GIMP/C2/An-Image-For-The-Web/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:28, 24 July 2014 by Gaurav (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு.
00:25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:31 GIMP ஒரு சக்திவாய்ந்த Image manipulation program.
00:35 இந்த tutorialலில் GIMP பற்றியும் அதன் சிறப்பம்சங்களையும் காண்போம்
00:39 இணையத்திற்கு ஒரு படத்தை தயாரிப்பதை சுருக்கமாக செய்து காட்டுகிறேன்
00:43 மேல்வரும் tutorialகளில் விரிவான விளக்கத்தைத் தருகிறேன்
00:48 ஒரு படத்தை திறக்க, அந்த படத்தை tool boxக்கு இழுத்து விடுகிறேன்.
00:53 அது இங்குள்ளது!
00:55 அந்த படத்தை பார்க்கலாம்.
00:57 இணையத்திற்கு இந்த படத்தை தயாரிக்க விரும்புகிறேன்.
01:02 இதனுடன் நான் செய்யக்கூடியதைப் பார்க்கலாம்.


01:04 முதலில் இந்த படம் சாய்ந்துள்ளது. எனவே அதை சற்று சுழற்ற வேண்டும்.
01:09 பின் இந்த பகுதியை நீக்க crop செய்கிறேன் - ஒரு நபரின் பின்னால்.
01:16 நான் செய்யும் மூன்றாவது விஷயம் மேலும் நிறம் மற்றும் contrastஐ கொண்டுவருவது.
01:22 இந்த படம் கிட்டத்தட்ட 4000 pixels அகலம் கொண்டு அதிகமாக இருப்பதால் அதை மறுஅளவாக்க விரும்புகிறேன்
01:31 பின் அதை கூர்மையாக்கி JPEG படமாக சேமிக்கிறேன்.
01:38 சுழற்றுதலுடன் ஆரம்பிக்கலாம்.


01:40 படம் சாய்ந்திருப்பது வெளிப்படையாக தெரியும் பகுதியை பெரிதாக்குகிறேன். அதை இங்கே காணலாம்.
01:49 இவ்வாறு Space ஐ அழுத்துதல் மற்றும் cursor ஐ நகர்த்துதல் மூலம் படத்தை சுற்றி நகரலாம்.
01:56 இப்போது இங்கே சொடுக்கி Rotate tool ஐ தேர்கிறேன்
02:00 Rotate toolல், graphic வேலைக்காக மதிப்புகளுக்கு சில Optionகள் முன்னிருப்பாக அமைந்துள்ளன. அவை புகைப்பட வேலைக்காக அல்ல.
02:09 இங்கே Direction... Normal(Forward)க்கு அமைந்துள்ளது. அதை Corrective(Backward)க்கு அமைக்கிறேன்
02:14 சிறந்த Interpolation உள்ளதா என சோதிக்கிறேன். அது சரி.
02:17 Preview ல் Image க்கு பதில் Grid ஐ தேர்கிறேன்.
02:22 sliderஐ நகர்த்துவதன் மூலம் grid வரிகளை அதிகரிக்கிறேன். அதை விரைவில் காண்பீர்கள்.
02:30 இப்போது படத்தில் சொடுக்கலாம். படத்தின் மீது ஒரு gridஐ பெறலாம்.
02:36 இந்த grid நேராக உள்ளது
02:38 அதை சுழற்றலாம். GIMP... Corrective modeல் அதே திசையில் படத்தை சுழற்றும். எனவே பின் மீண்டும் grid நேராக இருக்கும்
02:51 செய்துகாட்டுகிறேன். இவ்வாறு grid ஐ சுழற்றுகிறேன்.
02:56 உறுதிசெய்ய படத்தின் மற்ற பகுதிகளை சோதிக்கிறேன்.
03:00 எனக்கு பார்க்க நன்றாக உள்ளது.
03:02 இப்போது Rotate buttonஐ சொடுக்குகிறேன்.
03:06 படம் ஏறத்தாழ 10 mega-pixels ஆக இருப்பதால் இது சிறிது நேரம் எடுக்கும்
03:13 இது முடிந்தது!
03:14 படம் சுழற்றப்பட்டுள்ளது.
03:16 முழுப்படத்தையும் பார்க்கலாம். Shift + Ctrl + E... படத்திற்க்கு திரும்ப அழைத்து செல்லும்.
03:22 அடுத்த படி Cropping.
03:25 இங்கே சொடுக்கி Crop tool ஐ தேர்கிறேன்.
03:28 படத்தின் aspect ratio ஐ 3:2 என வைக்க விரும்புகிறேன்.
03:33 அதற்கு இங்கே Fixed Aspect ratio ஐ சோதித்து 3:2 என இடுகிறேன்.
03:39 பெட்டியை விட்டு வெளியேற வெறுமனே சொடுக்குகிறேன்.
03:43 இப்போது croppingஐ ஆரம்பிக்கலாம்.
03:45 இந்த நபரின் கால்களை சேர்க்க விரும்புகிறேன. ஆனால் படத்தின் இந்த பகுதியை நீக்குகிறேன்.
03:52 இந்த இடத்தில் ஆரம்பிக்கிறேன். அந்த பகுதியைத் தேர்ந்தெடுக்க இடது mouse buttonஐ அழுத்தி மேல்நோக்கி இடப்பக்கமாக இழுக்கிறேன்.
04:01 aspect ratio நிலையானது என்பதைக் காண்க.
04:06 இப்போது எவ்வளவு தூரம் இழுக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.
04:12 இது போதும் என நினைக்கிறேன்.
04:18 ஓரங்களை சோதிக்கலாம்.
04:21 இந்த பகுதியை நீக்கிவிட்டோம். இங்கே ஒருவர் அமர்ந்துள்ளார்.


04:28 படத்தில் இருக்க அந்த நபருக்கு தேவையான இடம் இங்கே உள்ளது என நினைக்கிறேன்.
04:35 இது நன்றாக இருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
04:41 மேலே இங்கே ஜன்னல்கள் உள்ளன.
04:44 அவை ஜன்னல்கள் என படத்தில் தெரிய போதுமானதாக உள்ளது.
04:50 ஆனால் இங்கே கால் பகுதியில் தேவையான இடம் இல்லை என நினைக்கிறேன்.
04:54 எனவே படத்தை சொடுக்கி கீழே சற்று இழுக்கிறேன்.
04:58 இப்போது நன்றாக உள்ளதென நினைக்கிறேன்.
05:01 ஆனால் இப்போது போதுமான ஜன்னல்கள் தெரியவில்லை. அமர்ந்துள்ள நபரும் ஓரத்திற்கு அருகில் உள்ளார்.
05:08 எனவே படத்தை சற்று பெரிதாக்கலாம்
05:11 இங்கே நாம் பிரச்சனையில் உள்ளோம். ஒருவேளை இதை நீங்கள் காணலாம்.
05:18 சுழற்றுதலின் போது இது நடந்தது.
05:21 இங்கே transparent ஆக சிறு பகுதி உள்ளது.


05:25 அதை நான் சேர்க்க விரும்பவில்லை
05:33 எனவே Crop toolக்கு வருவோம்.
05:35 இங்கே மேலும் இடம் தேவை; எனவே இதை மேலே இழுக்கிறேன்.
05:38 மிகவும் தூரம் இல்லை
05:40 இது போதும் என நினைக்கிறேன்
05:44 இப்போது படத்தின் மீது சொடுக்கவும். crop மற்றும் rotate செய்யப்பட்ட படம் உள்ளது.
05:50 Shift + Ctrl + E... முழு பார்வைக்கு கொண்டுவரும்.
05:56 அடுத்த படி சிறிது நிறங்கள் மற்றும் contrast ஐ சேர்ப்பது
06:02 இங்கே பல வழிகள் உள்ளன. color levelsஐயும் நான் பயன்படுத்தலாம் - அது இங்குள்ளது, curves அல்லது சில sliders.
06:11 ஆனால் நான் layers உடன் இதை செய்ய முயற்சிக்கிறேன்.
06:18 இங்கே நான் வெறுமனே இந்த layer ன் பிரதியை எடுக்கிறேன்.
06:23 layer mode ஐ Overlay என மாற்றுகிறேன்.
06:30 இது மிகவும் திடமான effectஉடன் இருப்பதைக் காணலாம். எனக்கு அந்த அளவுக்குத் தேவையில்லை
06:36 எனவே எனக்கு நன்றாக உள்ளது என தெரியும் வரை opacity slider ஐ குறைக்கிறேன்.
06:42 அநேகமாக இன்னும் கொஞ்சம்.
06:46 சரி, இது போதும் என நினைக்கிறேன்.
06:50 இங்கே mouse ல் வலது சொடுக்கி channel list சென்று 'Flatten image' அல்லது 'Merge visible layers' என சொல்லாத வரை இதை என்னால் மாற்றமுடியும்
07:01 பின் அனைத்து மாற்றங்களும் நிரந்தரமாகிவிடும்.
07:03 இங்கே History சென்று பின் historyஐ undo செய்தல் நீங்கலாக.
07:10 ஆனால் அதை பின்னர் பார்ப்போம்
07:13 அடுத்த படி மறுஅளவாக்குதல்.
07:16 Image menu ல் சொடுக்கி Scale Image optionஐ தேர்கிறேன்.
07:27 இங்கே 800 pixels என இடுகிறேன்.


07:32 பின் height ன் மதிப்பை தானாக பெறுகிறேன்.
07:36 இந்த இணைப்பை நீக்கும்போது, மறுஅளவாக்கும்போது படம் சீர்குலையலாம்.
07:44 Interpolation
07:45 Cubicஐ தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். இங்கே உயர்மட்ட layer செங்கல் கட்டிடங்களுடன் சில art effects கொடுப்பதை கண்டேன். இது வித்தியாசமானது. அதை சோதிக்க வேண்டும்.
08:02 இப்போது Scaleல் சொடுக்கவும்
08:04 முடிவைக் காணலாம்
08:08 Shift + Ctrl + E முழு படத்தைக் கொடுக்கும்
08:13 1 ஐ அழுத்தும்போது, 100% zoomஐ பெறுகிறேன்.
08:19 இப்போது ஏதேனும் கவன தொந்தரவு அல்லது சிதறல்கள் இருக்கிறதா என பார்க்க படத்தை முழுதும் பார்க்கலாம். அனைத்தும் சரியாக உள்ளதென நினைக்கிறேன்.
08:32 அடுத்த படி கூர்மையாக்குவது.
08:35 என் lensஉம் camera உம் நன்றாக உள்ளது. ஆனால் படம் மீது வேலைசெய்துள்ளோம். எனவே இது சிறிது கூர்மையாக்கப்பட வேண்டும்.
08:49 Filtersஐ தேர்கிறேன்
08:53 Enhance ல் சொடுக்கி Sharpening ல் சொடுக்குக. மிகச்சிறந்த கூர்மையாக்கும் tool ஆன Unsharp mask ஐயும் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதைக்கு Sharpening போதுமானது
09:06 இந்த tool அடிப்படையாக ஒரே ஒரு தேர்வைக் கொண்டுள்ளது அது sharpness slider. இது மாற்றக்கூடியது. இம்மாதிரி படத்திற்க்கு இது போதும்.
09:16 இது கூர்மையாக்கப்படாத படம். இந்த sliderஐ இழுக்கும்போது, மேலும் மேலும் படம் கூர்மையாகிறது. இதை அதிகம் நகர்த்தினால் வேடிக்கையான effect ஐ பெறலாம்.
09:31 இந்த படத்திற்க்கு இந்த மதிப்பு சரி என நினைக்கிறேன்.


09:38 தலைமுடி இப்போது தெளிவாக உள்ளது. ஆனால் இங்கே சில சிதறல்களைக் காணலாம்
09:46 எனவே சிறிது குறைக்கலாம். இப்போது இது நன்றாக உள்ளது.
09:52 படத்தில் சிதறல்கள் இருப்பதை விட soft effects க்கு போக விரும்புகிறேன்.


10:00 அவை தான் நீங்கள் படத்தை manipulate செய்திருப்பதற்கான சாட்சி.
10:06 எனவே முடிவைக் காண்போம்.
10:09 இது நன்றாக உள்ளது.


10:11 கடைசி படி படத்தை சேமிப்பது.
10:15 File க்கு சென்று Save As ல் சொடுக்கி உண்மை file extension ‘tif’ ஐ ‘jpg’ என மாற்றுவோம்
10:29 Save buttonஐ சொடுக்குவோம்.
10:32 JPEG ஆல் பல layerகளுடன் படத்தை கையாள முடியாது என ஒரு எச்சரிக்கையை பெறுகிறோம். சரி. எனவே அவற்றை export செய்ய வேண்டும்.
10:44 இந்த படத்திற்க்கு 85% என்பது சிறந்த சரியான மதிப்பு என நினைக்கிறேன்.
10:53 இந்த படத்தை JPEG படமாக இங்கே சேமித்துள்ளேன்.
11:01 இதை முழுத்திரையிலும் பார்க்கலாம்.
11:04 GIMPன் முதல் tutorial அவ்வளவுதான். பின்வரும் tutorialகளில், காணப்போவது GIMPஐ set up செய்வது, draw மற்றும் convert செய்வது tools மேலும் பல.
11:17 உங்கள் கருத்துகளை அனுப்ப மின்னஞ்சல்... info@meetthegimp.org
11:25 மேலும் விவரங்களுக்கு http://meetthegimp.org


11:31 இந்த tutorial லில் உங்களுக்கு பிடித்தவை, எங்களிடமிருந்து எதிர்பார்ப்பவை மேலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்
11:41 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana