GIMP/C2/Selecting-Sections-Part-2/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00:23 | GIMP tutorialக்கு நல்வரவு. |
00:25 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:31 | இன்று Fuzzy Select Tool பற்றி காண்போம். |
00:36 | இது கிட்டத்தட்ட select by colour tool க்கு சம்பந்தப்பட்டது. |
00:40 | ஆனால் fuzzy select tool ஒரு தொடர்ச்சியான பகுதியை மட்டும் தேர்கிறது. colour select tool ஒத்த நிறமுடைய அனைத்து பகுதிகளையும் தேர்கிறது. |
00:54 | Replace, Add, Subtract மற்றும் Intersect with the current selection போன்ற சில ஒத்த தேர்வுகள் உள்ளன, இப்போது Replace ஐ தேர்கிறேன். |
01:08 | இங்கே அதே தேர்வைக் காணலாம், Antialiasing. |
01:13 | antialiasingஐ தேர்கிறோம் எனில், selectionன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் மிருதுவான விளிம்புகளைப் பெறுகிறோம். |
01:23 | அது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் தேர்ந்தெடுத்ததற்கும் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் இடையே உண்மையில் கூர்மையான விளிம்புகள் உள்ளன.
|
01:33 | மேலும் தேர்வுகள் Feather Edges மற்றும் Select Transparent Areas. |
01:41 | mask sensor ஐ பயன்படுத்தும் போது அநேகமாய் Select Transparent Areas பயனுள்ளதாக இருக்கும். |
01:50 | Sample merged மற்றவற்றுடன் இருப்பது போன்றது. இது அனைத்து visible layer களையும் தேர்ந்தெடுகிறது. |
01:58 | இது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நடப்பு layer ல் இது வேலைசெய்கிறது. |
02:04 | படத்தின் மொத்த வெளியீட்டிலிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
|
02:11 | இங்கே Threshold உள்ளது. இது selection ல் அல்லது selectionக்கு வெளியே ஏதேனும் இருக்கும் போது நிறங்களுக்கிடையே எவ்வளவு வித்தியாசம்இருக்க அனுமதிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கிறது. |
02:24 | ஒரு தெளிவான நிறம் கொண்ட pixels ஐ தேர்ந்தெடுப்பதில் இது உதவுகிறது. |
02:30 | அடுத்த முக்கியமான selection... selection ல் எந்த mode உங்களுக்கு வேண்டும் என்பது. |
02:37 | composite mode என்பது red, green மற்றும் blue channelகளை சேர்த்த gray மதிப்பு ஆகும். |
02:44 | உங்கள் selection ஐ பொருத்து red.... green...., blue channel... அல்லது Hue...., Saturation.... அல்லது Value channel ஐ தேர்ந்தெடுக்கலாம்.
|
02:56 | இப்போது Fuzzy Select Toolஐ முயற்சிக்கலாம். |
03:01 | படத்தினுள் சொடுக்குகிறேன். threshold zero ல் உள்ளது. எனவே நடப்பதைக் காண்போம். |
03:08 | அளவில் ஒரு Pixel கொண்ட selection ஐ உருவாக்குகிறேன். |
03:13 | இப்போது Threshold ஐ 30 என அதிகரிக்கிறேன். படத்தினுள் சொடுக்கி இங்கே toggle quick mask ஐ சொடுக்குக. |
03:28 | இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் காணலாம். |
03:37 | quick mask toggleஐ தேர்வு நீக்குகிறேன், tool box ஐ பெற tab ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க Shift+Ctrl+A ஐ அழுத்துக. |
03:49 | இதை ஒரு வித்தியாசமான வழியில் செய்யலாம். அதற்கு threshold ஐ zero க்கு குறைக்கவும். படத்தினுள் சொடுக்கி mouse ஐ கீழே வலப்பக்கமாக வரைகிறேன். |
04:03 | threshold ஐ அதிகரிக்கும்போது, இந்த blue வினுள் செல்கிறேன் என்பதைக் காணலாம். ஆனால் இன்னும் நான் சுவற்றின் மீதே இருக்கிறேன். |
04:13 | graphic designerகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். புகைப்படக்காரர்களுக்காக அல்ல.
|
04:22 | mouse ஐ சற்று இழுப்பதன் மூலம் threshold ஐ மாற்றலாம். |
04:26 | இது colour selection toolலும் அதே வேலை செய்கிறது. |
04:32 | Select by ஐ Composite லிருந்து Hueக்கு மாற்றுகிறேன். அதே புள்ளியில் சொடுக்கி கீழே வரைகிறேன். |
04:43 | சுவரின் நீல பச்சை பகுதியில் முன்னர் இருந்ததை விட நல்ல selection க்கு வழி கொண்டிருப்பதைக் காணலாம். |
04:54 | எனவே colour definitionன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது இந்த tool உடன் நல்ல பலனைத் தருகிறது. |
05:05 | quick maskனுள் சொடுக்குகிறேன். இங்கே இது கிட்டத்தட்ட சரியாக இருப்பதைக் காண்க. சில பகுதிகளை மட்டும் சரிசெய்ய வேண்டும். quick mask ல் வரைவதுடன் அதை செய்வேன். இந்த selection toolகளுடன் அல்ல.
|
05:25 | mode ஐ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தால் channel mode ல் பல்வேறு channelகளில் உங்கள் படத்தை காணலாம். |
05:41 | blue channel ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் கிட்டத்தட்ட அதே blue மதிப்பில் இருப்பதைக் காண்க. |
05:50 | green channel ல் சில வித்தியாசங்கள் உள்ளன. |
05:55 | red channel ல் இங்கே கிட்டத்தட்ட அதே போன்றே உள்ளது. |
05:59 | எனவே தேர்ந்தெடுப்பதற்கு green channel ஐ தேர்ந்தெடுப்பேன் அல்லது இந்நிலையில் Hue channel.
|
06:10 | இங்கே அடுத்த tool Selecting colour. இது இங்கே அதே செயல்பாடு மற்றும் தேர்வுகளைக் கொண்டுள்ளது. |
06:19 | ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. |
06:22 | இங்கே சொடுக்கினால் இந்த நிறத்துடன் அனைத்து புலங்களையும் தேர்ந்தெடுப்பீர். ஒரு தொடர்ச்சியான பகுதியை அல்ல. |
06:32 | colour selection tool, ஒத்த நிறத்துடன் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுக்கிறது. |
06:41 | அடுத்த toolன் பெயர் intelligent scissors அல்லது scissors selection tool. |
06:48 | இந்த algorithm விளிம்புகளைத் தேடி selection உடன் அவற்றை பின்தொடர முயற்சிக்கிறது. |
06:56 | இங்கே இந்த அஞ்சல் பெட்டிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். |
07:10 | எனவே selection tool ஐ செயல்படுத்தி ஒரு புள்ளியை இங்கே இழுக்கிறேன். cursor க்கு அருகில் ஒரு கூட்டல் குறியைப் பெறுகிறோம். பின் வெறுமனே புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.
|
07:42 | algorithm விளிம்புகளைத் பின்தொடர நினைக்கிறது. மற்ற வழியை இது எடுக்கவில்லை என காணலாம். உள்வழியை இது எடுத்தது.
|
07:56 | படத்தை பெரிதாக்கி இப்போது இந்த புள்ளியை இதுவரை வரையலாம். இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிழை இருந்தது. |
08:13 | எனவே இந்த புள்ளிகளை மேலே இழுக்கிறேன். பின் தொடர தேவையான தகவல்களைக் கொடுத்தால் algorithm விளிம்புகளை பின் தொடர்வதைக் காணலாம். |
08:30 | இது நன்றாக உள்ளது. ஆனால் வழக்கமாக நான் இதை பயன்படுத்துவதில்லை. இதை செய்ய வேறு நல்ல வழிகள் உள்ளன. |
08:44 | இது எப்போதும் சுற்றி தவறான வழியை எடுக்கிறது. ஆகையால் colour selection tool ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். |
08:56 | எனவே இந்த selection உடன் முடிக்கிறேன். |
09:10 | இங்கே ஆரம்ப புள்ளி மீது சொடுக்குகிறேன். cursor கூட்டலாக மாறுகிறது. |
09:17 | இப்போது அடுத்த புள்ளியை வைக்கவும். அதற்கு வெளியே ஒரு சுழற்சியை உருவாக்க இந்த இரு வளையங்கள் உள்ளன. |
09:25 | இங்கே சுற்றி புள்ளியை இன்னும் நகர்த்தி selection ஐ மேலும் நன்றாக்க முடியும். |
09:33 | எனவே இரண்டாவது முறை இப்போது selection ஐ சொடுக்கும்போது, selection தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
09:42 | தரத்தைப் பார்க்க quick mask ஐ செயல்படுத்தி அதை பெரிதாக்குகிறேன். |
09:57 | இப்போது selection ஐ சுற்றி பார்க்கிறேன். |
10:04 | இங்கே இது என் தவறு, இங்கே சொடுக்கி இருக்க வேண்டும். |
10:10 | எனவே intelligent scissors பரவாயில்லை. |
10:17 | இன்று நான் சொல்ல விரும்புவதும் அடுத்ததுமான கடைசி tool foreground selection tool. |
10:24 | சில நாட்களுக்கு முன் இந்த algorithm வெளிவந்தபோது அது முற்றிலும் பரப்பரப்பாக இருந்தது. GIMP ல் பயன்படுத்துகையில் இது பரப்பரப்பானது அல்ல. |
10:37 | ஆனால் இதை முயற்சிக்கலாம். |
10:41 | இங்கே அதே modes உள்ளன. antialiasing செயல்பாட்டில் இல்லை. |
10:48 | இங்கே ஒரே ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். இந்த சிலையை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். |
10:57 | எனவே சற்று நல்ல காட்சியைப் பெற படத்தை பெரிதாக்குகிறேன், . |
11:06 | இப்போது selection toolஐ தேர்ந்தெடுக்கிறேன். தொடர்ச்சியான பகுதி அல்லது வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்கிறேன். |
11:21 | முதலில் automatic laser tool மூலம் ஒரு தோராயமான selection ஐ உருவாக்குகிறேன். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம். |
11:44 | இங்கே ஒரு brush ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த slider மூலம் brush ன் விட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மீது வரைகிறேன். தேர்வு செய்யப்பட்டிருக்க விரும்புகிறேன். |
11:59 | இந்த படத்தில் வைத்திருக்க விரும்பாததை தேர்ந்தெடுக்காமல் இருக்க பார்க்க வேண்டும். |
12:17 | mouse button ஐ விடும் போது, algorithm வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இங்கே சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். |
12:27 | ஒவ்வொருமுறையும் selection புதுப்பிக்கப்படும்போது அந்த விஷயத்துக்கு சம்பந்தபட்ட பகுதி... அதன் மீது நான் வரைந்தது... தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
12:42 | இப்போது Mark Backgroundமீது சொடுக்குகிறேன். படத்தில் வைத்திருக்க விரும்பாத background ஐ வரைய ஆரம்பிக்கிறேன். |
12:54 | தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத பொருளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது இந்த tool நன்கு வேலை செய்கிறது. இங்கே அந்த வித்தியாசம் போதுமான அளவிற்கு பெரிது அல்ல. |
13:12 | selection ஐ ஏற்க enter ஐ அழுத்துக. |
13:17 | இந்த tool எவ்வாறு வேலைசெய்கிறது என ஒரு கற்பனையைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். |
13:27 | path tool லும் இந்த பகுதியை சார்ந்ததே. ஆனால் அதை பிறகு விளக்குகிறேன். |
13:36 | select menu ல் selections உடன் நீங்கள் செய்யக்கூடிய மேலும் பல உள்ளன. அவற்றையும் பின்னர் விளக்குகிறேன். |
13:48 | எனவே இந்த tutorialல் அவ்வளவே. |
13:52 | உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்து பார்க்கப்போகும் tutorial... பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன். |
14:05 | கீழ்காணும் குறிப்பில் உள்ள meetthegimp.org ல் இந்த fileக்கான இணைப்பைக் காணலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. |
14:19 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |