Geogebra/C3/Tangents-to-a-circle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:20, 27 February 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 வணக்கம் "Tangents to a circle in Geogebra" tutorial க்கு நல்வரவு!
00.06 இந்த tutorial லின் இறுதியில் வட்டத்துக்கு தொடுகோடுகள் வரைய முடியும், தொடுகோடுகளின் பண்புகளை புரிந்து கொள்ளலாம்.
00.17 Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்
00.22 இல்லையானால் பொருத்தமான tutorialகளை எங்கள் வலைத்தளத்தில் காணவும் http://spoken-tutorial.org.
00.27 இந்த டுடோரியலை பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10, Geogebra Version 3.2.47.0 .
00.41 பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம்
   .Tangents,
   .Perpendicular Bisector
   .Intersect two Objects,
   .Compass,
   .Polygon 
   .Circle with Center and Radius.
00.58 புதிய Geogebra window வை திறப்போம் .
01.01 இதற்கு Dash home .. Media applications..., Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும்
01.13 வட்டத்தின் 'தொடுகோடு' ஐ வரையறுப்போம்.
01.16 தொடுகோடு என்பது வட்டத்தை ஒரே ஒரு புள்ளியில் தொடும் கோடு.
01.22 அப்படி தொடும் புள்ளி "தொடுநிலைப்புள்ளி" எனப்படும்.
01.27 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது "Axes" க்கு பதில் "Grid" layout... drawing pad மீது வலது சொடுக்கவும் .
01.35 "Axes" ஐ uncheck செய்து "Grid" ஐ தேர்க.
01.39 வட்டத்துக்கு தொடுகோடு வரைவோம்
01.42 முதலில் வட்டத்தை வரைவோம்
01.45 “circle with Center and radius” tool ஐ toolbar இலிருந்து தேர்க
01.49 புள்ளி 'A' ஐ drawing pad இல் குறிக்கவும்
01.52 dialogue box திறக்கிறது.
01.53 ஆரத்தின் மதிப்பு '3' என உள்ளீடுக; ஓகே செய்க
01.58 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3' cm உடைய வட்டம் வரையப்படும்
02.04 புள்ளி 'A' ஐ நகர்த்தி வட்டம் அதே ஆரத்துடன் இருப்பதை காண்க.
02.09 "New point" tool மீது சொடுக்கவும், புள்ளி 'B' ஐ வட்டத்தின் வெளியே குறிக்கவும்
02.15 "Segment between two points " tool ஐ தேர்க. புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி AB வரையப்படும்
02.25 "Perpendicular Bisector" tool ஐ தேர்க , புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி 'AB' க்கு செங்குத்து சமவெட்டி வரையப்படும்
02.37 வட்டப் பகுதி 'AB' மற்றும் செங்குத்துச் சமவெட்டி ஒரு புள்ளியில் வெட்டிகொள்கின்றன. "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.
02.44 இந்த வெட்டுப்புள்ளியை 'C' எனக்குறிக்கலாம். புள்ளி 'B' ஐ நகர்த்தி எப்படி செங்குத்துச் சமவெட்டி மற்றும் புள்ளி 'C' புள்ளி 'B' உடன் நகர்கிறது என காண்க
02.59 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என்று எப்படி காண்பது?
03.02 "Distance" tool மீது சொடுக்கவும். பின் புள்ளிகள் 'A' , 'C'. 'C' ,'B' மீது சொடுக்கவும். 'AC' = 'CB' சமம் என்பது 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என நிரூபிக்கிறது.


03.20 "Compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க. புள்ளிகள் 'C', 'B' மீது சொடுக்கவும். மீண்டும் 'C' மீது... படம் பூர்த்தி ஆகிறது.
03.30 இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் வெட்டிகொள்கின்றன.


03.33 "Intersect two objects" tool மீது சொடுக்கவும். வெட்டு புள்ளிகளை 'D' மற்றும் 'E' எனக்குறிக்கலாம்.
03.42 "Segment between two points " tool ஐ தேர்க.
03.45 புள்ளிகள் 'B', 'D' மற்றும் 'B' , 'E' ஐ சேர்க்கவும்


03.53 வட்டப் பகுதிகள் 'BD' மற்றும் 'BE' ... வட்டம் 'c' க்கு தொடுகோடுகள்.
03.59 வட்டத்தின் தொடுகோடுகளின் சில பண்புகளை பார்க்கலாம்.
04.05 "Segment between two points " tool ஐ தேர்க.
04.08 புள்ளிகள் 'A', 'D' மற்றும் 'A', 'E' ஐ சேர்க்கவும்
04.14 முக்கோணங்கள் 'ADB' மற்றும் 'ABE' இல்... வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE' (இவை வட்டம் 'c' இன் ஆரங்கள்).
Algebra view வில் காண வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE'.
04.34 '∠ADB'= '∠BEA' வட்டம் 'D' இன் அரை வட்டத்தின் கோணம்.  இந்த கோணத்தை அளக்கலாம்.
04.48 "Angle" tool மீது சொடுக்கவும் ... புள்ளிகள் 'A', 'D', 'B' மற்றும் 'B', 'E', 'A' மீது சொடுக்கவும். கோணங்கள் சமம்.
05.03 வட்டப் பகுதி 'AB' இரண்டு முக்கோணங்களுக்கும் ஒன்றே, ஆகவே "SAS சர்வ சம விதி"ப்படி '△ADB' '≅' '△ABE'
05.20 அதாவது தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம்!
05.26 Algebra view விலிருந்து தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம் எனக்காணலாம்.
05.33 தொடுகோடு... தொடுபுள்ளியில், வட்டத்தின் ஆரத்துக்கு எப்போதுமே செங்குத்தாக இருக்கிறது என்பதையும் காண்க.
புள்ளி  'B' ஐ நகர்த்தி...  தொடுகோடுகள்  அதனுடன் நகர்வதை காணவும்.
05.50 file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்
05.54 file name ஐ "Tangent-circle" என இட்டு "Save"மீது சொடுக்கவும்
06.08 ஒரு தேற்றத்தை கூறலாம்.
06.11 "வட்டத்தின் தொடு கோட்டின் தொடு புள்ளி வழியே... ஒரு நாண் வரையப்பட்டால்... அந்த நாண்... தொடுகோட்டுடன் ஏற்படுத்தும் கோணங்கள் முறையே ஒவ்வொன்றும்... தனித்தனியாக மாற்று வட்டத்துண்டுகளில் அமைந்த கோணங்களுக்கு சமம்".
தொடு கோடுகளுக்கும் நாணுக்கும் இடையேயான கோணம் DFB  =  நாண் BF இன் உட்கோணம் FCB .
06.34 தேற்றத்தை சோதிக்கலாம்.
06.38 புதிய Geogebra window வை திறப்போம் . “File” >> "New"மீது சொடுக்கவும். ஒரு வட்டத்தை வரைவோம்
06.48 tool bar இலிருந்து "circle with center through point " toolமீது சொடுக்கி புள்ளி 'A' ஐ மையமாக இடுக; மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' ஐ பெறவும்.
06.59 "New point" tool ஐ தேர்க. புள்ளி 'C' ஐ பரிதியில் குறிக்கவும்; மேலும் 'D' வட்டத்தின் வெளியில்.
07.06 "Tangents" tool ஐ toolbar இலிருந்து தேர்க. புள்ளி 'D' மீதும் பரிதியிலும் சொடுக்கவும் .
07.14 இரண்டு தொடுகோடுகள் வட்டத்துக்கு வரையப்பட்டன.
07.16 தொடுகோடுகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன.
07.20 "Intersect two objects" tool மீது சொடுக்கவும். தொடும் இடத்தில் புள்ளிகளை 'E' மற்றும் 'F' எனக்குறிக்கலாம்
07.28 ஒரு முக்கோணத்தை வரையலாம். "Polygon" tool மீது சொடுக்கவும்.
07.31 புள்ளிகள் 'B' 'C' 'F' மற்றும் மீண்டும் 'B' மீது சொடுக்கி பூர்த்தி செய்க
07.41 படத்தில் 'BF' தான் வட்டம் 'c' யின் நாண்.
07.45 '∠FCB' என்பது வட்டம் 'c' யின் நாண் உண்டாக்கும் உட்கோணம்.
07.53 '∠DFB' வட்டம் 'c' யின் நாண் மற்றும் தொடுகோட்டுக்கு இடையேயான கோணம்.
08.01 கோணங்களை அளக்கலாம். "Angle" tool மீது சொடுக்கவும்; புள்ளிகள் D' 'F' 'B' மற்றும் 'F' 'C' 'B' மீது சொடுக்கவும்.
08.14 '∠DFB' = '∠FCB' என்பதை காண்க. புள்ளி 'D' ஐ நகர்த்தி தொடுகோடுகள் மற்றும் நாண்கள் புள்ளி 'D' உடன் நகர்வதை காண்க.
08.31 file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்
08.36 file பெயரை "Tangent-angle" எனத்தருகிறேன். "Save" மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08.50 சுருங்கச்சொல்ல இந்த tutorial லில், நாம் சோதிக்க கற்றது;
08.57 "ஒரு வெளிப் புள்ளியிலிருந்து வரைந்த தொடுகோடுகள் சமம்."
09.01 " தொடுகோடு மற்றும் வட்டத்தின் ஆரத்தின் இடையே உள்ள கோணம் 90^0"
09.07 " தொடுகோடு மற்றும் நாணிடையே உள்ள கோணம் நாண் தாங்கும் உட்கோணத்துக்கு சமம். "
09.14 assignment ஆக நீங்கள் சோதிக்க வேண்டியது:
09.17 "ஒரு வட்டத்துக்கு வரையப்பட்ட தொடுகோடுகள் இடையே உள்ள கோணம், மையத்தையும் தொடுபுள்ளிகளையும் சேர்க்கும் கோட்டுத்துண்டு தாங்கும் கோணத்துக்கு மிகை நிரப்பல் ஆகும்.”
09.30 சோதிக்க ஒரு வட்டம் வரைக.
வெளிப்புள்ளியிலிருந்து தொடுகோடுகள் வரைக .
09.37 தொடுகோடுகளின் தொடு புள்ளிகளை குறிக்கவும். வட்டத்தின் மையத்தை தொடு புள்ளிகளுடன் இணைக்கவும்.
09.44 மையத்தில் கோணத்தை அளக்கவும். தொடுகோடுகள் இடையே கோணத்தை அளக்கவும்.
09.49 இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? மையத்தையும் வெளிப் புள்ளியையும் இணைக்கவும்.
09.55 கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக மையத்தில் வெட்டுகிறதா? குறிப்பு- Angle Bisector tool ஐ பயன்படுத்துக
10.05 output இப்படி இருக்க வேண்டும்.


10.08 கோணங்களின் கூட்டுத்தொகை 180^0. கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக வெட்டுகிறது
10.16 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/
10.19 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. வேகமான இணைப்பு இல்லையானல் தரவிறக்கி காண்க
10.27 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
10.32 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
10.35 மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org.
10.42 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்
10.47 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
10.54 மேலும் விவரங்கள் இந்த தொடுப்பில் உள்ளன http://spoken-tutorial.org/NMEICT-Intro
10.59 மூல பாடம் SNDT Mumbai இலிருந்து Neeta Sawant
11.04 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, PoojaMoolya, Priyacst, Ranjana