GIMP/C2/Rotating-And-Cropping-An-Image/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:26, 25 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.22 Gimp tutorial க்கு நல்வரவு


00.24 இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் உங்கள் உண்மை புகைப்படத்திற்கு RAW பயன்படுத்துவது குறித்து சற்று சொல்ல விரும்புகிறேன்.
00.33 இந்த படத்தை JPEG ல் எடுத்திருந்தேன் எனில், இதை encode செய்ய brightness க்கு 256 படிகளை கொடுத்திருப்பேன்
00.42 இது சற்று கருப்பு வெள்ளையாகவும், நீலம் மற்றும் பச்சை கலந்ததாகவும் இருந்தாலும் அடிப்படையில் இது gray மட்டுமே.
00.52 JPEG உடன் gray க்கான 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன
01.00 கருப்புக்கு Zero மற்றும் வெள்ளைக்கு 255.
01.05 இந்த படத்தில் வெள்ளை இல்லை. சற்று கருப்பு உள்ளது.
01.11 எனவே சிறு இடம் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
01.16 எவ்வளவு என்று பிறகு சொல்கிறேன்.
01.19 இந்த படத்தை RAW ல் எடுத்திருக்கிறேன். 12 bit data format ல் raw படங்களை என் camera சேமிக்கிறது.
01.27 இதுதான் மதிப்புகளை இட்ட பின் raw converter மூலம் வெளிவந்த படம். இங்கே gray க்கு 256 வெவ்வேறு மதிப்புகள் உள்ளன. இப்போது இந்த படத்தை edit செய்ய ஆரம்பிக்கலாம்.
01.42 இந்த படம்... முதல் படத்துடன் ஒப்பிடப்படுவதால் இதில் மேலும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.
01.47 எனக்கு நினைவிருக்கிறது இது முதல் படம். conversionக்கு பின் இதை நான் பெற்றேன்.


01.54 முதல் படத்தின் mood ஐ கொண்ட, ஒரு படத்தில் முடிவைக் காட்டும், post processing செய்வதற்கான நல்ல அடிப்படை இரண்டாவது படம் ஆகும். ஆனார் சுமாராக உள்ளது.


02.06 இப்போது GIMP ல் இரு படங்களையும் திறந்துள்ளேன், எனவே இரு படங்களை histogram ல் பார்க்கலாம்.


02.14 image dialog ல் histogram மறைந்துள்ளது,
02.17 ஆனால் image dialog ஐ அடைய 3 வெவ்வேறு வழிகள் உள்ளன, முதல் வழி tool bar ல் உள்ளது


02.33 இரண்டாம் வழி இங்கே Access the Image Menu ல் சொடுக்கி dialogs ல் சொடுக்குவது
02.40 மூன்றாவது வழி படத்தின் மீது வெறுமனே வலது சொடுக்கி dialog பின் histogram.


02.48 இங்கே முதல் படத்தின் histogram உள்ளது.
02.51 இதை சற்று பெரிதாக்கவும். இங்கே படத்தில் வெவ்வேறு நிறங்களின் வெவ்வேறு pixelகளின் பகிர்வைக் காணலாம்.
02.59 Digital image என்பது எண்களின் மூலம் வரைவது போன்றது.
03.03 படத்தை பெரிதாக்கும்போது பல சிறு கட்டங்களைக் காணலாம். ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு நிறத்தை கொண்டது. இது pixel எனப்படும்.
03.14 ஒவ்வொரு நிறமும் ஒரு மதிப்பால் வரையறுக்கப்படுகிறது. color picker ன் உதவியுடன் இந்த மதிப்புகளைக் காட்டுகிறேன்.
03.26 colour pickerஐ பயன்படுத்தும்போது red, green மற்றும் blueன் மதிப்புகளைப் பெறுகிறேன்.
03.32 இந்த படத்தில் red ன் மதிப்பானது green மற்றும் blueன் மதிப்பை விட சற்று குறைவு.
03.38 Green உம் blue உம் கிட்டத்தட்ட ஒரே மதிப்பில் உள்ளன


03.43 எண்களால் வரைவது digital photography ஆகும்
03.46 இந்த படத்தில் இங்கே 0 முதல் 255 வரை எண்கள் உள்ளன, இங்கே முழுதும் கருப்பான பகுதி உள்ளது. ஆனால் இது நல்ல படத்தை கொடுக்கும் என நான் நினைக்கவில்லை.
04.00 படத்தின் உண்மை பகுதி இங்கே கிட்டத்தட்ட 80 லிருந்து ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன். படத்தின் பிரகாசமான பகுதி கிட்டத்தட்ட 200 ல் உள்ளது.
04.10 எனவே 0 முதல் 256 வரை இடம் உள்ளது, ஆனால் நாம் பயன்படுத்துவது 120 மட்டுமே. அது நாம் பயன்படுத்தும் data ன் பாதிக்கும் குறைவே.
04.23 அதனால் இங்கே படத்தின் ஏராளமான தகவல்கள் இழக்கப்படுகின்றன


04.29 இரண்டாம் படத்தின் histogram ஐ காணலாம்.
04.33 நாம் இங்கு பார்ப்பது போல முதலாவதுடன் ஒப்பிட்டதால் இந்த histogram களில் அதிக dataகள் உள்ளன. ஆனால் curve ன் அமைப்பு ஒரே மாதிரியானவை.
04.45 இந்த இரு histogramகளை ஒப்பிடுவோம்.
04.51 இரண்டாம் படத்தில் தகவல்கள் பரவியுள்ளது. எனவே இங்கே இரண்டாவது படத்தை முதலாவது போல compress செய்ய அந்த பிரச்சனையை நான் தீர்க்க வேண்டும்.
05.01 ஆனால் இது மேலும் பல தகவல்களை வைத்திருக்க வேண்டும். முதலாவது படத்தைப் போல இவ்வாறு மேலும் contrast ஐயும் வைத்திருக்க வேண்டும்.
05.11 இந்த படத்துடன் வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன், கடைசி tutorial ஐ நான் பதிவுசெய்த போது கண்டறிந்த gimp user interface பற்றி நான் சற்று காட்ட விரும்புகிறேன்.
05.23 image window ல் tab ஐ அழுத்தும்போது, இங்கே tool box மறைந்து படத்தை முடிந்தவரை பெரிதாக்க உதவுகிறது. என் தேவைக்கேற்ப tool box ஐ on மற்றும் off செய்யலாம்.


05.41 எனவே இங்கே நான் செய்வதை நானும் நீங்களும் நன்கு பார்க்கலாம்.
05.46 படத்தை edit செய்ய ஆரம்பிக்கும் முன் சில settings ஐ நான் மாற்ற வேண்டும்.
05.52 எனவே file, preference மற்றும் இங்கே window management சென்று இங்கே tool box க்கு keep above மற்றும் docksக்கும் keep above ஐ தேர்கிறேன். மீதி optionகளை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன்.
06.11 OK ஐ அழுத்தியபின் GIMP அறிவித்தவாறே வேலைசெய்கிறது.
06.17 tool box லிருந்து tools ஐ தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தெடுத்த tool ன் அனைத்து option ஐயும் பெறலாம்.
06.25 படத்தின் மீது மீண்டும் சொடுக்கி tab ஐ பயன்படுத்தி tool box ஐ on மற்றும் off செய்யலாம்.


06.33 முதல் விஷயமாக படம் சரிமட்டமாக உள்ளதா என சோதிக்க வேண்டும்.
06.37 இந்த படத்தில், இங்கே மனிதன் உருவாக்கிய நம்பகமான அமைப்பு ஏதும் இல்லை, எனவே படம் நேராக உள்ளதா என சோதிக்க grid method ஐ நான் பயன்படுத்த முடியாது.
06.47 நீரின் மேற்பரப்பு ஒரு நல்ல குறிப்பு ஆகும்.
06.50 ஆனால் எல்லையை இங்கு நாம் காணவில்லை. நீரின் கோடுகளும் சற்று தவறாக வழிநடத்துகிறன.
06.57 இங்கே இது எல்லை இல்லை. ஆனால் ஆற்றில் வளைவு உள்ளது.


07.02 எனவே ruler ஐ அமைக்கவும் எல்லையை சோதிக்கவும் எனக்கு உண்மை குறிப்பு இல்லை.
07.08 என் கண்களை மட்டுமே நான் நம்ப வேண்டும். புகைப்படத்தில் ஏதேனும் செய்ய அது மோசமான வழி என்று நான் நினைக்க வில்லை.


07.16 இப்போது நான் rotate tool ஐ தேர்ந்து corrective backward க்கு பதில் normal forward ஐ தேர்கிறேன். preview ல் image ஐ அமைக்கிறேன். grid அல்ல.
07.30 சரி. படத்தில் சொடுக்கலாம்.


07.38 இங்கே மையத்தில் center of rotation என்ற ஒரு புள்ளி உள்ளது. அதை சுற்றி படம் சுழற்றப்படும்
07.46 இங்கே படத்தை சுழற்ற விரும்பும் கோணத்தை அமைக்க dialog உள்ளது.
07.52 படத்தை சுழற்றுவதுதில் உதவ இங்கே ஒரு slider உள்ளது. ஆனால் இதை கையாளுவது கடினம் என காணலாம். இந்த அளவுக்கு படத்தை சாய்க்க முடியும் என்று நான் நினைக்க வில்லை.
08.05 எனவே இங்கு zero க்கு செல்கிறேன். இப்போது படத்தை சுழற்ற இந்த பாணியைப் பயன்படுத்துகிறேன்.
08.14 படம் வலப்பக்கமாக சற்று சாய்ந்துள்ளது என நினைக்கிறேன். எனவே படத்தை இடப்பக்கமாக சுழற்ற வேண்டும். அதாவது இடஞ்சுழியாக. எனவே எதிர்மறை மதிப்புகளைத் தரவேண்டும்.


08.29 எனவே சரியான நேரான படத்தை பெறும்வரை angle ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறேன்


08.36 எனவே -0.25° க்கு angle ஐ அமைக்கிறேன்
08.43 இந்த window ஐ மேலே இழுத்து rotate ல் சொடுக்கி இந்த செயல்பாட்டின் முடிவிற்காக காத்திருக்கவும்.
08.50 அடுத்த படி cropping
08.54 படத்தில் கப்பல், நீர் மற்றும் இந்த பறவைகளை வைத்திருக்க விரும்புகிறேன்.
09.02 இந்த படத்தில் இங்கே இந்த புல், இங்கே இந்த பகுதி தேவையில்லை. மற்றும் என் படத்தில் இந்த ஆற்றின் கரை வேண்டும் என நான் நினைக்கவில்லை.
09.16 படத்தின் இந்த பகுதியை crop செய்வேன் என நினைக்கிறேன். ஏனெனில் பின்னர் படத்தின் மிக இருண்ட பகுதி எனக்கு வேண்டும்.
09.24 அதாவது பறவைகள் இங்கே, கப்பல் மற்றும் மரங்கள், கப்பலுக்கு பின் கரை, கடைசியாக நீர் மற்றும் வானம்.


09.35 படத்தின் இந்த பகுதி மிக இருண்டுள்ளது.
09.39 முடிந்தவரை ஆற்றின் பகுதியை சேர்க்க விரும்புவதால் படத்தின் இந்த பகுதியை பெரிதாக்க விரும்புகிறேன். ஆனால் கரையின் பகுதி ஏதும் இல்லை.
09.49 எனவே hot key Z ஐ அழுத்தி படத்தின் இந்த பகுதியை பெரிதாக்குகிறேன்.


10.00 இங்கே மற்றொரு பறவை பறக்கிறது.
10.02 எனவே இடப்பக்கம் சென்று...... ruler ஐ கரைக்கு அருகில் இழுத்து...... இங்கே விடுகிறேன்
10.09 Shift + ctrl + E அழுத்துக. இது படத்திற்கு திரும்ப அழைத்து செல்லும்.


10.15 இப்போது crop tool ஐ தேர்ந்து அதில் சில optionகளை அமைக்கலாம்.
10.20 எனக்கு fixed aspect ratio 2:1 வேண்டும்.
10.29 மேலும் உதவிக்கு preview ல் rule of thirds ஐ அமைக்கிறேன். இது சில உதவும் வரிகளை கொடுக்கும்.
10.37 இங்கே சேர்த்தவைகளைக் காணலாம்.
10.41 இங்கே பறவைகளின் கூட்டம் மற்றும் இங்கே ஒரு தனிப்பறவை உள்ளது.
10.47 இப்போது rulerகளை சொடுக்கலாம்.


10.51 படத்தின் கீழ்ப்பகுதியில் அங்கே நீர் உள்ளது. ஆனால் இதில் போதுமான நீர் இல்லை. மற்றும் வானம் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
11.01 மேலே இங்கே இந்த தனிப்பறவையை விட்டுவிடலாம். படத்தில் பறவைகளின் கூட்டம் இருப்பதை விரும்புகிறேன்.
11.09 இப்போது இதை சற்று கீழே இழுக்கிறேன. இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்
11.14 வேலையை சோதிக்க rule of thirds ஐ தேர்கிறேன்.
11.19 என் கண் மிகவும் மோசம் இல்லை. ஏனெனில் படத்தை நீர் மரங்கள் மற்றும் வானம் என மூன்று வெவ்வேறு பகுதிகளாக பிரித்தேன்.
11.30 கப்பல் ஆர்வமுள்ளவைகளில் ஒன்று
11.34 பறவைகளின் கூட்டம் ஆர்வமுள்ளவைகளில் இரண்டாவது. இது படத்தின் ஒன்பதில் ஒரு பங்கு... நன்றாக உள்ளது.


11.42 இது வேலை செய்யும் என நினைக்கிறேன். எனவே crop செய்ய படத்தினுள் சொடுக்குகிறேன்.
11.49 படத்தை பெரிதாக்க tab மற்றும் shift + ctrl +E ஐ அழுத்தவும்.
11.55 படத்தை crop செய்வதுடன் நன்கு ஆரம்பித்துள்ளோம் என நினைக்கிறேன். இந்த படத்துடன் செய்ய மற்றவைகளை அடுத்த tutorialகளில் காட்டுகிறேன்.
12.05 இதை முடிக்கும் முன் படத்தை சேமிக்க வேண்டும். இதை சற்று முன்னரே கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்.
12.12 படத்தை Fog.xcf என சேமிக்கிறேன். ‘xcf’ என்பது GIMP ன் சொந்த file format extension. இது உதவிகரமான layersன் தகவல்கள், undo தகவல்கள் மற்றும் GIMPன் மேலும் பலவற்றை கொண்டுள்ளது.


12.29 உங்களிடமிருந்து பின்னூட்டம் பெற விரும்புகிறேன்.


12.32 உங்களுக்கு பிடித்தது, இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என தோன்றுவது ஆகியவற்றை info@meetthegimp.org மூலம் மின்னஞ்சல் செய்யவும்.
12.42 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org
12.47 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana