Linux/C2/File-Attributes/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | லீனக்ஸ் பைல் அட்ரிப்யூட்ஸ் குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு! |
0:05 | முன் ஏற்பாடாக பின் வரும் காலி பைல்களை தயார் செய்து கொள்க. எக்சாம்பிள் 1, எக்சாம்பிள் 2, எக்சாம்பிள் 3, எக்சாம்பிள் 4, எக்சாம்பிள் 5, டெஸ்ட்சோன். |
0:18 | சில காலி டிரக்டரிகளும் தயார் செய்க. டெஸ்ட் அன்டர்ஸ்கோர் ச்சோன், டிரக்டரி1 |
0:25 | பைல் அட்ரிப்யூட் என்பது ஒரு கணினி பைல் உடன் தொடர்புள்ள அல்லது விவரிக்கிற மெடா டேட்டா. |
0:24 | பைல் அட்ரிப்யூட் என்பது ஒரு பைலின் சொந்தக்காரர் பைல் வகை, அணுகல் பெர்மிஷன் போன்றவற்றை விவரிக்கிறது. |
0:45 | சிஹெச் ஓன் கமாண்ட் பைல் அல்லது டிரக்டரியின் சொந்தக்காரரை மாற்ற பயன்படுகிறது. இது ஒரு அட்மின் கமாண்ட் ஆகையால் ரூட் மட்டுமே இப்படி மாற்றலாம். |
1:00 | சி-ஹெச் ஓன் கமாண்ட் க்கு ஸின்டாக்ஸ் ச்சோன் ஸ்பேஸ் ஆப்ஷன் ஸ்பேஸ் ஒனர்நேம் ஸ்பேஸ் பைல்நேம் அல்லது டிரக்டரி நேம் |
1:13 | சி-ஹெச் ஓன் கமாண்ட் உடன் கீழ் வரும் ஆப்ஷன்ஸ் கொடுக்கலாம். |
1:18 | -ஆர் : நடப்பு டிரக்டரி மட்டும் இல்லாமல் அதனுள் இருக்கும் எல்லா டிரக்டரிகளுக்கும் மாற்ற. |
1:28 | -சி : ஒவ்வொரு பைலின் அனுமதியையும் மாற்ற. |
1:33 | -f : சிஹெஸ் ஓன் பிழை செய்திகளை காட்டுவதை தவிர்க்க |
1:37 | இப்போது சில உதாரணங்களை பார்க்கலாம். |
1:40 | டெர்மினலுக்கு போங்கள். நாம் காலி பைல்கள் டிரக்டரிகள் உருவாக்கிய இடத்துக்கு போகலாம். அதற்கு சிடி ஸ்பேஸ் டெஸ்க்டாப் ச்லாஷ் பைல் அட்ரிப்யூட். என்டர் செய்க. |
1:56 | இப்போது கமாண்ட் என்டர் செய்யலாம்.
எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் டெஸ்ட்சோன் அதாவது டி இ எஸ் டி சி ஹெச் ஓ டபிள்யு என். என்டர் செய்க. |
2:11 | இங்கே பைல் டெஸ்ட்சோன் இன் சொந்தக்காரர் ஷாஹித் என்று தெரிகிறது. |
2:18 | சொந்தக்காரர் யார் என்பதை மாற்ற கமாண்ட் டைப் செய்து உள்ளிடுக:
சுடோ ஸ்பேஸ் சிஹெச் ஓன் ஸ்பேஸ் ஏ என் யு எஸ் ஹெச் ஏ அனுஷா ஸ்பேஸ் டெஸ்ட்சோன் அதாவது டி இ எஸ் டி சி ஹெச் ஓ டபிள்யு என் என்டர் செய்க. |
2:36 | சுடோ வுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பின் மீண்டும் என்டர் செய்க. |
2:44 | இப்போது மீண்டும் கமாண்ட் என்டர் செய்யலாம். எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் டெஸ்ட்சோன். என்டர் செய்க. இப்போது பைல் டெஸ்ட்சோன் இன் புதிய சொந்தக்காரர் அனுஷா என்று தெரிகிறது |
3:03 | ஒரு டிரக்டரியின் சொந்தக்காரரை மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம். |
3:07 | இப்போது கமாண்ட் என்டர் செய்யலாம். எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல். என்டர் செய்க. இங்கே டிரக்டரி டெஸ்ட்சோன் இன் சொந்தக்காரர் ஷாஹித் என்று தெரிகிறது. |
3:21 | சொந்தக்காரர் யார் என்பதை மாற்ற கமாண்ட் டைப் செய்து உள்ளிடுக: |
3:26 | சுடோ ஸ்பேஸ் சிஹெச்ஓன் ஸ்பேஸ் ஹைபன் கேபிடல் ஆர் ஸ்பேஸ் ஏ என் யு எஸ் ஹெச் ஏ அனுஷா ஸ்பேஸ் டெஸ்ட்சோன் அதாவது டிரக்டரியின் பெயர். என்டர் செய்க. |
3:44 | சுடோ வுக்கு பாஸ்வேர்ட் தேவையானால் மீண்டும் கொடுத்து பின் மீண்டும் என்டர் செய்க. |
3:49 | சௌகரியத்துக்காக கண்ட்ரோல் எல் ஆல் திரையை துடைக்கிறேன். இப்போது டைப் செய்யவும். எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல். என்டர் செய்க. டிரக்டரியின் புதிய சொந்தக்காரர் அனுஷா. |
4:06 | சிஹெச்மோட் கமாண்ட் ஒன்று அல்லது அதிகமான பைல்களின் அணுகல் அனுமதியை மாற்ற பயனாகிறது. |
4:13 | சிஹெச்மோட் கமாண்ட் இன் ஸின்டாக்ஸ் இப்படி: சிஹெச்மோட் ஸ்பேஸ் [ஆப்ஷன்ஸ்] ஸ்பேஸ் மோட் ஸ்பேஸ் பைல்நேம் ஸ்பேஸ் சிஹெச்மோட் ஸ்பேஸ் [ஆப்ஷன்ஸ்] ஸ்பேஸ் பைல்நேம்
சிஹெச்மோட் கமாண்ட் உடன் பின் வரும் ஆப்ஷன்ஸ் ஐ கொடுக்கலாம். |
4:29 | -c : மாறிய பைல்களின் தகவல்களை அச்சிடவும். |
4:34 | -f : சிஹெச்மோட் கமாண்ட் மாற்ற முடியாத பைல்கள் குறித்து பயனருக்கு தெரிவிக்காதே. |
4:41 | பின் வரும் அனுகல்களும் பெர்மிஷன்களும் உள்ளன. |
4:44 | r : ரீட்
w : ரைட் x : எக்சிக்யூட் s : செட் யூசர் (அல்லது க்ரூப்) ஐடி |
4:54 | மாற்றாக நாம் மூன்று இலக்க ஆக்டல் நம்பர் ஐ கொடுத்து பெர்மிஷன்களை குறிக்கலாம். |
5:00 | முதல் எண் சொந்தக்காரர் பர்மிஷன். இரண்டாவது க்ரூப் பர்மிஷன். மூன்றாவது மற்றவர்க்கு பர்மிஷன். |
5:09 | பர்மிஷன் எப்படி கணக்கிடப்படும்? கீழ் வரும் மதிப்புகளை கூட்டி கணக்கிடப்படும்.
4 என்பது ரீட் 2 என்பது ரைட் 1 என்பது எக்சிக்யூட் |
5:20 | சிஹெச்மோட் க்கு இப்போது ஒரு உதாரணம் பார்க்கலாம்; பைல் எக்சாம்பிள்1 க்கு யூசர் பர்மிஷனில் எக்சிக்யூட் ஐ சேர்க்க டெர்மினல் க்கு போய் பின் வரும் கமாண்ட் ஐ உள்ளிடுக: |
5:30 | அதற்கு முன் கண்ட்ரோல் எல் ஐ உள்ளிட்டு திரையை துடைக்கிறேன். |
5:36 | இப்போது கமாண்ட் டைப் செய்க: சிஹெச்மோட் ஸ்பேஸ் u+x ஸ்பேஸ் எக்சாம்பிள்1
என்டர் செய்க |
5:49 | மாற்றங்களை காண இப்போது டைப் செய்க எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் ஸ்பேஸ் எக்சாம்பிள்1 மாற்றங்களை காண என்டர் செய்க |
6:01 | இங்கு நீங்கள் எக்சாம்பிள்1 பைலின் சொந்தக்காரரின் ரீட்/ரைட்/எக்சிக்யூட் பர்மிஷன்கள், க்ரூபின் ரீட் /எக்சிக்யூட் பர்மிஷன்கள் மற்றும் மற்றவரின் எக்சிக்யூட் பர்மிஷன்கள் ஆகியவற்றை காணலாம். |
6:15 | இப்போது டைப் செய்க:கமாண்ட் சிஹெச்மோட் ஸ்பேஸ் 751 ஸ்பேஸ் எக்சாம்பிள் 1
என்டர் செய்க |
6:26 | இப்போது டைப் செய்க: எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் ஸ்பேஸ் எக்சாம்பிள்1. என்டர் செய்க |
6:35 | மேலே சொன்ன கமாண்ட் எக்சாம்பிள்1 பைலின் சொந்தக்காரரின் ரீட் /ரைட் /எக்சிக்யூட் பர்மிஷன்கள், க்ரூபின் ரீட் /எக்சிக்யூட் பர்மிஷன்கள் மற்றும் மற்றவரின் எக்சிக்யூட் மட்டும் பர்மிஷன்கள் ஆகியவற்றை அமைத்துள்ளதை காணலாம். |
6:52 | எக்சாம்பிள்1 பைலுக்கு எல்லாருக்கும் ரீட் - ஒன்லி பர்மிஷனை அமைக்க கமாண்ட் சிஹெச்மோட் ஸ்பேஸ் =ஆர் ஸ்பேஸ்எக்சாம்பிள்1. என்டர் செய்க |
7:08 | இப்போது கமாண்ட் டைப் செய்க எல்எஸ் ஸ்பேஸ் ஈக்வல்ஸ் எல் ஸ்பேஸ் எக்சாம்பிள்1. என்டர் செய்க |
7:19 | எக்சாம்பிள்1 பைலுக்கு எல்லாருக்கும் ரீட் ஒன்லி பர்மிஷனை அமைத்துள்ளது. |
7:30 | பர்மிஷனை ரிகர்சிவ் ஆக அதாவது உள்ளே உள்ள டிரக்டரி, பைல்களுக்கும் சேர்த்து அமைக்கலாம். ரீட் மற்றும் எக்சிக்யூட் அணுகலை எல்லோருக்கும், டிரக்டரி ரைட் அணுகலை சொந்தக்காரரருக்கும் அமைக்க டைப் செய்ய வேண்டிய கமாண்ட் ... |
7:44 | சிஹெச்மோட் ஸ்பேஸ் ஹைபன், பின் மேல் நிலை எழுத்தில் ஆர் ஸ்பேஸ் 755 ஸ்பேஸ் டிரக்டரி1.
என்டர் செய்க |
8:00 | இப்போது மாற்றங்களை காண டைப் செய்க. எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல். என்டர் செய்க |
8:09 | எக்சாம்பிள்2 பைலுக்கு யூசருக்கு எக்சிக்யூட் பர்மிஷன் கொடுக்க கமாண்ட் சிஹெச்மோட் ஸ்பேஸ் யு ப்ளஸ் எக்ஸ் ஸ்பேஸ் எக்சாம்பிள்2. என்டர் செய்க |
8:27 | இப்போது கமாண்ட் டைப் செய்க எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் ஸ்பேஸ் எக்சாம்பிள்2. என்டர் செய்க |
8:40 | இப்போது எக்சாம்பிள்2 க்கு யூசருக்கு எக்சிக்யூட் பர்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. |
8:50 | எக்சாம்பிள்3 க்கு க்ரூப்புக்கு ரைட் பர்மிஷன் கொடுக்க கமாண்ட் சிஹெச்மோட் ஸ்பேஸ் ஜி ப்ளஸ் டபிள்யு ஸ்பேஸ் எக்சாம்பிள்3. என்டர் செய்க |
9:10 | இப்போது டைப் செய்க எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் ஸ்பேஸ் எக்சாம்பிள்3. என்டர் செய்க |
9:23 | எக்சாம்பிள்3 க்கு க்ரூப்புக்கு ரைட் பர்மிஷன் சேர்க்கப்பட்டுள்ளது. |
9:30 | எல்லோருக்கும் ரைட் பர்மிஷனை நீக்க கமாண்ட் டைப் செய்க: சிஹெச்மோட் ஸ்பேஸ் ஏ ஹைபன் டபிள்யு ஸ்பேஸ் எக்சாம்பிள்3 என்டர் செய்க |
9:45 | இப்போது டைப் செய்க எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் ஸ்பேஸ் எக்சாம்பிள்3. என்டர் செய்க |
9:55 | எல்லோருக்கும் ரைட் பர்மிஷனை நீக்கப்பட்டது. |
10:02 | சிஹெச் க்ரூப் கமாண்ட் ஒன்றோ மேற்பட்டோ பைல்களின் க்ரூப்பை ந்யூ க்ரூப்புக்கு மாற்ற உதவுகிறது. |
10:10 | ந்யூ க்ரூப் என்பது ஒரு க்ரூப் ஐடி எண் அல்லது ச்லாஷ் இடிசி ச்லாஷ் க்ரூப் இல் உள்ள ஒரு க்ரூப் பெயர். |
10:20 | பைலின் சொந்தக்காரர் அல்லது சிறப்பு சலுகை உள்ள யூசர் மட்டுமே க்ரூப் ஐ மாற்றலாம். |
10:26 | சிஹெச் க்ரூப் கமாண்ட் க்கு சிண்டாக்ஸ் சிஹெச்க்ரூப் ஸ்பேஸ் [ஆப்ஷன்ஸ்] ஸ்பேஸ் ந்யுக்ரூப் ஸ்பேஸ் பைல்ஸ் ஸ்பேஸ் சிஹெச்க்ரூப் ஸ்பேஸ் [ஆப்ஷன்ஸ்] |
10:36 | சிஹெச்க்ரூப் கமாண்ட் க்கு சில உதாரணங்களை பார்க்கலாம். டெர்மினலுக்குப்போய் கமாண்ட் டைப் செய்க: எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் ஸ்பேஸ் எக்சாம்பிள்4. என்டர் செய்க |
10:57 | இங்கு க்ரூப் பர்மிஷன் யூசர் ஷாஹித் க்கு என காணலாம். |
11:03 | க்ரூப் பர்மிஷன் ஐ மாற்ற கமாண்ட் டைப் செய்க: சூடோ ஸ்பேஸ் சிஹெச் க்ரூப் ஸ்பேஸ் ரோஹித் ஸ்பேஸ் எக்சாம்பிள்4 |
11:20 | என்டர் செய்க. தேவையானால் சூடோ பாஸ்வேர்ட் டைப் செய்க. |
11:27 | இப்போது கமாண்ட் டைப் செய்க எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் ஸ்பேஸ் எக்சாம்பிள்4. என்டர் செய்க |
11:38 | இப்போது க்ரூப் பர்மிஷன் ஷாஹித் இலிருந்து ரோஹித் க்கு மாறிவிட்டது என்பதை காணலாம். |
11:46 | ஐநோட் எண் என்பது சாதனத்துக்கு தரப்பட்ட தனிப்பட்ட முழு எண்ணாகும். |
11:51 | ஐநோட் ஒரு வழக்கமான பைல் அல்லது டிரக்டரி குறித்த அடிப்படை தகவலை வைத்துள்ளது. |
11:57 | எல்லா பைல்களும் ஐநோட் க்கு ஒரு ஹார்ட் லிங்க் ஆகும். |
12:00 | ஒரு ப்ரோக்ராம் ஒரு பைலை பெயரால் தேடினால் கணினி உண்மையில் பொருத்தமான ஐநோட் ஐ பைல் பெயரால் தேடுகிறது. |
12:12 | ஒரு பைலின் ஐநோட் எண்ணை காண எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஐ கமாண்ட் ஐ பயன்படுத்தலாம். |
12:19 | கமாண்ட் டைப் செய்க: எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஐ ஸ்பேஸ் எக்சாம்பிள்5. என்டர் செய்க |
12:29 | பைலுக்கு முன் நாம் காணும் எண் ஐநோட் எண்ணாகும். |
12:35 | ஐநோட்கள் கொடுத்த ஒரு நேரத்தில் ஒரு ட்ரக்டரி ஐ மட்டும் தொடர்பு கொண்டது. |
12:41 | ஹார்ட் லிங்க்குகள் ஒரே ஒரு ஐநோட் உடன் பல ட்ரக்டரிகளை தொடர்பு கொண்டவை. இந்த லிங்க் ஐ உருவாக்க கமாண்ட் எல்என். |
12:52 | ஹார்ட் லிங்க் ஐ உருவாக்க கமாண்ட் எல்என் இன் சிண்டாக்ஸ்... |
11:57 | எல்என் ஸ்பேஸ் சோர்ஸ் ஸ்பேஸ் லிங்க். இதில் சோர்ஸ் என்பது இருப்பில் உள்ள பைல். லிங்க் என்பது உருவாக்க வேண்டிய பைல். |
13:06 | இப்போது ஹார்ட் லிங்க் களின் உதாரணங்கள் பார்க்கலாம். |
13:10 | திரையை துடைக்கிறேன். இப்போது கமாண்ட் டைப் செய்க. எல்என் ஸ்பேஸ் எக்சாம்பிள்1 ஸ்பேஸ் எக்சாம்பிள் எல்என். என்டர் செய்க |
13:25 | இரண்டு பைல்களின் ஐநோட் எண்களையும் காட்ட கமாண்ட் டைப் செய்யவும்.. எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஐ ஸ்பேஸ் எக்சாம்பிள்1 ஸ்பேஸ் எக்சாம்பிள் எல்என்
என்டர் செய்க |
13:41 | இரண்டு பைல்களின் ஐநோட் எண்களும் ஒன்றாகவே இருப்பதை காணலாம், பைல் எக்சாம்பிள் எல்என் என்பது பைல் எக்சாம்பிள்1 க்கு ஹார்ட் லிங்க் ஆகும். |
13:54 | சாப்ட் லிங்க் அல்லது சிம்பாலிக் லிங்க் என்பது இன்னொரு பைல் அல்லது டிரக்டரிக்கு அப்சொலூட் அல்லது ரிலேடிவ் பாத் மூலம் ஒரு தொடர்பை கொண்டுள்ள ஒரு சிறப்பு பைல் ஆகும். |
14:07 | சாப்ட் லிங்க் ஐ உருவாக்க கமாண்ட் எல்என் இன் சிண்டாக்ஸ்... |
14:12 | எல்என் ஸ்பேஸ் ஹைபன் எஸ் ஸ்பேஸ் {டார்கெட்-பைல்நேம்} ஸ்பேஸ் {சிம்பாலிக்-பைல்நேம்.} |
14:19 | இப்போது சாப்ட் லிங்க் களின் உதாரணங்கள் பார்க்கலாம். |
14:25 | சாப்ட் லிங்க் உருவாக்க கமாண்ட் டைப் செய்யவும்: எல்என் ஸ்பேஸ் ஹைபன் எஸ் ஸ்பேஸ் எக்சாம்பிள்1 ஸ்பேஸ் எக்சாம்பிள் சாப்ட் |
14:40 | என்டர் செய்க |
14:43 | இரண்டு பைல்களின் ஐநோட் எண்களையும் காட்ட கமாண்ட் டைப் செய்யவும். எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல்ஐ ஸ்பேஸ் எக்சாம்பிள்1 ஸ்பேஸ் எக்சாம்பிள் சாப்ட் |
15:01 | என்டர் செய்க |
15:03 | இரண்டு பைல்களின் ஐநோட் எண்களும் வெவ்வேறு என்பதை காணலாம். எக்சாம்பிள் சாப்ட் என்பது எக்சாம்பிள்1 இன் சாப்ட் லிங்க். |
15:16 | ஆகவே இந்த டுடோரியலில் நாம் லீனக்ஸ் பைல் அட்ரிப்யூட்ஸ் பெர்மிஷன், சொந்தக்காரர் க்ரூப் ஆகியவற்றை எப்படி மாற்றுவது என்று கண்டோம். |
15:26 | ஐநோட், பைல்களின் ஹார்ட் லிங்க் சாப்ட் லிங்க் ஆகியவற்றையும் கற்றோம். |
15:31 | இத்துடன் இந்த டுடோரியல் முடிவடைகிறது. |
15:35 | ஸ்போக்கன் டுடோரியல் என்பது டாக் டு ஏ டீச்சர் திட்டத்தின் பங்காகும். இதற்கு நேஷனல் மிஷன் ஆன் எஜுகேஷன் ஐசிடி மூலம் ஆதரவு அளிக்கிறது. |
15:44 | இந்த தொடுப்பு மூலம் மேலும் அதிக தகவல்களை பெறலாம். |
15:50 | மொழியாக்கம் கடலூரில் இருந்து திவா. விடை பெறும் நான் -----------------------(name of the recorder) from --------------------------(name of the place) நன்றி! |