Jmol-Application/C2/Surfaces-and-Orbitals/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:38, 23 February 2017 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00:01 Jmol அப்ளிகேஷனில் மேற்பரப்புகள் மற்றும் ஆர்பிட்டால்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:10 அலிசைக்ளிக் (Alicyclic) மற்றும் அரோமேடிக் (Aromatic) மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல்
00:14 மூலக்கூறுகளின் வெவ்வேறு மேற்பரப்புகளை காட்டுதல்
00:18 அணு மற்றும் மூலக்கூறு ஆர்பிட்டால்களை காட்டுதல்.
00:22 Jmol அப்ளிகேஷனில் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கவும் திருத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.
00:29 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:35 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:38 உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04
00:42 Jmol பதிப்பு 12.2.2 மற்றும்
00:45 Java (JRE) பதிப்பு 7.
00:48 ஒரு புதிய Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
00:52 முதலில் சைக்ளோஹெக்சேன் (cyclohexane) மாதிரியை உருவாக்குவோம்
00:56 modelkit menu மீது க்ளிக் செய்க.
00:59 panel ல் மீத்தேன் மாதிரி தோன்றுகிறது
01:03 சைக்ளோஹெக்சேன் (cyclohexane) ஐ உருவாக்க ஆறு கார்பன் அணுக்களைக் கொண்ட ஹைட்ரோகார்பன் (hydrocarbon) சங்கிலியை உருவாக்க வேண்டும்.
01:09 இந்த மாதிரியில் ஹைட்ரஜனுக்கு பதிலாக ஒரு மெத்தில் குழுவை வைப்போம்.
01:13 அதை செய்ய, ஹைட்ரஜன் மீது கர்சரை வைத்து அதன் மீது க்ளிக் செய்க.
01:18 திரையில் ஈத்தேன் மாதிரி உள்ளது.
01:21 மேலும் இருமுறை இந்த படியை திரும்பசெய்து ஹைட்ரஜனுக்கு பதிலாக மெத்தில் குழுவை வைக்கவும்.
01:28 இந்த அமைப்பு ஒரு வட்டத்தை உருவாக்கும் வகையில் ஹைட்ரஜன்கள் மீது க்ளிக் செய்க.
01:33 இப்போது Rotate molecule tool ஐ பயன்படுத்தி திரையில் இந்த அமைப்பை சுழற்றவும்.
01:38 panel ல் ப்யூட்டேன் (butane) அமைப்பு உள்ளது.
01:41 modelkit menu மீது க்ளிக் செய்க
01:45 இந்த சங்கிலின் முனையில் உள்ள கார்பன் அணுக்களின் ஏதேனும் ஒரு ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க.
01:52 இங்கே panel ல் பென்டேன் (pentane) மாதிரி உள்ளது
01:55 கடைசி கார்பன் சங்கிலிக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க.
02:00 panel ல் சைக்ளோஹெக்சேன் (cyclohexane) மாதிரி உருவாக்கப்பட்டது
02:04 இந்த அமைப்பை மேம்படுத்த modelkit menu ல் minimize தேர்வை பயன்படுத்தவும்.
02:09 சைக்ளோஹெக்சேன் (Cyclohexane) மாதிரி இப்போது அதன் மிக நிலையான “நாற்காலிவெளிவடிவமைப்பில் உள்ளது.
02:15 மாறாக, வட்டவடிவ அமைப்புகளை உருவாக்க modelkit menu ல் Drag to bond தேர்வை பயன்படுத்தலாம்.
02:24 இந்த அம்சத்தை காட்ட பென்டேன் (pentane) மாதிரியை பயன்படுத்துகிறேன்.
02:29 panel ல் பென்டேன் (pentane) மாதிரி உள்ளது.
02:32 இதை சைக்ளோபென்டேன் (cyclopentane) ஆக மாற்ற, modelkit menu ல் Drag to bond தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
02:40 சங்கிலின் கடைசியில் உள்ள கார்பன் மீது கர்சரை வைக்கவும்.
02:45 மவுஸ் பட்டனை அழுத்தி பிடிக்கவும்.
02:47 மவுஸ் பட்டனை விடுவிக்காமலேயே, சங்கிலியின் கடைசியில் உள்ள கார்பனுக்கு கர்சரை கொண்டுவரவும்.
02:54 இப்போது மவுஸ் பட்டனை விடுவிக்கவும்.
02:57 panel ல் சைக்ளோபென்டேன் (cyclopentane) மாதிரியைக் கொண்டுள்ளோம்.
03:01 இப்போது சைக்ளோஹெக்சேன் (cyclohexane) மாதிரியுடன் Jmol panel க்கு திரும்ப செல்வோம்.
03:06 இப்போது சைக்ளோஹெக்சேனை (cyclohexane) பென்சீன் (benzene) வளையமாக மாற்றுவோம்.
03:10 சைக்ளோஹெக்சேன் (cyclohexane) வளையத்தில் ஒன்றுவிட்டு ஒன்றில் இரட்டை பிணைப்புகளை சேர்ப்போம் .
03:16 modelkit menu ஐ திறக்கவும்
03:19 இரு கார்பன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு மீது கர்சரை வைத்து பின் அதன் மீது க்ளிக் செய்க.
03:25 இப்போது panel ல் சைக்ளோஹெக்சீனை (cyclohexene) கொண்டுள்ளோம்.
03:29 அடுத்து இதை பென்சீனாக (benzene) மாற்ற மேலும் இரு இரட்டை பிணைப்புகளை இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும்.
03:36 ஒன்றுவிட்டு ஒன்று அடுத்தடுத்த இரு கார்பன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு மீது க்ளிக் செய்க.
03:41 panel ல் பென்சீன் (benzene) மாதிரி உள்ளது.
03:44 நிலையான வெளிவடிவமைப்பை பெற energy minimization செய்க.
03:49 Jmol அப்ளிகேஷனை பயன்படுத்தி மூலக்கூறுகளின் மேற்பரப்பு திணையத்தை (Surface topology) காட்ட முடியும்
03:56 வெவ்வேறு மேற்பரப்புகளை காட்ட pop-up menu ஐ திறக்கவும்.
04:01 modelkit menu மூடப்பட்டுள்ளதா என உறுதி செய்க.
04:06 இப்போது Pop-up menu ஐ திறக்க panel மீது ரைட்-க்ளிக் செய்க.
04:10 கீழே வந்து "Surfaces" ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:14 பல தேர்வுகளுடன் ஒரு துணை-menu திறக்கிறது.
04:18 Dot Surface
04:20 van der Waal's
04:21 மேலும் பல.
04:23 செய்துகாட்டுவதற்காக, Molecular surface ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:28 மூலக்கூறு மேற்பரப்புடன் பென்சீன் (Benzene) மாதிரி காட்டப்படுகிறது
04:33 இதை மற்றொரு மேற்பரப்பாக மாற்றுவோம், Dot Surface என்போம்
04:38 எனவே Pop-up menu ஐ மீண்டும் திறந்து Dot Surface ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:44 ஒளி புகா (opaque) அல்லது ஒளிகசியும் (translucent) மேற்பரப்புகளாக மாற்ற முடியும்.
04:48 அதை செய்ய Pop-up menu ஐ திறக்கவும்,
04:52 Surfaces க்கு வந்து Make Opaque தேர்வு மீது க்ளிக் செய்க
04:59 பென்சீன் (benzene) மாதிரி மங்கலாக மாறியிருப்பதை கவனிக்கவும்.
05:03 surface தேர்வை நீக்க, Pop-up menu ஐ திறந்து, Surfaces ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:10 Off க்கு வந்து அதன் மீது க்ளிக் செய்க.
05:15 இப்போது எந்த மேற்பரப்புகளும் இல்லாமல் பென்சீன் (benzene) மாதிரி உள்ளது.
05:20 மூலக்கூறுகளின் அணு மற்றும் மூலக்கூறு ஆர்பிட்டால்களை Jmol ஆல் காட்ட முடியும்.
05:25 consoleல் command களை எழுதுவதன் மூலம் திரையில் அணு ஆர்பிட்டால்களை காட்டலாம்.
05:32 ஒரு புதிய Jmol விண்டோவை திறக்க File க்கு சென்று New மீது க்ளிக் செய்க.
05:37 இப்போது console விண்டோவை திறக்க... File க்கு சென்று பின் Console மீது க்ளிக் செய்க
05:43 திரையில் console விண்டோ திறக்கிறது.
05:47 console விண்டோவை தெளிவாக காட்ட Kmag Screen magnifier ஐ பயன்படுத்துகிறேன்.
05:53 அணு ஆர்பிட்டால்களுக்கான command வரி isosurface phase atomic orbital உடன் ஆரம்பிக்கிறது
06:00 ($) dollar prompt ல் டைப் செய்க isosurface phase atomic orbital.
06:06 இதை தொடர்ந்து ஒவ்வொரு அணு ஆர்பிட்டாலையும் குறிப்பிடும் குவாண்டம் (quantum) எண்கள் n. l மற்றும் m வருகின்றன
06:14 's' ஆர்பிட்டாலை காட்ட டைப் செய்க 2 0 0
06:20 2, 0, 0 என்ற எண்கள் குறிப்பவை முறையே n, l மற்றும் m குவாண்டம் (quantum) எண்கள்.
06:27 இந்த command ஐ இயக்க Enter விசையை அழுத்துக.
06:31 panel ல் s ஆர்பிட்டால் காட்டப்படுகிறது.
06:35 இங்கே சில உதாரண அணு ஆர்பிட்டால்களும் அவற்றிற்கான script commandகளும் உள்ளன
06:41 அனைத்து அணு ஆர்பிட்டால்களுக்கும் command வரி ஒன்றே
06:45 console ல் முந்தைய command ஐ காட்ட, விசைப்பலகையில் மேல் அம்பு விசையை அழுத்தவும்.
06:51 n, l மற்றும் m குவாண்டம் (quantum) எண்களை 2 1 1 என மாற்றுக.
06:58 Enter விசையை அழுத்தி 'px' ஆர்பிட்டாலை Jmol panel ல் காண்க
07:05 மீண்டும் மேல்அம்புவிசையை அழுத்தி n, l மற்றும் m ஐ 3 2 மற்றும் -1 ஆக மாற்றுக.
07:13 Enter விசையை அழுத்தி 'dxy' ஆர்பிட்டாலை Jmol panel ல் காண்க
07:19 jpg, png அல்லது pdf போன்ற file formatகளில் இந்த படங்களை சேமிக்கவும் முடியும்.
07:27 இங்கே அனைத்து அணு ஆர்பிட்டால்கள் s, p, d, மற்றும் f க்கான command களின் பட்டியல் உள்ளது
07:35 slide ல் காட்டப்படுபவை அணு ஆர்பிட்டால்களின் மாதிரிகள் ஆகும்
07:40 இவை console ல் எழுத்தப்பட்ட script command களின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை.
07:45 இங்கே மூலக்கூறு ஆர்பிட்டால்களை எவ்வாறு காட்டுவது என்பதை காட்ட ஒரு புதிய Jmol panel மற்றும் console ஐ திறந்துவைத்துள்ளேன்
07:53 sp3, sp2 மற்றும் sp போன்ற கலப்பின மூலக்கூறு ஆர்பிட்டால்களை (Hybridized molecular orbitals) Jmol ஐ பயன்படுத்தி காட்ட முடியும்
08:02 panel ல் மீத்தேன் மாதிரியை கொண்டுள்ளோம்.
08:06 மீத்தேன் sp3 வகை மூலக்கூறு ஆர்பிட்டால்களை கொண்டுள்ளது
08:11 Linear Combination of Atomic Orbitals அதாவது LCAO முறை மூலக்கூறு ஆர்பிட்டால்களை உருவாக்க பயன்படுகிறது
08:21 எனவே, command வரி 'lcaocartoon' உடன் ஆரம்பிக்கிறது பின் create மற்றும் ஆர்பிட்டாலின் பெயர்
08:30 dollar prompt ல் டைப் செய்க lcaocartoon create sp3
08:36 Enter ஐ அழுத்துக
08:38 sp3 கலப்பின மூலக்கூறு ஆர்பிட்டாலுடன் மீத்தேன் மாதிரியை கவனிக்கவும்
08:45 sp2 கலப்பின மூலக்கூறு ஆர்பிட்டால்களை காட்ட ஈத்தேனை ஒரு உதாரணமாக எடுப்போம்.
08:52 panel ல் ஈத்தேனின் மூலக்கூறு உள்ளது
08:56 ஈத்தேன் மூலக்கூறு மூன்று sp2 கலப்பின மூலக்கூறு ஆர்பிட்டால்களை கொண்டுள்ளது. அவற்றின் பெயர்களாவன sp2a, sp2b மற்றும் sp2c.
09:08 dollar promptல் டைப் செய்க lcaocartoon create sp2a , Enter ஐ அழுத்துக
09:17 panel மீது ஈத்தேன் மாதிரியில் sp2 ஆர்பிட்டாலை கவனிக்கவும்.
09:22 மேல் அம்புக்குறியை அழுத்தி sp2asp2b ஆக மாற்றுக பின் Enter ஐ அழுத்துக
09:31 மீண்டும், மேல் அம்புக்குறியை அழுத்தி sp2bsp2c ஆக மாற்றுக பின் Enter ஐ அழுத்துக
09:41 கடைசியாக pi பிணைப்பிற்காக ஆர்பிட்டால்களின் பெயரை pz என மாற்றுக
09:48 panelல் அனைத்து மூலக்கூறு ஆர்பிட்டால்களுடன் ஈத்தேன் மூலக்கூறை கொண்டுள்ளோம்
09:55 மூலக்கூறு ஆர்பிட்டால்களுடன் மற்ற சில மூலக்கூறுகளின் உதாரணங்களை இந்த slide காட்டுகிறது
10:01 மேலும் தகவல்களுக்கு Jmol Script ஆவணத்தைக் கொண்ட இணையத்தளத்தை காணவும்.
10:08 சுருங்கசொல்ல.
10:10 இந்த டுடோரியலில் நாம் கற்றது
10:12 சைக்ளோஹெக்சேன் (cyclohexane) மற்றும் சைக்ளோபென்டேன் (cyclopentane) மாதிரிகளை உருவாக்குதல்
10:17 ஒரு பென்சீன் (benzene) மாதிரியை உருவாக்குதல்
10:19 மூலக்கூறுகளின் மேற்பரப்பு திணையத்தை (surface topology) காட்டுதல்.
10:23 மேலும் நாம் கற்றது
10:24 அணு ஆர்பிட்டால்கள் s, p, d மற்றும் fஐ காட்டுதல்
10:29 console ல் script commandகளை எழுதுவதன் மூலம் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் sp3, sp2 மற்றும் spஐ காட்டுதல்.
10:38 இங்கே பயிற்சி
10:40 ஒரு 2-ப்யூட்டீன் (Butene) மாதிரியை உருவாக்கி மூலக்கூறு ஆர்பிட்டால்களை காட்டவும்
10:45 மூலக்கூறு ஆர்பிட்டால்களின் நிறம் மற்றும் அளவை மாற்ற lcaocartoon command ஐ ஆராயவும்
10:52 commandகளின் பட்டியலுக்கு... காட்டப்படும் இணைப்பை பார்க்கவும்.
10:57 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
11:01 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11:04 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:09 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:15 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:19 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:26 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:30 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:37 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:42 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst