LaTeX/C2/Inside-story-of-Bibliography/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:08, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 உசாத்துணை உள்ளீடுகளை உருவாக்குவது குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
0:06 இதற்கு நான் BibTeX ஐ பயன்படுத்துகிறேன். Bibtex லேடக்கிலிருந்து தனித்து நின்று செயல்படும் பயன்பாடாகும்..
0:14 இந்த டுடோரியலில் நாம் நீங்கள் இப்போது பார்க்கும் பிடிஎஃப் file ஐ எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
0:20 முதல் பக்கம் தலைப்பை காட்டுகிறது.
0:25 இரண்டாம் பக்கத்துக்கு போவோம். அங்கேதான் உரை இருக்கிறது.
0:31 குறிப்புதவிகள் ஒன்று முதல் ஆறு வரை எண்ணிடப்பட்டுள்ளன. அடுத்த பக்கத்தில் 11 வரை.
0:41 இந்த குறிப்புதவிகள் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கவும்.
0:47 நீங்கள் அதை இங்கே பார்க்கலாம்.
0:52 அடுத்து இதற்கு பயன்படுத்திய மூல பைலை காணலாம்.
0:59 இதை முழுதும் பார்க்கலாம்.
1:07 இதன் வரிகள் முழுதும் பார்க்க இங்கே குறிப்புதவிகள் ஏதும் இல்லை என்பதை காணலாம்.
0:13 இந்த தகவல் இந்த மூல பைலில் இல்லை.
0:17 ஆகவே குறிப்புதவிகள் எங்கே உள்ளன? அவை ‘ref’ பைலில் உள்ளன.உண்மையில் அந்த பைலின் பெயர் ‘ref.bib’.
0:26 அதுதான் இந்த கட்டளை – உசாத்துணைக்கு முன்னிருப்பு.
1:34 இதோ இருக்கிறது, ‘ref.bib’.
1:39 ref.bib. இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
1:52 அதில் குறிப்புதவி தகவல் பல் வேறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, அதில் பின் வரும் வகைகள் உள்ளன. tech-report, in proceedings, miscellaneous, மேலும் article.
2:09 நாம் இந்த பைலுக்கு சற்று நேரத்தில் மீண்டும் வந்து விளக்குவோம்.
2:13 இப்போதைக்கு வெளியீட்டில் குறிப்புதவி பட்டியலை உருவாக்கும் முறையில் கவனம் செலுத்தலாம்.
2:19 மூல பைலான references .tex மீண்டும் இடுவோம்.
2:31 இந்த பக்கத்தின் உச்சிக்கு போகலாம்.
2:36 முதலில் குறிப்புதவிகள் எனத்துவங்கும் பைல்களின் ஒரு பட்டியலை பார்க்கலாம்.
2:44 இங்கே உள்ளது..
2:47 references.tex தவிற மற்ற பைல்களை நீக்கலாம்.
3:04 இதை உறுதி செய்து கொள்ளலாம்.
3:09 ஆகவே references .tex மட்டுமே உள்ளது.
3:12 நான் இதை தொகுக்கிறேன்.
3:19 தொகுக்கும்போது ஒரு எச்சரிக்கை செய்திகள் கிடைக்கின்றன..
3:20 அவை "வரையறுக்காத குறிப்புதவிகள் சில உள்ளன, சில மேற்கோள்கள் காணவில்லை.” என்பன.
3:39 இங்கே பிடிஎஃப்.tex கட்டளை உருவாக்கிய புதிய பைல்கள் உள்ளன என்று பார்க்கலாம்.
3:52 references .பிடிஎஃப் உடன் புதிய பைல்கள் உள்ளன, references .log, references .aux. என சில உள்ளன.
4:04 references .log. ஐ முதலில் பார்க்கலாம்.
4:15 இதில் நிறைய தகவல்கள் உள்ளன. உண்மையில் இங்கே நாம் காணும் அத்துணை செய்திகளும் உள்ளன.
4:20 கீழே போய் பார்கலாம். இங்கு நிறைய தகவல்கள் உள்ளன, மேலும் இங்கு காணும் எச்சரிக்கைகளும் உள்ளன.
4:36 சில எழுத்துருக் களை காணவில்லை என்ற ஒரு எச்சரிக்கையும் உள்ளது. ஆனால் இத்துடன் நாம் காலம் தள்ள முடியும்!
4:43 சில குறிப்புதவிகள் காணவில்லை, சில மேற்கோள்கள் காணவில்லை என்னும் எச்சரிக்கைகள் நமக்கு முக்கியம்.
4:50 இந்த எச்சரிக்கைகளை எதிர்கொள்வோம்.
4:55 இப்போது அந்த மற்ற references .aux என்ற பைலை திறக்கலாம்..
5:04 அதில் பல மேற்கோள் கட்டளைகள் உள்ளன. இவை எங்கிருந்து வந்தன?
5:13 மேற்கோள்களுக்கான argument கள் எல்லாம் மூல பைலில் ‘cite கட்டளை’ யில் காணப்பட்டன.
5:18 நாம் இங்கே காண்பது போல. அதை இங்கே திறக்கிறேன்.
5:26 கீழே போகலாம். அதற்கு ஒரு ஸ்க்ரால் செய்து போகலாம். மூல பைல் இங்கே...
5:31 உதாரணமாக, இங்கே காணும் ‘cite vk 79’, அந்த vk79 இங்கேயும் வருகிறது.
5:37 ‘cite tk 80’, இங்கேயும் வருகிறது. இதே போல மற்றவை. இந்த bibstyle-plain, கூட மூல பைலில் இங்கே வருகிறது.
5:51 மேலே போகலாம் , biblioraphy style – plain, அந்த plain இங்கே வருகிறது.
6:00 aux பைல் பல வேரியபில்களின் பெயரையும் சேமிக்கிறது. உதாரணமாக நான் இந்த செக்ஷனுக்கு ஒரு லேபிலை சேர்த்தேன்.
6:11 இங்கே போகலாம்.
6:18 சரி, இதை லேபில் இல்லாமல் செய்யலாம்.
6:26 ஆகவே உதாரணமாக, இதை நீக்கிவிட்டு தொகுக்கலாம்.
6:37 இந்த பைலை மீண்டும் திறக்கலாம்.
6:47 இங்கே லேபில் இப்போது இல்லை என கவனியுங்கள்.
6:50 ஆகவே நான் இங்கே ஒரு லேபிலை இட்டவுடன்..., ‘label – sec arya’.
7:06 சேமித்து தொகுக்க... இதை திறக்கலாம்.
7:13 இந்த பைலுக்கு இப்போது வந்து மீண்டும் திறக்கலாம்.
7:18 இப்போது கவனியுங்கள் இந்த கட்டளை, new label sec arya,
7:23 இந்த லேபில்தான் முன்னே இங்கே இருந்தது. இது section 1, என்று சொல்கிறது.
7:31 இங்கே காண்பது .. இந்த 2 பக்க எண்ணை குறிக்கிறது. இந்த ஆவணத்தின் பக்க எண் 2.
7:41 அடுத்த தொகுப்பின் போது லேடக் aux பைலை படித்து label தகவலை ஏற்றுகிறது.
7:48 அதனால்தான் லேபில்களை சரியாக பெறுவதற்கு இரண்டு தொகுப்புகள் தேவையாக இருக்கிறது.
7:52 குறிப்புதவிகள் பட்டியல் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை விவரிப்போம். இப்போது BibTeX ஐ பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.
8:01 BibTeX references கட்டளை இங்கே கொடுக்கப்படுகிறது. கட்டளையை தருகிறேன் – BibTeX references
8:17 இது references .aux இலிருந்து உள்ளீட்டை எடுத்துக்கொள்கிறது. இங்கே அது references .aux பயன்பட்டதாக சொல்கிறது.
8:30 இந்த plain கட்டளையால் கொடுக்கப்பட்டபடி plain.bst என்னும் style file லையும் .
8:39 பயன்படுத்துவதாக சொல்கிறது. தகவல் ref.bib இலிருந்து ... இதை ஏற்கெனெவே விளக்கிவிட்டேன்... ref.bib, தரவுத்தளம் file number 1 தான் ref.bib.
8:51 plain style மற்றும் ref bib இரண்டையும் மூல பைலில் பயன்படுத்தியது நினைவிருக்கலாம்.
8:56 இப்போது என்னென்ன பைல்கள் உருவாகி உள்ளன என பார்க்கலாம்.
9:00 சரி, இவைதான் கட்டளை BibTeX.references ஆல் உருவான புதிய பைல்கள்.
9:10 இதை பட்டியல் இடலாம். முன் பார்த்த பைல்கள் கூட மேற்கொண்டு...
9:15 இரண்டு புதிய பைல்கள், - references .blg and references .bbl. - உள்ளன.
9:23 references .blg பைலில் formatting – ஒழுங்கு செய்யும் தகவல் இருக்கிறது. பார்க்கலாம்.
9:35 ஒழுங்கு செய்யும் தகவல் சிலது இருக்கிறது என்பதை காணலாம்.
9:39 வெளியேறுவோம்.
9:41 இந்த bbl பைலில் என்ன இருக்கிறது?. references. bbl. ஆகவே இதில் நம் முன்னே பார்த்த தகவல், குறிப்புதவிகள் இருக்கின்றன.
9:55 references .bbl இல் மேற்கோள் காட்டும் குறிப்புதவிகள் உள்ளன. அவை நாம் இறுதி பிடிஎஃப் file இல் பார்க்கும் அதே வரிசையில் உள்ளன.
10:07 சாதாரணமாக யாரும் இவற்றை மாற்றவோ இல்லை பார்க்கக்கூட தேவை இராது.
10:15 இந்த கடைசி தொகுப்பில் ஒரு எச்சரிக்கை காட்டப்பட்டது. references .bbl ஐ காணவில்லை என்று.
10:23 references .log file இங்கே இருப்பதை பார்க்கிறோம். அதை இங்கே திறக்கலாம்.
10:35 சரி, அதில் தேடலாம் – உதாரணமாக references .bbl file இல்லை என்கிறது.
10:47 இதுதான் முந்தைய தொகுப்பில் நடந்தது.
10:55 ஆனால் BibTeX ஐ பயன்படுத்தி இப்போது நாம் references .bbl ஐ உருவாக்கிவிட்டோம்.
11:01 ஆகவே இன்னொரு முறை தொகுக்கலாம்.
11:10 இப்போது எச்சரிக்கைகள் வேறானவை. ‘label கள் மாறி இருக்கலாம் என்கிறது.
11:15 உண்மையில் தொகுத்த உடனே இந்த references .bbl பைல் படிக்கப்படுகிறது, அந்த குறிப்புதவிகள் இங்கு ஏற்றப்படுகின்றன.
11:27 இந்த வரிசையும் references .bbl இல் நாம் பார்த்த அதே வரிசைதான்.
11:33 உதாரணமாக, நீங்கள் அதை பார்க்கலாம்.
11:37 இந்த உதாரணத்தை பாருங்கள். முதல் குறிப்புதவி Chang and Pearson, இங்கேயும் Chang and Pearson.
11:43 சரி. ஆனால் இந்த தகவல் இன்னும் சரியானது இல்லை. நாம் இன்னும் சரியாக மேற்கோள் காட்டவில்லை.
11:53 ஆகவே நாம் தொகுக்கலாம் – இது நாம் முன்னேயே ஆரம்பித்தது. நாம் இன்னொரு முறை தொகுத்தால் அது சரியாகிவிடும்.
12:03 இதை எப்படி விளக்குவது? நாம் போய் references . aux ஐ பார்க்கலாம்.
12:15 முன்பிருந்த மேற்கோள் செய்திகளுடன் கூடுதலாக குறிப்புதவிகள் இருக்கிறது -
12:25 bibcite cp82 என்று பலதும் சொல்கிறது.
12:33 இது cp82 label இட்ட உசாத்துணை உருப்படி குறிப்புதவி 1 என சொல்கிறது.
12:42 உதாரணமாக, இதை திறந்து இருக்கிறோம். மூல பைலையும் திறக்கலாம் –
12:52 cp82 க்கு தேடலாம்.
12:56 இதோ இருக்கிறது cp82. அதற்கு பொருத்தமான குறிப்புதவி இங்கே இருக்கிறது. மேற்கோளிலும் தெரிகிறது.
13:07 இந்த தகவல், அதாவது இந்த குறிப்புதவி cp82, குறிப்புதவி பட்டியலில் உருப்படி நம்பர் 1 ஆக இருக்கிறது. references .aux பைலிலும் இருக்கிறது.
13:24 ஆகவே நான் மீண்டும் தொகுத்தால் இப்போது இந்த தகவல் தானியங்கியாக இங்கே வருகிறது.
13:41 இப்போது எச்சரிக்கைகளும் காணாமல் போய்விட்டன.
13:47 லேடக் என்ன செய்தது எனில் குறிப்புதவி எண் தகவலை references .aux இலிருந்து எடுத்தது. அவற்றை மூல பைலில் cite கட்டளைகளின் label களுக்கு குறித்தளித்தது.
14:05 இப்போது குறிப்புதவிகள் உள்ள ref.bib பைலை பார்க்கலாம். இங்கே வருவோம்.
14:17 ref.bib,
14:24 இந்த பக்கத்தின் மேலே போகலாம்.
14:29 இமேக்ஸ் editor இல், நாம் சேர்க்க நினைக்கும் ஒரு குறிப்புதவியை தேர்ந்தெடுக்க ஒரு உள்ளீட்டு வகையை பயன்படுத்த முடியும்.
14:36 உதாரணமாக, entry types என்று இங்கே இருப்பதை பாருங்கள்.
14:50 ஆகவே இமேக்ஸ் திருத்தியில் இதை உருவாக்க முடியும். இந்த ‘article in journal’ வகையை நாம் தேர்ந்தெடுத்த உடனேயே ஒரு காலி பதிவு கிடைக்கிறது. இதை நான் நிரப்ப முடியும்.
15:09 உங்கள் திருத்தியில் இப்படி வசதி இல்லை எனில் கவலை வேண்டாம். கைமுறையாகவே இந்த உள்ளீடுகளை உருவாக்கலாம்.
15:16 இப்போது நான் இதை செயல் நீக்குகிறேன். எனக்கு இது வேண்டாம்.
15:24 strings என்னும் சரங்களை அறுதியிட்டு அவற்றை வேரியபில்களாக file ref.bib இல் பயன்படுத்த முடியும்.
15:33 உதாரணமாக, சரம் JWC என்பது, John Wiley and Songs Limited, Chichester ஐ குறிக்கிறது எனலாம். இது சில குறிப்புதவிகளில் பயனாகி உள்ளது.
15:44 உதாரணமாக இந்த குறிப்புதவியில். ஒவ்வொரு குறிப்புதவிக்கும் ஒரு விசைச்சொல் இருக்கிறது. அது பதிவேட்டின் ஆரம்பத்திலேயே இருக்கிறது.
15:52 உதாரணமாக, இந்த குறிப்புதவி, பதிவேடு KMM07 ஐ கொண்டுள்ளது. அது இங்கேயும் உள்ளது. உண்மையில் நான் இந்த பதிவையும் இதே விசைச்சொல் கொண்டு மேற்கோள் காட்டி இருக்கிறேன்.
16:09 இப்போது எப்படி BibTeX ஐ பயன்படுத்தி பலவித மேற்கோள்களையும் காட்ட முடிகிறது என்று விளக்குகிறேன்.
16:21 வேறு மாற்றங்களை செய்யும் முன் இங்கே குறிப்புதவிகள் அனைத்தும் அகர வரிசையில் உள்ளன என்பதை நினைவில் கொள்வோம்..
16:29 உதாரணமாக, B. C. Chang and Pearson, எண் 1, அது இங்கே இருக்கிறது.
16:37 குறிப்பிடப்படும் முதல் குறிப்புதவி 3, பிறகு 2, பிறகு 11, மேலும் இதே போல். ஏனெனில் மேற்கோள் காட்டப்படுவது அகர வரிசையில்.
16:50 இந்த bibliography style ஐ வேறாக மாற்றினால்,
16:59 இதை bibliography style u-n-s-r-t என் மாற்றுகிறேன். இது IEEE journal களில் பயன்படும் அடுக்காத குறிப்புதவி பட்டியல் ஆக காட்டுகிறது.
17:13 ஒரு முறை தொகுத்தால், references .aux style தகவல் குறித்து மேம்படுத்தப்படுகிறது. இப்போது u-n-s-r-t என இருக்கும்.
17:25 BibTeX ஐ BibTeX.references கட்டளையால் செயலாக்க, references .bbl இல் குறிப்புதவி பட்டியல் உருவாக்கப்படுகிறது.
17:42 அது references .bbl ஐஉருவாக்கி இருக்கும் என்பது கவனிக்கவும்.
17:47 ஆனால் இது புதிய u-n-s-r-t பாங்கில் இருக்கும்.
17:52 இப்போது references .tex ஐ தொகுக்கலாம்.
18:02 வரிசை மாறிவிட்டதை பாருங்கள்.
18:09 குறிப்புதவிகள் அகர வரிசையில் இராது,
18:16 ஆனால் இங்கே ஒரு எச்சரிக்கை இப்படி உள்ளது... லேபிள்கள் மாறி இருக்கலாம். சரியான , குறிப்புதவிகள் கிடைக்க மீண்டும் இயக்கவும்.
18:24 சரி, அதை மீண்டும் இயக்க எச்சரிக்கை போய்விட்டது. இங்கே குறிப்புதவிகள் காட்டப்படுவது மூல பைலில் காட்டப்படுவது போலவே என்று கவனியுங்கள்.
18:40 உதாரணமாக, குறிப்புதவி 1, முதலில் காட்டப்பட்டது, குறிப்புதவி 2 இரண்டாவதாக, 3 ஆவது, 4ஆவது, 5ஆவது ..இதே போல மேலும்...
18:54 இப்போது குறிப்புதவிகளை கணினி விஞ்ஞான journalகளில் கேட்பது போல ஆக்க ...
19:01 ஆகவே இங்கே வந்து இதை ‘alphaஎன்போம்.
19:07 ஒரு முறை தொகுக்கலாம்.
19:10 BibTeX செய்கிறேன்.
19:14 இன்னும் ஒரு முறை தொகுக்கலாம்.
19:17 ஆகவே இது மாறிவிட்டது. ஆனால் இங்கே குறிப்புதவிகள் மாறவில்லை.
19:21 லேபிள்கள் மாறி இருக்கலாம் என இங்கே ஒரு எச்சரிக்கை உள்ளது.
19:25 நான் இன்னொரு முறை தொகுக்க அதே போல இருக்கிறது.
19:30 உதாரணமாக, இங்கே B C Chang and Pearson ... அதற்கு இங்கிருப்பது CP82... இதோ இருக்கிறது.
19:41 ஆகவே இந்த உள்ளீடுகளின் குறிப்புதவியாக்கம் மாறிவிட்டது.
19:56 வலையுலகில் இன்னும் பலவித குறிப்புதவி பாங்குகள் உள்ளன.
20:01 ifac மற்றும் chemical engineering journal களில் வருவது போல ஸ்டைலை காட்டுகிறேன்.
20:08 முதலில் use-packages கட்டளையில் Harvard ஐ சேர்க்க வேண்டும். இதோ காட்டுகிறேன்.
20:19 style ஐ ifac க்கு மாற்ற வேண்டும்.
20:28 இவை இரண்டு பைல்கள் மூல செயலாக்கப்படுகிறது. Harvard,sty மற்றும் ifac.bst.
20:48 இந்த பைல்கள் வலையில் கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் அவற்றை தரவிறக்கிகொள்ளலாம்.
20:53 இதை இப்போது தொகுக்க ... பிடிஎஃப்-லேடக்-references ... BibTeX செயலாக்குவோம்.
21:09 இரு முறை தொகுக்கிறேன்.
21:14 குறிப்புதவி பட்டியல் இதோ கிடைத்துவிட்டது. குறிப்புதவிகள் வரிசை எண்கள் இல்லாமல் இவை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.
21:23 வரிசை எண்கள் காணாமல் போய்விட்டன.
21:25 குறிப்புதவி செய்வது தெளிவாக ஆசிரியர் பெயர்கள் …. உதாரணமாக, Vidyasagar 1985, … மற்றும் வருடம் ஆகியவற்றை குறிப்பிடுவதுதான்.
21:39 இந்த குறிப்புதவிகள் அடுத்த பக்கத்திலும் உள்ளன. மேலும்...இதோ அகரவரிசையில் உள்ளது.
21:58 இந்த குறிப்புதவி பாங்கை பயன்படுத்தும் போது cite கட்டளை எல்லா குறிப்புதவிகளையும் அடைப்புகளுக்குள் இடுகிறது.
22:06 உதாரணமாக, மூல பைலை பாருங்கள்..
22:12 இங்கே... இங்கே பாருங்கள், the text book by cite KMM07 உருவாக்குவது ‘the text book by (Moudgalya, 2007b)’.
22:27 இங்கே மௌத்கல்யா என்ற பெயர் அடைப்புகளுக்குள் வரக்கூடாது, வருடம் மட்டுமே அடைப்புகளில் வர வேண்டும் என்றால்...
22:35 cite-as-noun கட்டளையால் இதை செய்யலாம்.
22:43 இதை தொகுக்கிறேன்
22:45 மீண்டும் தொகுக்கலாம்.
22:48 மௌத்கல்யா என்ற பெயர் அடைப்புகளுக்கு வெளியே வந்துவிட்டது. வருடம் மட்டுமே அடைப்புகளில் உள்ளது.
23:00 இந்த cite-as-noun பிரச்சினையை சரி செய்தது. ஆனால் இந்த cite-as-noun கட்டளை நாம் இப்போது பயன்படுத்தும் குறிப்பளிப்பு பாங்குக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனிக்கவும்.
23:12 மற்ற பாங்குகளில் வேலை செய்யாமல் போகலாம்.
23:16 முன் சொன்னது போல ஏராளமான குறிப்பளிப்பு பாங்குகள் உள்ளன.
23:20 நமக்கு தேவையான பொருத்தமான sty மற்றும் bst fileகளை தரவிறக்கிக்கொள்ள வேண்டும். இந்த உதாரணத்தில் நான் Harvard.sty மற்றும் ifac.bst file களை பயன்படுத்தி இருக்கிறேன்.
23:37 கவனமாக பார்த்தால் மேற்சொன்ன எந்த உதாரணத்திலும் நாம் ref.bib என்னும் குறிப்புதவிகளின் தரவுத்தளத்தை மாற்றவே இல்லை.
23:47 இதுதான் BibTeX இன் அழகு!
23:50 குறிப்புதவிகள் பட்டியல்களை உருவாக்குவதில் நிறைய நேரம் செலவழித்தாலும் உண்மையில் இதை உருவாக்க பயனர் மேற்கொள்ளும் செயல் மிகஎளிதே.
24:02 ஒன்று, தரவுத்தளத்தை உருவாக்குதல், அதாவது .bib file ஐ உருவாக்குதல். இரண்டாவது .sty மற்றும் .bst file களை பெறுதல்.
24:10 அவற்றில் பல உங்கள் நிறுவலில் ஏற்கெனெவே இருக்கலாம்.
24:15 மூல பைலை தொகுப்பது. பிடிஎஃப் லேடக் ஐ செயலாக்குவது, மூல பைலை இன்னும் இரு முறை தொகுப்பது.
24:24 இது மிக எளிய செயல் என்று ஒப்புக்கொள்வீர்கள்தானே?
24:30 Bibtex க்கும் லேடக்கும் வாழ்க வாழ்க என்றூ வாழ்த்துவீர்கள்தானே!
24:35 இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது.
24:38 கேட்டமைக்கு நன்றி.
24:40 வணக்கம் கூறி விடை பெறுவது கண்ணன் மௌத்கல்யா.

Contributors and Content Editors

Chandrika, Priyacst