Geogebra/C3/Exporting-GeoGebra-Files/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:02, 8 August 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 வணக்கம்.
00:02 GeoGebra ல் Export சிறப்பம்சம் குறித்த Geogebra டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 Geogebra ஐ முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் எனில்,
00:10 ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் “GeoGebra அறிமுகம்” குறித்த டுடோரியலை காணவும்.
00:17 இந்த டுடோரியலில்,
00:18 GeoGebra ல் Export சிறப்பம்சம் குறித்து கற்போம்.
00:22 Drawing pad வடிவங்களை static படங்களாக export செய்தல்
00:26 GeoGebra file களை dynamic HTML வலைப்பக்கமாக export செய்தல்
00:31 Geogebra ஐ ஆரம்பிக்க, நாம் பயன்படுத்துவது
00:34 GNU/Linux இயங்குதளம் Ubuntu பதிப்பு 10.04 LTS
00.39 Geogebra பதிப்பு 3.2.40.0
00:44 இப்போது GeoGebra Window ல்.
00:48 நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய GeoGebra file ஐ திறக்கவும். அதற்கு செல்க File பின் Open
00.57 ConcentricCircles.ggb ஐ தேர்ந்தெடுத்து open ல் சொடுக்குக
01:04 Algebra மற்றும் Spreadsheet Viewகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் View க்கு சென்று அந்த தேர்வுகளை நீக்கவும்.
01:16 Move Graphics View tool ஐ பயன்படுத்தி drawing pad objectகளை இடத்தில் வைக்கலாம்.
01:22 Export செய்ய Objectகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், அல்லது எந்த objectஐயும் தேர்ந்தெடுக்கவில்லை எனில் முழு drawing pad ஐயும் export செய்யலாம்
01:32 பின்வருமாறு தேர்ந்தெடுக்கவும் File>> Export>> Graphics View as Picture
01:40 நீங்கள் export செய்ய விரும்பு format ஐ தேர்ந்தெடுக்கவும், png ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:48 இங்கே அளவை(scale) மாற்றலாம், முன்னிருப்பு மதிப்புகளே இருக்கட்டும்
01:53 இங்கே Resolution ஐ கூட்டவோ குறைக்கவோ முடியும்.
01:58 Save ல் சொடுக்குக.
02.01 இங்கே folder பெயரை தேர்ந்தெடுத்து.... file பெயரை தேர்ந்தெடுக்கவும்
02:07 File type png ஏற்கனவே இங்குள்ளது, பின் Save ல் சொடுக்குக.
02:15 சுருங்க சொல்ல,
02:17 drawing pad ல் object ஐ தேர்ந்தெடுக்கவும் அல்லது முழு drawing pad ஐயும் export செய்ய எதையும் தேர்ந்தெடுக்காமல் விடவும்
02:26 File >Export > Graphics View as Picture தேர்வுகளுக்கு செல்க.
02:33 Format, Scale மற்றும் Resolution ஐ தேர்ந்தெடுத்து......
 export செய்யப்பட்ட file ஐ சேமிக்கவும். 
02:40 இப்போது பாடத்தின் இரண்டாம் பகுதி.
02:45 Geogebra ஐ ஒரு dynamic வலைப்பக்கமாக export செய்தல்
02:49 முதலில் ஒரு GeoGebra file ஐ திறப்போம்
02:53 உதாரணமாக Interior Angles.ggb,
02.59 இப்போது செல்க File, Export >> Dynamic Worksheet as webpage
03:09 ஒரு பெட்டி தோன்றுகிறது.
03:12 தலைப்பு......, Author பெயர்......... மற்றும் தேதியை தரவும்
03:18 general மற்றும் advanced என்ற இரு tabகள் உள்ளன
03:22 General Tab ல் கட்டமைப்பின் மேலேயும் கீழேயும் நீங்கள் சேர்க்க விரும்பும் உரையை உள்ளிடலாம்.
03:30 கட்டமைப்புக்கு மேலே தெரிய இந்த உரையை சேர்ப்போம்
03:37 விசைப்பலகையில் CTRL +X ஐ அழுத்தி இந்த தகவலை வெட்டுகிறேன்
03:43 பின் மீண்டும் விசைப்பலகையில் CTRL+V ஐ அழுத்தி ஒட்டுகிறேன்.
03:48 Move the vertices of the triangle and , Observe the values of the interior angles of the triangle
03:56 இப்போது இதை கட்டமைப்புக்கு கீழே சேர்க்கவும் Observe what happens when A, B and C are on a straight line by dragging the vertices.
04:08 இப்போது Advanced Tab
04:10 இங்கே GeoGebra பக்கத்தின் பகுதியாக GeoGebra ன் சிறப்பம்சங்கள் மற்றும் தேர்வுகளை சேர்க்க பல தேர்வு பெட்டிகள் உள்ளன.
04:18 வலைப்பக்கத்தில் right-click, வலது-சொடிக்கி சிறப்பம்சத்தை செயல்படுத்த இதை குறியிடவும்
04:23 labelகளை நகர்த்துதலை செயல்படுத்த, இதை குறியிடவும்
04:28 கட்டமைப்பை உண்மையான நிலைக்கு கொண்டுவரும் icon ஐ பெற, இதை குறியிடவும்
04:35 GeoGebra வலைப்பக்கத்தின் மீது இரட்டை சொடுக்கு சொடுக்கும் போது உங்கள் கணினியில் GeoGebra application window வேண்டும் எனில், இதை குறியிடவும்
04:45 Menu bar, Tool bar மற்றும் Input bar... அல்லது Save மற்றும் Print சிறப்பம்சங்கள் உங்கள் வலைப்பக்கத்தில் தோன்றவேண்டுமெனில், இங்கே அதற்கான பெட்டிகளில் குறியிடவும்
04:56 வலைப்பக்கத்தில் தோன்றும் GeoGebra window ன் அகலம் மற்றும் உயரத்தையும் நாம் இங்கே மாற்றலாம்,
05:03 Export ஐ தேர்ந்தெடுத்து.... browser ல் இதை பார்க்க ஒரு html file ஆக சேமிக்கவும்
05:11 Firefox web browser ஐ நான் பயன்படுத்துவதால், இதை export செய்தவுடன் உடனடியாக திறக்கிறது.
05:22 கட்டமைப்பின் மேலே உரையை நீங்கள் காணலாம்.... அதேபோல கட்டமைப்பின் கீழேயும்.
05:29 இது ஒரு dynamic வலைப்பக்கம் என்பதால் vertex களை நாம் நகர்த்தலாம். வடிவத்தின் மாற்றங்களை கவனிக்கவும்.
05:38 சுருங்க சொல்ல,
05:39 நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய ஒரு GeoGebra file ஐ திறக்கவும், அதற்கு செல்க File >Export > Dynamic Worksheet as webpage
05:50 தலைப்பு, உரை மற்றும் மேம்பட்ட சிறப்பம்சங்களை தேர்ந்தெடுத்து
GeoGebra file ஐ ஒரு வலைப்பக்கம்,  html file ஆக  Export செய்யவும்
06:01 ஒரு web browser ஐ பயன்படுத்தி அந்த html file ஐ பார்க்கவும்.
06:05 web browser ல் Geogebra ல் வேலை செய்ய Java ஐ நிறுவவேண்டியிருக்கலாம்
06:11 இப்போது பயிற்சி –
06:13 ஏதேனும் GeoGebra file ஐ திறந்து..... அதில் குறிப்பிட்ட objectகளையோ அல்லது முழு drawing pad ஐயோ தேர்ந்தெடுத்து அதை Static படமாகவும்
06:24 ஒரு Dynamic வலைப்பக்கமாகவும் export செய்க.
06:25 dynamic வலைப்பக்கத்தில் பின்வரும் சிறப்பம்சங்களை சேர்க்கவும்
06:29 Reset தேர்வு மற்றும் Tool Bar தேர்வு
06:33 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:36 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:40 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06.44 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06.49 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06.52 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06.58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:01 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:07 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கும்
07:12 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst