Git/C3/Hosting-Git-Repositories/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Git Repositoryகளை host செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Git repositoryஐ host செய்யும் சேவைகள். |
00:11 | GitHub accountஐ உருவாக்குவது |
00:14 | GitHubல் ஒரு repositoryஐ உருவாக்குவது, மற்றும், repositoryயில் ஒரு tagஐ உருவாக்குவது. |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04, மற்றும், Firefox web browser. |
00:29 | உங்களுக்கு விருப்பமான browserரை பயன்படுத்தலாம். |
00:32 | இந்த டுடோரியலுக்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும். |
00:37 | மேலும், Git commandகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:42 | இல்லையெனில், அதற்கான Git டுடோரியல்களுக்கு எங்கள் வலைதளத்தை பார்க்கவும். |
00:47 | முதலில், Git repositoryஐ host செய்யும் சேவைகள் பற்றிக் கற்போம். |
00:52 | Bitbucket, CloudForge மற்றும், GitHub போன்ற பல இணையதள hosting சேவைகள் இருக்கின்றன. |
01:00 | இங்கு, செலவில்லாமல், Git repository களை import செய்யலாம். |
01:05 | ஒரு projectல் பலர் கூட்டாக பணி புரிய, மற்றும், உங்கள் repositoryஐ பகிர்ந்து கொள்ள ஏதுவாக, அவை ஒரு மையப் பகுதியை தருகின்றன. |
01:14 | செலவில்லாமல் மற்ற projectகளை கற்க, மற்றும், தரவிறக்க அவை இடமளிக்கின்றன. |
01:19 | அடுத்து, GitHubஐ எதற்கு பயன்படுத்த வேண்டும் என பார்ப்போம். |
01:23 | Open Source Softwareஐ house செய்ய, GitHub மிகப் பிரபலமான வலைத்தளம் ஆகிவிட்டது. |
01:28 | GitHubல் மாற்றங்களை, உங்கள் குழுவுடன் திறம்பட, பார்த்து, கலந்தாலோசித்து, மறு ஆய்வு செய்ய முடியும். |
01:35 | GitHubல் பயன்படுத்தப்படும் செயல்முறையும், மற்ற இலவச Git hosting வலைத்தளங்களில பயன்படுத்தப்படும் செயல்முறையும் ஒன்றே. |
01:42 | நீங்களே, பின்னர், அவற்றை, ஆய்ந்தறியலாம். |
01:45 | அடுத்து, GitHubல் ஒரு accountஐ உருவாக்கக் கற்போம். |
01:49 | உங்கள் web browserஐ திறந்து, www.github.comக்கு செல்லவும். |
01:56 | இங்கு, homepageல், பதிவு செய்ய, உங்கள் விவரங்களை கொடுக்கவும். |
02:01 | User nameஆக, "priya-spoken" என கொடுக்கிறேன் |
02:07 | email-idஆக, "priyaspoken@gmail.com" |
02:11 | உங்களுக்கு விருப்பமான username ஐயும் சரியான email idஐயும் கொடுக்கவும் |
02:16 | பிறகு, என் passwordஐ டைப் செய்கிறேன். |
02:19 | உங்களுக்கு விருப்பமான எந்த passwordஐயும் கொடுக்கலாம். |
02:23 | இப்போது, கீழ், வலது பக்கத்தில் இருக்கும் Sign up for GitHub பட்டனை க்ளிக் செய்யவும். |
02:28 | அடுத்து,Step 2வில், நம் planஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
02:32 | இலவச சேவைக்காக, நான் Free planஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:37 | இப்போது, Finish sign upஐ க்ளிக் செய்யவும். |
02:40 | அடுத்து, GitHubல் ஒரு repositoryஐ உருவாக்குவோம். |
02:44 | வலது பக்க பெட்டியில் தெரியும், New repository பட்டனை க்ளிக் செய்யவும். |
02:51 | “Please verify your email address” என்ற தகவலைக் காட்டும். |
02:55 | பதிவு செய்யப்பட்ட email idக்கு, GitHub, ஒரு verification mail அனுப்பும். |
02:59 | அதனால், நமது email accountஐ திறந்து, GitHub அனுப்பிய emailஐ க்ளிக் செய்யவும். |
03:06 | GitHubஉடன் பதிவு செய்யப்பட்ட email-idன் உள் நான் முன்பே சென்றுவிட்டேன். |
03:11 | அதை திறக்கிறேன். |
03:13 | GitHubல் இருந்து எனக்கு email வந்துள்ளது. |
03:16 | அதை க்ளிக் செய்கிறேன். |
03:18 | subjectல், “Please verify your email address” என இருக்கும். |
03:23 | Inboxல், mail இல்லையெனில், Spam அல்லது Junk folderகளை சரி பார்க்கவும். |
03:29 | இப்போது, Verify email addressஐ க்ளிக் செய்யவும். |
03:32 | GitHub Homepageக்கு திரும்பி அனுப்பப்படுவோம். |
03:36 | GitHubல் வெற்றிகரமாக நம் accountஐ உருவாக்கிவிட்டோம் என்பதை இது காட்டும். |
03:42 | GitHubல் ஒரு repositoryஐ உருவாக்க முயலுவோம். |
03:45 | இப்போது, வலது பக்க பெட்டியில் தெரியும், New repository பட்டனை க்ளிக் செய்யவும். |
03:50 | இப்போது, repositoryஐ உருவாக்க முடிகிறது. |
03:54 | Repository Nameஐ, “stories” என டைப் செய்க. |
03:58 | repository பற்றி ஏதாவது விளக்கம் தர வேண்டுமெனில், இங்கு கொடுக்கலாம். |
04:04 | அடுத்து, இலவசமான, Public optionஐ தேர்வு செய்கிறேன். |
04:09 | Private optionஐ தேர்ந்தெடுத்தால், repositoryஐ சொந்தமாக்க, கட்டணம் செலுத்த வேண்டும். |
04:16 | அப்படி செய்தால், நம் repositoryஐ மற்ற userகள் கண்டுபிடிக்கவோ அல்லது தரவிறக்கவோ முடியாது. |
04:21 | மீண்டும், Publicஐ க்ளிக் செய்கிறேன். |
04:24 | Initialize this repository with a README, checkboxஐ க்ளிக் செய்யவும். |
04:28 | இது ஒரு, readme fileஐ உருவாக்கும். |
04:31 | இந்த fileலில், நிறுவுவதற்கான வழிமுறைகள் அல்லது codeஐ பயன்படுத்துவது பற்றிய தகவலை எழுதலாம். |
04:37 | உடன் பணி புரிவோர்க்கு, இது பயன்படும். |
04:42 | ஆனால், ஏற்கனவே உள்ள repositoryஐ import செய்வதானால், இந்த பெட்டியில் குறியிடக்கூடாது. |
04:48 | இப்போது, Create repository பட்டனை க்ளிக் செய்யவும். |
04:52 | User nameஉடன், repositoryன் பெயரும் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். |
04:58 | Repository உருவானதும், கீழ், இடது பக்கத்தில், readme fileலின் labelஐ காணலாம். |
05:05 | பிறகு, இந்த fileலில், சில தகவல்களை எழுதலாம். |
05:09 | முன்னிருப்பாக, ஒரு commit அதாவது, Initial commit, ஒரு branch, அதாவது, master branch மற்றும், ஒரு contributorஐ காணலாம். |
05:18 | ஒவ்வொரு இணைப்பையும் க்ளிக் செய்து, உங்கள் வசதிக்கு ஏற்ப அதை ஆய்வு செய்யலாம். |
05:23 | இப்போது, இந்த repositoryயில் வேலை செய்யலாம். |
05:27 | முதலில், நம் repositoryக்கு ஒரு fileஐ சேர்ப்போம். |
05:31 | நடு panelலில் இருக்கும் New file பட்டனை க்ளிக் செய்யவும். |
05:34 | fileஐ உருவாக்க, ஒரு புது form திறக்கும். |
05:38 | இங்கு, "kids-story.html"ஐ file பெயராக தருகிறேன். |
05:44 | முன்னர் சேமித்து வைத்திருந்த, writer documentலிருந்து, சில codeகளை, copy மற்றும் paste செய்கிறேன். |
05:51 | அதே போல் உங்கள் fileலில் சில தகவல்களை சேர்க்கலாம். |
05:55 | இப்போது, இந்த புது fileஐ, commit செய்வோம். |
05:58 | commit message கொடுப்பதற்கு கீழே வரவும். |
06:01 | இங்கு, commit message fieldல், "Create kids-story.html" என்ற முன்னிருப்பான messageஐ காணலாம். |
06:09 | நீங்கள் ஒரு புது messageஐ டைப் செய்யலாம், அல்லது, முன்னிருப்பான messageஐ வைத்துக் கொள்ளலாம். |
06:13 | நான் முன்னிருப்பான messageஐ வைத்துக் கொள்கிறேன். |
06:16 | இங்கு, அடுத்த fieldல், commitன் விரிவான விளக்கத்தையும் நீங்கள் கொடுக்கலாம். |
06:22 | அதனால், இங்கு, "Added first file of the repository", என டைப் செய்கிறேன். |
06:27 | முன்னிருப்பாக, master branchக்கு, commit செய்வோம். |
06:31 | இப்போது, Commit new file பட்டனை க்ளிக் செய்யவும். |
06:34 | நமது புது file, kids-story.html, repositoryக்கு சேர்க்கப்பட்டுவிட்டது. |
06:39 | இப்போது, commit number, இரண்டாக மாறியிருப்பதை கவனிக்கவும். |
06:43 | அதை க்ளிக் செய்யவும். |
06:45 | இங்கு, commit messageக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகளை காண முடியும். |
06:49 | அதை க்ளிக் செய்யவும். |
06:51 | அது, commitன் விளக்கவுரையை காட்டும். |
06:54 | commitல் என்ன செய்தோம் என்பதை அறிய, அந்த குறிப்பிட்ட commit messageஐ க்ளிக் செய்யவும். |
07:00 | இப்போது, commitன் விவரங்களைக் காணலாம். |
07:03 | commit listக்கு திரும்பிச் செல்வோம். |
07:06 | இதற்கு, browserன், மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும், இடது arrow பட்டனை க்ளிக் செய்யவும். |
07:11 | வலது பக்கத்தில், commitன், hash valueஐ காணலாம். |
07:15 | மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும் Code tabஐ க்ளிக் செய்து, repositoryக்கு திரும்பவும். |
07:21 | அடுத்து, GitHubல் ஒரு புது branchஐ உருவாக்க கற்போம். |
07:26 | இடது பக்கத்தில், Branch என்று label செய்யப்பட்டிருக்கும் drop-down listஐ பார்க்கலாம். |
07:31 | புது branchஐ உருவாக்க, அதை க்ளிக் செய்யவும். |
07:34 | ஒரு pop-up window திறக்கும். |
07:38 | அந்த pop-up windowவில், Find or create a branch fieldஐ காண முடியும். |
07:43 | புது branch பெயரை, "new-chapter" என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
07:49 | new-chapter branch உருவாக்கப்பட்டிருப்பதையும், அதுவே தற்போதைய branchஆக இருப்பதையும் காணலாம். |
07:55 | அடுத்து, branchக்கான செயல்முறையை மேலும் நன்றாக புரிந்து கொள்ள, new-chapter branchல், ஒரு, commitஐ செய்வோம். |
08:02 | செயல் விளக்க நோக்கத்திற்கு, kids-story.html fileலில் சில மாற்றங்களை செய்வோம். |
08:09 | Repositoryயில், kids-story.html fileஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும். |
08:14 | editor panelன் மேல் வலது பக்க ஓரத்தில், ஒரு edit iconஐ காணலாம். |
08:19 | இந்த fileஐ edit செய்ய, அதை க்ளிக் செய்யவும். |
08:22 | எனது writer documentலிருந்து copy செய்த, சில வரிகளை, இங்கு சேர்க்கிறேன். |
08:27 | நீங்களும் இவ்வாறே செய்யலாம். |
08:30 | இப்போது, இந்த மாற்றத்தை commit செய்வோம். |
08:33 | முன்னிருப்பு commit messageஐ அப்படியே வைத்துக் கொள்கிறேன். |
08:37 | இங்கு, commit செய்யப்பட்ட இடத்தில், branch பெயரை, "new-chapter" என காணலாம். |
08:43 | commit' செய்ய, Commit changes பட்டனை க்ளிக் செய்யவும். |
08:46 | Repositoryக்கு திரும்பிச் செல்ல, Code tabஐ க்ளிக் செய்யவும். |
08:50 | அடுத்து, new-chapter மற்றும், master branchகளின், commitகளை சரி பார்க்கலாம். |
08:56 | commits இணைப்பை க்ளிக் செய்யவும். |
08:59 | இங்கு, Branch drop downல் இருந்து, நாம் பார்க்க வேண்டிய branch பெயரை தேர்வு செய்யலாம். |
09:04 | பட்டியலில், master branch ஐ தேர்வு செய்கிறேன். |
09:08 | அதன் பிறகு, master branchன், commitகள் பட்டியலிடப்படும். |
09:13 | new-chapter branchன், commitகளை காண, Branch drop downல், new-chapterஐ தேர்வு செய்வோம். |
09:19 | இப்போது, new-chapter branchன், commitகளை காணலாம். |
09:24 | Repositoryக்கு திரும்பிச் செல்ல, Code tabஐ க்ளிக் செய்யவும். |
09:28 | அடுத்து, GitHubல் ஒரு tagஐ உருவாக்க கற்போம். |
09:32 | ஒரு commit stageஐ முக்கியம் என குறியிட, tagging பயன்படுத்தப்படுகிறது என நாம் அறிவோம். |
09:38 | kids-story.html fileஐ சேர்த்த பிறகு, master branchல் ஒரு tagஐ உருவாக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
09:46 | ஒரு tagஐ உருவாக்க , முதலில், releases இணைப்பை க்ளிக் செய்யவும். |
09:50 | Create a new release பட்டனை க்ளிக் செய்யவும். |
09:54 | ஒரு புது form திறக்கும். |
09:56 | Tag Version பெட்டியில், டைப் செய்க: "V1.0". |
10:01 | Release title பெட்டியில், டைப் செய்க: "Version one". |
10:05 | Write' பெட்டியில், நம் tagன் விளக்கத்தைக் கொடுக்கலாம். |
10:10 | நான், “This is the version one” என டைப் செய்கிறேன். |
10:13 | இப்போது, Publish release பட்டனை க்ளிக் செய்யவும். |
10:18 | இங்கு, இடது பக்கத்தில், சமீபத்திய commitன், hash valueஐ காணலாம். |
10:24 | முன்னிருப்பாக, சமீபத்திய commitல், tag உருவாக்கப்படும் என்பதை நாம் அறிவோம். |
10:30 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். |
10:33 | சுருங்கசொல்ல, |
10:35 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
10:38 | *ஆன்லைனில், Gitன் hosting சேவைகளின் முக்கியத்துவம். |
10:42 | *GitHub accountஐ உருவாக்குவது |
10:44 | *GitHubல் ஒரு repositoryஐ உருவாக்குவது, மற்றும், repositoryயில் ஒரு tagஐ உருவாக்குவது. |
10:50 | பயிற்சியாக, |
10:52 | GitHubல் ஒரு repositoryஐ உருவாக்கவும். |
10:54 | repositoryக்கு சில fileகளை சேர்க்கவும். |
10:57 | fileகளை edit செய்து, சில commitகளை செய்து, மேலும், repositoryயில் சில branchகளையும், tagகளையும், உருவாக்க முயலவும். |
11:05 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
11:10 | அதை தரவிறக்கி காணவும். |
11:12 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
11:20 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:23 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது. |
11:29 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |