Java-Business-Application/C2/Overview-of-Library-Management-System/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:46, 8 April 2015 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 Web Application – Library Management Systemன் overview குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில் ஒரு web application ஐ அறிமுகப்படுத்திக்கொள்வோம்.
00:13 இந்த தொடரில், ஒரு basic inventory(அடிப்படை இருப்புநிலை) system ஐ உருவாக்குவதை செய்துகாட்டியுள்ளோம்.
00:19 ஒரு Library Management system உதாரணத்தை பயன்படுத்தியுள்ளோம்.
00:24 இந்த தொடரை கற்க,
00:27 Netbeans IDE ஐ பயன்படுத்தி Core Java மற்றும்
00:31 HTML பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
00:32 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்.
00:38 இப்போது அந்த web application – Library Management System ஐ காணலாம்.
00:43 ஒரு library management system என்பது
00:46 கொடுக்கப்பட்ட மற்றும் திரும்ப பெறப்பட்ட புத்தகங்களை நிர்வகிக்கும் மற்றும்
00:50 நூலகத்தின் உறுப்பினர்களை நிர்வகிக்கும் ஒரு system ஆகும்.
00:54 இப்போது ஏன் ஒரு Library Management System தேவை?
00:58 இதுபோன்ற ஒரு system ஆனது -
01:00 நூலகத்தில் நூலகர் புத்தகங்களை சுலபமாக நிர்வகிக்கவும்
01:05 உறுப்பினர் தகவலை ஒரு centralized server ல் பராமரிக்கவும்
01:10 நேரத்தையும் ஆதாரங்களையும் சேமிக்கவும் மற்றும்
01:13 வேலைப்பளுவை குறைக்கவும் உதவுகிறது
01:15 இப்போது அந்த system ஐ காட்டுகிறேன்.
01:17 அதற்காக, Netbeans IDE க்கு செல்கிறேன்
01:22 இங்கே மிக எளிய system ஐ கொண்டுள்ளோம்.
01:24 MyFirstProject என்ற இந்த Project ஐ இயக்குகிறேன்
01:30 browser விண்டோ திறக்கிறது.
01:33 Library Management System ன் Home Page ஐ காணலாம்
01:38 ஒரு எளிய login form ஐ இங்கே காணலாம்
01:42 Visitor’s Home Page என்ற ஒரு பக்கத்திற்கான link உள்ளது
01:46 அந்த link மீது க்ளிக் செய்க
01:48 நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களின் பட்டியலைக் காணலாம்
01:53 ஒரு நூலகம் பல உறுப்பினர்களை கொண்டுள்ளது.
01:56 இப்போது, ஒரு உறுப்பினராக login செய்வோம், அதாவது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினராக.
02:03 “mdhusein” ஆக login செய்து password ஐ கொடுத்து எண்டரை அழுத்துகிறேன்.
02:10 ஒரு Success Greeting Page ஐ காணலாம்
02:13 தற்போது உறுப்பினருக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் உள்ளது.
02:18 இப்போது logout செய்வோம்.
02:21 அடுத்து நூலகராக login செய்வோம் அதாவது admin ஆக
02:26 login செய்தவுடன் Admin Section page ஐ காணலாம்
02:31 இங்கே 4 நான்கு தேர்வுகளை காணலாம்.
02:33 ஒவ்வொன்றாக முயற்சித்து முடிவை காணலாம்.
02:37 முதலில் List Books தேர்வு உள்ளது.
02:41 இப்போது நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களின் பட்டியலைப் பெறுகிறோம்
02:46 அடுத்து List Borrowed Books உள்ளது
02:50 இங்கே பல்வேறு உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் உள்ளது
02:54 திரும்பக்கொடுக்கப்பட வேண்டிய தேதி காலாவதியான புத்தகங்களின் பட்டியல் உள்ளது.
02:59 பின் List Users தேர்வு உள்ளது
03.03 இங்கே நூலகததில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலைப் பெறலாம்
03:08 பின் Checkout/Return Book தேர்வு உள்ளது
03:12 அந்த தேர்வு மீது க்ளிக் செய்வோம்.
03:15 இது புத்தகத்தை புதுப்பித்தல் அல்லது திரும்பகொடுப்பதற்கான இடைமுகம் ஆகும்
03:20 இப்போது நம் login பக்கத்திற்கு வருவோம்
03:23 ஒரு புது உறுப்பினராக பதிவுசெய்யவும் தேர்வு இருப்பதைக் கவனிக்கவும்.
03:28 பதிவுசெய்ய here மீது க்ளிக் செய்க.
03:31 இது ஒரு புது உறுப்பினராக பதிவுசெய்வதற்கான registration form ஆகும்.
03:35 இதுதான் இந்த எளிய web application க்கான overview ஆகும்.
03:39 இந்த தொடரின் முடிவில், இந்த எளிய Library Management System ஐ உருவாக்க கற்பீர்கள்
03:46 மேலும் ஒரு புத்தகத்தை தேடுதல் போன்ற பல செயல்பாடுகளை உங்களால் சேர்க்க முடியும்.
03:53 இந்த தொடரில் -
03:54 web application ஐ உருவாக்க JSP மற்றும் servlet களைப் பயன்படுத்துவோம்
03:59 MVC architecture ஐயும் விரிவாக கற்போம்
04:04 MVC pattern ஐ பயன்படுத்தும் எந்த web application ஐயும் உங்களால் உருவாக்க முடியும்.
04:10 ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய
04:13 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04:16 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
04:20 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
04:24 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
04:29 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
04:32 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04:38 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04:42 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
04:49 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
04:59 இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது .
05:08 இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது
05:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst