C-and-C++/C4/Understanding-Pointers/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 09:06, 8 May 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00.01 C மற்றும் C++ ல் Pointers குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00.06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00.08 Pointers.
00.10 Pointers ஐ உருவாக்குவது.
00.12 Pointers மீதான செயல்பாடுகள்.
00.14 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
00.18 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10
00.25 gcc மற்றும் g++ compiler பதிப்பு 4.6.1
00.31 Pointers க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00.34 Pointers... memory ல் இடங்களை சுட்டிக்காட்டுகிறது.
00.38 Pointers... memory address ஐ சேமிக்கிறது.
00.41 அந்த address ல் சேமிக்கப்பட்ட மதிப்பையும் இது தருகிறது.
00.45 இப்போது, pointers க்கான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்
00.48 நம் file பெயர் pointers_demo.c என்பதை கவனிக்கவும்
00.54 இப்போது code க்கு செல்வோம்
00.56 இது நம் header file stdio.h
01.00 இது நம் main function
01.03 இங்கே long integer num ஐ... மதிப்பு 10 க்கு assign செய்துள்ளோம்
01.09 பின் ஒரு pointer ptr ஐ declare செய்துள்ளோம்.
01.12 ஒரு pointer ஐ declare செய்ய நட்சத்திர குறி பயன்படுகிறது.
01.16 இந்த pointer... type long int க்கு சுட்டிக்காட்டப்படலாம்.
01.20 printf statement ல் ampersand... variable ன் memory address ஐ பெற பயன்படுகிறது.
01.28 எனவே ampersand num... num ன் memory addr ess ஐ கொடுக்கும்.
01.33 இந்த statement... variable num ன் address ஐ அச்சடிக்கும்.
01.37 இங்கே ptr... num ன் address ஐ சேமிக்கிறது.
01.41 இந்த statement... ptr ன் address ஐ அச்சடிக்கும்.
01.45 Sizeof function... ptr ன் அளவைக் கொடுக்கும்.
01.49 இது ptr ன் மதிப்பைக் கொடுக்கும்.
01.51 இது num ன் memory address.
01.54 இங்கே asterisk ptr... address ன் மதிப்பைக் கொடுக்கும்.
01.59 எனவே asterisk ஐ பயன்படுத்துவது memory address ஐ கொடுக்காது.
02.03 அதற்கு பதிலாக இது மதிப்பைக் கொடுக்கும்.
02.06 %ld... long int க்கான format specifier.
02.10 இப்போது program ஐ இயக்குவோம்
02.13 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் terminal window ஐ திறப்போம்
02.21 compile செய்ய டைப் செய்க gcc space pointers underscore demo dot c space hyphen o space point
02.32 Enter ஐ அழுத்துக
02.34 டைப் செய்க dot slash point. Enter ஐ அழுத்துக
02.39 வெளியீடு காட்டப்படுகிறது
02.42 num address உம் ptr மதிப்பும் ஒன்றே என காண்க.
02.48 num ன் memory address உம் ptr உம் ஒன்றல்ல.
02.53 பின் pointer ன் அளவு 8 bytes.
02.57 ptr ஆல் சுட்டிக்காட்டப்படும் மதிப்பு 10. அது num க்கு assign செய்யப்பட்டது
03.03 இப்போது அதே program ஐ C++ ல் காண்போம்.
03.07 file பெயர் pointer underscore demo.cpp என காண்க
03.13 இங்கே சில மாற்றங்கள் உள்ளன. header file iostream
03.19 பின் std namespace ஐ பயன்படுத்துகிறோம்
03.23 printf function இடத்தில் cout function உள்ளது
03.28 மற்றவை அனைத்தும் ஒன்றே
03.30 Program ஐ இயக்குவோம். நம் terminal க்கு வருவோம்.
03.34 compile செய்ய டைப் செய்க g++ space pointers_demo.cpp space hyphen o space point1, Enter ஐ அழுத்துக
03.50 டைப் செய்க dot slash point1, Enter ஐ அழுத்துக
03.55 வெளியீடு நம் C program ல் பெற்றது போன்றதே என காணலாம்
04.00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
04.03 நம் slide க்கு வருவோம்
04.05 சுருங்க சொல்ல நாம் கற்றது
04.08 Pointer பற்றி.
04.10 ஒரு pointer ஐ உருவாக்குவது.
04.12 Pointer மீதான செயல்பாடுகள்.
04.14 பயிற்சியாக, இந்த C மற்றும் C++ program ஐ எழுதுக,
04.18 ஒரு variable மற்றும் pointer ஐ declare செய்க.
04.21 Variable ன் address ஐ pointer ல் சேமிக்கவும்.
04.24 Pointer ன் மதிப்பை அச்சடிக்கவும்.
04.27 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04.30 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
04.33 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
04.37 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
04.43 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
04.47 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04.53 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04.58 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05.06 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
05.10 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05.14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst