KTurtle/C3/Question-Glues/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:15, 3 August 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00.01 வணக்கம். KTurtle ல் Question Glues குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00.08 இந்த டுடோரியலில் question glueகளான and, not பற்றி கற்போம்
00.16 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் OS பதிப்பு 12.04. KTurtle பதிப்பு 0.8.1 beta.
00.29 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு உள்ளது எனவும் “if-else” statement பற்றி தெரியும் எனவும் கொள்கிறோம்
00.39 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00.46 டுடோரியலை ஆரம்பிக்கும் முன் question glue வார்த்தைகள் பற்றி விளக்குகிறேன்
00.51 சிறி கேள்விகளை பெரிய கேள்விகளாக மாற்ற Question glue வார்த்தைகள் உதவுகின்றன.
01.00 “and”, “or” மற்றும் “not” ஆகியன சில glue-வார்த்தைகள். Glue-வார்த்தைகள் if-else conditionகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றன.
01.11 ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம்.
01.15 Dash home ல் சொடுக்குக.
01.18 Search bar ல் டைப் செய்க KTurtle.
01.22 Kturtle தேர்வில் சொடுக்குக.
01.24 glue வார்த்தை and உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம்.
01.28 text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன்.
01.33 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
01.40 டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க.
01.46 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
01.50 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே ப்ரோகிராம் text ஐ பெரிதாக்குகிறேன்
01.56 code ஐ பார்க்கலாம்.
01.59 reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
02.04 ஒரு ப்ரோகிராமில் செய்தி message " " என்ற keyword க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது
02.10 “message” command... “string” ஐ உள்ளீடாக ஏற்கிறது.
02.14 இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு pop-up dialog box ஐ காட்டுகிறது. null strings அல்லாதவற்றுக்கு ஒரு beep சத்தத்தையும் உருவாக்குகிறது.
02.24 $a, $b மற்றும் $c ஆகியன பயனர் உள்ளீட்டை சேமிக்கும் variableகள்.
02.30 “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது.
02.36 if(($a+$b>$c) and ($b+$c>$a) and ($c+$a>$b), “if” condition ஐ சோதிக்கிறது.
02.49 “and” உடன் இணைக்கப்பட்ட இரு questionகளும் உண்மையாக இருக்கும் போது, முடிவு உண்மை ஆகும்.
02.55 'if(($a !=$b) and ($b != $c) and ($c != $a)).... if condition ஐ சோதிக்கிறது.
03.05 'if' condition... உண்மையாக இருக்கும்போது, கட்டுபாடு... nested if தொகுதியினுள் செல்கிறது.
03.12 இது முக்கோணத்தின் பக்கங்கள் சமமற்றவையாக இருக்கின்றனவா என சோதிக்கிறது.
03.17 fontsize 18.... print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
03.22 go 10,100... canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும் canvas ன் மேலிருந்து 100 pixel களும் நகரும் படி Turtle க்கு கட்டளையிடுகிறது.
03.35 print command... if condition ஐ சோதித்த பின் string ஐ காட்டுகிறது.
03.41 அந்த தொகுதியில் உள்ள if condition.... பொய்யாக இருக்கும் போது else command.... else condition ஐ சோதிக்கிறது
03.48 print command... else condition ஐ சோதித்த பின் string ஐ காட்டுகிறது.
03.54 else command கடைசி condition ஐ சோதிக்கிறது.
03.57 இங்கே மேலுள்ள conditionகள் பொய்யாகும் போது மட்டுமே else சோதிக்கப்படுகிறது.
04.03 print command... else condition ஐ சோதித்த பின் string ஐ காட்டுகிறது. அனைத்து conditionகளையும் சோதிக்க code ஐ இயக்குகிறேன்.
04.12 ப்ரோகிராமை இயக்க Run பட்டனை சொடுக்கவும்.
04.15 ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குகிறேன்.
04.20 'AB' ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்
04.25 'BC' ன் நீளத்திற்கு 8 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்
04.29 'AC' ன் நீளத்திற்கு 9 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்
04.33 “A scalene triangle” என canvas ல் காட்டப்படுகிறது.
04.37 மீண்டும் இயக்கலாம்.
04.40 ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்கிறேன்.
04.44 'AB' ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்,

'BC' ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன் 'AC' ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்

04.58 “ Not a scalene triangle” என canvas ல் காட்டப்படுகிறது.
05.02 முன்னிருப்பு condition ஐ சோதிக்க மீண்டும் இயக்குவோம்.
05.06 ஒரு message dialog box தோன்றுகிறது. ok ல் சொடுக்குகிறேன்.
05.11 'AB' ன் நீளத்திற்கு 1 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்.
05.16 'BC' ன் நீளத்திற்கு 1 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்
05.20 'AC' ன் நீளத்திற்கு 2 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்
05.24 " Does not satisfy triangle's inequality " என canvas ல் காட்டப்படுகிறது.
05.30 இப்போது இந்த ப்ரோகிராமைத் துடைப்போம். clear command ஐ டைப் செய்க. canvas ஐ துடைக்க clear command ஐ இயக்குக.
05.40 அடுத்து 'not condition ல் வேலை செய்யலாம்.
05.43 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து... KTurtle editor னுள் ஒட்டுகிறேன்.
05.51 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் ப்ரோகிராமை பிரதி எடுக்கவும்.
05.56 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும்.
06.01 ப்ரோகிராம் text ஐ பெரிதாக்கி ப்ரோகிராமை விளக்குகிறேன்.
06.05 reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
06.09 $a, $b மற்றும் $c ஆகியன பயனர் உள்ளீட்டை சேமிக்கும் variableகள்.
06.15 if not (($a==$b) and ($b==$c) and ($c==$a))... if not condition ஐ சோதிக்கிறது.
06.27 not என்பது ஒரு சிறப்பு question glue-வார்த்தை. அது அதன் operand ன் logical நிலையை தலைகீழாக்குகிறது.
06.36 உ.தா. கொடுக்கப்பட்ட condition.... உண்மை எனில், not அதை பொய்யாக்குகிறது.
06.42 condition.... பொய்யாக இருக்கும்போது வெளியீடு உண்மையாக இருக்கும்.
06.48 if not condition ஐ சோதித்த பின் print command.... string ஐ காட்டுகிறது.
06.55 if condition... பொய்யாகும் போதுelse command இயக்கப்படுகிறது.
07.01 else condition ஐ சோதித்த பின் print command.... string ஐ காட்டுகிறது.
07.07 go 100,100... canvas ன் இடப்பக்கத்திலிருந்து 100 pixelகளும் canvas ன் மேலிருந்து 100 pixel களும் நகரும் படி Turtle க்கு கட்டளையிடுகிறது
07.20 repeat 3{turnright 120 forward 100} .... canvas ல் சமபக்க முக்கோணத்தை வரைய Turtle க்கு கட்டளையிடுகிறது
07.32 அனைத்து conditionகளையும் சோதிக்க ப்ரோகிராமை இயக்குகிறேன்.
07.36 code ஐ இயக்க F5 விசையை அழுத்துக
07.40 AB ன் நீளத்திற்கு 6 என கொடுத்து OK ஐ சொடுக்குக
07.45 BC ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ஐ சொடுக்குக
07.48 AC ன் நீளத்திற்கு 7 என கொடுத்து OK ஐ சொடுக்குக
07.54 “Triangle is not equilateral” என canvas ல் காட்டப்படுகிறது.
07.58 மீண்டும் இயக்கலாம். AB ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக
08.05 BC ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக
08.09 AC ன் நீளத்திற்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக
08.13 “Triangle is equilateral” என canvas ல் காட்டப்படுகிறது. canvas ல் சமபக்க முக்கோணம் வரையப்படுகிறது.
08.21 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08.25 சுருங்க சொல்ல
08.28 இந்த டுடோரியலில் நாம் கற்றது, question glueகளான and not
08.35 பயிற்சியாக,
08.40 question glue “or” ஐ பயன்படுத்தி செங்கோண முக்கோணத்திற்கான கோண கோட்பாட்டை தீர்மானிக்க ஒரு ப்ரோகிராம் எழுதுக
08.48 if or condition ன் அமைப்பு:
08.51 if....... அடைப்புகளில் condition..... or..... அடைப்புகளில் condition....... or....... அடைப்புகளில் condition.
08.59 curly bracketகளினுள் ஏதேனும் செய்.
09.02 else curly bracketகளினுள் ஏதேனும் செய்.
09.06 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
09.10 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09.13 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09.18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
09.20 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09.23 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09.27 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09.34 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09.38 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09.44 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
09.49 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst