BOSS-Linux/C2/The-Linux-Environment/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:04, 12 January 2015 by PoojaMoolya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 லீனக்ஸ் என்விரான்மென்ட் மற்றும் அதை மாற்றுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இதில் தரப்படும் உதாரணங்களை செய்ய லீனக்ஸ் கணினி தேவை.
00:12 லீனக்ஸை இயக்குவது... அதன் சில அடிப்படை கமாண்ட்கள்... கோப்பு அமைப்புகள்... ஷெல் ஆகியவை தெரியும் என கொள்கிறேன்
00:20 ஒரு முறை மீள்பார்வை இட வேண்டுமானால் இதே தளத்தில் உள்ள மற்ற டிடோரியல்களை பாருங்கள்.
00:30 லீனக்ஸ் case sensitive ஆனவை. மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே.
00:40 லீனக்ஸ் என்விரான்மென்ட் என்பது ஆபரேடிங் சிஸ்டம் உங்களுடன் உறவாடுவது கமாண்ட்களுக்கு கீழ் படிவது உங்கள் செய்கைகளை புரிந்து கொள்வது ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.
00:48 ஷெல் அமைப்பை மாற்றுவதன் மூலம் தகுந்தபடி அமைத்துக்கொள்ளலாம்.
00:54 ஷெல் இன் நடத்தையை ஷெல் வேரியபில்ஸ் நிர்ணயிக்கின்றன.
00:58 வேரியபில்ஸ் இரண்டு வகைப்படும். என்விரான்மென்ட் வேரியபில்ஸ். லோகல் வேரியபில்ஸ்.
01:06 என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பயனரின் முழு என்விரான்மென்ட்டிலும் கிடைக்கும்.
01:12 ஷெல் ஸ்க்ரிப்ட் இயக்குவது போன்ற சப் ஷெல்களிலும் இவை கிடைக்கும்.
01:18 லோகல் வேரியபில்ஸ் பெயருக்கு ஏற்றாற்போல் குறைந்த அளவில் கிடைக்கும்.
01:24 ஷெல் உருவாக்கிய சப் ஷெல்களுக்கு இவை கிடைக்கா.
01:28 இதில் என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பற்றி பேசுவோம். இவற்றின் மதிப்புகளைக் காண்பதைப் பார்க்கலாம்.
01:41 நடப்பு ஷெல்லில் உள்ள எல்லா வேரியபில்களையும் காண ...
01:46 டைப் செய்க: செட் ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் செய்க
01:53 நடப்பு ஷெல்லில் உள்ள எல்லா வேரியபில்களையும் காணலாம்,
01:58 உதாரணத்துக்கு: ஹோம் என்விரான்மென்ட் வேரியபிலை பாருங்கள். அதன் வேல்யுவையும் பாருங்கள்.
02:07 பட்டியலில் மேலும் காண என்டர் செய்க. வெளியேற க்யூ ஐ அழுத்தவும்.
02:14 பல பக்க பட்டியலை வெளியிடும் வகையில் செட் கமாண்டின் அவுட்புட் மோர் என்பதற்கு பைப்லைன் செய்யப்பட்டது.
02:31 என்விரான்மென்ட் வேரியபில்களை மட்டும் காண கமாண்ட் ஈஎன்வி.
02:38 டைப் செய்க: ஈஎன்வி ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் செய்க.
02:46 உதாரணத்துக்கு, ஷெல் வேரியபில்களின் மதிப்பு ச்லாஷ் பின்[bin] ச்லாஷ் பாஷ் என்பதை கவனிக்கவும்.
02:53 மீண்டும் வெளியேற க்யூ விசையை அழுத்தவும்.
03:00 இன்னும் முக்கியமான என்விரான்மென்ட் வேரியபில்களை காணலாம்.
03:05 மாதிரி இயக்கங்களுக்கு எல்லாம் பாஷ் ஷெல்லை பயன்படுத்துவோம்.
03:09 ஷெல்கள் ஒவ்வொன்றும் கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன.
03:12 ஒரு வேரியபில் என்ன உண்மையில் வைத்துள்ளது என அறிய டாலர் குறியை முன்னே சேர்க்க வேண்டும். அத்துடன் எகோ கமாண்டை சேர்க்க வேண்டும்.
03:24 பார்க்கப்போகும் முதல் என்விரான்மென்ட் வேரியபில் ஷெல்.
03:28 அது நடப்பு ஷெல்லின் பெயரை வைத்துள்ளது.
03:31 ஷெல் வேரியபிளின் வேல்யுவை காண. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் எஸ்ஹெச்இஎல்எல் shell. என்டர் செய்க.
03:48 ஸ்லாஷ் பின் ஸ்லாஷ் பாஷ். இதுவே நாம் பயன்படுத்தும் ஷெல் ஆகும்.
03:56 அடுத்த வேரியபில் ஹோம்.
03:58 சாதாரணமாக உள் நுழையும் போது யூசர் பெயரில் உள்ள ஒரு டிரக்டரியில் சேர்த்துவிடும்.
04:04 இது ஹோம் டிரக்டரி எனப்படும். அதுவே ஹோம் வேரியபில் இல் கிடைப்பது.
04:10 இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் ஹெச்ஓஎம்இ home. என்டர் செய்க.
04:22 அடுத்த என்விரான்மென்ட் வேரியபில் பாத்[PATH]
04:26 இது செயலாக்க வேண்டிய கமாண்ட்களுக்காக ஷெல் தேட வேண்டிய டிரக்டரிகளின் நிச்சய பாதை.
04:33 இதன் வேல்யுவை காணலாம்.
04:36 மீண்டும் உள்ளிடுக. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் பிஏடிஹெச்[PATH]
04:45 என் கணினியில் அவை இப்படி உள்ளன.ச்லாஷ் யூசர் ச்லாஷ் லோகல் ச்லாஷ் எஸ்பின்[sbin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் பின்[bin]
04:57 இது கணினிக்கு கணினி வேறுபடலாம்.
05:00 அது கோலன் டிலிமிடரால் பிரிக்கப்பட்ட டிரக்டரிகளின் பட்டியல். இந்த வரிசையில்தான் ஷெல் செயலாக்க வேண்டிய கமாண்டை தேடும்.
05:11 வேண்டிய டிரக்டரியை இந்த பட்டியலில் சேர்க்கலாம். அப்போது அதுவும் தேடப்படும்.
05:18 அதற்கு டைப் செய்க
5:22 மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] ஈக்வல்டு டாலர் மீண்டும் மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] கோலன் ஸ்லாஷ் ஹோம் ஸ்லாஷ் பின்னர் ஹோம் டிரக்டரியின் பெயர். என்டர் செய்க.
05:47 இப்போது பாத் வேல்யுவை எகோ செய்தால்
05:57 நம் டிரக்டரி பாத் வேரியபில்களில் சேர்க்கப்பட்டுள்ளதை காணலாம்.
06:03 இங்கு அந்த டிரக்டரி உள்ளதை பாருங்கள்.
06:09 இன்னொரு சுவாரசியமான வேரியபில் லாக்நேம்.
06:12 நடப்பில் செயலாக உள்ள யூசரை இது கொண்டுள்ளது.
06:16 இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் மேல் நிலை எழுத்தில் லாக்நேம்.
06:28 டெர்மினலை நாம் திறக்கும் போது டாலர் குறியை பார்க்கிறோம். இதை ஒட்டிதான் கமாண்ட்களை டைப் செய்கிறோம்.
06:35 இதுவே பிரைமரி ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ்ஒன்று[PS1]
06:40 இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங்கும் உள்ளது.
06:43 உள்ளிடும் கமாண்ட் மிக நீளமாக போய் அடுத்த வரிக்கு செல்ல நேரிட்டால் வல அம்புக்குறியை ப்ராம்ப்ட் இடத்தில் பார்க்கலாம்.
06:53 இது இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ் இரண்டு[PS2].
06:58 இரண்டாம் ப்ராம்ப்டின் மதிப்பைஅறிய உள்ளிடுக: எகோ ஸ்பேஸ் டாலர் பிஎஸ் இரண்டு. என்டரை தட்டுவோம்.
07:13 நம் முதன்மை ப்ராம்ப்ட் ஸ்டிரிங் ஐ அட் தெ ரேட் என்னும் குறியாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
07:20 இதற்கு உள்ளிடுக: மேலெழுத்தில் பிஎஸ்ஒன்று ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் அட் தெ ரேட். என்டரை தட்டுவோம்.
07:34 இப்போது டாலர் குறிக்கு பதில் அட் தெ ரேட் ஐ காணலாம்.
07:43 இப்போது ப்ராம்ப்டில் நமது பெயர் வரும்படி செய்யலாம்.
07:49 உள்ளிடுக: பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர் லாக்னேம். என்டரை தட்டுவோம்.
08:05 இப்போது ப்ராம்ப்டில் என் பெயர் இருக்கிறது.
08:09 மீண்டும் பழையபடி ஆக்க பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர். என்டரை தட்டுவோம்
08:21 பல என்விரான்மென்ட் வேரியபில்களுக்கு நாம் வேல்யுகளை தந்துள்ளோம்.
08:25 ஆனால் மாறுதல்கள் எல்லாமே நடப்பு அமர்வுக்குத்தான் என்பதை நினைவு கொள்க.
08:30 உதாரணத்துக்கு ஒரு டிரக்டரியை பாத் இல் சேர்த்தோம்.
08:34 டெர்மினலை மூடிவிட்டு திறந்து அல்லது முற்றிலும் புதிய டெர்மினலை திறந்து, பாத் வேரியபில்களின் வேல்யுவை எகோ செய்து பார்த்தால்.
08:53 அத்தனை மாறுதல்களும் போய்விட்டன என காணலாம்
08:59 இந்த மாறுதல்களை நிரந்தரமாக்குவதே இன்னொரு அட்வான்ஸ்ட் டுடோரியலுக்கான பொருளாகும்.
09:06 அடிக்கடி சமீபத்தில் இயக்கிய ஒரு கமாண்டை மீண்டும் இயக்குகிறோம். இதற்கு முழு கமாண்டையும் மீண்டும் உள்ளிட வேண்டுமா?
9:15 இல்லை, பல தீர்வுகள் உள்ளன.
09:19 முதலில் மேல் நோக்கு அம்பு குறைஅழுத்தினால் கடைசியாக உள்ளிட்ட கமாண்டை காணலாம்.
09:26 அழுத்திக்கொண்டே இருக்க முந்தைய கமாண்ட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
09:30 பின் செல்ல கீழ் நோக்கிய அம்புக்குறி விசையை அழுத்தலாம்.
09:36 ஆனால் இப்படி போவது கொஞ்சம் சலிப்பான விஷயம். இதைக்காட்டிலும் நல்ல தேர்வு ஹிஸ்டரி கமாண்ட்.
09:45 ஹிஸ்டரி என டைப் செய்து ...
09:51 உள்ளிடுங்கள். முன்னே இட்ட கமாண்ட்களின் பட்டியல் தென் படும்.
09:57 பெரிய பட்டியல் வேண்டாம். கடைசி பத்து கமாண்ட்கள் போதுமெனில் ...
10:02 ஹிஸ்டரி ஸ்பேஸ் 10 என டைப் செய்து உள்ளிடுங்கள்.
10:13 இதில் ஒவ்வொரு முன் இட்ட கமாண்டுக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டுள்ளது.
10:20 ஏதேனும் ஒரு கமாண்டை திரும்பவும் தட்டச்ச...
10:24 ஆச்சரிய குறியை டைப் செய்து கமாண்டின் எண்ணை உள்ளிடுக. உதாரணமாக என் பட்டியலில் ஆச்சரியக்குறி 442 என்பது எகோ ஸ்பேஸ் டாலர் பாத் கமாண்டை இயக்கும்
10:44 கடைசி கமாண்ட்க்கு வெறும் இரண்டு ஆச்சரியக்குறியை உள்ளிட்டால் போதும்!
10:56 அடுத்து பார்க்ககூடியது டில்டே சப்ஸ்டிடுஷன். இந்த டில்டே குறி ஹோம் டிரக்டரிக்கு சுருக்கு வழி.
11:05 உதாரணமாக ஹோம் டிரக்டரியில் டெஸ்ட்ட்ரீ என்று ஒரு டிரக்டரி இருப்பதாக கொள்வோம். இப்போது சிடி ஸ்பேஸ் டில்டே ச்லாஷ் டெஸ்ட்ட்ரீ என உள்ளிட்டு அங்கு சென்று விடலாம்.
11:18 நடப்பு வொர்கிங் டிரக்டரிக்கும் கடைசியாக வேலை செய்த டிரக்டரிக்கும் சிடி டில்டே மைனஸ் அல்லது சிடி மைனஸ் கமாண்ட் ஆல் முன்னும் பின்னும் செல்லலாம்.
11:28 உதாரணமாக இப்போது டெஸ்ட்ட்ரீ டிரக்டரியில் இருக்கிறோம். கடைசியாக நாம் இருந்தது ஹோம் டிரக்டரி.
11:34 சிடி ஸ்பேஸ் மைனஸ் என உள்ளிட்டு ஹோம் டிரக்டரிக்கு சென்று விட்டோம்.
11:40 அதையே மீண்டும் இயக்க டெஸ்ட்ட்ரீ டிரக்டரிக்கு சென்றுவிட்டோம்.
11:47 கடைசியாக பார்க்கப்போகும் கமாண்ட் அலையஸ் கமாண்ட்.
11:51 மீண்டும் மீண்டும் இயக்க வேண்டிய நீளமான கமாண்ட் இருப்பதாக கொள்வோம்.
11:57 இதற்கு ஒரு சிறிய மாற்று பெயரிட்டு கமாண்டை இயக்க இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
12:03 டிரக்டரி அடுக்கு மிகபெரியதாக இருந்து இசை டிரக்டரிக்கு செல்ல பாதை பெரியது எனில் அலையஸ் ஐ உருவாக்கலாம்.
12:13 உள்ளிடுக: அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் (cdmusic) ஈக்வல்டு இரட்டை மேற்கோள்களில் சிடி ஸ்பேஸ் ச்லாஷ் ஹோம் ச்லாஷ் ஹோம் டிரக்டரியின் பெயர் ச்லாஷ் ம்யூசிக்.
12:39 இப்போது இசை டிரக்டரிக்கு போக நினைக்கும் போதெல்லாம் சிடிம்யுசிக் என்று எழுதி உள்ளிட்டால் போதும்!
12:47 இப்போது ம்யூசிக் டிரக்டரியில் இருக்கிறோம்.
12:52 சிடி ஸ்பேஸ் மைனஸ் என உள்ளிட்டு முந்தைய நடப்பு டிரக்டரிக்கு போகலாம்.
13:01 இந்த அலையஸ் அமைப்பை நீக்க அன்அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் என எழுதி உள்ளிடலாம்.
13:13 இப்போது மீண்டும் சிடிம்யுசிக் என டெர்மினலில் கமாண்ட் இட்டால் கமாண்டை காணவில்லை என்று பிழை செய்திதான் வரும்.
13:22 நடப்பு டிரக்டரியில் இரண்டு கோப்புகள் டெஸ்ட்1 டெஸ்ட்2 என இருப்பதாக கொள்ளலாம்.
13:31 ஆர்எம் டெஸ்ட்1 என உள்ளிட்டால் டெஸ்ட்1 டிரக்டரி மௌனமாக நீக்கப்படும்.
13:38 இதனுடன் ஹைபன் ஐ சேர்த்தால் நீக்கல் செயல் இன்டராக்டிவ் செயலாகிவிடும்.
13:45 ஒரு அலையஸ் ஐ அமைக்கலாம். அலையஸ் ஆர்எம் ஈக்வல்டு, மேற்கோள்களில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ.
13:56 ஆர்எம் ஐ இயக்கினால் உண்மையில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ தான் இயங்கும்.
14:05 டெஸ்ட்1 மௌனமாக நீக்கப்பட்டாலும் டெஸ்ட்2 ஐ நீக்குமுன் கணினி உறுதிபடுத்திக்கொண்டது.
14:13 இதில் என்விரான்மென்ட் வேரியபில்ஸ், ஹிஸ்டரி, அலையஸ் ஆகியன பார்த்தோம்.
14:18 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
14:21 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
14:28 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
14:32 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst