LibreOffice-Suite-Base/C2/Modify-a-Report/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:34, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:02 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த டுடோரியலில் கற்கப் போவது:
00:09 ஒரு report இன் layout ஐயும் தோற்றத்தையும் மாற்றுவது
00:16 இதற்கு Library database உதாரணத்தை பார்க்கலாம்.
00:23 முந்தைய tutorial லில் report ஐ உருவாக்குவதை கற்றோம்.
00:28 ‘Books Issued to Members: Report History’ என்ற தலைப்புடன் ஒரு report ஐயும் உருவாக்கினோம். இந்த report ஐ எப்படி மாற்றுவது என்று பார்க்கலாம்.
00:40 Library database இல் ...
00:42 இடது பானலில் Reports icon ஐ சொடுக்கலாம்.
00:47 வலது panelலில் reports list இல் ‘Books Issued to Members: Report History’ report ஐ காணலாம்.
00:56 அதன் மீது வலது சொடுக்கி பின் Edit மீது சொடுக்கவும். மாற்றவோ திருத்தவோ report திறக்கிறது.
01:08 இப்போது Report Builder window என்னும் புதிய window திறப்பதை பார்க்கலாம்.
01:14 இந்த screen இல் மூன்று section கள் உள்ளன.
01:19 Page Header மற்றும் Footer section ஆகியன மேலேயும் கீழேயும் இருக்கின்றன.
01:26 பின் Header section
01:29 மற்றும் Detail section.
01:34 ஒரு record header மற்றும் ஒரு footer section களை சேர்க்கலாம்.
01:39 இதற்கு main screen இல் வெள்ளை இடத்தில் வலது சொடுக்கி பின் ‘Insert Report Header/Footer’ மீதும் சொடுக்குக.
01:51 screen இன் இடது பக்கம் ஆரஞ்சு இடங்களில் இரட்டை சொடுக்கி section களை சுருக்கலாம் அல்லது விரிக்கலாம்.
02:00 முதலில் இங்கு Report design window வின் ஒரு screenshot ஐ காட்டுகிறேன்.
02:05 report design ஐ இது போல தோன்றும் படி மாற்ற வேண்டும்.
02:11 சில text labels, fonts, formatting ஆகியவற்றை சேர்த்து, பல section களிடையே உள்ள இடைவெளியையும் மாற்றுவோம்.
02:20 சில report headers மற்றும் footers களை சேர்ப்போம்.
02:27 இதற்கு மேலே மெனு பாரில் Report Controls toolbar இன் கீழ் Label field icon இல் சொடுக்குவோம்.
02:40 காட்டுவது போல அதை Report Header இடத்தில் இழுப்போம்.
02:47 மற்றும் Label மீது double click செய்து வலப் பக்கம் properties ஐ கொண்டு வரலாம்.
02:55 இங்கு, Label க்கு எதிரே ‘Books Issued to Members: Report History’ என type செய்து

Enter ஐ அழுத்துவோம்.

03:07 font style ஐயும் மாற்றலாம். Arial Black, Bold மற்றும் Size 12 ஐ தேர்ந்தெடுப்போம்.
03:17 மற்றும் Ok மீது சொடுக்கலாம்.
03:20 அடுத்து, screen இல் காண்பது போல இன்னொரு label ஐ report Header க்கு சேர்ப்போம். <pause>
03:31 உதாரணமாக, type செய்யலாம்: ‘Report Prepared by Assistant Librarian’ <pause>
03:42 பின் font style ஐ Arial, Bold Italic மற்றும் Size 8 க்கு மாற்றலாம் <pause>
03:51 இப்போது அதே படிகளால் மீண்டும் Report Footer இடத்தில் label ஐ சேர்ப்போம். <pause>
03:59 இம் முறை label க்கு எதிரில் type செய்யலாம்: ‘Nehru Library, New Delhi’.<pause>
04:09 font style ஐ Arial, Bold Italic மற்றும் Size 8 க்கு மாற்றலாம். <pause>
04:20 இப்போது spacing ஐ சீராக்கலாம்.
04:24 முதலில் Page Header இடத்தை Page Header மற்றும் Report Header நடுவில் உள்ள grey கோடு மீது double click செய்து;
04:37 பின் சொடுக்கி - இழுத்து - எல்லாவற்றுக்கும் மேலே விட்டு விடுவோம்.
04:47 அடுத்து Report header இடத்தை குறைப்போம்.
04:52 Page Header மற்றும் Report Header நடுவில் உள்ள grey கோடு மீது double click செய்து. <pause>
05:01 இதே போல் Report footer மற்றும் Page footer இடையில் உள்ள இடத்தை குறைக்கவும். <pause>
05:13 Header label களை மையத்துக்கு கொண்டு வரலாம்.
05:18 இதற்கு முதலில் எல்லா labelகளையும் Book Title மீது சொடுக்கி தேர்ந்தெடுத்து...
05:26 Shift key ஐ அழுத்தியபடி, காட்டியபடி மீதி label கள் மீது சொடுக்குவோம்.
05:35 இப்போது up arrow key யால் அவற்றை மையப்படுத்தலாம்.
05:41 இப்போது, header க்கு ஒரு வெளிர் நீல background தரலாம்.
05:47 இதற்கு, properties க்கு சென்று மற்றும் Background transparent ஐ No என அமைத்து
05:55 பின் Blue 8 ஐ list இலிருந்து Background colour ஆக தேர்ந்தெடுக்கலாம்.
06:03 அதையே Detail section னிலும் செய்வோம்.<pause>
06:09 இதற்கு முதலில் Detail மற்றும் report footer sectionகள் இடையே உள்ள spacing ஐ அதிகமாக்க வேண்டும்.<pause>
06:19 மேலும் field களை மையப்படுத்த வேண்டும். <pause>
06:24 Detail section க்கு Light gray background ஐ காட்டியபடி select செய்வோம். <pause>
06:32 அடுத்து, Checked In field க்கு data formatting ஐ மாற்றுவோம்.
06:39 இதற்கு 1 அல்லது 0 என்னும் Boolean value கள் இருப்பதால், அது True அல்லது False எனக்காட்டுகிறது.
06:47 இன்னும் தோதான Yes அல்லது No option ஐ காட்டும்படி மாற்றுவோம்.
06:53 இதற்கு, வலப் பக்கம் Detail section இல் CheckedIn field இல் double click செய்வோம்.
07:01 இப்போது வலப் பக்கம் properties இல், Data tab மீது முதலில் சொடுக்குவோம்.
07:08 CheckedIn என்று சொல்லும் Data field அருகில் உள்ள button மீது click செய்யலாம்.
07:15 இது Function wizard என்னும் popup window வை திறக்கிறது.
07:20 இங்கு, வலப் பக்கம் கீழே உள்ள Formula text box ஐ முதலில் காலிசெய்வோம்.
07:27 Category dropdown மீது click செய்து பின் ‘IF’ மீது double click செய்வோம்.
07:35 இப்போது வலப் பக்கம் புதிய control களை காண்கிறோம்.
07:40 முதல் text box க்கு அடுத்துள்ள Select icon மீது click செய்வோம்.
07:49 இங்கு CheckIn மீது double click செய்யலாம்.
07:53 Yes என double-quotes களுக்குள் இரண்டாம் text box இல் type செய்யலாம்.
08:01 பின் மூன்றாம் text box இல் No என type செய்யலாம். <pause>
08:11 இப்போது Properties section னுக்குள் General tab க்கு செல்வோம்.
08:17 மற்றும் கீழே Formatting எதிரில் உள்ள button மீது click செய்யலாம்.
08:23 இங்கு Category list இல் ‘Text’ மீது click செய்வோம்.
08:28 பின் OK button மீது click செய்வோம்.
08:32 இப்போது report ஐ சேமிக்கலாம்.
08:36 நம் modified report ஐ இப்போது ஓடவிடலாம்.
08:41 இதற்கு, மேலே Edit menu மீது click செய்து பின் Execute Report மீதும் click செய்வோம்.
08:50 memberகளுக்கு தந்த புத்தகங்கள் பற்றி நல்ல report history கிடைக்கிறது.
08:57 spacing, headers, footers, fonts ஆகியவற்றை கவனிக்கவும்.
09:01 மேலும் Yes அல்லது No என்று சொல்லும் CheckedIn field ஐயும்...
09:06 நம் report ஐ மாற்றி முடித்துவிட்டோம்.
09:11 இத்துடன் LibreOffice Base இல் Modifying a Report மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
09:17 கற்றது:
09:20 ஒரு report இன் layout ஐயும் தோற்றத்தையும் எப்படி மாற்றுவது
09:26 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் பின்வரும் வலைத்தளத்தில் கிடைக்கும்
09:48 தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...

கலந்து கொண்டமைக்கு நன்றி! வணக்கம்

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst