சோதிப்போம்.
03.07 பின்வரும் வரிகளை comment செய்கிறேன். எழுதவும் /*, */
03.19 Save ல் சொடுக்கவும்.
03.22 என் file ஐ incrdecr.c என சேமித்துள்ளேன்.
03.29 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.
03.35 compile செய்ய பின்வருவதை terminal ல் எழுதுக gcc space incrdecr dot c space hyphen o space incr. enterஐ அழுத்துக.
03.51 code ஐ இயக்க எழுதுக ./incr. enter ஐ அழுத்துக.
03.59 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது,
04.01 a++ ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு
04.06 ++a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு.
04.09 முன்னர் நாம் சொன்னதுபோலவே முடிவைக் காணலாம்.


04.13 இப்போது மீதி programக்கு வருவோம்.
04.16 இப்போது postfix மற்றும் prefix decrement operatorகளை விளக்குகிறேன்.
04.21 multiline commentகளை இங்கிருந்தும்...... இங்கிருந்தும் நீக்குக .


04.29 மீண்டும் மதிப்பு 1aக்கு assign செய்யலாம்.
04.35 இந்த printf statement... 1 ன் மதிப்பை முன் விவரித்ததுபோல வெளியிடுகிறது.
04.40 இது ஒரு postfix expression ஆக இருப்பதால் a-- மதிப்பிடப்பட்ட பிறகு a ன் மதிப்பு குறைக்கப்படும்


04.47 அடுத்த statement... a ன் மதிப்பு 0 என அச்சடிக்கிறது.
04.51 இப்போது a ன் மதிப்பு 1 குறைக்கப்பட்டுள்ளது.
04.54 இப்போது prefix decrement operator.
04.58 இது ஒரு prefix operationஆக இருப்பதால் இந்த printf statement ன் வெளியீடு 0.
05.05 operand மதிப்பிடப்படுவதற்கு முன் prefix operation நடக்கிறது.
05.09 இந்த printf statementன் வெளியீடு 0.
05.11 a ன் மதிப்புக்கு மேலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
05.15 return 0; என எழுதி curly bracket ஐ மூடவும்
05.21 Save ல் சொடுக்கவும்
05.24 terminalக்கு வரவும்.
05.27 compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக; gcc space incrdecr dot c space hyphen o space incr. Enter ஐ அழுத்துக.
05.42 இயக்க எழுதுக, ./incr. Enter ஐ அழுத்துக.
05.52 a-- ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு


05.56 --a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு


05.59 எனவே இப்போது increment மற்றும் decrement operator வேலைசெய்வதைக் காண்க.
06.05 இதே program ஐ C++ ல் எழுத வேண்டும் எனில்.
06.07 மேலுள்ள C code ல் சில மாற்றங்களை செய்யலாம்.
06.10 editorக்கு வருகிறேன்.
06.13 இங்கே தேவையான code உடன் C++ file உள்ளது.


06.16 C file header லிருந்து இந்த header மாறியிருப்பதைக் கவனிக்கவும்.
06.20 using namespace statement உம் உள்ளது.
06.24 C++ ல் வெளியீட்டு statement cout என்பதையும் கவனிக்க.
06.28 எனவே இந்த வித்தியாசங்களைத் தவிர, codeகளும் மிக ஒத்தவை.
06.33 file ஐ சேமிக்கவும். file... extension .cppஉடன் சேமிக்கப்படுகிறது
06.40 code ஐ compile செய்வோம்.
06.42 terminal ஐ திறந்து எழுதுக g++ space incrdecr dot cpp space hyphen o space incr. Enter ஐ அழுத்துக.
07.00 இயக்க எழுதுக ./ incr. Enter ஐ அழுத்துக.
07.07 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:


07.10 எனவே வெளியீடு C program போலவே இருப்பதைக் காண்கிறோம்.
07.15 இப்போது typecastingன் கோட்பாட்டைக் காண்போம்.
07.17 C மற்றும் C++ இரண்டிலும் இது ஒரே வழியில் செயல்படுத்தப்படுகிறது.
07.22 ஒரு type variable ஐ மற்றொரு type ஆக செயல்பட வைக்க Typecasting பயன்படுகிறது
07.27 parenthesisனுள் உங்களுக்கு தேவையான data type ஐ வைப்பதன் மூலம் Typecasting செய்யப்படுகிறது.
07.33 நீங்கள் cast செய்யவிரும்பும் variable க்கு முன்னால் இந்த cast வைக்கப்படுகிறது.
07.38 இந்த typecast ஒரே ஒரு operationக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
07.42 இப்போது ஒரே ஒரு operationக்கு a... float variable ஆக செயல்படும்.
07.47 இங்கே நான் ஏற்கனவே உருவாக்கிய உதாரணம் உள்ளது.
07.50 இப்போது code ஐ விளக்குகிறேன்.
07.54 முதலில் variableகள் a மற்றும் bஐ integerஆகவும் c ஐ float ஆகவும் declare செய்கிறோம்.
08.00 a மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. b மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.
08.06 a மற்றும் bமீது Operationகளை செயல்படுத்துவோம்.
08.10 ab ஆல் வகுப்போம். வகுத்தலின் விடை cல் சேமிக்கப்படுகிறது.
08.14 2 தசம இட துல்லியத்தைக் காட்ட %.2f ஐ பயன்படுத்தியுள்ளோம்.
08.20 எதிர்பார்த்த விடை 2.50க்கு மாறாக காட்டப்படும் விடை 2.00.
08.25 operandகள் a மற்றும் b இரண்டும் integerகளாக இருப்பதால் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
08.31 உண்மை வகுத்தலைச் செயல்படுத்த ஒரு operand... float க்கு type cast செய்யப்பட வேண்டும்.
08.35 இங்கே a ஐ floatக்கு typecast செய்கிறோம். இப்போது c உண்மை வகுத்தலின் மதிப்பை வைத்துக்கொள்கிறது.
08.41 இப்போது உண்மை வகுத்தலின் முடிவு காட்டப்படுகிறது. விடை எதிர்பார்த்ததுபோல 2.50.
08.47 return 0; என எழுதி பின் curly bracket ஐ மூடவும்.
08.51 Saveல் சொடுக்கவும். .c extension உடன் file ஐ சேமிக்கவும்.
08.55 என் file ஐ typecast.c என சேமித்துள்ளேன்.
08.59 terminal ஐ திறக்கவும்.
09.01 compile செய்ய எழுதுக gcc space typecast dot c space hyphen o space type. Enter ஐ அழுத்துக.
09.17 இயக்க எழுதுக ./type. Enter ஐ அழுத்துக.
09.25 திரையில் வெளியீடு காட்டப்படுகிறது.


09.27 பார்க்கும் இரு மதிப்புகளில் typecastingன் விளைவைக் காணலாம்.
09.32 சுருங்க சொல்ல .
09.34 இந்த tutorial லில் நாம் கற்றது,
09.36 increment மற்றும் decrement operatorகளை எவ்வாறு பயன்படுத்துவது.
09.40 Postfix மற்றும் Prefix வடிவங்கள் பற்றியும் கற்றோம்


09.44 typecasting பற்றியும் அதை பயன்படுத்துவதையும் கற்றோம்.
09.47 பயிற்சியாக:
09.49 பின்வரும் expressionஐ தீர்க்க program எழுதுக, a divided by b plus c divided by d
09.56 a, b, c மற்றும் d மதிப்புகள் உள்ளீடாக பயனரிடமிருந்து பெறப்படுகிறது.
10.01 உண்மை வகுத்தலை செயல்படுத்த typecasting ஐ பயன்படுத்துக.
10.05 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
10.10 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10.17 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10.24 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10.33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

10.44 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


10.55 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst