PERL/C2/Overview-and-Installation-of-PERL/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
---|---|
00:01 | PERL மீதான கண்ணோட்டம் மற்றும் Perl ஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது |
00:10 | உபுண்டு-லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் PERL க்கான நிறுவுதல் படிகளுடன் PERL மீதான கண்ணோட்டம் |
00:20 | இந்த டுடோரியலுக்காக, |
00:21 | இணைய இணைப்பு வைத்திருக்க வேண்டும். |
00:25 | உபுண்டு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளம் வைத்திருக்க வேண்டும். |
00:30 | செயல் விளக்கத்திற்காக, நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 மற்றும் விண்டோஸ 7 இயங்குதளம். |
00:39 | 'உபுண்டு லினக்ஸில் நிறுவுவதற்கு, உங்கள் கணினியில் சினேப்டிக் பேக்கேஜ் மேனேஜர் (Synaptic Package Manager) ஐ நிறுவியிருத்தல் வேண்டும். |
00:47 | நீங்கள் administrative உரிமைகளை வைத்திருக்க வேண்டும். |
00:50 | உபுண்டு வில் டெர்மினல் மற்றும் சினேப்டிக் பேக்கேஜ் மேனேஜர் (Synaptic Package Manager) ஐ பயன்படுத்துவது குறித்த அறிவும் இருக்க வேண்டும். |
00:57 | இல்லையெனில், ஸ்போகன் டுடோரியல் வலைத்தளத்தில் கிடைக்கும் லினக்ஸ் டுடோரியல்களைக் காணவும். |
01:03 | PERL க்கான ஒரு கண்ணோட்டத்தைக் காண்போம். |
01:07 | Practical Extraction and Reporting Language என்பதன் சுருக்கமே PERL |
01:14 | இது ஒரு பொது பயன்பாட்டு கணினி மொழி. |
01:18 | இது ஆரம்பத்தில் உரையைக் கையாளுவதற்காக உருவாக்கப்பட்டது. |
01:23 | இப்போது, இது web development, network programming, GUI development பொன்றவற்றிற்காகவும் பயன்படுகிறது |
01:31 | இது புரிந்துகொள்ள வெகுஎளிதும் சுலபமானதும். |
01:35 | C அல்லது JAVA ல் உள்ளதுபோல சிக்கலான data structureகள் இதில் இல்லை |
01:41 | இது pattern matching க்கு பிரபலமானது. |
01:45 | மேலும் மிக முக்கியமாக, PERL ஒரு திறந்த மூல மென்பொருள் (open source language). |
01:49 | PERL உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளத்தில் முன்னிருப்பாக வருகிறது. |
01:56 | எனவே, நிறுவ பின்பற்ற வேண்டிய செயல்முறை ஏதும் இல்லை |
02:01 | உபுண்டு 12.04. ல் நிறுவப்பட்டுள்ள PERL ன் பதிப்பை காண்போம் |
02:07 | விசைப்பலகையில் ctrl + alt + t ஐ ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறக்கவும். |
02:15 | பின் டைப் செய்க perl hyphen v |
02:18 | எண்டரை அழுத்துக |
02:21 | இங்கே டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீட்டை பெறுவீர்கள். |
02:26 | இந்த வெளியீடு நிறுவப்பட்டுள்ள PERL ன் நடப்பு பதிப்பைக் காட்டுகிறது |
02:31 | என் கணினியில் இது PERL 5.14.2 |
02:36 | உபுண்டு 12.04 ல் கிடைக்கும் முன்னிருப்பு PERL packageகளை ஐ காண்போம் |
02:43 | launcher bar க்கு சென்று Dash Home ல் சொடுக்குக |
02:48 | search barல் டைப் செய்க, Synaptic. |
02:51 | Synaptic Package Manager ஐகன் தோன்றும். |
02:55 | அதன் மீது சொடுக்குக. |
02:57 | (Authentication purpose) அங்கீகாரத்திற்காக உங்கள் admin password கேட்கப்படும். |
03:03 | உங்கள் admin password ஐ கொடுத்து Authenticate ல் சொடுக்குக |
03:08 | உடனடியாக, Synaptic Package Manager .... package பட்டியலை Load செய்யும். |
03:13 | உங்கள் இணைய இணைப்பு மற்றும் கணினியின் வேகத்தைப் பொருத்து இது சிறிது நேரம் எடுக்கலாம். |
03:18 | load ஆன பிறகு, Quick Filter ல் டைப் செய்க Perl. |
03:22 | packageகளின் ஒரு பட்டியலை காணலாம். |
03:25 | இது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது என்பதை PERL package க்கு முன்னால் உள்ள பச்சை நிற பெட்டி காட்டுகிறது. |
03:33 | அதேசமயம் நட்சத்திற குறி உள்ள பெட்டிகள் உங்களுக்கு இந்த packageகளும் தேவைப்படலாம் என காட்டுகின்றன. |
03:41 | இவை ஒரு ஆவணத்தை உருவாக்க அல்லது ஒரு PERL script ஐ திருத்தவும் உதவும். |
03:47 | PERL ன் எதிர்கால பயனுக்கேற்ப விடுபட்ட packageகளை நிறுவவும் |
03:54 | இப்போது விண்டோஸ் இயங்குதளத்தில் PERLஐ நிறுவுவதற்கான படிகளை காண்போம் |
04:00 | Perl டுடோரியல்களை பதிவுசெய்த நேரத்தில், பதிப்பு 5.14.2 விண்டோஸில் கிடைத்தது |
04:08 | இப்போது புதிய PERL பதிப்பு கிடைக்கிறது. |
04:12 | PERL ன் புதிய பதிப்பு 5.16.3 ஐ பயன்படுத்தி நிறுவுதலை செய்துகாட்டுகிறேன் |
04:19 | டுடோரியல்களில் காட்டப்பட்ட அனைத்து PERL commandகளும் புதிய பதிப்பிலும் சரியாக வேலை செய்யும். |
04:26 | விண்டோஸ் இயங்குதளத்தில் browser ஐ திறக்கவும், |
04:30 | காட்டப்படும் URL ஐ address bar ல் டைப் செய்க. |
04:35 | PERL ன் தரவிறக்க பக்கத்திற்கு செல்வீர்கள் |
04:39 | உங்கள் கணினி தேவைக்கேற்க தரவிறக்க பதிப்பை தேர்ந்தெடுக்கவும் |
04:44 | என் கணினிக்கு PERL ன் 32 bit பதிப்பு தேவை |
04:49 | Perl msi file ஐ உங்கள் கணினியில் எங்கேனும் சேமிக்கவும். |
04:56 | இதை நான் ஏற்கனவே என் கணினியில் சேமித்துள்ளேன். |
05:00 | PERL msi file ஐ நீங்கள் தரவிறக்கியுள்ள folder ஐ திறந்து அதன் மீது இரட்டை சொடுக்கு சொடுக்குக. |
05:07 | பின் pop-up விண்டோவில் Run ஐ சொடுக்குக. |
05:11 | setup wizard விண்டோவில் Next ஐ சொடுக்குக. |
05:15 | கேட்கப்படும் License Aggrement ஐ ஏற்று Next ல் சொடுக்குக. |
05:21 | இப்போது, Custom Setup விண்டோ தோன்றும். |
05:25 | இந்த விண்டோ நிறுவப்படும் அனைத்து PERL சிறப்பம்சங்களையும் பட்டியலிடுகிறது. |
05:31 | அவை, Perl, |
05:33 | PPM utilty இது விண்டோஸில் Perl Moduleகளை தரவிறக்கி நிறுவப் பயன்படுகிறது |
05:39 | Documentation இது Perl Moduleகளுக்கு ஆவணங்களைத் தருகிறது |
05:44 | examples Perl க்கான உதாரணங்கள் |
05:47 | இந்த முன்னிருப்பு சிறப்பம்சங்களை வைத்துக்கொண்டு Next ல் சொடுக்குக. |
05:52 | environmental variable மற்றும் file extension ஐ அமைப்பதற்கான ஒரு popup விண்டோ தோன்றும். |
05:59 | இங்கே காட்டப்படுவது போல அவை குறியிடப்பட்டே இருக்கட்டும். |
06:03 | Next ல் சொடுக்கி பின் Install ல் சொடுக்குக. |
06:07 | இது PERL க்கான நிறுவுதலை ஆரம்பிக்கும் |
06:11 | உங்கள் இணைய இணைப்பைப் பொருத்து இது சற்று நேரம் எடுக்கலாம். |
06:16 | முடிந்தவுடன், Display the Release Note ஐ குறிநீக்கிவிட்டு Finish ல் சொடுக்குகிறேன். |
06:23 | இது விண்டோஸில் PERL நிறுவலை முடிக்கிறது |
06:26 | இப்போது நிறுவலை சரிபார்ப்போம். |
06:32 | Start menu க்கு சென்று command prompt ஐ திறக்க cmd என டைப் செய்க |
06:39 | command prompt ல் டைப் செய்க perl space hyphen v |
06:44 | எண்டரை அழுத்துக |
06:46 | நிறுவப்பட்டுள்ள PERL ன் பதிப்பைக் காணலாம் |
06:50 | அது பதிப்பைக் காட்டவில்லை எனில், மேற்சொன்ன நிறுவல் படிகளை மீண்டும் செய்க. |
06:57 | இப்போது ஒரு எளிய Hello Perl ப்ரோகிராமை இயக்குவோம். |
07:02 | இந்த டுடோரியலுடன் ப்ளேயருக்கு கீழே Code Files என்ற இணைப்பில் இந்த file கொடுக்கப்பட்டுள்ளது |
07:11 | இந்த file ஐ தரவிறக்கி பயன்படுத்தவும். |
07:14 | இந்த file ஐ என் கணினியில் users\Amol directory ல் சேமித்துள்ளேன். |
07:21 | எனவே அங்கு செல்வோம். |
07:23 | பின் டைப் செய்க perl sampleProgram.pl |
07:28 | எண்டரை அழுத்துக |
07:30 | காட்டப்படுவது போல command prompt ல் Hello Perl அச்சடிக்கப்படுகிறது. |
07:35 | சுருங்கசொல்ல. |
07:37 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
07:40 | PERL மீதான கண்ணோட்டம் மற்றும், |
07:43 | உபுண்டு லினக்ஸ் 12.04 மற்றும் விண்டோஸ் 7 ல் PERL ஐ நிறுவுவதற்கான வழிமுறைகள் |
07:50 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:54 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:58 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:03 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:10 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:15 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:23 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:29 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:38 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:50 | இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
08:53 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |