LibreOffice-Writer-on-BOSS-Linux/C2/Viewing-and-printing-documents/Tamil
From Script | Spoken-Tutorial
00:00 | Writer இல் அச்சடித்தல் மற்றும் ஆவணங்களை காணல் குறித்த tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் கற்கபோவது: |
00:10 | ஆவணங்களை காணல். |
00:12 | ஆவணங்களை அச்சடித்தல். |
00:13 | இங்கு பயனாவது GNU/Linux மற்றும் லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4 |
00:24 | LibreOffice Writer இல் பல்வித காணல் தேர்வுகளை கற்பதுடன் tutorial ஐ ஆரம்பிக்கலாம். |
00:31 | Writer இல் அடிப்படையாக காணும் விதம் இரண்டு. |
00:36 | “Print Layout” மற்றும்“Web Layout”. |
00:39 | “Print Layout” ஆவணம் அச்சடிக்கப்படும் போது எப்படி இருக்கும் என காட்டுகிறது. |
00:45 | “Web Layout” ஆவணம் வலை உலாவியில் காணும் போது எப்படி இருக்கும் என காட்டுகிறது. |
00:50 | HTML ஆவணங்களை தயாரிக்கும் போது இது மிகவும் பயனாகிறது. திருத்தங்கள் செய்ய முழுத்திரை பாங்கில் ஆவணத்தை காணவும் இது வசதியாக இருக்கிறது. |
01:00 | “Print Layout” ஐ அணுக “View” ல் சொடுக்கி, பின் “Print Layout” மீது சொடுக்கவும். |
01:08 | “ Web Layout” ஐ அணுக “View” ல் சொடுக்கி, பின் “ Web Layout” மீது சொடுக்கவும். |
01:19 | இந்த தேர்வுகள் மட்டுமில்லாது நாம் ஆவணத்தை முழுத்திரை பாங்கிலும் காணலாம். |
01:26 | menu bar இல் “View” மீது சொடுக்கி பின் “Full screen” மீது சொடுக்கவும். |
01:32 | இந்த முழுத்திரை பாங்கு ஆவணங்களை திருத்தவும் projector மூலம் அவற்றை காண்பிக்கவும் பயனாகும். |
01:39 | முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேற, “Escape” விசையை தட்டவும். |
01:44 | ஆவணம் முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேறுவதை காணலாம். |
01:49 | View menu வில் “Print Layout” தேர்வு மீது சொடுக்கலாம். |
01:53 | மேலே போகுமுன் Insert >> Manual Break மூலம் ஒரு புதிய பக்கத்தை ஆவணத்தில் உள்நுழைக்கலாம். Page break தேர்வை தேர்ந்தெடுத்து சொடுக்கவும். |
02:04 | “OK” ஐ சொடுக்கவும். |
02:06 | இன்னொரு tutorial இல் இது குறித்து மேலும் காணலாம். |
02:11 | ஆவணத்தை காண இன்னொரு தேர்வு “Zoom” எனப்படும். |
02:17 | menu bar இல் “View” மீது சொடுக்கி பின் “Zoom” மீது சொடுக்கவும். |
02:22 | “Zoom and View Layout” உரையாடல் பெட்டி நம் முன்னே தோன்றுகிறது. |
02:27 | “Zoom factor” மற்றும் “View layout” என்ற தலைப்புகள் உள்ளன. |
02:34 | “Zoom factor” நடப்பு ஆவணத்தின் அணுகல் அளவை கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து திறக்கும் அதே வகையான எல்லா ஆவணங்களுக்கும் கூட நடைமுறையாகும். |
02:43 | இதில் உள்ள பல நல்ல தேர்வுகளை ஒவ்வொன்றாக காணலாம். |
02:48 | “Optimal” optionஐ சொடுக்க ஆவணத்தின் சீரான காட்சி கிடைக்கிறது. |
02:55 | “Fit width and height” ஆவணத்தை கணினித் திரையின் முழு நீள அகலத்தையும் பயன்படுத்தி காட்டுகிறது. ஆகவே இது ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தை காட்டுகிறது. |
03:05 | இது ஒரு ஆவணத்தின் பல பக்கங்களை ஒரே நேரத்தில் கண்டு திருத்துவதை எளிதாக்குகிறது. |
03:11 | அடுத்த தேர்வான Fit to Width ஆவணத்தை திரையின் முழு அகலத்தில் காட்டுகிறது. |
03:17 | 100% view... பக்கத்தை அதன் முழு அளவில் காட்டுகிறது. |
03:23 | அடுத்து கிடைக்கும் முக்கியமான தேர்வு “Variable”. |
03:28 | variable புலத்தில் ஆவணத்தை காட்ட விரும்பும் zoom அளவை உள்ளிடலாம். |
03:35 | உதாரணமாக, “75%” என “Variable” புலத்தில் இட்டு “OK” ஐ சொடுக்கலாம். |
03:43 | இது போல ஆவணங்களை காணவோ திருத்தவோ தோதான அளவுக்கு zoom அளவை மாற்றிக்கொள்ளலாம். |
03:51 | உரையாடல் பெட்டியில் காணும் இன்னொரு அம்சம் “View layout” |
03:56 | “View layout” உரை ஆவணங்களுக்கு மட்டுமே. |
03:59 | இது zoom அளவை குறைக்கும். இது பலவித அமைப்புகளில் ஆவண தோன்றத்தை அறிய பயனாகிறது. |
04:07 | இதில் “Automatic” மற்றும் “Single page” தேர்வுகள் உள்ளன. இதனால் பக்கங்களை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாகவோ அல்லது ஒன்றன் கீழ் ஒன்றாகவோ காணவும் இயலும். |
04:18 | உதாரணமாக, “Zoom factor” ல் “Fit width and height” ஐ தேர்ந்து... “View layout” ல் “Single page” ஐ சொடுக்கி “OK” ஐ சொடுக்க பக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக காண்கின்றன. |
04:36 | “Automatic” மீது சொடுக்கி “OK” ஐ சொடுக்கவும். |
04:42 | பக்கங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக காண்கின்றன. |
04:48 | Writer Status Bar இல் உள்ள மூன்று கட்டுப்படுத்திகளும் கூட zoom மற்றும் காணல் அமைப்பை மாற்றுகிறது. |
04:56 | காணல் அமைப்பு சின்னங்கள் பின் வருமாறு: ஒரே பத்தி பாங்கு, காணல் பாங்கு (பக்கங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக) புத்தகப் பாங்கு (திறந்த புத்தகம் போல இரண்டு பக்கங்கள்) |
05:11 | Zoom slider ஐ வலது பக்கம் இழுக்க ஒரு பக்கத்தில் zoom செய்கிறோம். இடது பக்கம் இழுக்க அதிக பக்கங்களை பார்க்கிறோம். |
05:20 | Writer இல் “அச்சடித்தல்” ஐ கற்கும் முன் “Page preview” பற்றி தெரிந்து கொள்ளலாம். |
05:28 | “File” பின் “Page Preview” மீது சொடுக்கவும். |
05:32 | நடப்பு ஆவணம் page preview பாங்கில் காணும் போது “Page Preview” bar தெரிகிறது. |
05:38 | இது அடிப்படையில் ஆவணத்தை அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காட்டுகிறது. |
05:44 | resume.odt file ஐ அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காணலாம். |
05:50 | பக்க முன்னோட்ட tool bar இல் பல தேர்வுகள் இருக்கின்றன. |
05:55 | “Zoom In”, “Zoom Out”, “next page”, “Previous page” மற்றும் “Print” ஆகியன அவை. |
06:03 | Writer இல் ஆவணங்களை எப்படி காண்பதென்றும் Page Preview ஐயும் அறிந்த பின், Writer இல் “Printer” எப்படி வேலை செய்கிறது என காணலாம். |
06:15 | printer என்பது சுருங்கச்சொல்ல ஆவணத்தை அச்சடிக்க உதவும் கருவி. |
06:21 | இப்போது Print ஐ அணுக பலவித தேர்வுகளை காணலாம். |
06:26 | “Tools” -> “Options” மீது சொடுக்கவும். |
06:32 | “LibreOffice Writer“ பக்கக்திலுள்ள அம்புக்குறியை சொடுக்கி “Print” ஐ சொடுக்கவும். |
06:38 | ஒரு உரையாடல் பெட்டி திரையில் தெரிகிறது. தேர்ந்தெடுக்க பல தேர்வுகள் உள்ளன. |
06:43 | முன்னிருப்பை அப்படியே வைத்துக்கொண்டு “OK” ஐ சொடுக்குவோம். |
06:49 | முழு ஆவணத்தை நேரடியாக அச்சடிக்க , tool bar இல் “Print File Directly” சின்னத்தின் மீது சொடுக்கவும். |
06:56 | இதுவே விரைவு அச்சடித்தல். |
07:00 | அச்சடித்தலில் அதிக கட்டுப்பாடு வேண்டுமானால் “Print” க்குப்போய் முன்னிருப்பு அமைப்புகளை திருத்த வேண்டும். |
07:07 | menu bar இல் “File” இல் சொடுக்கி “Print” இல் சொடுக்கவும். |
07:13 | “Print” உரையாடல் பெட்டி திரையில் தோன்றுகிறது. |
07:17 | General Tab இல் “Generic Printer” என தேர்வு செய்வோம். |
07:22 | “All pages” தேர்வு ஆவணத்தின் எல்லா பக்கங்களையும் அச்சடிக்க. |
07:28 | சில தொடர் பக்கங்களை மட்டும் அச்சடிக்க “Pages” தேர்வில் சொடுக்கி வரும் புலத்தில் பக்க எண் வீச்சை தரவும். எ-கா “1-3” என இங்கு எழுதலாம். இது ஆவணத்தின் முதல் மூன்று பக்கங்களை மட்டுமே அச்சடிக்கும். |
07:44 | ஆவணத்தின் பல பிரதிகளை அச்சடிக்க வேண்டுமானால், “Number of copies” புலத்தில் எத்தனை என உள்ளிடுக. “2” என உள்ளிடுவோம். |
07:54 | உரையாடல் பெட்டியில் “Options” tab ஐ சொடுக்குவோம். |
08:00 | ஒரு தேர்வு பட்டியல் திரையில் தெரிகிறது. இதிலிருந்து ஆவணத்தை தேர்ந்தெடுத்து அச்சடிக்கலாம். |
08:07 | “ Print in reverse page order” என்று ஒரு செக் பாக்ஸ் தெரிகிறது. |
08:12 | இந்த தேர்வு பெரிய ஆவணங்களை அச்சடிக்கையில் திரட்ட பயனாகிறது. |
08:16 | அதன் எதிரில் உள்ள பெட்டியில் குறியிடுவோம். |
08:19 | pdf ஆவணத்தையும் அச்சடிக்கலாம். |
08:26 | “dot odt” ஆவணத்தை “dot pdf” file ஆக மாற்றுவது குறித்து ஏற்கெனெவே கண்டுள்ளோம். |
08:34 | “pdf” file ஐ ஏற்கெனவே desktop இல் சேமித்து உள்ளதால், அதன் மீது இரு முறை சொடுக்கி திறக்கலாம். |
08:41 | “File” ல் சொடுக்கி பின் “Print” ல் சொடுக்கலாம். |
08:47 | முன்னிருப்பு அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு “Print Preview” இல் சொடுக்குவோம். |
08:52 | திரையில் அதன் முன்னோட்டத்தை காணலாம். |
08:56 | அச்சடிக்க முன்னோட்ட பக்கத்தில் “Print this document” சின்னத்தில் சொடுக்குக. |
09:04 | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
09:09 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: |
09:11 | ஆவணங்களை காண்பது, |
09:13 | ஆவணங்களை அச்சடித்தல். |
09:16 | முழுமையான பயிற்சி: |
09:18 | “This is LibreOffice Writer” என Writer இல் உரை எழுதவும். |
09:23 | “Full screen” தேர்வை பயன்படுத்தி முழுத்திரையில் ஆவணத்தை காண்க. |
09:29 | zoom ஐ பயன்படுத்தி “optimal” மற்றும் “Variable” பாங்கில் ஆவணம் எப்படி தெரிகிறது என காணவும். “variable” மதிப்பை “50%” என அமைத்து ஆவணத்தை காணவும். |
09:41 | “Page preview” ஐ காணவும். ஆவணத்தின் இரண்டு பிரதிகளை பக்கத்தில் விளிம்புகளுடன் அச்சடிக்கவும். |
09:49 | இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது. |
09:55 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
10:00 | spoken tutorial களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம். |
10:05 | இணையவழி பரீட்சையில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் அளிக்கிறோம் |
10:10 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org. |
10:16 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:15 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:30 | மேற்கொண்டு விவரங்களுக்கு, |
10:32 | spoken-tutorial.org/NMEICT-Intro |
10:42 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |