Firefox/C4/Extensions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:40, 11 July 2014 by Gaurav (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 Mozilla Firefox ல் Extensions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00:05 இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Extensions அல்லது Add-ons, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions
00:14 நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் Firefox 7.0
00:20 Firefox browser ஐ திறக்கலாம்
00:23 முன்னிருப்பாக yahoo home page திறக்கிறது
00:27 Extensions அல்லது Add-ons என்பன யாவை?
00:29 Extensions ,
00:31 * Firefox browser க்கு புதிய அம்சத்தைச் சேர்க்க
00:35 * இருக்கும் அம்சத்தை மேம்படுத்த
00:37 * Firefox browser ஐ உங்கள் preferenceகளுக்கு ஏற்றவாறு தனிபயனாக்க அனுமதிக்கிறது
00:42 * Extensions... Firefox browser ன் ஒரு பகுதி
00:45 * மேலும் browser ன் திறனை அதிகரிக்கிறது
00:48 உதாரணமாக பின்வரும் extension களை நிறுவ முடியும்
00:51 # விளம்பரங்கள் அல்லது popups ஐ தடுக்க
00:54 # பொருட்களின் விலையை ஒப்பிட
00:56 # மற்றும் வானிலை அறிக்கைகளைக் காட்ட
01:00 Grab and Drag extension ஐ நிறுவலாம்
01:03 Grab and Drag பல வழிகளில் இணைய பக்கங்களை scroll செய்ய உதவும்
01:07 இது grab and drag function ஐ Adobe Acrobatல் செய்வது போலவே
01:12 Menu bar ல் Tools பின் Add-ons ஐ சொடுக்கவும்
01:16 Add-ons Manager tab திறக்கிறது
01:20 மாற்றாக CTRL+Shift+A keyகளை ஒன்றாக அழுத்தி Add-ons Manager' ஐ திறக்கலாம்
01:28 Add-ons Manager ன் இடப்பக்க panel ல்... கிடைக்கும் optionகள் தெரிகின்றன
01:34 முன்னிருப்பாக Get Add-ons தேர்வாகியிருப்பதைக் கவனிக்கவும்
01:39 இடப்பக்க panel ல் தேர்வாகியுள்ள Option ன் தகவல்களை வலப்பக்க panel காட்டுகிறது
01:45 வலப்பக்க panel... Add-ons ஐ விவரித்து அதை எப்படி துவங்குவது என கூறுகிறது
01:51 நீங்கள் நிறுவ சில Add-ons ஐயும் காட்டுகிறது
01:55 இப்போது புது Add-on: Grab and Drag ஐ நிறுவலாம்
01:59 மேல் வலப்பக்க மூலையில் இருக்கும் Search bar ல் type செய்க Grab and Drag.

Enter செய்க

02:08 இடப்பக்க panel... நாம் தேடிய பெயரில் சரியாக பொருந்தும் add-ons list ஐ காட்டுகிறது
02:14 மேலும் title லில் drag என்ற சொல்லைக் கொண்டுள்ள எல்லா add-ons உம் காட்டப்படுவதைக் கவனிக்கவும்
02:20 list ல் முதல் பெயர் Grab and Drag மிகச்சரியாக பொருந்துவதைக் கவனிக்கவும்
02:26 Install ஐ சொடுக்கவும்
02:28 பல software போல, சில add-onகளும், end-user license agreements ஐ கொண்டிருக்கலாம்.
02:35 End-User License Agreement dialog box ல் Accept and Install ஐ சொடுக்கவும்
02:41 Add-on downloading progress bar தோன்றுகிறது
02:46 அடுத்து, நீங்கள் "Mozilla Firefox" ஐ மீள்துவக்கும் போது
02:50 add-on நிறுவப்படும் என ஒரு செய்தி தோன்றுகிறது
02:54 Restart Now ஐ சொடுக்கவும்
02:57 Firefox browser மூடி மீண்டும் திறக்கிறது
03:01 Add-ons Manager புது tab ல் திறக்கிறது
03:05 Extensions tab ன் வலப்பக்க panel ல் Grab and Drag extension தோன்றுவதைக் கவனிக்கவும்
03:11 தொடர்ந்து மற்றொரு extension Scrap Book ஐ நிறுவலாம்
03:18 Scrap Book ... Web page collections ஐ சேமிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது
03:24 * installation progress bar மற்றும் Firefox ஐ மூட மற்றும் மீள்துவக்க message... தனித்தனியாக காட்டப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும்
03:33 * Scrap Book bar ல் அவை காட்டப்படுகின்றன
03:36 Restart Now ஐ சொடுக்கவும்
03:40 Scrap Book Firefox ல் நிறுவப்படுகிறது
03:44 tutorial ஐ நிறுத்தி இந்த assignment ஐ செய்யவும்
03:48 * Firefox browser ல் Add-ons Manager ஐ திறக்கவும்
03:52 * Get Add-ons option ல் Featured 'Add-ons' list ல் இருந்து ஒரு புது add-on ஐ நிறுவுக
03:59 * Add-ons Manager ல் Extensions option ஐ பயன்படுத்தி extension களை மேலாளலாம். சேர்த்தல் நீக்குதல் அல்லது update செய்தல்
04:08 Firefox browser ல் Add-ons Manager tab ல் சொடுக்கவும்
04:13 இடப்பக்க panel ல் Extensions ஐ சொடுக்கவும்
04:16 கணினியில் நிறுவப்பட்டுள்ள Extension களை வலப்பக்க panel காட்டுகிறது
04:22 ScrapBook பற்றி மேலும் கற்க அதை தேர்ந்து More ஐ சொடுக்கவும்
04:27 * Scrap Book ன் தகவல்கள் தோன்றுகின்றன
04:31 * extension பற்றி மேலும் கற்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்
04:35 இப்போது இடப்பக்க panel ல் Extension option ஐ சொடுக்கவும்
04:40 ஒவ்வொரு Extension க்கும் preferences ஐ அமைக்க செயல்நீக்க அல்லது நீக்க முடியும் என்பதை கவனிக்கவும்
04:46 Grab and Drag தேர்ந்து Preferences ஐ சொடுக்கவும்
04:49 இந்த dialog box மூலம் உங்கள் preferences ஐ அமைக்க முடியும்
04:53 dialog box ஐ மூட cancel ஐ சொடுக்கவும்
04:57 Scrap Book ஐ தேர்ந்து Preferences ஐ சொடுக்கவும்
05:01 Grab and Drag Preferences dialog box லிருந்து Scrap Book Options dialog box வேறுபட்டிருப்பதைக் கவனிக்கவும்
05:09 * அதாவது ஒவ்வொரு Extension னும் மாற்றப்படக்கூடிய வெவ்வேறு settings உடன் உள்ளது
05:13 * ஓர் Extension க்கு Preferences button தெரியவில்லையெனில்
05:17 * அதற்கு preferences இல்லை என அது குறிக்கிறது
05:21 Scrap Book Options dialog box ஐ மூட Close ஐ சொடுக்கவும்
05:26 பல software போல add-ons உம் வழக்கமான அடிப்படையில் update செய்யப்படுகிறது
05:31 Scrap Book ஐ update செய்ய அதை தேர்ந்து right-click செய்து Find Updates ல் சொடுக்கவும்
05:37 Updates இருந்தால் Update button காட்டப்படும்
05:42 add-on ஐ update செய்ய அதை சொடுக்கவும்
05:47 Scrap Book க்கு எந்த updates உம் இல்லையெனில் Update button இருக்காது
05:51 கடைசியாக extension ஐ பயன்படுத்த விரும்பவில்லையெனில் Disable button ஐ சொடுக்கவும்
05:58 கணினியில் இருந்து extension ஐ நீக்க Remove ஐ சொடுக்கவும்
06:03 Extensions பற்றி அனைத்தையும் அறிந்தோம்!
06:06 Firefox க்கு மேலும் fuctionality களை சேர்த்து stream line task களுக்கு Extension களைப் பயன்படுத்தலாம்
06:13 * பல Add-ons பற்றி அறிய Get Add-ons option ஐப் பயன்படுத்தலாம்
06:18 * பிறகு உங்களுக்கு பொருத்தமான அல்லது பயனுள்ள Add-ons ஐ தேர்ந்து நிறுவ முடியும்
06:24 Firefox Extensions பற்றி மேலும் கற்க Firefox website க்குச் செல்லவும்
06:31 இத்துடன் இந்த tutorial முடிகிறது
06:34 இந்த tutorial ல் நாம் கற்றது Extensions, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions
06:42 இப்போது assignment
06:45 * WebMail Notifier என்ற extension ஐ தேடவும்
06:49 * அதை உங்கள் கணினியில் நிறுவுக
06:52 * அந்த extension னின் சிறப்பம்சங்களையும் உங்கள் mail account களில் இருந்து unread mail களை பார்க்க அதை பயன்படுத்துவதையும் அறிக
07:01 * அந்த extension ஐ Disable செய்க
07:03 பின் Firefox லிருந்து அதை நீக்குக
07:07 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
07:13 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07:18 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07:27 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
07:33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

07:45 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:56 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst