KTouch/S1/Getting-Started-with-Ktouch/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:41, 24 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 Introduction to KTouch Spoken Tutorial க்கு நலவரவு!
00:04 இந்த tutorial லில் கற்கப்போவது Ktouch மற்றும் KTouch இடைமுகம்
00:10 ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்...
00:11 பிழையில்லாமல், வேகமாக, செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம்
00:18 மேலும் கற்பது:
00:20 கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்வது
00:24 Ktouch என்பதென்ன?
00:27 KTouch தட்டச்சு ஆசான். அது ஊடாடும் விசைப்பலகையால் type செய்வதை கற்பிக்கிறது
00:33 typing கற்பதை உங்களுக்கு தோதான வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்..
00:36 typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம்.
00:43 KTouch பாடங்கள் அல்லது sample கள், வெவ்வேறு கடின மட்டங்களில் பழக கிடைக்கின்றன.
00:50 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1
00:59 KTouch ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம்.
01:03 Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க.
01:11 Ktouch ஐ திறக்கலாம்.
01:13 Dash Home அதாவது கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை சொடுக்கவும்
01:21 Search box தோன்றுகிறது.
01:24 இதில் type செய்க: KTouch.
01:28 Search box இன் கீழ் KTouch icon தோன்றுகிறது .அதன் மீது சொடுக்கவும்.
01:34 KTouch window தோன்றுகிறது.
01:36 மாற்றாக KTouch ஐ Terminal இலிருந்து துவக்கலாம்.
01:41 Terminal ஐ திறக்க CTRL, ALT மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தவும்.
01:47 Ktouch ஐ திறக்க, Terminal லில் command type செய்க: ktouch ... பின் Enter செய்க
01:55 KTouch இடைமுகத்தை அறிமுகம் செய்து கோள்வோம்.
01:59 Main menu வில் உள்ளவை File, Training, Settings, மற்றும் Help menus.
02:06 typing பழக புதிய அமர்வை துவக்க சொடுக்குக: Start New Session
02:11 typing ஐ இடை நிறுத்த Pause Session ஐ சொடுக்கவும்
02:14 உங்கள் முன்னேற்றத்தை அறிய Lecture Statistics மீது சொடுக்கவும்
02:19 மட்டம் என்பது எவ்வளவு விசைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்த சிக்கல் மட்டத்தை குறிக்கிறது.
02:27 Speed என்பது ஒரு நிமிடத்தில் எத்தனை characters type செய்ய முடியும் என குறிக்கிறது.
02:32 Correctness indicator எத்தனை சத விகிதம் சரியாக டைப் செய்கிறோம் என காட்டுகிறது.
02:39 New Characters in This level எனும் field இந்த மட்டத்தில் எத்தனை புதிய character களை நீங்கள் பழக வேண்டுமென்பதை காட்டுகிறது
02:47 Teacher’s Line காட்டுவது நீங்கள் டைப் செய்ய வேண்டிய characters
02:51 Student’s Line காட்டுவது நீங்கள் விசைப்பலகையால் type செய்த characters
02:58 விசைப்பலகை மையத்தில் தெரிகிறது
03:02 விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை
03:09 type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும்.
03:13 விசைப்பலகையின் இரண்டாம் வரி காட்டுவது அகர முதலான சில எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Tab விசை .
03:20 விசைப்பலகையின் மூன்றாம் வரி காட்டுவது alphabets,colon, semicolon, மற்றும் Caps lock விசைகள்.
03:28 டைப் செய்கையில் அடுத்த வரிக்கு போக Enter விசை அழுத்தவும்
03:33 capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும்
03:37 விசைப்பலகையின் நான்காம் வரி காட்டுவது alphabets, special characters, மற்றும் shift விசைகள்.
03:45 எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும்
03:52 ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும் .
03:59 உதாரணமாக, 1 எண்ணுடைய விசை மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது. அதை டைப் செய்ய Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும்
04:11 விசைப்பலகையின் ஐந்தாம் வரி காட்டுவது Ctrl, Alt, மற்றும் Function விசைகள், space bar உம் உள்ளது.
04:20 KTouch , laptop , மற்றும் desktop விசைப்பலகைகள் இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம்.
04:29 KTouch விசைப்பலகை மற்றும் desktops விசைப்பலகை மற்றும் laptop ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன.
04:36 இப்போது விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம்.
04:41 இந்த slide ஐ பாருங்கள்.
04:42 அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது.
04:46 இடமிருந்து வலம் விரல்களின் பெயர் :

சுண்டுவிரல்,

04:51 மோதிர விரல்,

நடுவிரல்,

04:54 சுட்டு விரல் மற்றும்

கட்டை விரல்

04:59 விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும்.
05:03 சுண்டுவிரல் இருக்க வேண்டியது alphabet ‘A’ மீது.
05:07 மோதிர விரல் இருக்க வேண்டியது alphabet ‘S’ மீது
05:10 நடுவிரல் alphabet ‘D’,
05:13 சுட்டு விரல் alphabet ‘F’.
05:17 விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது கையை வைக்கவும்.
05:20 சுண்டுவிரல் colon/semi-colon விசையில் இருக்கட்டும்.
05:25 மோதிர விரல் alphabet ‘L’. மீது
05:28 நடுவிரல் alphabet ‘K’. மீது
05:30 சுட்டு விரல் alphabet ‘J’. மீது
05:34 வலது கட்டை விரலால் space bar ஐ அழுத்தவும்.
05:37 Ktouch ஐ முதல் முறை திறக்கும்போது Teacher’s Line .. default text ஐ காட்டுகிறது.
05:44 இந்த உரையில் எப்படி பாடத்தை தேர்ந்தெடுப்பது, துவக்குவது என்ற குறிப்புகள் இருக்கின்றன.
05:51 இந்த tutorialக்காக, நாம் அதை விட்டுவிட்டு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம்.
05:57 இருந்தாலும் விருப்பமானால் விடியோவை நிறுத்தி அதை டைப் செய்து பார்க்கலாம்.
06:02 இப்போது பாடத்தை தேர்வு செய்யலாம்.
06:07 Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து Open Lecture ஐ சொடுக்கவும்
06:12 Select Training Lecture File – ‘KTouch’ dialog box தோன்றுகிறது.
06:17 folder path ஐ Browse செய்து பார்க்கவும்.

Root->usr->share->kde4->apps->Ktouch

06:31 english.ktouch.xml ஐ தேர்ந்து Open ஐ சொடுக்கவும்
06:36 Teacher’s Line இல் இப்போது வேறு characters காணப்படுகின்றன.
06:41 typing ஐ துவக்கலாம்.
06:43 முன்னிருப்பாக , மட்டம் 1, வேகம் பூஜ்யம் எனவும் அமைக்கப்படும்.
06:49 New Characters in This level காட்டுவது இந்த மட்டத்தில் நாம் கற்கபோகும் புதிய characters
06:55 cursor Student’s Line இல் இருக்கிறது.
06:58 விசைப்பலகையை பயன்படுத்தி நாம் teacher's line character களை type செய்வோம்.
07:09 type செய்யும்போது, characters .. Student’s Line இல் காட்டப்படுகின்றன.
07:14 Speed field ஐ பாருங்கள்.
07:16 type செய்யும்போது எண்கள் உங்கள் வேகத்துக்கு தகுந்த படி அதிகமோ குறைவோ ஆகிறது.
07:22 typing ஐ நிறுத்திவிட்டால் குறைகிறது.
07:25 இப்போது Teacher’s Line இல் காட்டாத எண்கள் 7 மற்றும் 8 ஐ type செய்யலாம்.
07:31 Student Line சிவப்பாகி விட்டது.
07:34 ஏன்? நாம் typing இல் தவறு செய்துவிட்டோம்.
07:40 அதை delete செய்துவிட்டு typing ஐ முடிப்போம்.
07:56 வரியின் கடைசி வந்த பின், Enter விசையை அழுத்த இரண்டாம் வரிக்கு போய் விடுவோம்.
08:02 Teacher’s Line இப்போது type செய்ய அடுத்த characters தொகுதியை காட்டுகிறது.
08:07 Student’s line இல் type செய்த text துடைக்கப்பட்டு விட்டது.
08:11 நாம் type செய்ததின் துல்லியத்தை காணலாம்.
08:14 Correctness field ... Type செய்ததில் எத்தனை சதவிகிதம் சரி எனக்காட்டுகிறது ..உதாரணமாக, 80 percent எனக்காட்டலாம்.
08:23 நம் முதல் typing பாடம் முடிந்தது!
08:26 ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது..
08:31 துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின் typing வேகத்தை அதிகரிக்கலாம்..
08:37 புதிய typing அமர்வை ஆரம்பிக்கலாம்.
08:40 Start New Session மீது சொடுக்கவும்
08:42 Start New Training Session – ‘KTouch’ dialog boxஇல் ,Start from First மட்டம் மீது சொடுக்கவும்.
08:50 காண்பது என்ன ?
08:52 characters தொகுப்பு ஒன்று Teacher’s Line இல் தோன்றுகிறது.
08:55 Student’s Line இல் எல்லா characters உம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.
09:00 type செய்யத்துவங்கலாம்.
09:05 பழகும்போது pause செய்து பின் மீள் துவக்கக் விரும்பலாம்.
09:09 அமர்வை pause செய்வது எப்படி?
09:12 pause session மீது சொடுக்கவும்.
09:14 speed குறைவதில்லை.
09:17 முன்னே நாம் typing ஐ நிறுத்தியபோது அது குறைந்தது அல்லவா?
09:23 typing ஐ மீள் துவக்க Teacher’s line இல் உள்ள அடுத்த character அல்லது சொல்லை type செய்க.
09:39 typing முடிந்த பின் Correctness field ஐ பார்க்கலாம். அது typing துல்லியத்தை காட்டுகிறது.
09:46 இத்துடன் இந்த Ktouch tutorial முடிகிறது.
09:50 நாம் கற்றது KTouch இடைமுகம். மேலும் நம் விரல்களை எப்படி விசைபலகையில் வைப்பது.
09:59 Teacher’s Line ஐ பார்த்து Type செய்வது. முதல் பாடத்தையும் முடித்தோம்.
10:04 இதோ ஒரு assignment.
10:06 Ktouch ஐ திறக்கவும். மட்டம் 1 இல் பாடத்தை முடிக்கவும்.இந்த மட்டத்தில் பழகவும்.
10:13 விசைகளுக்கு சரியான விரல்களை பயன்படுத்த மறக்க வேண்டாம்.
10:18 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
10:24 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:28 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


10:37 மேலும் தகவல்களுக்கு ....contact @spoken-tutorial.org.
10:43 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

.

10:47 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
10:55 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:06 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst