Jmol-Application/C2/Surfaces-and-Orbitals/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
---|---|
00:01 | Jmol அப்ளிகேஷனில் மேற்பரப்புகள் மற்றும் ஆர்பிட்டால்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:10 | அலிசைக்ளிக் (Alicyclic) மற்றும் அரோமேடிக் (Aromatic) மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல் |
00:14 | மூலக்கூறுகளின் வெவ்வேறு மேற்பரப்புகளை காட்டுதல் |
00:18 | அணு மற்றும் மூலக்கூறு ஆர்பிட்டால்களை காட்டுதல். |
00:22 | Jmol அப்ளிகேஷனில் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கவும் திருத்தவும் தெரிந்திருக்க வேண்டும். |
00:29 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:35 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:38 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04 |
00:42 | Jmol பதிப்பு 12.2.2 மற்றும் |
00:45 | Java (JRE) பதிப்பு 7. |
00:48 | ஒரு புதிய Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறந்துவைத்துள்ளேன். |
00:52 | முதலில் சைக்ளோஹெக்சேன் (cyclohexane) மாதிரியை உருவாக்குவோம் |
00:56 | modelkit menu மீது க்ளிக் செய்க. |
00:59 | panel ல் மீத்தேன் மாதிரி தோன்றுகிறது |
01:03 | சைக்ளோஹெக்சேன் (cyclohexane) ஐ உருவாக்க ஆறு கார்பன் அணுக்களைக் கொண்ட ஹைட்ரோகார்பன் (hydrocarbon) சங்கிலியை உருவாக்க வேண்டும். |
01:09 | இந்த மாதிரியில் ஹைட்ரஜனுக்கு பதிலாக ஒரு மெத்தில் குழுவை வைப்போம். |
01:13 | அதை செய்ய, ஹைட்ரஜன் மீது கர்சரை வைத்து அதன் மீது க்ளிக் செய்க. |
01:18 | திரையில் ஈத்தேன் மாதிரி உள்ளது. |
01:21 | மேலும் இருமுறை இந்த படியை திரும்பசெய்து ஹைட்ரஜனுக்கு பதிலாக மெத்தில் குழுவை வைக்கவும். |
01:28 | இந்த அமைப்பு ஒரு வட்டத்தை உருவாக்கும் வகையில் ஹைட்ரஜன்கள் மீது க்ளிக் செய்க. |
01:33 | இப்போது Rotate molecule tool ஐ பயன்படுத்தி திரையில் இந்த அமைப்பை சுழற்றவும். |
01:38 | panel ல் ப்யூட்டேன் (butane) அமைப்பு உள்ளது. |
01:41 | modelkit menu மீது க்ளிக் செய்க |
01:45 | இந்த சங்கிலின் முனையில் உள்ள கார்பன் அணுக்களின் ஏதேனும் ஒரு ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க. |
01:52 | இங்கே panel ல் பென்டேன் (pentane) மாதிரி உள்ளது |
01:55 | கடைசி கார்பன் சங்கிலிக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க. |
02:00 | panel ல் சைக்ளோஹெக்சேன் (cyclohexane) மாதிரி உருவாக்கப்பட்டது |
02:04 | இந்த அமைப்பை மேம்படுத்த modelkit menu ல் minimize தேர்வை பயன்படுத்தவும். |
02:09 | சைக்ளோஹெக்சேன் (Cyclohexane) மாதிரி இப்போது அதன் மிக நிலையான “நாற்காலி” வெளிவடிவமைப்பில் உள்ளது. |
02:15 | மாறாக, வட்டவடிவ அமைப்புகளை உருவாக்க modelkit menu ல் Drag to bond தேர்வை பயன்படுத்தலாம். |
02:24 | இந்த அம்சத்தை காட்ட பென்டேன் (pentane) மாதிரியை பயன்படுத்துகிறேன். |
02:29 | panel ல் பென்டேன் (pentane) மாதிரி உள்ளது. |
02:32 | இதை சைக்ளோபென்டேன் (cyclopentane) ஆக மாற்ற, modelkit menu ல் Drag to bond தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
02:40 | சங்கிலின் கடைசியில் உள்ள கார்பன் மீது கர்சரை வைக்கவும். |
02:45 | மவுஸ் பட்டனை அழுத்தி பிடிக்கவும். |
02:47 | மவுஸ் பட்டனை விடுவிக்காமலேயே, சங்கிலியின் கடைசியில் உள்ள கார்பனுக்கு கர்சரை கொண்டுவரவும். |
02:54 | இப்போது மவுஸ் பட்டனை விடுவிக்கவும். |
02:57 | panel ல் சைக்ளோபென்டேன் (cyclopentane) மாதிரியைக் கொண்டுள்ளோம். |
03:01 | இப்போது சைக்ளோஹெக்சேன் (cyclohexane) மாதிரியுடன் Jmol panel க்கு திரும்ப செல்வோம். |
03:06 | இப்போது சைக்ளோஹெக்சேனை (cyclohexane) பென்சீன் (benzene) வளையமாக மாற்றுவோம். |
03:10 | சைக்ளோஹெக்சேன் (cyclohexane) வளையத்தில் ஒன்றுவிட்டு ஒன்றில் இரட்டை பிணைப்புகளை சேர்ப்போம் . |
03:16 | modelkit menu ஐ திறக்கவும் |
03:19 | இரு கார்பன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு மீது கர்சரை வைத்து பின் அதன் மீது க்ளிக் செய்க. |
03:25 | இப்போது panel ல் சைக்ளோஹெக்சீனை (cyclohexene) கொண்டுள்ளோம். |
03:29 | அடுத்து இதை பென்சீனாக (benzene) மாற்ற மேலும் இரு இரட்டை பிணைப்புகளை இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும். |
03:36 | ஒன்றுவிட்டு ஒன்று அடுத்தடுத்த இரு கார்பன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
03:41 | panel ல் பென்சீன் (benzene) மாதிரி உள்ளது. |
03:44 | நிலையான வெளிவடிவமைப்பை பெற energy minimization செய்க. |
03:49 | Jmol அப்ளிகேஷனை பயன்படுத்தி மூலக்கூறுகளின் மேற்பரப்பு திணையத்தை (Surface topology) காட்ட முடியும் |
03:56 | வெவ்வேறு மேற்பரப்புகளை காட்ட pop-up menu ஐ திறக்கவும். |
04:01 | modelkit menu மூடப்பட்டுள்ளதா என உறுதி செய்க. |
04:06 | இப்போது Pop-up menu ஐ திறக்க panel மீது ரைட்-க்ளிக் செய்க. |
04:10 | கீழே வந்து "Surfaces" ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:14 | பல தேர்வுகளுடன் ஒரு துணை-menu திறக்கிறது. |
04:18 | Dot Surface |
04:20 | van der Waal's மேலும் பல. |
04:23 | செய்துகாட்டுவதற்காக, Molecular surface ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:28 | மூலக்கூறு மேற்பரப்புடன் பென்சீன் (Benzene) மாதிரி காட்டப்படுகிறது |
04:33 | இதை மற்றொரு மேற்பரப்பாக மாற்றுவோம், Dot Surface என்போம் |
04:38 | எனவே Pop-up menu ஐ மீண்டும் திறந்து Dot Surface ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:44 | ஒளி புகா (opaque) அல்லது ஒளிகசியும் (translucent) மேற்பரப்புகளாக மாற்ற முடியும். |
04:48 | அதை செய்ய Pop-up menu ஐ திறக்கவும், |
04:52 | Surfaces க்கு வந்து Make Opaque தேர்வு மீது க்ளிக் செய்க |
04:59 | பென்சீன் (benzene) மாதிரி மங்கலாக மாறியிருப்பதை கவனிக்கவும். |
05:03 | surface தேர்வை நீக்க, Pop-up menu ஐ திறந்து, Surfaces ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:10 | Off க்கு வந்து அதன் மீது க்ளிக் செய்க. |
05:15 | இப்போது எந்த மேற்பரப்புகளும் இல்லாமல் பென்சீன் (benzene) மாதிரி உள்ளது. |
05:20 | மூலக்கூறுகளின் அணு மற்றும் மூலக்கூறு ஆர்பிட்டால்களை Jmol ஆல் காட்ட முடியும். |
05:25 | consoleல் command களை எழுதுவதன் மூலம் திரையில் அணு ஆர்பிட்டால்களை காட்டலாம். |
05:32 | ஒரு புதிய Jmol விண்டோவை திறக்க File க்கு சென்று New மீது க்ளிக் செய்க. |
05:37 | இப்போது console விண்டோவை திறக்க... File க்கு சென்று பின் Console மீது க்ளிக் செய்க |
05:43 | திரையில் console விண்டோ திறக்கிறது. |
05:47 | console விண்டோவை தெளிவாக காட்ட Kmag Screen magnifier ஐ பயன்படுத்துகிறேன். |
05:53 | அணு ஆர்பிட்டால்களுக்கான command வரி isosurface phase atomic orbital உடன் ஆரம்பிக்கிறது |
06:00 | ($) dollar prompt ல் டைப் செய்க isosurface phase atomic orbital. |
06:06 | இதை தொடர்ந்து ஒவ்வொரு அணு ஆர்பிட்டாலையும் குறிப்பிடும் குவாண்டம் (quantum) எண்கள் n. l மற்றும் m வருகின்றன |
06:14 | 's' ஆர்பிட்டாலை காட்ட டைப் செய்க 2 0 0 |
06:20 | 2, 0, 0 என்ற எண்கள் குறிப்பவை முறையே n, l மற்றும் m குவாண்டம் (quantum) எண்கள். |
06:27 | இந்த command ஐ இயக்க Enter விசையை அழுத்துக. |
06:31 | panel ல் s ஆர்பிட்டால் காட்டப்படுகிறது. |
06:35 | இங்கே சில உதாரண அணு ஆர்பிட்டால்களும் அவற்றிற்கான script commandகளும் உள்ளன |
06:41 | அனைத்து அணு ஆர்பிட்டால்களுக்கும் command வரி ஒன்றே |
06:45 | console ல் முந்தைய command ஐ காட்ட, விசைப்பலகையில் மேல் அம்பு விசையை அழுத்தவும். |
06:51 | n, l மற்றும் m குவாண்டம் (quantum) எண்களை 2 1 1 என மாற்றுக. |
06:58 | Enter விசையை அழுத்தி 'px' ஆர்பிட்டாலை Jmol panel ல் காண்க |
07:05 | மீண்டும் மேல்அம்புவிசையை அழுத்தி n, l மற்றும் m ஐ 3 2 மற்றும் -1 ஆக மாற்றுக. |
07:13 | Enter விசையை அழுத்தி 'dxy' ஆர்பிட்டாலை Jmol panel ல் காண்க |
07:19 | jpg, png அல்லது pdf போன்ற file formatகளில் இந்த படங்களை சேமிக்கவும் முடியும். |
07:27 | இங்கே அனைத்து அணு ஆர்பிட்டால்கள் s, p, d, மற்றும் f க்கான command களின் பட்டியல் உள்ளது |
07:35 | slide ல் காட்டப்படுபவை அணு ஆர்பிட்டால்களின் மாதிரிகள் ஆகும் |
07:40 | இவை console ல் எழுத்தப்பட்ட script command களின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை. |
07:45 | இங்கே மூலக்கூறு ஆர்பிட்டால்களை எவ்வாறு காட்டுவது என்பதை காட்ட ஒரு புதிய Jmol panel மற்றும் console ஐ திறந்துவைத்துள்ளேன் |
07:53 | sp3, sp2 மற்றும் sp போன்ற கலப்பின மூலக்கூறு ஆர்பிட்டால்களை (Hybridized molecular orbitals) Jmol ஐ பயன்படுத்தி காட்ட முடியும் |
08:02 | panel ல் மீத்தேன் மாதிரியை கொண்டுள்ளோம். |
08:06 | மீத்தேன் sp3 வகை மூலக்கூறு ஆர்பிட்டால்களை கொண்டுள்ளது |
08:11 | Linear Combination of Atomic Orbitals அதாவது LCAO முறை மூலக்கூறு ஆர்பிட்டால்களை உருவாக்க பயன்படுகிறது |
08:21 | எனவே, command வரி 'lcaocartoon' உடன் ஆரம்பிக்கிறது பின் create மற்றும் ஆர்பிட்டாலின் பெயர் |
08:30 | dollar prompt ல் டைப் செய்க lcaocartoon create sp3 |
08:36 | Enter ஐ அழுத்துக |
08:38 | sp3 கலப்பின மூலக்கூறு ஆர்பிட்டாலுடன் மீத்தேன் மாதிரியை கவனிக்கவும் |
08:45 | sp2 கலப்பின மூலக்கூறு ஆர்பிட்டால்களை காட்ட ஈத்தேனை ஒரு உதாரணமாக எடுப்போம். |
08:52 | panel ல் ஈத்தேனின் மூலக்கூறு உள்ளது |
08:56 | ஈத்தேன் மூலக்கூறு மூன்று sp2 கலப்பின மூலக்கூறு ஆர்பிட்டால்களை கொண்டுள்ளது. அவற்றின் பெயர்களாவன sp2a, sp2b மற்றும் sp2c. |
09:08 | dollar promptல் டைப் செய்க lcaocartoon create sp2a , Enter ஐ அழுத்துக |
09:17 | panel மீது ஈத்தேன் மாதிரியில் sp2 ஆர்பிட்டாலை கவனிக்கவும். |
09:22 | மேல் அம்புக்குறியை அழுத்தி sp2a ஐ sp2b ஆக மாற்றுக பின் Enter ஐ அழுத்துக |
09:31 | மீண்டும், மேல் அம்புக்குறியை அழுத்தி sp2b ஐ sp2c ஆக மாற்றுக பின் Enter ஐ அழுத்துக |
09:41 | கடைசியாக pi பிணைப்பிற்காக ஆர்பிட்டால்களின் பெயரை pz என மாற்றுக |
09:48 | panelல் அனைத்து மூலக்கூறு ஆர்பிட்டால்களுடன் ஈத்தேன் மூலக்கூறை கொண்டுள்ளோம் |
09:55 | மூலக்கூறு ஆர்பிட்டால்களுடன் மற்ற சில மூலக்கூறுகளின் உதாரணங்களை இந்த slide காட்டுகிறது |
10:01 | மேலும் தகவல்களுக்கு Jmol Script ஆவணத்தைக் கொண்ட இணையத்தளத்தை காணவும். |
10:08 | சுருங்கசொல்ல. |
10:10 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:12 | சைக்ளோஹெக்சேன் (cyclohexane) மற்றும் சைக்ளோபென்டேன் (cyclopentane) மாதிரிகளை உருவாக்குதல் |
10:17 | ஒரு பென்சீன் (benzene) மாதிரியை உருவாக்குதல் |
10:19 | மூலக்கூறுகளின் மேற்பரப்பு திணையத்தை (surface topology) காட்டுதல். |
10:23 | மேலும் நாம் கற்றது |
10:24 | அணு ஆர்பிட்டால்கள் s, p, d மற்றும் fஐ காட்டுதல் |
10:29 | console ல் script commandகளை எழுதுவதன் மூலம் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் sp3, sp2 மற்றும் spஐ காட்டுதல். |
10:38 | இங்கே பயிற்சி |
10:40 | ஒரு 2-ப்யூட்டீன் (Butene) மாதிரியை உருவாக்கி மூலக்கூறு ஆர்பிட்டால்களை காட்டவும் |
10:45 | மூலக்கூறு ஆர்பிட்டால்களின் நிறம் மற்றும் அளவை மாற்ற lcaocartoon command ஐ ஆராயவும் |
10:52 | commandகளின் பட்டியலுக்கு... காட்டப்படும் இணைப்பை பார்க்கவும். |
10:57 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
11:01 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
11:04 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:09 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:15 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:19 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:26 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:30 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:37 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:42 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |