LaTeX/C2/What-is-Compiling/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | இந்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு. லேடக் ஐ பயன்படுத்தி எளிய ஆவணம் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். |
0:08 | மேக் ஓஎஸ் பத்து ஆபரேடிங் சிஸ்டத்தில் இதை செய்து காட்டுகிறேன். |
0:13 | லீனக்ஸ் மற்றும் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் களுக்கும் இதே போன்ற முறைகள் உண்டு.. |
0:19 | முதலில் நாம் செய்ய வேண்டியது நம் உரை திருத்தியால் ஒரு மூல பைலை உருவாக்குவதுதான். |
0:24 | என்னுடைய விருப்பமான திருத்தி இமேக்ஸ். நான் இந்த பைலை ஹெலோ.tex என்று பெயரிட்டு இருக்கிறேன். இந்த பைலின் நீட்சி டெக். இதை டி-இ-எக்ஸ் என்று எழுதினாலும் டெக் என்றே உச்சரிக்க வேண்டும். லேடக் க்கு இதுவே முன்னிருப்பாகும். |
0:40 | முதலில் லேடக் க்கு நாம் எந்த ஆவண கிளாஸ் இல் ஆர்வம் காட்டுகிறோம் என்று சொல்ல வேண்டும். |
0:46 | முதலில் நான் ஆர்டிகில் கிளாஸ் ஐ பின்வருமாறு பயன்படுத்துகிறேன். |
1:01 | சேமிப்போம். |
1:03 | இது போல இன்னும் நிறைய கிளாஸ்கள் உள்ளன. |
1:06 | வேறு டுடோரியல்களில் அவற்றை காண்போம். |
1:10 | எழுத்துருவின் அளவாக நான் 12 புள்ளிகளை பயன்படுத்துகிறேன். |
1:14 | லேடக் இல் இன்னும் சிறிய 11 அல்லது 10 பாய்ன்ட்கள் கூட பழக்கம். |
1:23 | ஆவணத்தை ஆரம்பிக்கிறேன். |
1:29 | உரையை ‘ஹலோ வோர்ல்ட்!’ என எழுதுகிறேன். |
1:34 | ஆவணத்தை முடிக்கலாம். |
1:36 | சேமிக்கிறேன் |
1:39 | பிகின் என்ட் கட்டளைகள் இவற்றுக்கு நடுவில் உள்ளது மட்டுமே ஆவணத்தின் கடைசி வெளியீட்டில் இருக்கும். |
1:47 | இதுவே மூல பைல். இதை ஹெலோ.tex என்று பெயரிடுகிறேன். |
1:51 | இதை பிடிஎஃப் லேடக் என்ற கட்டளையால் தொகுக்கிறேன். |
1:55 | இங்கே வந்து ‘பிடிஎஃப் லேடக் ஹெலோ. Tex’ என்ற கட்டளையை பார்க்கலாம். |
2:08 | ’டெக்’ என்ற நீட்சி இல்லாமலும் ‘பிடிஎஃப் லேடக் ஹெலோ’ என தொகுக்கலாம். |
2:23 | அப்படி செய்தால் முன்னிருப்பு நீட்சியான டெக் என்பது சேர்க்கப்படும். |
2:28 | லேடக் மூல பைலில் இருந்து பிடிஎஃப் லேடக் என்ற கட்டளையை பயன்படுத்தி ஒரு பிடிஎஃப் பைலை தொகுத்தோம். |
2:35 | கட்டளையை நிறைவேற்றும் போது, லேடக் சில பயனுள்ள தகவல்களையும் கொடுக்கிறது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஹெலோ.லாக் என்ற பைலில் சேமிக்கப்படும். அதை இங்கே காணலாம். |
2:48 | இது வரை உருவாக்கிய பைல்களில் ஹெலோ என்று வருவதை கவனிக்கலாம். |
2:53 | பைல் ஹெலோ.பிடிஎஃப் ஐ திறக்கலாம். |
2:57 | என் மேக் கணினியில் இதை செய்ய ‘ஸ்கிம் ஹெலோ.பிடிஎஃப்’ என்று கட்டளை கொடுக்கிறேன். |
3:12 | ‘ஸ்கிம்’ என்பது மேக் ஓஎஸ் பத்து கணினிக்கான இலவச பிடிஎஃப் ரீடர் ஆகும்.. |
3:18 | கட்டளை கிடைத்ததும் ஸ்கிம் ஹெலோ.பிடிஎஃப் ஐ திறக்கிறது. |
3:22 | எதிர் பார்த்தது போல ஒரே ஒரு வரிதான் இருக்கிறது. இதை ஜூம் செய்து அணுகி பார்க்கலாம். |
3:33 | ஸ்கிம் காட்டுவது பிடிஎஃப் பைலின் மிக சமீபத்திய பதிப்பு. |
3:37 | உதாரணமாக அதை மாற்றிப் பார்க்கலாம். நான் இன்னொரு ‘ஹெலோ வேர்ல்ட்’ ஐ இங்கு சேர்க்கிறேன். |
3:48 | அதை சேமித்து தொகுக்கிறேன். |
3:56 | இதற்கு அனுமதி கொடுக்கிறேன். இது புதுப்பிக்கப்பட்டு விட்டது. |
4:01 | இதை அழித்து, சேமித்து, தொகுக்கிறேன். இப்போது இது பழைய அசல் பைல் ஆகிவிட்டது. |
4:14 | எப்போதுமே சேமித்த பின்பே தொகுக்கிறேன் என்பதை கவனியுங்கள். |
4:21 | நீங்கள் எப்போதுமே சேமித்து அதன் பின் தொகுக்க வேண்டும். சேமிக்காவிட்டால் தொகுத்ததில் கடைசி சேமிப்புக்கு பின் செய்த மாற்றங்கள் இருக்காது. |
4:30 | இந்த மூன்று விண்டோஸ்களையும் நான் ஸ்போக்கன் டுடோரியல் ஐ உருவாக்க அமைத்து இருக்கிறேன். |
4:36 | நீங்கள் ஆவணங்களை தயாரிக்க இப்படி அமைக்க வேண்டும் என்றில்லை. மேலும் உங்களுக்கு பிடித்த திருத்தியையும் பிடிஎஃப் ரீடரையும் பயன்படுத்தலாம். |
4:45 | லேடக் ஐ பயன்படுத்த நீங்கள் மூன்று நிலைகளை தாண்டி போக வேண்டும: மூல பைலை உருவாக்குவது, தொகுப்பது, பிடிஎஃப் பைலாக காண்பது. |
5:08 | மூல பைலை இப்படி மாற்றி இந்த மூன்று நிலைகளை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். |
5:12 | உரையில் இன்னும் சில வரிகளை பிகின் மற்றும் என்ட் டாக்குமென்ட் கட்டளைகளுக்கு நடுவில் சேர்க்க நீங்கள் நினைக்கலாம். |
5:20 | ஹெலோ.log பைலையும் பாருங்கள். |
5:24 | டுடோரியல் ஐ ஒரு முன் வைப்புடன் தொடரலாம். |
5:28 | முதலில் இதை அழிக்கிறேன். |
5:38 | லேடக் இன் லாபங்களுடன் ஆரம்பிக்கலாம்.. |
5:42 | டைப் செட் செய்வதற்கு லேடக் மிகச்சிறந்த மென்பொருள். |
5:47 | லேடக் தயார் செய்யும் ஆவணங்களின் தரம் மிகச்சிறந்தது. |
5:51 | லேடக் இலவசமாக திறந்த மூலத்துடன் கிடைக்கிறது. |
5:53 | அது விண்டோஸ் மற்றும் எல்லா லீனக்ஸ், மேக் போன்ற யுனிக்ஸ் சிஸ்டம்களுக்கும் கிடைக்கிறது . |
6:00 | லேடக் இல் பிரமாதமான அம்சங்கள் உள்ளன. அது சமன்பாடுகள், அத்தியாயங்கள், செக்ஷன்கள், படங்கள் மற்றும் அட்டவணைகளுக்கு தானியங்கியாக எண் இடும். |
6:08 | நிறைய கணக்கு சமன்பாடுகள் உள்ள ஆவணங்களையும் சுலபமாக லேடக் இல் உருவாக்கலாம். |
6:13 | உசாத்துணை பட்டியல்களையும் போகிற போக்கில் மாற்றக்கூடிய ஒழுங்கில் உருவாக்கலாம். |
6:19 | லேடக் ஆவணத்தை ஒழுங்கு செய்வதை கவனித்துக்கொள்கிறது. அதனால் எழுத வேண்டியது என்ன, எண்ணங்களை சீராக அமைத்தல் போன்ற இன்னும் முக்கிய செயல்கள் மீது நாம் கவனம் செலுத்தலாம். |
6:31 | லேடக் குறித்து இன்னும் அதிக ஸ்போகன் டுடோரியல்கள் moudgalya.org இல் உள்ளன: தொகுப்பது என்றால் என்ன, கடிதம் எழுதுவது, அறிக்கை எழுதுவது, கணக்கு வகைப்படுத்தல், சமன்பாடுகள், அட்டவணைகள், மற்றும் படங்கள், உசாத்துணை உருவாக்கம், உசாத்துணையின் கதை ஆகியன உள்ளன. |
6:53 | நல்ல புரிதலுக்கு இந்த வரிசையில் டுடோரியல்களை கற்பது பரிந்துரைக்கப்படுகிறது. |
6:57 | இந்த டுடோரியல்களை உருவாக்க பயன்படுத்திய மூல பைல்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. |
7:03 | இன்னுமொரு டுடோரியல்,லேடக் ஐ விண்டோஸ் ஓஎஸ் இல் நிறுவுவது குறித்து சேர்க்க திட்டமுள்ளது. |
7:09 | இன்னும் பல டுடோரியல்கள், உதாரணமாக ஸ்லைட் காட்டுவதற்கு பீமர் குறித்து, சில நாட்களில் வரும். |
7:15 | லேடக் ஐ பயன்படுத்தித்தான் இந்த முன் வைப்பு பீமரில் உருவாக்கப்பட்டுள்ளது.. |
7:21 | சில குறிப்புகள்: எவ்வளவு ஸ்போகன் டுடோரியல்கள் முடியுமோ அத்தனையும் பாருங்கள். |
7:26 | கூடவே அவற்றை பயிற்சி செய்து பாருங்கள். |
7:28 | முதலில் ஒரு வேலை செய்யும் லேடக் பைலுடன் ஆரம்பியுங்கள். |
7:31 | ஒரு முறைக்கு ஒரு மாறுதல் மட்டும் செய்து பாருங்கள். சேமித்து, தொகுத்து நீங்கள் செய்தது வேலை செய்கிறது என்று உறுதிபடுத்திக்கொண்டு அடுத்த மாறுதலை செய்யுங்கள். |
7:40 | மூல கோப்பை தொகுக்கும் முன் சேமிக்க வேண்டுமென்பது நினைவிருக்கட்டும். |
7:45 | லேடக் குறித்து நிறைய புத்தகங்கள் இருந்தாலும் நாங்கள் இரண்டை பரிந்துரைக்கிறோம். |
7:48 | முதலில் லேடக் ஐ உருவாக்கியவர் எழுதியது. Leslie Lamport. |
7:53 | இது குறைந்த விலைக்கு இந்திய பதிப்பாகவும் கிடைக்கிறது. |
7:57 | அதிகம் பயின்று மேல் பாடங்கள் கற்க புத்தகம் லேடக் கம்பானியன். |
8:03 | முதல் சொன்ன புத்தகமும் வலைத்தேடலும் பெரும்பாலான தேவைகளுக்கு போதும். இருப்பினும் எல்லா லேடக் குறித்த விஷயங்களும் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும்: ctan.org. |
8:15 | ஸ்போகன் டுடோரியல் க்கு ஆதரவு இந்திய அரசின் MHRD துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
8:24 | இந்த திட்டத்துக்கு URL sakshat.ac.in. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். ஒருங்கிணைப்பாளர் CDEEP, IIT Bombay: cdeep.iitb.ac.in. |
8:39 | ஸ்போகன் டுடோரியல் வெகுஜன பயன்பாட்டுக்கு செல்ல fosse.in. வழியாக ஒருங்கிணைக்கப்படும். |
8:47 | ஃபோசீ என்பது ஃப்ரீ அன்ட் ஓபன் சோர்ஸ் ஸாப்ட்வேர் இன் சைன்ஸ் அன்ட் எஞ்சினீரிங் எஜுகேஷன். |
8:52 | தேசிய கல்வித்திட்டமும் இதற்கு ஆதரவு கொடுக்கிறது. |
8:57 | இந்த தொடுப்புக்களை மேலும் பல ஸ்போகன் டுடோரியல்கள் மற்றும் அவற்றின் மொழி பெயர்ப்புக்கள் ஆகியவற்றுக்கு கவனித்திருங்கள். |
9:05 | இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிது. மூல பாடம் CDEEP, IIT Bombay இலிருந்து Kannan Moudgalya. மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப் செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது (name of the recorder) from --------------------------(name of the place) |