LibreOffice-Suite-Math/C2/Introduction/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:48, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:02 LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial லில், LibreOffice Math க்கு அறிமுகமும் சூத்திர திருத்தி குறித்தும் பார்க்கலாம்.
00:12 பின் வரும் விஷயங்களை கற்போம்:
00:15 LibreOffice Math என்பது என்ன?
00:18 சூத்திர திருத்தி மூலம் Math ஐ பயன்படுத்த கணினி அமைப்பு என்ன?
00:23 எளிய சூத்திரம் எழுதுதல்;
00:26 LibreOffice Math என்பது என்ன?
00:29 LibreOffice Math என்பது கணித சூத்திரங்களை உருவாக்கவும் திருத்தவுமான மென்பொருளாகும்.
00:39 அது LibreOffice Suite உடன் உட்பொதிந்து உள்ளது. ஆகவே அது திறந்த கட்டற்ற விலையில்லா மென்பொருளாகும்.
00:47 Math ஐ பயன்படுத்தி உருவாக்கப்படும் சூத்திரங்களும் சமன்பாடுகளும் தனித்து செயலாற்றுவன.
00:53 அல்லது LibreOffice Suite இன் ஏனைய ஆவணங்களிலும் பயன்படுத்தலாம்.
00:58 இந்த் சூத்திரங்கள் Writer அல்லது Calc இல் பொதியப்படலாம்.
01:05 சூத்திரங்களின் சில உதாரணங்களாவன: பின்னங்கள், முழு எண்கள், சமன்பாடுகள், matrices ஆகியன.
01:13 Math ஐ பயன்படுத்த கணினி முறைமையை பார்க்கலாம்.
01:17 Windows க்கு Microsoft Windows 2000 (Service Pack 4 அல்லது மேலும்), XP, Vista, அல்லது Windows 7;
01:28 Pentium-compatible PC 256 Mb RAM (512 Mb RAM பரிந்துரைக்கப்படுகிறது);
01:36 Ubuntu Linux க்கு: Linux kernel பதிப்பு 2.6.18 அல்லது மேலும்; Pentium-compatible PC 512Mb RAM பரிந்துரைக்கப்படுகிறது.
01:51 இது குறித்த முழுமையான தகவல்களுக்கு libreoffice வலைத்தளத்தை பார்க்கவும்.
01:58 Libreoffice Suite ஐ ஏற்கெனெவே நீங்கள் நிறுவி இருந்தால், Math ஐ LibreOffice Suite இன் பாகமாக காணலாம்.
02:06 LibreOffice Suite ஐ நிறுவவில்லை எனில் நீங்கள் அதை அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.
02:14 linux இல் synaptic package manager மூலம் அதை நிறுவிக்கொள்ளலாம்.
02:18 நான் LibreOffice பதிப்பு 3.3.3 ஐ நிறுவி இருக்கிறேன்.
02:24 சரி, நாம் ஆரம்பிக்கலாம். Math பயன்பாட்டை துவக்கலாம்.
02:28 Windows இல் Start menu சென்று. Programs>> LibreOffice Suite>> LibreOffice Math ஆகியவற்றை வரிசையாக சொடுக்கி இதை துவக்கலாம்.
02:39 அல்லது ஒரு LibreOffice Writer ஆவணத்தின் உள்ளிருந்து இதை அழைக்கலாம்.
02:46 LibreOffice Writer இல் ஒரு புதிய உரை ஆவணத்தை திறக்க சொடுக்குவோம்.
02:53 இந்த Writer சாளரத்தில், Math ஐ அழைப்போம்.
02:57 main menu bar இல் Insert menu, பின் Object, அதில் கீழ் பாகத்தில் Formula என முறையே சொடுக்கலாம்.
03:09 Writer சாளரத்தில் இப்போது மூன்று பகுதிகளை பார்க்கலாம்.
03:14 முதலாவது மேலே உள்ளது Writer பரப்பு.
03:18 இங்கே சின்ன சாம்பல் நிற பெட்டியை கவனிக்கவும்.
03:22 இங்கேதான் நாம் எழுதும் சமன்பாடுகள் அல்லது சூத்திரங்கள் கணித வடிவில் தோன்றும்.
03:30 இரண்டாவது சூத்திர திருத்தி பரப்பு கீழே இருக்கிறது.
03:37 இங்கே கணித சூத்திரங்களை நாம் சிறப்பு எழுத்து மொழியில் எழுதலாம்.
03:44 மூன்றாவது வலது பக்கம் மிதக்கும் Elements சாளரம்.
03:50 இந்த Elements window தென்படவில்லை எனில் அதை View menu வில் Elements ஐ தேர்ந்தெடுத்து அணுகலாம்.
04:01 இந்த சாளரம் நமக்கு ஒரு விசாலமான வீச்சு கணித குறியீடுகள், expressions ஆகியவற்றை தருகிறது.
04:08 Writer பரப்பின் சாம்பல் பெட்டிக்கு வெளியே சொடுக்க இந்த Math window மறைகிறது.
04:17 சாம்பல் பெட்டியின் மீது இரு முறை சொடுக்க Math சூத்திர திருத்தி மற்றும் Elements window தோன்றுகின்றன.
04:24 சரி இப்போது ஒரு எளிய பெருக்கல் வாய்ப்பாட்டை எழுதலாம். 4x3 is equal to 12
04:37 இப்போது Elements window இல் symbol களின் வகைகள் மேலேயும் symbols கீழேயும் உள்ளன.
04:46 நாம் மேல் இடது சின்னத்தை சொடுக்க இங்கே கருவிக்குறிப்பு Unary அல்லது Binary Operators என்கிறது.
04:57 கீழே சில அடிப்படை கணித operators - plus, minus, multiplication மற்றும் division.
05:08 இரண்டாம் வரியில் உள்ள பெருக்கலை குறிக்கும் ‘a into b’ மீது சொடுக்கலாம்.
05:17 இப்போது சூத்திர திருத்தி window வை பாருங்கள்.
05:20 அது இரண்டு இட பிடிப்பாளர்களை காட்டுகிறது. அவற்றின் இடையே ‘Times’ என்ற சொல் இருக்கிறது.
05:27 மேலே உள்ள Writer சாம்பல் பெட்டி பரப்பில் இரண்டு சதுரங்கள் இடையே ஒரு பெருக்கல் குறியுடன் காணப்படுகின்றன.
05:37 சூத்திர திருத்தியில் முதல் இட பிடிப்பாளரை இரட்டை சொடுக்கி முன்னிலை படுத்தி 4 என டைப் செய்யலாம்.
05:46 அடுத்து, சூத்திர திருத்தி window வில் இரண்டாம் இட பிடிப்பாளரை இரட்டை சொடுக்கி முன்னிலை படுத்தி மற்றும் 3 என type செய்யலாம்.
05:54 Writer சாம்பல் பெட்டி தானியங்கியாக புதுப்பிக்கப்பட்டு ‘4 into 3’ என காட்டப்படுவதை காணலாம்.
06:03 நாம் மேலே View menu சொடுக்கி Update ஐ தேர்ந்தெடுக்கவும் செய்யலாம்.
06:10 அல்லது விசைப்பலகை விரைவு விசை F9 ஐ பயன்படுத்தியும் புதுப்பிக்கலாம்.
06:16 அடுத்து நாம் சமன்பாட்டை பூர்த்தி செய்யலாம். ‘is equal to12’ என சேர்க்கலாம்.
06:24 இதற்கு, Elements window வில் Categories section இல் ‘Relations’ எனும் இரண்டாம் சின்னத்தில் சொடுக்கலாம்.
06:35 பலவித relation element கள் இங்கே இருப்பதை காணலாம்.
06:38 அங்கே முதலாவதை தேர்ந்தெடுக்கலாம்: ‘a is equal to b’
06:44 மற்றும் முதல் இட பிடிப்பியை நீக்கிவிட்டு இரண்டாம் இட பிடிப்பியில் 12 என type செய்க.
06:53 Writer பரப்பில் நம் முதல் எளிய சூத்திரம் தயார்! ‘4 times 3 is equal to 12’.
07:01 Elements window பயன்படுத்தி வெகு எளிதாக ஒரு சூத்திரத்தை எழுதுவது எப்படி என்று கற்றோம்.
07:09 நாம் சூத்திர திருத்தி window வில் வலது சொடுக்கி அங்கே தோன்றும் symbol களை தேர்ந்தெடுத்தும் இதை எளிதாக எழுதலாம்.
07:19 Elements window வில் பார்த்த அதே symbols வகைகளை இங்கே தோன்றும் மெனுவிலும் காணலாம்.
07:26 ஏதேனும் ஒரு வகையை தேர்ந்தெடுக்க அதில் கிடைக்கும் symbol களை காட்டும்.
07:33 சூத்திரத்தை உள்ளிட மூன்றாம் வழி இருக்கிறது.
07:37 சூத்திர திருத்தி சாளரத்தில் நேரடியாகவே சூத்திரத்தை எழுதலாம்.
07:42 இங்கே நாம் Math பயன்பாடு புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிறப்பு குறியிட்ட மொழியை பயன்படுத்தலாம்.
07:50 சிறப்பு குறியிட்ட மொழிக்கு ஏற்கெனெவே எளிய ஒரு உதாரணத்தை பார்த்து இருக்கிறோம்.
07:56 4 times 3 equals 12’.
07:59 ‘times’ என்ற சொல்லை கவனியுங்கள்.
08:03 அதே போல 4 ஐ 4 ஆல் வகுக்க 1 என்று சொல்ல குறியீடு : 4 over 4 equals 1’.
08:15 இறுதிக்கு வந்துவிட்டோம். ஆகவே உங்களுக்கு ஒரு பயிற்சி.
08:20 Writer சாளரத்தில் பின் வரும் சூத்திரங்களை எழுதுக:
08:24 4 ஐ 4 ஆல் வகுக்க = 1
08:29 உங்கள் சூத்திரங்களில் ‘newline’ என்ற குறிப்பை எழுதி புதிய வெற்று வரி ஒன்றை சேர்க்கவும்.
08:37 A Boolean மற்றும் b
08:40 4 3 ஐ விட பெரியது
08:43 x ஏறத்தாழ y க்கு சமம்.
08:47 மற்றும் 4 is not equal to 3
08:51 LibreOffice Math அறிமுகம் மற்றும் சூத்திர திருத்தி குறித்த tutorial இத்துடன் நிறைவு பெறுகிறது.
08:59 சுருங்கச்சொல்ல பின் வருவனவற்றை கற்றோம்:
09:03 LibreOffice Math என்பது என்ன?
09:06 Math ஐ பயன்படுத்த கணினி அமைப்பு மற்றும் முன் தேவை என்ன?
09:10 சூத்திர திருத்தியை பயன்படுத்துதல்.
09:13 எளிய சூத்திரம் ஒன்று எழுதுதல்.
09:16

ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09:28 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது
09:33 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro.
09:39 இந்த நிரலின் மொழியாக்க கடலூர் திவா; பதிவாக்கம்....
09:58 கலந்து கொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst