GIMP/C2/Selecting-Sections-Part-2/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:16, 12 March 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.23 GIMP tutorialக்கு நல்வரவு.
00.25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00.31 இன்று Fuzzy Select Tool பற்றி காண்போம்.
00.36 இது கிட்டத்தட்ட select by colour tool க்கு சம்பந்தப்பட்டது.
00.40 ஆனால் fuzzy select tool ஒரு தொடர்ச்சியான பகுதியை மட்டும் தேர்கிறது. colour select tool ஒத்த நிறமுடைய அனைத்து பகுதிகளையும் தேர்கிறது.
00.54 Replace, Add, Subtract மற்றும் Intersect with the current selection போன்ற சில ஒத்த தேர்வுகள் உள்ளன, இப்போது Replace ஐ தேர்கிறேன்.
01.08 இங்கே அதே தேர்வைக் காணலாம், Antialiasing.
01.13 antialiasingஐ தேர்கிறோம் எனில், selectionன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் மிருதுவான விளிம்புகளைப் பெறுகிறோம்.
01.23 அது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் தேர்ந்தெடுத்ததற்கும் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் இடையே உண்மையில் கூர்மையான விளிம்புகள் உள்ளன.


01.33 மேலும் தேர்வுகள் Feather Edges மற்றும் Select Transparent Areas.
01.41 mask sensor ஐ பயன்படுத்தும் போது அநேகமாய் Select Transparent Areas பயனுள்ளதாக இருக்கும்.
01.50 Sample merged மற்றவற்றுடன் இருப்பது போன்றது. இது அனைத்து visible layer களையும் தேர்ந்தெடுகிறது.
01.58 இது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நடப்பு layer ல் இது வேலைசெய்கிறது.
02.04 படத்தின் மொத்த வெளியீட்டிலிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும்.


02.11 இங்கே Threshold உள்ளது. இது selection ல் அல்லது selectionக்கு வெளியே ஏதேனும் இருக்கும் போது நிறங்களுக்கிடையே எவ்வளவு வித்தியாசம்இருக்க அனுமதிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கிறது.
02.24 ஒரு தெளிவான நிறம் கொண்ட pixels ஐ தேர்ந்தெடுப்பதில் இது உதவுகிறது.
02.30 அடுத்த முக்கியமான selection... selection ல் எந்த mode உங்களுக்கு வேண்டும் என்பது.
02.37 composite mode என்பது red, green மற்றும் blue channelகளை சேர்த்த gray மதிப்பு ஆகும்.
02.44 உங்கள் selection ஐ பொருத்து red.... green...., blue channel... அல்லது Hue...., Saturation.... அல்லது Value channel ஐ தேர்ந்தெடுக்கலாம்.


02.56 இப்போது Fuzzy Select Toolஐ முயற்சிக்கலாம்.
03.01 படத்தினுள் சொடுக்குகிறேன். threshold zero ல் உள்ளது. எனவே நடப்பதைக் காண்போம்.
03.08 அளவில் ஒரு Pixel கொண்ட selection ஐ உருவாக்குகிறேன்.
03.13 இப்போது Threshold ஐ 30 என அதிகரிக்கிறேன். படத்தினுள் சொடுக்கி இங்கே toggle quick mask ஐ சொடுக்குக.
03.28 இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் காணலாம்.
03.37 quick mask toggleஐ தேர்வு நீக்குகிறேன், tool box ஐ பெற tab ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க Shift+Ctrl+A ஐ அழுத்துக.
03.49 இதை ஒரு வித்தியாசமான வழியில் செய்யலாம். அதற்கு threshold ஐ zero க்கு குறைக்கவும். படத்தினுள் சொடுக்கி mouse ஐ கீழே வலப்பக்கமாக வரைகிறேன்.
04.03 threshold ஐ அதிகரிக்கும்போது, இந்த blue வினுள் செல்கிறேன் என்பதைக் காணலாம். ஆனால் இன்னும் நான் சுவற்றின் மீதே இருக்கிறேன்.
04.13 graphic designerகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். புகைப்படக்காரர்களுக்காக அல்ல.


04.22 mouse ஐ சற்று இழுப்பதன் மூலம் threshold ஐ மாற்றலாம்.
04.26 இது colour selection toolலும் அதே வேலை செய்கிறது.
04.32 Select by ஐ Composite லிருந்து Hueக்கு மாற்றுகிறேன். அதே புள்ளியில் சொடுக்கி கீழே வரைகிறேன்.
04.43 சுவரின் நீல பச்சை பகுதியில் முன்னர் இருந்ததை விட நல்ல selection க்கு வழி கொண்டிருப்பதைக் காணலாம்.
04.54 எனவே colour definitionன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது இந்த tool உடன் நல்ல பலனைத் தருகிறது.
05.05 quick maskனுள் சொடுக்குகிறேன். இங்கே இது கிட்டத்தட்ட சரியாக இருப்பதைக் காண்க. சில பகுதிகளை மட்டும் சரிசெய்ய வேண்டும். quick mask ல் வரைவதுடன் அதை செய்வேன். இந்த selection toolகளுடன் அல்ல.


05.25 mode ஐ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தால் channel mode ல் பல்வேறு channelகளில் உங்கள் படத்தை காணலாம்.
05.41 blue channel ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் கிட்டத்தட்ட அதே blue மதிப்பில் இருப்பதைக் காண்க.
05.50 green channel ல் சில வித்தியாசங்கள் உள்ளன.
05.55 red channel ல் இங்கே கிட்டத்தட்ட அதே போன்றே உள்ளது.
05.59 எனவே தேர்ந்தெடுப்பதற்கு green channel ஐ தேர்ந்தெடுப்பேன் அல்லது இந்நிலையில் Hue channel.


06.10 இங்கே அடுத்த tool Selecting colour. இது இங்கே அதே செயல்பாடு மற்றும் தேர்வுகளைக் கொண்டுள்ளது.
06.19 ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது.
06.22 இங்கே சொடுக்கினால் இந்த நிறத்துடன் அனைத்து புலங்களையும் தேர்ந்தெடுப்பீர். ஒரு தொடர்ச்சியான பகுதியை அல்ல.
06.32 colour selection tool, ஒத்த நிறத்துடன் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுக்கிறது.
06.41 அடுத்த toolன் பெயர் intelligent scissors அல்லது scissors selection tool.
06.48 இந்த algorithm விளிம்புகளைத் தேடி selection உடன் அவற்றை பின்தொடர முயற்சிக்கிறது.
06.56 இங்கே இந்த அஞ்சல் பெட்டிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.
07.10 எனவே selection tool ஐ செயல்படுத்தி ஒரு புள்ளியை இங்கே இழுக்கிறேன். cursor க்கு அருகில் ஒரு கூட்டல் குறியைப் பெறுகிறோம். பின் வெறுமனே புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.


07.42 algorithm விளிம்புகளைத் பின்தொடர நினைக்கிறது. மற்ற வழியை இது எடுக்கவில்லை என காணலாம். உள்வழியை இது எடுத்தது.


07.56 படத்தை பெரிதாக்கி இப்போது இந்த புள்ளியை இதுவரை வரையலாம். இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிழை இருந்தது.
08.13 எனவே இந்த புள்ளிகளை மேலே இழுக்கிறேன். பின் தொடர தேவையான தகவல்களைக் கொடுத்தால் algorithm விளிம்புகளை பின் தொடர்வதைக் காணலாம்.
08.30 இது நன்றாக உள்ளது. ஆனால் வழக்கமாக நான் இதை பயன்படுத்துவதில்லை. இதை செய்ய வேறு நல்ல வழிகள் உள்ளன.
08.44 இது எப்போதும் சுற்றி தவறான வழியை எடுக்கிறது. ஆகையால் colour selection tool ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன்.
08.56 எனவே இந்த selection உடன் முடிக்கிறேன்.
09.10 இங்கே ஆரம்ப புள்ளி மீது சொடுக்குகிறேன். cursor கூட்டலாக மாறுகிறது.
09.17 இப்போது அடுத்த புள்ளியை வைக்கவும். அதற்கு வெளியே ஒரு சுழற்சியை உருவாக்க இந்த இரு வளையங்கள் உள்ளன.
09.25 இங்கே சுற்றி புள்ளியை இன்னும் நகர்த்தி selection ஐ மேலும் நன்றாக்க முடியும்.
09.33 எனவே இரண்டாவது முறை இப்போது selection ஐ சொடுக்கும்போது, selection தேர்ந்தெடுக்கப்படுகிறது.
09.42 தரத்தைப் பார்க்க quick mask ஐ செயல்படுத்தி அதை பெரிதாக்குகிறேன்.
09.57 இப்போது selection ஐ சுற்றி பார்க்கிறேன்.
10.04 இங்கே இது என் தவறு, இங்கே சொடுக்கி இருக்க வேண்டும்.
10.10 எனவே intelligent scissors பரவாயில்லை.
10.17 இன்று நான் சொல்ல விரும்புவதும் அடுத்ததுமான கடைசி tool foreground selection tool.
10.24 சில நாட்களுக்கு முன் இந்த algorithm வெளிவந்தபோது அது முற்றிலும் பரப்பரப்பாக இருந்தது. GIMP ல் பயன்படுத்துகையில் இது பரப்பரப்பானது அல்ல.
10.37 ஆனால் இதை முயற்சிக்கலாம்.
10.41 இங்கே அதே modes உள்ளன. antialiasing செயல்பாட்டில் இல்லை.
10.48 இங்கே ஒரே ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். இந்த சிலையை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்.
10.57 எனவே சற்று நல்ல காட்சியைப் பெற படத்தை பெரிதாக்குகிறேன், .
11.06 இப்போது selection toolஐ தேர்ந்தெடுக்கிறேன். தொடர்ச்சியான பகுதி அல்லது வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்கிறேன்.
11.21 முதலில் automatic laser tool மூலம் ஒரு தோராயமான selection ஐ உருவாக்குகிறேன். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
11.44 இங்கே ஒரு brush ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த slider மூலம் brush ன் விட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மீது வரைகிறேன். தேர்வு செய்யப்பட்டிருக்க விரும்புகிறேன்.
11.59 இந்த படத்தில் வைத்திருக்க விரும்பாததை தேர்ந்தெடுக்காமல் இருக்க பார்க்க வேண்டும்.
12.17 mouse button ஐ விடும் போது, algorithm வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இங்கே சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
12.27 ஒவ்வொருமுறையும் selection புதுப்பிக்கப்படும்போது அந்த விஷயத்துக்கு சம்பந்தபட்ட பகுதி... அதன் மீது நான் வரைந்தது... தேர்ந்தெடுக்கப்படுகிறது.
12.42 இப்போது Mark Backgroundமீது சொடுக்குகிறேன். படத்தில் வைத்திருக்க விரும்பாத background ஐ வரைய ஆரம்பிக்கிறேன்.
12.54 தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத பொருளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது இந்த tool நன்கு வேலை செய்கிறது. இங்கே அந்த வித்தியாசம் போதுமான அளவிற்கு பெரிது அல்ல.
13.12 selection ஐ ஏற்க enter ஐ அழுத்துக.
13.17 இந்த tool எவ்வாறு வேலைசெய்கிறது என ஒரு கற்பனையைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
13.27 path tool லும் இந்த பகுதியை சார்ந்ததே. ஆனால் அதை பிறகு விளக்குகிறேன்.
13.36 select menu ல் selections உடன் நீங்கள் செய்யக்கூடிய மேலும் பல உள்ளன. அவற்றையும் பின்னர் விளக்குகிறேன்.
13.48 எனவே இந்த tutorialல் அவ்வளவே.
13.52 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்து பார்க்கப்போகும் tutorial... பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன்.
14.05 கீழ்காணும் குறிப்பில் உள்ள meetthegimp.org ல் இந்த fileக்கான இணைப்பைக் காணலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
14.19 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana