GChemPaint/C3/Analysis-of-compounds/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் சேர்மங்களின் பகுப்பாய்வு (Analysis of Compounds) குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, |
00:10 | மூலக்கூறின் சூழ்நிலைசார்ந்த menu |
00:12 | மூலக்கூறை .mol format ல் சேமித்தல் |
00:15 | வினையை சேர்த்தல் மற்றும் திருத்துதல் |
00:18 | வினை நிபந்தனைகள் மற்றும் வினைப்படுபொருள்களை வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல் |
00:22 | வினை மூலக்கூறுகளை 3D ஆக மாற்றுதல் |
00:26 | இங்கே நான் பயன்படுத்துவது |
00:28 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:32 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. |
00:37 | இணைய இணைப்பும் தேவை. |
00:41 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும் |
00:46 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:52 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துவைத்துள்ளேன். |
00:55 | Use or manage templates tool மீது க்ளிக் செய்க. |
00:59 | Templates tool property பக்கம் கீழே திறக்கிறது. |
01:02 | Templates கீழிறங்கு பட்டியலில் Amino Acids மீது க்ளிக் செய்க. |
01:07 | பட்டியலில் Alanine ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:11 | அலனைன் (Alanine) ன் அமைப்பு Templates property பக்கத்தில் ஏற்றப்படுகிறது. |
01:16 | அந்த அமைப்பை ஏற்ற அதன் மீது க்ளிக் செய்து பின் காட்சிப் பகுதியில் க்ளிக் செய்க. |
01:21 | அலனைன் (Alanine) மூலக்கூறின் சூழ்நிலை சார்ந்த menu பற்றி விளக்குகிறேன். |
01:26 | மூலக்கூறின் மீது ரைட் க்ளிக் செய்க. |
01:29 | ஒரு துணை-menu திறக்கிறது. |
01:31 | Molecule ஐ தேர்ந்தெடுக்கவும்; அருகே சூழ்நிலை சார்ந்த ஒரு menu திறக்கிறது. |
01:36 | சூழ்நிலை சார்ந்த menu பல்வேறு menu ஐடம்களை கொண்டுள்ளது, அதில் நாம் காணப்போவது- |
01:43 | NIST WebBook page for this molecule |
01:46 | PubChem page for this molecule |
01:48 | Open in Calculator |
01:51 | NIST Web page for this molecule மீது க்ளிக் செய்க |
01:55 | அலனைனின் NIST இணையப்பக்கம் திறக்கிறது. |
01:59 | அலனைன் பற்றிய அனைத்து தகவல்களையும் இணையப்பக்கம் காட்டுகிறது. |
02:03 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) திருத்திக்கு வருவோம். |
02:06 | PubChem page for this molecule ஐ திறக்க அலனைன் மீது ரைட் க்ளிக் செய்க. |
02:12 | இந்த இணையப்பக்கத்தில் அலனைன் அமைப்பு க்ளிக் செய்க. |
02:16 | 2D Structure மற்றும் 3D Conformer tabகளுடன் ஒரு புதியப்பக்கம் தெரிகிறது. |
02:22 | முப்பரிமாணத்தில் அலனைன் ஐ காண 3D Conformer tab மீது க்ளிக் செய்க. |
02:28 | காட்டப்படும் 3D அமைப்பின் மீது க்ளிக் செய்க. |
02:31 | இது ஒரு தனி விண்டோவில் மேலேயும் இடப்பக்கமும் சில கட்டுப்படுத்தும் கருவிகளுடன் அந்த அமைப்பை திறக்கிறது. |
02:37 | பல்வேறு திசைகளில் அமைப்பை சுழற்ற Rotation ஐகான் மீது க்ளிக் செய்க. |
02:43 | ஹைட்ரஜன்களை காட்ட அதே பக்கத்தில், H மீது க்ளிக் செய்க. |
02:48 | இவை ஹைட்ரஜன்கள். |
02:51 | மீண்டும் ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவுக்கு வருவோம். |
02:53 | அலனைன் மீது ரைட் க்ளிக் செய்து; Open in Calculator தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
03:00 | Chemical calculator விண்டோ திறக்கிறது. |
03:03 | இல்லையெனில் மேலோட்ட (Overview) டுடோரியலில் பார்த்தது போலசினாப்டிக் பேக்கேஜ் மேனேஜரை (Synaptic Package Manager), பயன்படுத்தி அதை நிறுவவும். |
03:10 | இந்த விண்டோவின் அடியில் இரு tabகள் உள்ளன - Composition மற்றும் Isotopic Pattern. |
03:16 | Composition tab பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது- |
03:19 | Formula |
03:21 | Raw formula |
03:23 | g.mol-1 ல் Molecular weight ( gram.mole-inverse) |
03:26 | சேர்மத்தின் தணிம நிறை சதவிகித(%) பகுப்பாய்வு. |
03:32 | Isotropic Pattern tab மீது க்ளிக் செய்க. |
03:35 | இது சேர்மத்தின் மூலக்கூறு எடையில் (Molecular weight) உச்சத்துடன் நிறை நிறமாலையின் (mass spectrum) வரைப்படத்தைக் காட்டுகிறது . |
03:43 | பயிற்சியாக 1. Templates பட்டியலில் இருந்து மற்ற Amino Acid களை தேர்ந்தெடுக்கவும். |
03:46 | 2. அவற்றின் Composition மற்றும் Isotropic pattern ஐ பெறவும். |
03:51 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துள்ளேன். |
03:54 | 1,3-ப்யூட்டடைன் (butadiene) அமைப்பை வரைவோம். |
03:58 | Add a chain tool மீது க்ளிக் செய்க. |
04:01 | 4 கார்பன்களுக்கும் அதை க்ளிக் செய்து இழுக்கவும். |
04:04 | Add a bond tool மீது க்ளிக் செய்து... இரட்டை பிணைப்புகளை உருவாக்க முதல் மற்றும் மூன்றாவது பிணைப்பு நிலைகளில் க்ளிக் செய்க. |
04:13 | அணுக்களைக் காட்ட ஒவ்வொரு நிலையிலும் ரைட் க்ளிக் செய்க. |
04:17 | Atom மீது க்ளிக் செய்து பின் Display symbol மீது க்ளிக் செய்க. |
04:22 | 1,3-ப்யூட்டடைன் (butadiene) 2D அமைப்பை 3D அமைப்பாக மாற்ற, tool bar ல் Save ஐகான் மீது க்ளிக் செய்க. |
04:30 | Save as dialog box திறக்கிறது. |
04:33 | File type புலத்தில் MDL Molfile Format ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:39 | file பெயரை 1,3-butadiene என டைப் செய்க. |
04:42 | Desktop ல் file ஐ சேமிக்க Desktop ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:47 | பின் Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
04:50 | மாறாக, .mol அல்லது .mdl நீட்சியுடன் நேரடியாக file ஐ சேமிக்கலாம். |
04:56 | உதாரணமாக, file பெயரை 1,3butadiene.mol அல்லது .mdl என டைப் செய்க |
05:06 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
05:09 | 3D ல் அமைப்பை காண, மூலக்கூறின் மீது ரைட் க்ளிக் செய்து. |
05:12 | Open With Molecules viewer தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
05:17 | இதுதான் 3D ல் 1,3 ப்யூட்டடைன் (butadiene). |
05:20 | அமைப்பில் நம்மால் மாற்றத்தை செய்ய முடியது என்பதை கவனிக்க. |
05:23 | அமைப்பை சுழற்ற, அமைப்பின் மீது கர்சரை வைத்து மவுஸை பிடித்து இழுக்கவும். |
05:31 | பயிற்சியாக, பென்சீன் (Benzene) அமைப்பை 2D ல் இருந்து 3D ஆக மாற்றவும். |
05:36 | இப்போது வேதி வினைகள் (chemical reactions) மற்றும் வினை நிபந்தனைகளை (reaction conditions) வரையக் கற்போம். |
05:41 | இது எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) உடன் ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (Alcoholic Potassium hydroxide) மற்றும் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (Aqueous Potassium hydroxide) உடன் வினைப்புரிந்து முறையே ஈத்தீன் (Ethene) மற்றும் எத்தனாலை (Ethanol) பெற வேதி வினை ஆகும். |
05:52 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துள்ளேன். |
05:55 | முதலில் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் அமைப்பை வரைவோம் |
05:59 | Add a chain tool மீது க்ளிக் செய்க. |
06:01 | காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
06:04 | முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் அணுக்களைக் காட்ட அந்த சங்கிலியின் மீது ரைட் க்ளிக் செய்க. |
06:10 | Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:13 | அட்டவணையில் Cl ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:16 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
06:20 | மூன்றாம் பிணைப்பு நிலையின் மீது க்ளிக் செய்க. |
06:23 | எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) அமைப்பு வரையப்பட்டது. |
06:26 | Add or modify a group of atoms tool மீது க்ளிக் செய்க. |
06:31 | காட்சி பகுதியில் க்ளிக் செய்க. டைப் செய்க Alc.KOH. |
06:37 | மீண்டும் க்ளிக் செய்து டைப் செய்க Aq.KOH |
06:42 | Add an arrow for an irreversible reaction tool மீது க்ளிக் செய்க. |
06:47 | இங்கே இந்த அம்புக்குறிகளை பயன்படுத்து Arrow length ஐ மாற்றலாம். |
06:51 | arrow length ஐ 280 ஆக அதிகரிக்கிறேன். |
06:54 | எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) க்கு அருகே காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
06:58 | எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) கீழே க்ளிக் செய்க. |
07:01 | அம்புக்குறியை கீழ்நோக்கியவாறு அமைக்க மவுஸை பிடித்து சுழற்றவும். |
07:05 | Selection tool மீது க்ளிக் செய்க. |
07:08 | ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium Hydroxide) (Alc.KOH) ஐ முதல் அம்புகுறியின் மீது வைக்கவும். |
07:13 | நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide) (Aq.KOH) ஐ இரண்டாம் அம்புக்குறியின் அருகில் வைக்கவும். |
07:18 | ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium hydroxide)(Alc.KOH) ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:23 | அம்புக்குறியின் மீது ரைட் க்ளிக் செய்க. ஒரு துணை-menu திறக்கிறது. |
07:25 | Arrow ஐ தேர்ந்தெடுத்து Attach selection to arrow மீது க்ளிக் செய்க. |
07:29 | Arrow associated என்ற தலைப்புடன் ஒரு dialog box திறக்கிறது. |
07:34 | Role கீழிறங்கு பட்டியலை க்ளிக் செய்க. |
07:37 | பட்டியலில் Catalyst தேர்ந்தெடுக்கவும். Close மீது க்ளிக் செய்க. |
07:42 | ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium Hydroxide) (Alc.KOH) , ஒரு வினையூக்கி (catalyst) ஆக அந்த அம்புக்குறியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என காண அதை இழுக்கவும். |
07:49 | நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide)(Aq.KOH) க்கும் அந்த செயல்முறையை செய்வோம். |
07:58 | வினையூக்கியாக (catalyst) உள்ளதா என காண அதை இழுக்கவும். |
08:02 | எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) அமைப்பை தேர்ந்தெடுக்க Selection tool மீது க்ளிக் செய்க. |
08:06 | பிரதி எடுக்க CTRL + C ஐ அழுத்து அமைப்புகளை ஒட்ட இருமுறை CTRL+V ஐ அழுத்துக. |
08:11 | அமைப்புகளை இழுத்து சரியான இடத்தில் வைக்கவும். |
08:15 | இந்த வினைகளில் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ஈத்தீனை (Ethene) ஐ கொடுக்க ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic potassium Hyroxide) உடன் வினைபுரிகிறது . |
08:21 | எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) எத்தனாலை (Ethanol) ஐ கொடுக்க நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide) உடன் வினைப்புரிகிறது. |
08:27 | ஈத்தீனை (Ethene) பெற, Eraser tool ஐ க்ளிக் செய்து எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் Cl பிணைப்பை நீக்குக. |
08:34 | ஈத்தேன் (Ethane) உருவாக்கப்பட்டது. |
08:37 | Tool box ல் Current element கார்பனா என உறுதிசெய்க. |
08:42 | பின் ஒரு இரட்டை பிணைப்பை பெற Add a bond tool மீது க்ளிக் செய்து அந்த பிணைப்பின் மீது க்ளிக் செய்க. |
08:48 | ஈத்தீன் (Ethene) உருவாக்கப்பட்டது. |
08:50 | எத்தனாலை (Ethanol) பெற, விசைப்பலகையில் O ஐ அழுத்துக. |
08:54 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க |
08:58 | பின் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் Cl மீது க்ளிக் செய்க. |
09:02 | வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளைப்பொருள்களை 2D ல் இருந்து 3D க்கு மாற்றலாம். |
09:07 | ஒரு புது file ஐ திறந்து, எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) ஐ பிரதி எடுத்து அதை புது file னுள் ஒட்டுக. |
09:15 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
09:17 | Save as dialog box திறக்கிறது. |
09:20 | file பெயரை Ethyl Chloride.mol என டைப் செய்க |
09:24 | Desktop ல் உங்கள் file ஐ சேமிக்க Desktop மீது க்ளிக் செய்க. |
09:28 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
09:31 | அதேபோல எத்தீனையும் (Ethene) புது file ல் பிரதி எடுக்கவும். |
09:34 | Ethene.mol என சேமிக்கவும். |
09:37 | எத்தனாலை (Ethanol) ஒரு புதிய file னுள் பிரதி எடுக்கவும். |
09:39 | Ethanol.mol என சேமிக்கவும் |
09:42 | அந்த fileகளை நான் ஏற்கனவே என் Desktop ல் சேமித்துள்ளேன். |
09:46 | நடப்பு விண்டோவை minimize செய்கிறேன். |
09:49 | என் file களை நான் சேமித்துள்ள Desktop folder க்கு செல்கிறேன். |
09:54 | 3D ல் சேர்மத்தைக் காண, அந்த file மீது ரைட்-க்ளிக் செய்து, Open with Molecules viewer தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
10:02 | அதேபோல, Molecules viewer உடன் அனைத்து fileகளையும் திறக்கிறேன் |
10:07 | 3D ல் சேர்மங்களை கவனிக்கவும். |
10:11 | நாம் கற்றதை சுருங்க காண்போம். |
10:14 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:16 | NIST WebBook page for this molecule. |
10:19 | Pub-Chem page for the molecule |
10:22 | Chemical calculator ஐ பயன்படுத்தி சேர்மத்தின் மூலக்கூறு எடையை கண்டறிதல். |
10:25 | ஒரு மூலக்கூறின் நிறை நிறமாலையின் (mass spectrum) வரைப்படத்தை பெறுதல் |
10:29 | .mol format ல் மூலக்கூறை சேமித்தல் |
10:32 | வினை நிபந்தனைகள் மற்றும் வினைப்படுபொருள்களை ( reagents) வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல் |
10:36 | வினையை செர்த்தல் மற்றும் திருத்துதல் |
10:39 | வினை மூலக்கூறுகளை 3D அமைப்புகளாக மாற்றுதல். |
10:42 | பயிற்சியாக |
10:44 | பின்வரும் வேதிவினைகளை வரைக:
1)ஒரு வினையூக்கியாக (catalyst) கார்பன் டெட்ரா க்ளோரைட் (Carbon tetra chloride)(CCl4) உடன் ப்ரோபேன் (Propene) (C3H6)(C3H6) மற்றும் ப்ரோமைன் (Bromine)(Br-Br) மூலக்கூறுகள். |
10:51 | ஒரு வினையூக்கியாக (catalyst) நீரற்ற அலுமினியம் க்ளோரைட் (Anhydrous Aluminum Chloride)(AlCl3) உடன் பென்சீன் (Benzene) மற்றும் க்ளோரின் (Chlorine)(Cl-Cl) மூலக்கூறுகள். |
10:57 | நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
11:01 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial |
11:05 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
11:08 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:17 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:20 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:31 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:36 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:41 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |