Ruby/C3/Object-Oriented-Concept-in-Ruby/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:36, 27 November 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Ruby ல் Object Oriented Concept குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் பயன்படுத்த கற்கபோவது
00:08 classe கள்
00:09 object களை உருவாக்குதல்
00:10 Rubyல் methodகளை define செய்வதற்கான பல்வேறு வழிகள்
00:13 இங்கே நாம் பயன்படுத்துவது
00:14 உபுண்டு பதிப்பு 12.04
00:16 Ruby 1.9.3
00:19 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸ் commandகள், டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:24 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:28 தொடங்குவதற்கு முன், ஏற்கனவே ttt directory ஐ உருவாக்கியுள்ளதை நினைவுகொள்க.
00:33 அந்த directory க்கு செல்க
00:35 பின் ruby hyphen tutorial பின் classes directory.
00:41 Ruby ஒரு object oriented language.
00:44 Ruby உள்ள அனைத்தும் ஒரு object; ஒரு string மதிப்பு அல்லது எண் வரை அனைத்தும்.
00:49 class' என்பது சம்பந்தபட்ட data மற்றும் function களின் ஒரு தொகுப்பாகும்
00:53 இது தகவலை ஒழுங்காக வைக்க உதவலாம்.
00:56 object என்பது ஒரு class ன் instantiation
01:00 keyword class உடன் class definition தொடங்குகிறது
01:05 அதை தொடர்ந்து class ன் பெயர் வருகிறது
01:08 ஒரு “end” ன் மூடப்படுகிறது
01:11 class க்கான ஒரு உதாரணத்தை காண்போம்
01:14 class Product
01:16 ruby code
01:17 end
01:20 class ன் பெயர் ஒரு capital letter உடன் ஆரம்பிக்க வேண்டும்.
01:24 ஒன்றுக்கு மேற்ப்பட்ட வார்த்தைகள் இருந்தால் அந்த வார்த்தைகளின் ஆரம்பம் capital letter ல் இருக்க வேண்டும்.
01:28 உதாரணமாக,
01:30 UserInformation
01:32 ProductInformation
01:34 பின்வரும் file பெயர்கள் வார்த்தைகளை பிரிக்க underscore ஐ கொண்டிருக்கும்:
01:37 user underscore information
01:40 product underscore information
01:45 basic level Ruby டுடோரியல்களில் காட்டியவாறு ஒரு புதிய gedit file ஐ உருவாக்கவும்.
01:48 அதற்கு class_definition.rb என பெயரிடுக
01:52 class களை செயல்படுத்துவதற்கான ஒரு உதாரணத்தை நான் கொண்டுள்ளேன்
01:57 டுடோரியலை இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
02:02 இந்த உதாரணத்தில் Order என்ற ஒரு class ஐ define செய்துள்ளேன்.
02:05 இப்போது சில variable களை சேர்ப்பதன் மூலம் இந்த class ஐ பயனுள்ளதாக்குவோம்
02:11 பின் ஒரு instance variable “myinstance” ஐ define செய்துள்ளேன்
02:15 பின் ஒரு மதிப்பை அதற்கு assigne செய்துள்ளேன்.
02:18 ஒரு class variable “myclassvar” ஐயும் define செய்துள்ளேன்
02:21 அதற்கு ஒரு மதிப்பை assigne செய்துள்ளேன்.
02:24 இப்போது இந்த class ஐ பயன்படுத்துமாறு சில code ஐ சேர்ப்போம்.
02:30 டைப் செய்க puts Order dot instance underscore variables.
02:36 இந்த வரிக்கு முன் சேர்க்கவும் puts சில குறிகள்... ஒரு புதிய வரிக்காக slash n.
02:43 அதை பிரதி எடுத்து நாம் சேர்த்த வரிக்கு பின் ஒட்டவும். பின் இதை சேமிக்கவும்.
02:51 இப்போது இந்த code ஐ இயக்குவோம்
02:53 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
02:56 ruby space class underscore definition dot rb
03:02 பின் வெளியீட்டை காண்க.
03:05 நீங்கள் define செய்த instance variable ஐ காணலாம்.
03:09 இப்போது டைப் செய்வோம் puts Order dot class underscore variables.
03:15 நட்சத்திரங்கள் உள்ள puts வரியை பிரதி எடுத்து, இந்த வரிக்கு கீழே ஒட்டவும் பின் இதை சேமிக்கவும்.
03:21 இப்போது டெர்மினலுக்கு வந்து முன்புபோல இந்த file ஐ இயக்குவோம்.
03:26 நீங்கள் define செய்த class variable உம் காட்டப்படுவதைக் காண்க.
03:32 இப்போது உங்கள் சொந்த class ஐ எழுத முடியும்
03:35 அடுத்து, object என்றால் என்ன என காண்போம்.
03:40 object என்பது class ன் ஒரு instance ஆகும்
03:43 அதாவது class லிருந்து ஒரு object உருவாக்கப்படுகிறது
03:46 ஒரு object ஆனது அந்த class ல் define செய்யப்பட்ட methodகள் மற்றும் பண்புகளை கொண்டிருக்கும்
03:52 ஒரு object ஐ எவ்வாறு declare செய்வது
03:54 new keyword ஐ பயன்படுத்தி class ன் ஒரு object ஐ declare செய்கிறோம்
03:58 இங்கே Product class ன் ஒரு object ஐ declare செய்கிறோம்
04:02 இங்கே ஒரு object உருவாக்கப்படுகிறது.
04:05 product = Product.new
04:09 இந்த செயல்முறை ஒரு object ன் initialization எனப்படுகிறது.
04:12 இந்த object.... type: Product ஐ கொண்டது
04:16 இப்போது “initialize” method பற்றி காண்போம்.
04:20 object உருவாக்கத்தின் போது initialize method அழைக்கப்படுகிறது .
04:26 ஒரு object மீது new ஐ அழைக்கும்போது, initialize method ஐ அணுகுகிறோம்
04:31 Ruby methodகளை போலவே parameter களின் ஒரு பட்டியலை ஒரு initialize method ஏற்கலாம்
04:37 இதற்கு முன் “def” keyword வரவேண்டும்
04:43 ஒரு உதாரணத்தை காண்போம்.
04:46 basic level Ruby டுடோரியல்களில் காட்டியவாறு gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குக.
04:50 அதற்கு object undescore initialize dot rb என பெயரிடுக
04:55 object initialization code க்கு ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்.
05:00 டுடோரியலை இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
05:04 இங்கே “Order” என்ற ஒரு class ஐ define செய்துள்ளேன்
05:08 பின் argument இல்லாமல் initialize method ஐ define செய்துள்ளேன்
05:13 “I have created an object” என்ற செய்தியை காட்ட ஒரு puts method ஐ define செய்துள்ளேன்.
05:20 அடுத்து Order dot new ஐ define செய்துள்ளேன்.
05:24 இது initialize method ஐ அணுகும்
05:27 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
05:31 ruby space object underscore initialize dot rb
05:36 பின் வெளியீட்டை காண்க.
05:39 “I have created an object” என்ற செய்தியை காண்பீர்கள்.
05:43 இப்போது gedit க்கு திரும்ப வந்து method க்கு ஒரு argument ஐ சேர்ப்போம்
05:48 puts ஐ மாற்றுவோம்.
05:51 இது அனுப்பப்பட்ட argument ன் மதிப்பை காட்டவேண்டும்.
05:55 அடுத்து டைப் செய்க
05:56 Order dot new(“I have created an object”).
06:04 இங்கே new method க்கு ஒரு argument ஐ கொடுத்துள்ளோம்.
06:08 இந்த argument ஆனது initialize method க்கு அனுப்பப்படுகிறது
06:13 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
06:16 ruby space object underscore initialize dot rb
06:20 பின் வெளியீட்டை காண்க.
06:22 “I have created an object” என்ற செய்தி அச்சடிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
06:29 இப்போது, இப்போது உங்களுக்கு object initialization பற்றி புரிந்திருக்கும்.
06:33 class செயல்படுத்தும் functionகளே Ruby ல் methodகள் ஆகும் என்பதை நினைவுகொள்க.
06:39 ஒரு class ல் ஒவ்வொரு method உம் “def” மற்றும் “end” பகுதியினுள் define செய்யப்படுகிறது.
06:45 பல வார்த்தை கொண்ட method பெயர் underscore ஆல் பிரிக்கப்படுகிறது
06:48 ஒரு method பெயருடன் சேர்க்கப்பட கூடிய சில குறிகள்:
06:54  ? (கேள்வி குறி)
06:56 = (சமக்குறி)
06:58 ஒவ்வொரு குறியும் method க்கு சில பொருளை தருகிறது
07:02 சில உதாரணங்களை காண்போம்.
07:05 basic level Ruby டுடோரியல்களில் காட்டியவாறு gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குக.
07:09 அதற்கு class underscore methods dot rb என பெயரிடுக.
07:14 class methods code க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்.
07:17 இந்த டுடோரியலை இடைநிறுத்தி இந்த code ஐ டைப் செய்யலாம்.
07:21 இங்கே “Animal” என்ற ஒரு class ஐ define செய்துள்ளேன்
07:23 பின் “breathe” மற்றும் “walk” methodகள் உள்ளன
07:28 அவை இரண்டும் “def” மற்றும் “end” keywordகளுடன் define செய்யப்பட்டுள்ளது.
07:32 பின் object Animal ஐ initialize செய்துள்ளேன்
07:36 அதை “a” lowercase ல் உள்ள “animal” என்ற variable க்கு assign செய்துள்ளேன்
07:40 பின் methodகள் “breathe” மற்றும் “walk” ஐ அடுத்தடுத்து அணுகியுள்ளேன்.
07:48 இப்போது ப்ரோகிராமை இயக்குவோம்.
07:51 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
07:53 ruby space class underscore methods dot rb
07:58 பின் வெளியீட்டை காண்க.
08:00 பின்வரும் வரிகள் அச்சடிக்கப்பட்டிருப்பதை காணலாம்:
08:02 “ I breathe”
08:03 “ I walk”
08:05 ஏனெனில் methodகள் “breathe” மற்றும் “walk” ஐ அணுகியுள்ளேன்
08:10 இந்த methodகளினுள் define செய்யப்பட்டுள்ள “puts” statement நீங்கள் காணும் வெளியீட்டை கொடுக்கிறது.
08:16 அடுத்து , trailing கேள்வி குறியுடன் methodகளை உருவாக்க கற்போம்
08:21 basic level Ruby டுடோரியல்களில் காட்டியவாறு ஒரு புதிய gedit file ஐ உருவாக்கவும்.
08:25 அதற்கு class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb என பெயரிடுக
08:35 கேள்வி குறி code உடன் class method களுக்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்.
08:40 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
08:45 இங்கே முன் உதாரணத்தில் சொன்ன அதே class ஐ எடுக்கிறேன்.
08:48 இங்கே breathe method ஒரு “கேள்வி குறியை (?)” கொண்டுள்ளது
08:52 இம்மாதிரியான methodகள் பொதுவாக boolean மதிப்புகளை திருப்ப பயன்படுகிறது
08:55 இது Ruby ன் method naming convention (பெயர்சூட்டும் வழக்கம்) ஐ சார்ந்தது.
09:00 animal dot breathe கேள்வி குறி என declare செய்யப்படுவதன் மூலம் இந்த method அணுகப்படுகிறது
09:06 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
09:09 ruby space class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb பின் வெளியீட்டை காண்க.
09:22 “true” என்ற வெளியீட்டை காண்பீர்கள்
09:26 அடுத்து, “walk” என்ற மற்றொரு method ஐ define செய்வோம்
09:30 அதனருகில் ஒரு சமக்குறி மற்றும் “(value)” ஐ டைப் செய்வோம்.
09:36 animal dot walk என அழைப்பதன் மூலம் இந்த method ஐ அணுகுவோம்
09:41 பின் இந்த method ஐ இயக்குவோம்
09:44 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
09:45 ruby class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb
09:52 பின் வெளியீட்டை காண்க.
09:56 இது “undefined method” பிழையை கொடுக்கும்.
09:59 ஏனெனில சமக்குறி மற்றொரு பொருளையும் கொண்டுள்ளது.
10:03 இது method க்கு ஒரு மதிப்பை assign செய்ய பயன்படுகிறது
10:08 எனவே இம்முறை method ஐ சற்று வித்தியாசமாக அணுகுவோம்.
10:13 டைப் செய்க puts animal dot walk equal to “ hops”
10:17 இப்போது மறுமுறை முயற்சிப்போம்.
10:20 டெர்மினலுக்கு வந்து முன்புபோல command ஐ இயக்கி வெளியீட்டை காண்போம்.
10:27 “hops” என்ற வார்த்தை அச்சடிக்கப்படுவதை காண்க.
10:30 ஒரு method க்கு அடுத்து வரும் சமக்குறி assignment ஐ குறிக்கிறது என்பதை இது காட்டுகிறது.
10:36 இப்போது methodகளை உங்களால் எழுத முடியும்
10:42 இந்த டுடோரியலில் நாம் கற்றது-
10:44 class களை எவ்வாறு declar செய்வது
10:46 ஒரு class ன் objectகளை எவ்வாறு உருவாக்குவது
10:48 Ruby ல் methodகளை define செய்வதற்கான பல்வேறு வழிகள்
10:52 பயிற்சியாக:
10:54 ஒருclass Product ஐ define செய்க
10:56 “myvar” ன் மதிப்புகளை பெறவும் “myvar” க்கு மதிப்புகளை அமைக்கவும் method களை define செய்க.
11:01 மதிப்புகளை அமைக்க சமக்குறியை பயன்படுத்தி method ஐ define செய்க
11:05 மேலுள்ள இரு methodகளை பயன்படுத்தி class ன் object ஐ Instantiate செய்து மதிப்புகளை அமைத்து பெறவும்.
11:12 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
11:14 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11:18 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:22 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:27 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:30 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:39 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:46 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst