Health-and-Nutrition/C2/Breastfeeding-latching/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:39, 23 March 2018 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00:01 வணக்கம், பாலூட்ட மார்பகத்தை குழந்தையின் வாயினுள் செலுத்துவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போது, குழந்தையை தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைத்து மார்பத்தை அதன் வாயுனுள் செலுத்துவதற்கான சரியான முறை மற்றும் பாலூட்டும் காலஇடைவெளி.
00:20 நன்றாக பாலூட்டுதற்கு, மார்பத்தை குழந்தையின் வாயினுள் சரியாக செலுத்துவது மிக அவசியம் என்பதை குறித்துக்கொள்க .
00:29 குழந்தையின் வாயினுள் மார்பகத்தை சரியாக செலுத்தவில்லையெனில் மார்பக காம்பில் மட்டுமே குழந்தை பால் குடிக்கும்.
00:36 அது குழந்தைக்கு மிகச்சிறிதளவுதான் பால் கொடுக்கும்.
00:40 ஆனால் மார்பகத்தின் areola ன் கீழ் பகுதியுடன் குழந்தை நன்றாக இணைவது குழந்தைக்கு தேவையான பாலைக் கொடுக்கும்.
00:50 Areola என்பது மார்பக காம்பை சுற்றியுள்ள கருப்புநிறப் பகுதி என்பதை நினைவுக்கொள்ளவும்.
00:56 இப்போது ஆரம்பிக்கலாம். முதலில் தாய், பொருத்தமான பாலூட்டும் பிடிப்பு முறையில் குழந்தையை பிடிக்க வேண்டும
01:05 இந்த பிடிப்பு முறைகள், இந்த டுடோரியல் வரிசையில் வேறொரு வீடியோவில் விளக்கப்பட்டுள்ளன.
01:11 இந்த டுடோரியல் cross cradle பிடிப்பு முறையை பயன்படுத்தி விளக்கப்படுகிறது.
01:16 குழந்தையை சரியாக வைப்பது, அதன் வாயினுள் சரியாக மார்பகத்தை செலுத்துவதற்கும் சரியாக பாலூட்டுவதற்கும் மிகவும் முக்கியம்
01:24 இந்த படத்தில் தாய் குழந்தையை சரியாக cross cradle பிடிப்பு முறையில் பிடித்துள்ளார்.
01:31 மார்பத்தை வாயினுள் செலுத்துவற்கு குழந்தையும் தயாராக உள்ளது.
01:35 மார்பகத்தை வாயினுள் செலுத்துவதற்கு முன் குழந்தை கொட்டாவி விடுவது போல் வாயை அகலமாக திறக்க வேண்டும்.
01:42 ஏன்? இதை ஒருவர் vada pav அல்லது burgerஐ சாப்பிடுவதை பார்த்து புரிந்து கொள்வோம்.
01:49 நாம் vada pav அல்லது burgerஐ பெரியதாக கடிக்க வாயை அகலமாக திறக்கிறோம்.
01:56 அதேபோல- குழந்தை வாயை அகலமாக திறப்பது அதன் வாயினுள் மார்பகத்தின் அதிக பகுதியை செலுத்த உதவும்.
02:04 குழந்தையின் வாயை அகலமாக திறக்க வைக்க, தாய், குழந்தையின் மேல் உதட்டில் தன் மார்பக காம்பை, குழந்தை அகலமாக வாயை திறக்கும் வரை மெதுவாக தேய்க்க வேண்டும்
02:16 சில நேரங்களில் குழந்தை வாயை அகலமாக திறக்க 2 நொடி முதல் 2 நிமிடங்களை வரை எடுக்கலாம், பொறுமையாக இருக்க வேண்டும்.
02:25 எந்த பாலூட்டும் முறைக்கும், மார்பத்தை பிடித்திருக்கும் தாயின் விரல்கள் மற்றும் பெருவிரல், குழந்தையின் உதடுகளுக்கு நேரே இணையாக இருக்கவேண்டும் என்பதை நினைவுக்கொள்க
02:36 குழந்தை வாயை அகலமாக திறக்கும்போது குழந்தையின் கீழ் உதடு areola க்கு அடியில் இருக்க வேண்டும்
02:43 மார்பக காம்பானது குழந்தையின் வாய்க்கு மேல்நோக்கி இருக்க வேண்டும். வாய்க்கு நடுவில் அல்ல.
02:50 இப்போது தாய் உடனே தன் மார்பகத்தை குழந்தையின் வாயினுள் வைக்க வேண்டும்.
02:55 குழந்தையின் தலையை சற்று வெளிப்புறம் சாய்ப்பதன் மூலம் குழந்தையின் தாடையை முதலில் மார்பகத்துடன் அழுத்த வேண்டும்.
03:02 குழந்தையின் வாயை அடைவதற்கு, தாய் தன் முதுகை வளைக்கவோ தன் மார்பகத்தை தள்ளவோ கூடாது.
03:08 குழந்தையின் தோள்களை மெதுவாக சற்று தள்ளி குழந்தையை மார்புக்கு கொண்டுவர வேண்டும்.
03:15 தாயின் aerolaன் கீழ் பகுதி, குழந்தையின் வாயினுள் இருப்பது இதில் மிக முக்கியம்.
03:25 இது குழந்தையின் வாயினுள் வசதியான இடத்திற்கு மார்பக காம்பு அடைய உதவும்.
03:31 குழந்தை தன் நாக்கை, அதன் கீழ் உதட்டுக்கு அருகே இருக்கும் areola ஐ அழுத்தியவாறு இருக்க வேண்டும்.
03:37 இது அதிகமான பால் நாளங்களை அழுத்தி அதிக பாலைக் கொடுக்கும்.
03:42 அடுத்த படி, குழந்தை மார்பகத்துடன் நன்றாக இணைந்துள்ளதா என சோதிப்பது
03:48 அதை சரிபார்க்க, தாய், பின்வரும் அறிகுறிகளை பார்க்க வேண்டும்:
03:54 குழந்தையின் வாய் அகலாக திறந்துள்ளதா
03:57 areolaன் பகுதி, குழந்தையின் கீழ் உதட்டு பக்கத்தை விட மேல் உதட்டு பக்கம் அதிகமாக தெரிகிறதா.
04:06 குழந்தையின் கீழ் தாடை முழுவதுமாக தாயின் மார்பகத்துடன் பொதிந்துள்ளதா.
04:11 குழந்தை பாலை விழுங்கும் போது அதன் தாடை முற்றிலும் இறங்குகிறதா.
04:16 குழந்தையின் கீழ் உதடு வெளிப்பக்க திசையில் வளைந்துள்ளதா.
04:22 இருப்பினும், நன்றாக இணைந்திருக்கும் குழந்தைக்கு பெரும்பாலும் இது மார்பகத்தினுள் மறைந்திருக்கும்
04:28 அந்த சமயங்களில், குழந்தையின் கீழ் உதட்டுக்கு அருகில் இருக்கும் மார்பகத்தை சற்று அழுத்தி, குழந்தையின் கீழ் உதடு வெளிநோக்கி வளைந்துள்ளதா என பார்க்கவும்.
04:41 அடுத்து, குழந்தையின் மூக்கை பார்க்கவும். குழந்தையின் மூக்கு தாயின் மார்பகத்துடன் அழுந்தி இருந்தால் -
04:49 குழந்தையின் தலையை சற்று மேல்நோக்கி தாய் வளைக்க வேண்டும் இதனால் குழந்தையின் தாடை மார்பகத்துடன் மேலும் இணையும்,
04:58 மேலும் குழந்தையின் மூக்கு மற்றும் நெற்றி, மார்பகத்தை விட்டு தள்ளி வரும்.
05:04 இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தை மார்பகத்துடன் மேலும் நன்றாக இணையும்.
05:09 குழந்தையின் முழு முகத்தையும் மார்பகத்தில் இருந்து நகர்த்த கூடாது.
05:13 இதனால் மார்பக காம்பு மட்டும் வாயில் இருக்கும்.
05:16 பாலூட்டும்போது தாய் வசதியாக இருக்க வேண்டும் என்பதை நினைவுக்கொள்க.
05:21 கிள்ளுதல், இழுத்தல் அல்லது தேய்த்தல் போன்ற உணர்வுகள் மார்பக காம்பில் இருக்க கூடாது.
05:27 பாலூட்டும்போது தாய்க்கு வலித்தால் குழந்தை சரியாக மார்பகத்துடன் இணையாமல் இருக்கலாம்.
05:35 குழந்தை சரியாக மார்பகத்துடன் இணையாமல் இருப்பதற்கான பொதுவான ஒரு காரணத்தைக் காணலாம் .
05:40 குழந்தையின் வாயின் நடுவில் மார்பக காம்பை வைக்க, பல தாய்மார்கள் தங்கள் areolaஐ அழுத்துகிறார்கள்
05:48 இங்கு, குழந்தையின் வாய் அகலமாக திறக்கவில்லை.
05:52 குழந்தை மார்பக காம்புடன் மட்டும் இணைகிறது.
05:56 இங்கு, குழந்தையின் மேல் மற்றும் கீழ் உதட்டுக்கு அருகே ஒரே அளவான areola தெரிகிறது.
06:04 குழந்தையின் தாடை மார்பகத்தை விட்டு தள்ளி உள்ளது.
06:07 குழந்தை பாலை குடிக்க தொடர்ந்து வேகமாக உறிஞ்சுகிறது.
06:14 உறிஞ்சும்போது, குழந்தையின் கன்னம் பள்ளமாகிறது
06:17 பாலை விழுங்கும் போது குழந்தையின் தாடை முற்றிலும் கீழே இறங்கவில்லை
06:23 இதனால் மார்பகம் நசுக்கப்பட்டுகுழந்தையின் வாயின் கடினமான பகுதியில் அழுத்தப்படுகிறது.
06:31 இது தாய்க்கு வலியை கொடுக்கும் மார்பக காம்பும் காயமாகும்.
06:37 மேலும் மார்பக காம்பில் பால் குடிக்கும் போது, areola க்கு அடியில் இருக்கும் பெரிய பால் நாளங்களில் இருந்து பால் குழந்தை கிடைக்காது.
06:45 இதனால் குழந்தை போதுமான அளவு பால் பெறுவதில்லை.
06:50 மார்பக காம்பில் மட்டும் குழந்தை பால் குடித்தால்,
06:54 தாய் தன் சுத்தமான சுண்டு விரலை குழந்தையின் வாயின் ஓரத்தில் வைக்க வேண்டும்.
06:59 குழந்தையின் வாயில் இருந்து மார்பக காம்பை விடுவிக்க விரலை பயன்படுத்த வேண்டும்.
07:04 பிறகு மீணடும் குழந்தையை சரியாக அதே மார்பகத்துடன் இணைத்து மார்பகத்தை வாயினுள் செலுத்த வேண்டும்.
07:11 சரியாக மார்பகத்தை வாயினுள் செலுத்தியபிறகு, குழந்தைக்கு போதுமான foremilk மற்றும் hindmilk கிடைக்கிறதா என தாய் சோதிக்க வேண்டும்.
07:19 Foremilk என்பது மார்பகத்தின் முன் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் நீர்த்த பால் ஆகும்.
07:25 இது தண்ணீர் மற்றும் புரதத்தால் ஆனது.
07:29 இது குழந்தையின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் அத்தியாவசியமானது.
07:36 Hind milk என்பது மார்பகத்தின் பின் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் அடர்த்தியான பால் ஆகும்.
07:42 இது குறிப்பாக கொழுப்பால் ஆனது.
07:46 இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் அத்தியாவசியமானது.
07:53 குழந்தை foremilk மற்றும் hindmilk இரண்டையும் பெறுவதை உறுதிப்படுத்த- தாய் ஒரு மார்பகத்தில் முழுவதுமாக பால் கொடுத்து விட்டு அடுத்த மார்பகத்தில் கொடுக்க வேண்டும்.
08:05 ஒரு மார்பகத்தில் முழுவதுமாக பாலுட்டப்பட்டுவிட்டதா என சோதிக்க, தாய் தன் மார்பகத்தை தன் கையால் அழுத்தவேண்டும்.
08:15 மார்பகத்தில் இருந்து நீர்த்த பால் நன்றாக வெளியேறினாளோ,
08:19 அல்லது அடர்ந்த பால் நன்றாக வெளியேறினாளோ
08:24 பிறகு, தாய் அதே மார்பகத்தில் மீண்டும் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்.
08:29 கையால் அழுத்தும் போது அடர்ந்த பாலில் சிறு துளிகள் மட்டும் வெளியேறினால்,
08:35 தாய் அந்த மார்பகத்தில் முழுவதுமாக குழந்தைக்கு பாலூட்டிவிட்டாள் என பொருள்.
08:41 ஆனால், அடுத்த மார்பகத்தில் பால் கொடுக்கும் முன், குழந்தை ஏப்பம் விடுமாறு தாய் செய்ய வேண்டும். அதற்கு குழந்தையை தன் மடியில் உட்கார வைத்து குழந்தையின் உடலை சற்று முன்னோக்கி சாய்த்து தன் கையை குழந்தையின் தாடையில் வைத்து வாய் திறக்குமாறு செய்யவேண்டும்.
09:00 2, 3 நிமிடங்களுக்குள் குழந்தை ஏப்பம் விட வேண்டும்.
09:04 அடுத்த 5 நிமிடங்களுக்கு ஏப்பம் விடவில்லை எனில்,
09:08 குழந்தை மார்பகத்துடன் நன்கு இணைந்து பால் குடித்துள்ளது என பொருள்.
09:14 பால் குடிக்கும்போது அதிகமான காற்று குழந்தையின் வாயினுள் செல்லவில்லை.
09:21 இப்போது, தாய் அடுத்த மார்பகத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.
09:26 குழந்தையின் வயிறு நிறைந்துவிட்டால், அடுத்த மார்பகத்தில் பால் குடிக்கமாட்டாள்.
09:32 ஆனால் தாய் எப்போதும் இரு மார்பகத்தில் இருந்தும் பால் கொடுக்க வேண்டும்.
09:39 பால் போதுமானது என்பதை குழந்தையே முடிவு எடுக்க வேண்டும்.
09:45 பால் குடிக்கும்போது குழந்தை தூங்கினால், தாய் குழந்தையை எழுப்ப வேண்டும். அதற்கு குழந்தையின் பாதத்தை மெதுவாக தட்டலாம்
09:55 அல்லது குழந்தையின் முதுகை மெதுவாக வருடலாம்
09:59 அல்லது ஏப்பம் விட உட்கார வைத்தது போல உட்கார வைக்கலாம்.
10:04 சரியான முறையில் பாலூட்டுவதுடன் பாலூட்டும் காலஇடைவெளியும் மிக முக்கியும்.
10:12 24 மணிநேரத்தில் 12 முறையாவது தாய் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்.
10:17 அதில் 2, 3 முறையாவது இரவில் பாலூட்ட வேண்டும்.
10:24 குழந்தைக்கு பாலூட்ட, தாய், குழந்தையின் பசி அறிகுறிகளை பார்க்க வேண்டும். அவை - அசைதல்
10:32 வாயைத் திறத்தல்

தலையை திருப்புதல்

வாயில் விரலை வைத்தல்
10:37 விரல்களை சப்புதல் மற்றும் உடலை நீட்டுதல்
10:42 குழந்தை பாலுக்காக அழுதால், மிகவும் தாமதமாகிவிட்டது என பொருள்.
10:49 2 வாரங்கள், 6 வாரங்கள் மற்றும் 3 மூன்று மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என்பதை குறித்துக்கொள்க.
10:59 அப்போது குழந்தைக்கு அதிக பால் தேவைப்படும்.
11:05 மேலும் குழந்தை அடிக்கடி பால் குடித்தால் தாயின் மார்பகத்தில் அதிகமாக பால் உற்பத்தியாகும்.
11:12 எனவே, அந்த வளர்ச்சி காலங்களில் தாய் அதிகமாக அடிக்கடி பால் கொடுக்க வேண்டும்.
11:19 குழந்தையின் வாழ்நாளில் முதல் 6 மாதங்களுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் சிறந்த ஊட்டச்சத்தாகும் என்பதை நினைவுகொள்க.
11:30 குழந்தையை நன்றாக மார்பகத்துடன் இணைத்து பாலூட்டுவதே வெற்றிகரமாக தாய்ப்பாலூட்டும் முறையாகும். .
11:36 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11:41 நாம் கற்றது, குழந்தையை தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைத்து மார்பத்தை அதன் வாயுனுள் செலுத்துவதற்கான சரியான முறை மற்றும் பாலூட்டும் காலஇடைவெளி
11:54 இந்த டுடோரியல், Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது
12:02 Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்.
12:15 இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
12:22 இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும்.

இந்த tutorialக்கான domain reviewer, Dr. Rupal Dalal, MD Pediatrics.

12:34 இந்த tutorial, உணவியலாளர் Tasneem Shaikh மற்றும் animator Shital Joshi ஆல் உருவாக்கப்பட்டது.

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி.

Contributors and Content Editors

Debosmita, Priyacst, Venuspriya