Jmol-Application/C2/Create-and-edit-molecular-models/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். Jmol அப்ளிகேஷனில் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் திருத்துதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:12 | மூலக்கூறு மாதிரியில் ஹைட்ரஜன் அணுவிற்கு பதிலாக ஒரு செயல்பாட்டு குழுவை சேர்த்தல் |
00:17 | பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் நீக்குதல் |
00:20 | அணுக்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் |
00:23 | மற்றும் contextual menu என அழைக்கப்படும் Pop-up menu ஐ எவ்வாறு பயன்படுத்துதல் என கற்றல். |
00:29 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு |
00:32 | Jmol அப்ளிகேஷன் விண்டோ மற்றும் |
00:36 | மூலக்கூறு மாதிரிகளை உருவாக்க பயன்படும் Modelkit function ஆகியவை குறித்து தெரிந்திருக்க வேண்டும். |
00:41 | அது குறித்த டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:46 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: |
00:49 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04 |
00:53 | Jmol பதிப்பு 12.2.2 |
00:57 | மற்றும் Java பதிப்பு 7. |
01:00 | Jmol அப்ளிகேஷனை திறக்க Dash homeல் க்ளிக் செய்க. |
01:05 | search box ல் டைப் செய்க Jmol. |
01:08 | திரையில் Jmol ஐகான் தோன்றுகிறது. |
01:11 | Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறக்க Jmol ஐகான் மீது க்ளிக் செய்க. |
01:17 | ஏற்கனவே நாம் உருவாக்கிய ப்ரோபேன் மாதிரியுடன் ஆரம்பிக்கலாம் |
01:22 | file ஐ திறக்க, tool bar ல் “Open file” ஐகான் மீது க்ளிக் செய்க. |
01:27 | திரையில் ஒரு dialog box தோன்றுகிறது. |
01:30 | தேவையான file உள்ள folder மீது க்ளிக் செய்க. |
01:34 | என் file Desktop ல் உள்ளது. |
01:37 | எனவே, நான் Desktop ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்கிறேன். |
01:43 | “File or URL” உரைப்பெட்டியில் file பெயரை டைப் செய்க |
01:48 | பின் Open பட்டன் மீது க்ளிக் செய்க. |
01:51 | திரையில் ப்ரோபேனின் மாதிரி தோன்றுகிறது. |
01:55 | ப்ரோபேனில் ஹைட்ரஜன்களுக்கு பதிலாக பின்வருவன போன்ற செயல்பாட்டு குழுக்களை வைக்க முடியும்: |
01:59 | ஹைட்ராக்சி (hydroxy), அமினோ (amino),...... ப்ளூரோ, க்ளோரோ, ப்ரோமோ(bromo) போன்ற ஹாலொஜன்கள் (halogens) மற்றும் பல. |
02:07 | ப்ரோபேன் மூலக்கூறை ப்ரோபனால் (Propanol) ஆக மாற்ற அதில் ஹைட்ராக்சி குழுவை சேர்க்க விரும்புகிறேன். |
02:13 | model kit menu ஐ திறக்கவும். இங்கே செயல்பாட்டு குழுக்களின் ஒரு பட்டியல் உள்ளது. |
02:20 | ஆக்ஸிஜன் அணுவிற்கு அருகில் உள்ள பெட்டியில் குறியிடுக. |
02:23 | முதல் கார்பன் அணுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் அணு மீது க்ளிக் செய்க. |
02:28 | ஹைட்ரஜன் அணு ஹைட்ராக்சி குழுவால் மாற்றப்பட்டது என்பதை கவனிக்கவும். இங்கே ஆக்சிஜன் அணு சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. |
02:37 | ப்ரோபேன் இப்போது 1-ப்ரோபனால் (Propanol) ஆக மாற்றப்பட்டது |
02:41 | இப்போது 1-ப்ரோபனாலை 2-க்ளோரோ-1-ப்ரோபனாலாக மாற்ற முயற்சிப்போம் |
02:47 | model kit menu ல் இருந்து க்ளோரோ குழுவை தேர்ந்தெடுக்கவும். |
02:51 | இரண்டாம் கார்பன் அணுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க. |
02:57 | இப்போது 2-க்ளோரோ-1-ப்ரோபனால் மாதிரியைக் கொண்டுள்ளோம். இங்கே க்ளோரின் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. |
03:04 | Energy minimization செய்து படத்தை dot mol file ஆக சேமிக்கலாம். |
03:10 | இங்கே பயிற்சி. |
03:11 | பின்வரும் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்.3-ப்ரோமோ-1-ப்யூட்டனால் (butanol) மற்றும் 2-அமினோ-4-க்ளோரோ-பென்டேன் (pentane) |
03:20 | Energy minimization செய்து படத்தை JPEG format ல் சேமிக்கவும். |
03:25 | படத்தை வெவ்வேறு file formatகளில் சேமிக்க: |
03:28 | Tool bar ல் “Save current view as an image” ஐகானை பயன்படுத்தவும். |
03:33 | நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும் |
03:40 | இப்போது Jmol அப்ளிகேஷன் விண்டோவிற்கு திரும்ப வருவோம். |
03:45 | Jmol அப்ளிகேஷனும் ஒருPop-up menu ஐ தருகிறது. |
03:50 | அந்த pop-up menu ஐ இரு வெவ்வேறு வழிகளில் அணுகலாம். |
03:55 | model kit menu திறந்திருந்தால், அதை மூடவும். |
03:59 | model kit menu ல் கீழே வந்து “exit model kit mode” மீது க்ளிக் செய்க |
04:04 | Pop-up menu ஐ திறக்க, panel மீது ரைட்-க்ளிக் செய்க. |
04:09 | panel ல் Pop-up menu தோன்றுகிறது. |
04:12 | அணுக்களின் காட்சியை மாற்ற பல செயல்பாடுகளை Pop-up menu தருகிறது. |
04:18 | இது பல்வேறு selection மற்றும் rendering தேர்வுகளைக் கொண்டுள்ளது. |
04:22 | இந்த menu ல் உள்ள பல செயல்பாடுகள் menu bar லும் உள்ளன. |
04:28 | Pop-up menu ல் உள்ள ஐடம்கள் சுய விளக்கம் அளிப்பவை. |
04:32 | அவற்றிற்கு ஒரு விரிவான விளக்கம் தேவையில்லை. |
04:35 | Pop-up menu ஐ மூட Jmol panel மீது க்ளிக் செய்க. |
04:39 | Jmol logo மீது க்ளிக் செய்வது Pop-up menu ஐ அணுக இரண்டாம் வழி ஆகும். |
04:44 | இது Jmol panel ன் கீழ் வலது பக்கம் உள்ளது. |
04:49 | இப்போது இந்த மூலக்கூறை திருத்துவதையும் அதை ஈத்தேன் மூலக்கூறாக மாற்றுவதையும் காண்போம். |
04:55 | அதற்கு, ஹைட்ராக்சி குழு...., க்ளோரின் குழு......, கார்பன்..... மற்றும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை நீக்குவோம். |
05:05 | model kit menu ஐ திறக்கவும். |
05:08 | “delete atom” க்கு அருகில் உள்ள பெட்டியில் குறியிடுக |
05:12 | நீங்கள் நீக்க விரும்பும் அணுக்கள் மீது க்ளிக் செய்க. |
05:15 | ஆக்சிஜன்,..... க்ளோரின்..... மற்றும் கார்பன் அணு. |
05:21 | ஈத்தேன் மூலக்கூறை உருவாக்க ஹைட்ரஜன்களை இந்த மூலக்கூறுக்கு சேர்க்க வேண்டும். |
05:26 | model kit menu ல் “add hydrogens” தேர்வு மீது க்ளிக் செய்க. |
05:32 | மூலக்கூறுக்கு இரு ஹைட்ரஜன் அணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. |
05:36 | இப்போது திரையில் ஈத்தேன் மாதிரியைக் கொண்டுள்ளோம். |
05:40 | ஆல்கீன்கள் (alkenes) மற்றும் ஆல்கைன்களை (alkynes) உருவாக்க கற்போம். |
05:45 | மூலக்கூறில் இரட்டை பிணைப்பை சேர்க்க, model kit menu ஐ திறக்கவும். |
05:50 | “double” தேர்வை குறியிடவும். |
05:53 | ஈத்தேன் மூலக்கூறில் இரு கார்பன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு மீது கர்சரை வைக்கவும். |
05:58 | கார்பன் அணுக்களை சுற்றி சிவப்பு நிற வளையங்கள் தோன்றுகின்றன. |
06:01 | அந்த பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
06:05 | ஒற்றை பிணைப்பு இரட்டை பிணைப்பாக மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
06:09 | panel ல் ஈத்தேன் மாதிரியைக் கொண்டுள்ளோம். |
06:13 | இப்போது ஈத்தேனை ஈத்தைனாக மாற்றுவோம், |
06:16 | modelkit menu ல் க்ளிக் செய்து “triple” தேர்வை குறியிடுக. |
06:21 | ஈத்தேன் மூலக்கூறின் இரட்டை பிணைப்பு மீது கர்சரை வைத்து அதன் மீது க்ளிக் செய்க. |
06:28 | இரட்டை பிணைப்பு முப்பிணைப்பாக மாற்றப்பட்டுள்ளது. |
06:31 | இது ஈத்தைன் மாதிரி ஆகும் |
06:34 | மிக நிலையான வெளி வடிவமைப்பை பெற energy minimization செய்து சேமிக்கவும். |
06:41 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:43 | அல்கேன்களில் ஹைட்ரஜன்அணுவிற்கு பதிலாக செயல்பாட்டு குழுக்களை சேர்த்தல் |
06:48 | அல்கேன்களை அல்கீன்கள் மற்றும் அல்கைன்களாக மாற்ற பிணைப்புகளை சேர்த்தல் |
06:52 | அணுக்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் மற்றும் |
06:54 | Pop-up-menu ஐ பயன்படுத்துதல். |
06:59 | பயிற்சியாக 2-ப்ளூரோ-1,3-ப்யூட்டடைன் (butadiene) மற்றும் 2-பென்டைன் (pentyne) மாதரிகளை உருவாக்குக |
07:06 | மாதிரியின் காட்சியை wireframe ஆக மாற்ற Pop-up menu ஐ பயன்படுத்துக |
07:10 | energy minimization செய்து படத்தை PDF format ல் சேமிக்கவும். |
07:16 | நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
07:24 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What]_is_a_Spoken_ Tutorial |
07:27 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:31 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:36 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:41 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:45 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:52 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:57 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:04 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:08 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |