Python/C2/Embellishing-a-plot/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 23:03, 11 December 2012 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Timing Narration
0:00 "Embellishing a Plot" tutorial க்கு நல்வரவு!
0:06 இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும்,
  1. plot இன் பண்புகளை மாற்றுதல் -- நிறம், கோட்டின் style, கனம்.
  2. உள் புதைந்த லேடக் ஆல் plot க்கு தலைப்பு தருதல்.
  3. x y அச்சுக்களுக்கு Label இடுதல்.
  4. plot க்கு குறிப்புகள் சேர்த்தல்.
  5. அச்சுக்களுக்கு வரம்பு அமைத்து அதை பெறுதல்.
0:27 ஆகவே இந்த tutorial ஐ துவக்கும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
0:34 ஆகவே ipython ஐ pylab உடன் துவக்குவோம். முனையத்தில் ipython hyphen pylab என type செய்யலாம்.
0:48 முதலில் ஒரு எளிய plot ஐ உருவாக்கிவிட்டு பின் அதை அலங்கரிக்கலாம்.
0:54 x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் -2,4,20 என type செய்வோம்.
1:06 பின் plot(x,sin(x)) என type செய்வோம்.
1:15 நாம் காண்பது பைலாப் இன் முன்னிருப்பு நிறம், முன்னிருப்பு கோட்டின் தடிமன்.
1:23 ப்லாட்டில் இந்த அளபுருக்களை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
1:28 plot கட்டளைக்கு கூடுதல் தரு மதிப்பு கொடுப்பதால் இதை செய்ய முடியும்.
1:33 நாம் முதலில் இதை சுத்தம் செய்து விட்டு அதே plot ஐ கூடுதல் நிற தரு மதிப்புடன் வரையலாம்.
1:39 சிவப்பு நிறத்துக்கு தர வேண்டிய மதிப்பு 'r'
1:44 ஆகவே clf என type செய்து, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x,sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளில் r.
2:13 அதே plot இப்போது சிவப்பு நிறத்தில் இருக்கிறது.
2:16 கோட்டின் தடிமனை 'linewidth' தரு மதிப்பு ஆல் மாற்றலாம்.
2:20 ஆகவே type செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் x,cos(x),linewidth is equal to 2
2:34 இப்போது plot கோட்டு தடிமன் 2 உடன் உருவாக்கப்பட்டது.
2:40 விடியோவை இங்கே இடை நிறுத்தி பயிற்சியை செய்து பின் தொடர்க.
2:45 sin(x) நீல நிறத்தில், கோட்டுத்தடிமன் 3 உடன் Plot செய்யவும்.
2:53 இப்போது தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறவும். நிறம், கோட்டுத்தடிமன் குறித்து தகவல் சேர்க்க வேலை முடியும்.
3:01 ஆகவே clf என type செய்து, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் b, linewidth is equal to 3 என type செய்க.
3:16 கோட்டை வெறும் புள்ளிகளின் தொகுப்பாக காண linestyle தரு மதிப்பை நிற தரு மதிப்புடனோ இல்லாமலோ தரலாம்,
3:25 அதற்கு முனையத்தில் டைப் செய்க: clf பின், plot x,sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் dot.
3:43 வெறும் புள்ளிகளாலான ப்லாட் கிடைக்கிறது.
3:49 இதே plot நீல நிறத்தில் பெற டைப் செய்க: clf, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் b dot.
4:02 ஆவணங்களில் மற்ற கொடுக்கக்கூடிய தரு மதிப்புகளை காணலாம்.
4:07 அதற்கு முனையத்தில் டைப் செய்க: plot பின் கேள்விக்குறி.
4:19 இப்போது ஆவணத்தை முழுமையாக படிக்க இயலும்.
4:23 விடியோவை இங்கே இடை நிறுத்தி பயிற்சியை செய்து பின் தொடர்க.
4:28 sine curve ஐ பச்சைநிற வட்டங்களால் Plot செய்க.
4:33 தீர்வுக்கு டெர்மினலுக்கு செல்வோம். கோட்டுப்பாங்கு நிறம் இரண்டையும் குறிப்பிடுவோம்.
4:40 ஆகவே, type செய்வோம்: clf() பின் plot அடைப்பு குறிகளுக்குள் x,cos(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் go.
4:56 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
5:02 x versus tan(x) வளைவை சிவப்பு சிறு கோடு வரியில் கோட்டு அகலம் 3 உடன் Plot செய்க.
5:13 தீர்வுக்கு டெர்மினலுக்கு போவோம்.
5:18 linewidth தருமதிப்பையும் linestyle ஐயும் பயன்படுத்தலாம்.
5:22 type செய்க: clf() -பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x, cos(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் r hyphen hyphen
5:36 இப்போது எளிய plot ஐ நாம் விரும்பும் நிறம் பாங்கு, கோட்டு தடிமனுடன் வரையத் தெரியும். மேலும் plot ஐ அலங்கரிப்பதை பார்க்கலாம்.
5:46 function minus x squared plus 4x minus 5 க்கு ஒரு ப்லாட் வரைந்து துவக்கலாம்.
5:52 இதற்கு type செய்க: clf பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x, minus x star x plus 4 star x minus 5,'r', linewidth is equal to 2.
6:16 காண்பது போல plot க்கு படத்தில் விவரணம் ஏதும் இல்லை.
6:21 plot க்கு ஒரு தலைப்பு மூலம் அது என்ன என்று குறிப்பிட title கட்டளையை பயன்படுத்துக.
6:26 ஆகவே, முனையத்தில் type செய்வோம்: title அடைப்பு குறிகளுக்குள் மேலும் இரட்டை மேற்கோள் குறிகளில் Parabolic function - x squared plus 4x minus 5
6:42 இப்போது ஒரு தலைப்பு இருக்கிறது.
6:45 ஆனால் அது ஒழுங்கு செய்யப்படவில்லை; அழகாக இல்லை.
6:49 இதில் பின்னங்களும் மேலும் சிக்கலான லாக், எக்ஸ்ப் போன்ற function களும் இருந்தால் அசிங்கமாகவே இருக்கும்.
6:57 ஆகவே, தலைப்பு ஒரு வேளை லேடக் ஒழுங்கில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்?
7:03 இதை செய்ய சரத்துக்கு முன்னும் பின்னும் $ குறியை இட வேண்டும்.
7:10 ஆகவே கட்டளையில் type செய்க: title அடைப்பு குறிகளுக்குள் மேலும் இரட்டை மேற்கோள் குறிகளில் Parabolic function dollar குறி minus x squared plus 4x minus 5 dollar குறி
7:26 polynomial -அடுக்குக்கோவை- ஒழுங்காகிவிட்டது.
7:30 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
7:35 படத்தின் தலைப்பை முழுதும் லேடக் பாங்கில் ஒழுங்கு செய்க.
7:41 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
7:45 தீர்வு முழு சரத்தையும் $ குறிகளுக்குள் இருத்துவது.
7:51 ஆகவே type செய்க: title அடைப்பு குறிகளுக்குள் dollar குறி Parabolic function -x squared plus 4x minus 5 dollar குறி.
8:01 இப்போது தலைப்பு இருந்தாலும் x y அச்சுக்களுக்கு லேபிள் இல்லாமல் முழுமை அடையவில்லை.
8:05 நாம் x-அச்சை "x" என்றும் y-அச்சை "f(x)" என்றும் label செய்வோம்.
8:12 ஆகவே அதற்கு முனையத்தில் type செய்க: xlabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளில் x , பின் - முனையம் ylabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளில் f of x.
8:31 நாம் கண்டது போல xlabel மற்றும் 'ylabel' கட்டளைகள் ஒரு சரத்தை தரு மதிப்பாக ஏற்கின்றன.
8:37 xlabel x-axis க்கு 'x' என label இடுகிறது. ylabel y-axis க்கு 'f(x)' என label இடுகிறது.
8:50 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
8:57 x மற்றும் y label களை "x" மற்றும் "f(x)" என லேடக் பாங்கில் அமைக்கவும்.
9:04 லேடக் வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது சரங்களை $ குறிகளுக்குள் இருத்துவதுதான்.
9:10 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். type செய்க: xlabel அடைப்பு குறிகளுக்குள் dollar குறி x dollar குறி.

ylabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் dollar குறி f of x dollar குறி.

9:31 plot இப்போது ஏறத்தாழ பூர்த்தி ஆகிவிட்டது. புள்ளிகள் மட்டுமே குறிக்கப்பட வேண்டும்.
9:37 உதாரணமாக புள்ளி (2, -1) என்பது local maxima.
9:42 அப்படி புள்ளியை குறிக்க நாம் விரும்பலாம்.
9:47 இதற்கு annotate function ஐ பயன்படுத்த வேண்டும்.
9:49 ஆகவே முனையத்தில் type செய்வோம்: annotate அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் local maxima comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் 2 comma -1.
10:04 நீங்கள் காண்பது போல annotate கட்டளைக்கு முதல் தரு மதிப்பு புள்ளியை குறிக்க நாம் பயன்படுத்தும் பெயர்; இரண்டாம் தரு மதிப்பு இந்த பெயர் தோன்ற வேண்டிய இடத்தின் ஆயத்தொலைவுகள்.
10:18 அது இரண்டு எண்கள் கொண்ட ஒழுங்கு வரிசை.
10:20 முதலாவது x ஆயம், இரண்டாவது y ஆயம்.
10:25 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
10:30 புள்ளி (-4, 0) க்கு "root" என பெயரிடவும்.
10:38 முதலில் இட்ட பெயர் என்ன ஆனது?
10:43 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
10:46 நாம் காண்பது போல ஒவ்வொரு annotate கட்டளை யும் படத்தில் புதிய பெயரிடலை செய்கிறது.
10:52 இப்போது plot ஐ அலங்கரிக்க எல்லாம் இருக்கிறது, ஆனால் அது அச்சுக்களின் எல்லைகளை அமைக்காவிடில் முழுமையாக இராது.
11:01 plot window வில் கொடுத்துள்ள button ஐ கொண்டு இதை செய்யலாம்.
11:06 அல்லது டெர்மினலில் இருந்தும் இதை அமைக்கலாம்.
11:13 இதற்கு "xlim()" மற்றும் "ylim()" functionகளை பயன்படுத்துக.
11:17 ஆகவே முனையத்தில் type செய்வோம்: annotate அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் root comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் minus 4 comma 0.
11:32 xlim functionநடப்பு x அச்சின் எல்லைகளை திருப்புகிறது. ylim நடப்பு y அச்சின் எல்லைகளை திருப்புகிறது.
11:41 x-அச்சின் எல்லைகளை -4 இலிருந்து 5 என கட்டளை xlim(-4,5) மூலம் மாற்றுக.
12:12 y-அச்சின் எல்லைகளை அதே போல அமைக்கவும்.
12:22 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
12:27 செவ்வகம் (-1, -15) மற்றும் (3, 0) என அச்சுக்களின் எல்லைகளை அமைக்கவும்.
12:37 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
12:40 பயிற்சியில் x-அச்சின் கீழ், மேல் வரைகள் முறையே -1 மற்றும் 3.
12:46 y-அச்சின் கீழ், மேல் வரைகள் முறையே -15 மற்றும் 0.
12:51 type செய்யலாம்: xlim அடைப்பு குறிகளுக்குள் -1 comma 3 மற்றும் ylim அடைப்பு குறிகளுக்குள் -15 comma 0.
13:02 இது தேவையான செவ்வகத்தை தருகிறது.
13:09 இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. இந்த tutorial லில் நாம் கற்றது: தரு மதிப்புகள் மூலம் plot இன் நிறம், கோட்டின் style, கனம் ஆகிய பண்புகளை மாற்றுதல்.
13:20 'title' கட்டளை மூலம் plot க்கு தலைப்பு தருதல்.
13:24 $ குறிகளை முன்னும் பின்னும் சேர்த்து லேடக் பாங்கு ஒழுங்கை கொண்டுவருதல்.
13:30 xlabel() மற்றும் ylabel() கட்டளைகள் மூலம் x y அச்சுக்களுக்கு Label இடுதல்.
13:36 annotate() கட்டளை மூலம் plot க்கு குறிப்புகள் சேர்த்தல்.
13:38 xlim() மற்றும் ylim() கட்டளைகள் மூலம் அச்சுக்களுக்கு வரம்பு அமைத்து அதை பெறுதல்
13:46 சில சுய பரிசோதனை கேள்விகள்.
13:50 1.cosine வரைபடம் ஒன்றை -2pi முதல் 2pi வரை கோட்டுத்தடிமன் 4 உடன் plot செய்க.
13:57 2. ylabel கட்டளையில் - உரையின் ஒதுக்கத்தை மாற்ற - வழி உண்டா என்று ஆவணங்களை பார்த்து கண்டு பிடிக்கவும்.
14:05 தேர்வுகள் ஆம் அல்லது இல்லை.
14:07 கடைசி கேள்வி. லேடக் ஒழுங்கில் தலைப்பு x^2-5x+6 என அமைக்கவும்.
14:15 இப்போது பதில்கள்
14:20 1. cosine வரைபடம் ஒன்றை -2pi முதல் 2pi வரை கோட்டுத்தடிமன் 4 உடன் plot செய்ய, linspace மற்றும் plot கட்டளையை இப்படி பயன்படுத்தவும்: x = linspace(-2*pi, 2*pi)
14:41 பின் - plot(x, cos(x), linewidth=4)
14:46 இரண்டாவது கேள்விக்கு பதில்: முடியாது. ylabel கட்டளையில் உரையின் ஒதுக்கத்தை மாற்ற தேர்வு கிடையாது.
14:53 மூன்றாவதான கடைசி. லேடக் ஒழுங்கில் தலைப்பு ஒழுங்கை அமைக்க சமன்பட்டை இரண்டு dollar குறிகளுக்குள் எழுத வேண்டும். title("$x^2-5x+6$")
15:11 இந்த tutorial ஐ ரசித்திருப்பீர்கள், பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst