C-and-C++/C2/Functions/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 10:50, 20 June 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration
|
00:01 | C மற்றும் C++ ல் Functions குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00:09 | function என்றால் என்ன |
00:11 | function ன் Syntax |
00:13 | return statement ன் முக்கியத்துவம் |
00:16 | இதை உதாரணங்களின் வழியே செய்யலாம். |
00:18 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:22 | இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:25 | Ubuntu இயங்குதளம் version 11.10 |
00:29 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:35 | functionகான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:39 | function என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும் |
00:45 | ஒவ்வொரு program உம் ஒன்று அல்லது மேற்பட்ட functionகளை கொண்டிருக்கும் |
00:49 | இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும் |
00:55 | function க்கான syntax ஐ பார்ப்போம் |
00:59 | function' திருப்பும் data வகையை ret-type வரையறுக்கிறது |
01:05 | fun_name... function ன் பெயரை வரையறுக்கிறது |
01:09 | parameters என்பது variable ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல் |
01:14 | காலி parameter list ஐயும் குறிப்பிடலாம் |
01:18 | இது arguments இல்லாத functions எனப்படும் |
01:21 | இது arguments உள்ள functions எனப்படும் |
01:26 | void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம் |
01:29 | ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன் |
01:32 | அதை திறப்போம் |
01:35 | நம் filename function என்பதை கவனிக்கவும். |
01:38 | file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன். |
01:43 | code ஐ விளக்குகிறேன்.
|
01:45 | இது நம் header file |
01:47 | எந்த function உம் பயன்படுத்தும் முன் define செய்யப்பட வேண்டும் |
01:51 | இங்கே add என்ற function ஐ define செய்துள்ளோம் |
01:54 | add functionக்கு arguments இல்லை என்பதை கவனிக்கவும் |
01:58 | return type... void ஆகும் |
02:01 | இரண்டு வகை functions உள்ளன |
02:03 | User-defined அது நம் add function |
02:06 | Pr-defined அது printf மற்றும் main function |
02:12 | இங்கே a மற்றும் b க்கு 2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் |
02:19 | இங்கே ஒரு variable c ஐ declare செய்துள்ளோம் |
02:21 | பின் a மற்றும் b மதிப்புகளை கூட்டுகிறோம் |
02:24 | தீர்வு c ல் சேமிக்கப்படுகிறது |
02:27 | பின் தீர்வை அச்சிடுகிறோம் |
02:29 | இது நம் main function |
02:32 | இங்கே add function ஐ call செய்கிறோம் |
02:34 | இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும் |
02:39 | Save ஐ சொடுக்கவும் |
02:42 | program ஐ இயக்குவோம் |
02:45 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
02:53 | compile செய்ய எழுதுக
'gcc function.c -o fun |
03:00 | இயக்க எழுதுக
./fun |
03:05 | நாம் காணும் வெளியீடு Sum of a and b is 5 |
03:10 | program க்கு திரும்புவோம் |
03:13 | Functions... parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும் |
03:20 | அதே உதாரணத்தை arguments உடன் பார்க்கலாம் |
03:23 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். |
03:27 | எழுதுக int add(int a, int b) |
03:32 | இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம் |
03:36 | int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments |
03:41 | இதை நீக்குவோம் |
03:42 | இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை |
03:46 | printf statement ஐ நீக்குவோம் |
03:49 | எழுதுக int main() |
03:52 | variable sumஐ இங்கே declare செய்யலாம். |
03:54 | எழுதுக int sum;
|
03:57 | பின் எழுதுக sum = add(5,4);
|
04:03 | இங்கே add functionஐ call செய்கிறோம். |
04:05 | 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம். |
04:10 | 5 a ல் சேமிக்கப்படும். 4 b ல் சேமிக்கப்படும். |
04:14 | பின் கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும். |
04:18 | இப்போது தீர்வை அச்சடிப்போம். |
04:20 | அதற்கு இங்கே எழுதுக |
04:21 | printf(“Sum is %d\n”,sum); |
04:27 | மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக. |
04:32 | எழுதுக return 0; |
04:36 | ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும்.
|
04:41 | Save ல் சொடுக்குக |
04:43 | program ஐ இயக்கலாம். |
04:45 | நம் terminalக்கு வருவோம். |
04:48 | முன்புபோல program ஐ compile செய்வோம். |
04:50 | இயக்குவோம். |
04:52 | Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது |
04:57 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். |
05:02 | நம் programக்கு வருவோம். |
05:04 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
|
05:07 | முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. |
05:12 | இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும். |
05:18 | Saveல் சொடுக்குக. |
05:19 | முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம்
|
05:24 | இங்கே using statement ஐ சேர்ப்போம். |
05:28 | function declaration C++லும் அதேதான். |
05:32 | எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை. |
05:37 | C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம். |
05:48 | இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை.
|
05:52 | comma ஐ நீக்குக. |
05:54 | இப்போது , இரு opening angle brackets ஐ இடவும் |
05:58 | sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும். |
06:03 | இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக. |
06:07 | closing bracketஐ நீக்குக. |
06:09 | Save ல் சொடுக்குக. |
06:11 | program ஐ compile செய்வோம். |
06:14 | terminalக்கு திரும்புவோம். |
06:16 | எழுதுக g++ function dot cpp hyphen o fun1
|
06:23 | இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை.
|
06:31 | Enter ஐ அழுத்துக. |
06:34 | எழுதுக ./fun1
|
06:38 | Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது |
06:42 | இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம். |
06:47 | 4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில். |
06:51 | மீதி code அவ்வாறே இருக்கட்டும். |
06:55 | Save ல் சொடுக்குக. |
06:58 | program ஐ compile செய்வோம். |
07:02 | வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம். |
07:06 | x was not declared in this scope. |
07:09 | ஏனெனில் x ஒரு character variable. |
07:13 | இது எங்கும் declare செய்யப்படவில்லை. |
07:15 | நம் add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது. |
07:21 | எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை. |
07:25 | இப்போது நம் programக்கு வருவோம். |
07:27 | பிழையை சரிசெய்வோம். |
07:30 | வரி 10 ல் 4 ஐ இடுவோம். |
07:32 | Save ல் சொடுக்குக. |
07:35 | மீண்டும் இயக்கலாம். |
07:37 | promptஐ துடைப்போம். |
07:40 | முன்புபோல program ஐ Compile செய்வோம். |
07:42 | ஆம் இது வேலைசெய்கிறது. |
07:45 | இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். |
07:50 | இங்கே ஒரு ஒரு parameterஐ அனுப்புகிறோம் எனில். |
07:55 | 4 ஐ நீக்குக. |
07:56 | Saveல் சொடுக்குக |
07:58 | terminalக்கு வருவோம். |
08:00 | compile செய்வோம். |
08:01 | வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம். |
08:06 | too few arguments to function 'int add (int, int)' |
08:11 | நம் programக்கு வருவோம்.
|
08:14 | இங்கே இரு parameterகள் இருப்பதைக் காண்கிறோம் |
08:19 | int a மற்றும் int b. |
08:22 | இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம். |
08:25 | அதனால் அது பிழையைத் தருகிறது. |
08:27 | பிழையை சரிசெய்வோம். |
08:29 | 4 ஐ இடுவோம். |
08:31 | Save ல் சொடுக்குக. |
08:34 | terminalக்கு வருவோம். |
08:36 | மீண்டும் இயக்குவோம். |
08:39 | ஆம் இது வேலைசெய்கிறது! |
08:42 | நம் slidesக்கு வருவோம்.
|
08:44 | சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது- |
08:49 | Function |
08:50 | functionன் Syntax |
08:51 | arguments இல்லாமல் Function |
08:53 | எ.கா- void add() |
08:55 | arguments உடன் Function |
08:57 | எ.கா- int add(int a, int b) |
09:02 | பயிற்சியாக- |
09:03 | ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு program எழுதுக. |
09:07 | இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க |
09:11 | Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
09:14 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09:18 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:24 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:28 | மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
09:35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:47 | மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன |
09:52 | இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |