LibreOffice-Suite-Calc/C2/Introduction-to-LibreOffice-Calc/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:06, 27 November 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00:00 LibreOffice Calc க்கு அறிமுகம் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:06 இதில் கற்கபோவது:
00:08 LibreOffice Calc க்கு ஒரு அறிமுகம்.
00:12 Calc இல் பலவித கருவிப்பட்டைகள்.
00:16 புதிய ஆவணத்தை திறப்பது.
00:18 இருப்பில் இருக்கும் ஆவணத்தை திறப்பது.
00:21 ஆவணத்தை சேமித்து மூடுவது
00:26 Calc என்பது LibreOffice தொகுப்பில் spreadsheet பாகம் ஆகும்.
00:32 Writer, உரைகளுடன் தொடர்புள்ளது போல், spreadsheet எண் தகவலுடன் தொடர்புள்ளது.
00:40 அது எண்களின் மொழியிலான மென்பொருள்.
00:44 Microsoft Office Suite Excel க்கு இணையானது.
00:49 திறந்த மூல மென்பொருள்; இதை பிரதி எடுக்க, மறு பயனாக்க, விலையில்லாமல் வினியோகிக்க தடையில்லை.
00:57 LibreOffice suite க்கு Microsoft windows இன் பதிப்புகளான windows 2000 , windows XP, windows 7 ஐ, அல்லது GNU/Linux ஐ OS ஆக பயன்படுத்தலாம்.
01:14 இங்கே உபுன்டு லீனக்ஸ் பதிப்பு 10.04 இயங்குதளம். LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4.
01:27 LibreOffice நிறுவப்படவில்லை எனில், Synaptic Package Manager மூலம் நிறுவுக.
01:35 Synaptic Package Manager குறித்து மேலும் தகவல்களுக்கு இதே தளத்தில் Ubuntu Linux Tutorialகளை காணவும். மேலும் இந்த தளத்தில் உள்ள வழிமுறைகளின் படி LibreOffice தொகுப்பை தரவிறக்குக.
01:50 விவரங்கள் LibreOffice தொகுப்பின் முதல் டுடோரியலில் உள்ளது.
01:56 நிறுவலின் போது மறக்காமல் “Complete” நிறுவலை தேர்ந்தெடுக்கவும்.
02:01 LibreOffice தொகுப்பை நிறுவி இருந்தால் Calc ஐ திரையின் மேல் இடது பக்கம் “Applications” , “Office” பின் “LibreOffice” தேர்வுகளில் சொடுக்கி காணலாம்.
02:17 LibreOffice பாகங்களுடன் உரையாடல் பெட்டி திறக்கும்.
02:22 Calc ஐ அணுக “Spreadsheet” ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:30 கால்க் window வில் புதிய காலி ஆவணம் ஒன்று திறக்கிறது.
02:35 கால்க் சாளரத்தின் முக்கிய பாகங்களை கற்கலாம்.
02:40 Calc இல் உள்ள ஆவணம் workbook எனப்படும். workbook இல் spreadsheet எனப்படும் பல தாள்கள் உள்ளன.
02:48 ஒவ்வொரு spreadsheet இலும் column களாக பல வரிசை செல்கள் உள்ளன. வரி எண்ணாலும், column எழுத்தாலும் குறிக்கப்படும்.
02:58 குறிப்பிட்ட செல் columnமும் வரியும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. அது அந்த வரியின் எண்ணாலும் columnமின் எழுத்தாலும் குறிக்கப்படும்.
03:09 Cell களில் உரை, எண்கள், சூத்திரங்கள் மற்றும் மேலும் பல data items காணவும் கையாளவும் உள்ளன.
03:18 ஒவ்வொரு spreadsheet இலும் பல பக்கங்கள், பக்கத்துக்கு பத்து லட்சம் வரிகள், ஓராயிரம் columnகளுக்கு மேலும் இருக்கமுடியும். ஆக தனித்தாளில் நூறு கோடி cell கள் இருக்கமுடியும்.
03:33 Calc window வில் உள்ளவை பல toolbarகள்: title bar, menu bar, standard toolbar, formatting bar, formula bar மற்றும் status bar
03:45 toolbarகள் உடன் கூடுதலாக இரண்டு field கள் உள்ளன. “Input line”, மேலே “Name box”.
03:54 toolbar களில் அடிக்கடி பயனாகும் தேர்வுகள் உள்ளன. அவற்றை tutorial களில் பின்னால் கற்கலாம்.
04:03 கீழ் இடது பக்கம் மூன்று sheet tab களை spreadsheet இல் காணலாம். அவை, “Sheet1”, “Sheet 2” மற்றும் “Sheet 3”.
04:13 இந்த tab கள் வழியே தனித்தாள்களை அணுகலாம். பார்வையில் உள்ள sheet வெள்ளை tab ஆக இருக்கும்.
04:21 இன்னொரு sheet இன் tab ஐ சொடுக்க அது புலனாகும், அதன் tab வெள்ளையாகிவிடும்.
04:28 spreadsheet இன் main section ல் data உள்ளிடப்படுகிறது. அது ஒரு grid ஆக பல cell களை கொண்டுள்ளது. ஒவ்வொரு cell உம் ஒரு column ஒரு வரியை சந்திக்கும் இடத்தில் உள்ளது.
04:41 columnகளின் உச்சியிலும் மற்றும் வரிகளின் இடது பக்கமும் ஒரு வரிசை சாம்பல் நிற பெட்டிகள் எழுத்துக்கள் மற்றும் எண்களை கொண்டுள்ளன. இவை columnகள் மற்றும் வரிகளின் தலைப்புகள்.
04:53 columnகள் “A” வில் வலமாக செல்கின்றன. வரிகள் மேலே “1” இல் ஆரம்பித்து கீழே செல்கின்றன.
05:01 column மற்றும் row headers ... cell களுக்கு “Name Box” field இல் reference களாக அமைகின்றன.
05:07 Calc இன் பாகங்களை கற்றோம். Calc இல் புதிய ஆவணத்தை திறப்பதை காணலாம்.
05:17 புதிய ஆவணத்தை திறக்க standard toolbar இல் “New” icon ஐ சொடுக்கலாம்; அல்லது menu bar இல் “File” , பின் “New” , இறுதியாக “Spreadsheet” தேர்வில் சொடுக்கவும்.
05:33 இரு வகையிலும் புதிய Calc சாளரம் திறக்கிறது.
05:39 spreadsheet இல் “Personal Finance Tracker” ஐ உருவாக்குவதை காணலாம்.
05:45 spreadsheet cell களில் தரவை உள்ளிடுவதை காணலாம்.
05:50 spreadsheet இன் முதல் ஷீட்டில் A1 cell ஐ சொடுக்குங்கள்.
05:56 தலைப்பாக spreadsheet இல் வரும் item களின் வரிசை எண்ணுக்கு “SN” என எழுதுவோம்.
06:05 B1 செல்லில் சொடுக்கி இன்னொரு தலைப்பை “Items” என எழுதுவோம்.
06:11 இந்த spreadsheet இல் நாம் பயன்படுத்தப்போகும் எல்லா item களும் இந்த தலைப்பின் கீழ் வரும்.
06:18 அதே போல C1, D1, E1, F1 மற்றும் G1 cell களில் ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கி தலைப்பிடுக. “Cost”, “Spent”, “Received”, “Date” மற்றும் “Account”.
06:33 ஒவ்வொரு columnயின் கீழும் தரவை பின்னர் எழுதுவோம்.
06:39 spreadsheet உருவாக்கிய பின் அதை சேமிக்க வேண்டும்.
06:44 பைலை சேமிக்க, menu bar இல் “File”, பின் “Save As” தேர்வில் சொடுக்கவும்.
06:51 உரையாடல் பெட்டி திறக்கிறது, file பெயரை “Name” field இல் எழுத வேண்டும்.
06:59 file பெயரை “Personal Finance Tracker” என எழுதுக.
07:04 “Name” field இன் கீழ் “Save in folder” field இருக்கிறது. இதில் file ஐ சேமிக்கும் போல்டரின் பெயரை உள்ளிடவேண்டும்.
07:14 “Save in folder” ன் கீழ் நோக்கு அம்புக்குறியை சொடுக்குங்கள்.
07:18 folder தேர்வுகளின் பட்டியல் காண்கிறது. நமக்கு விருப்பமான சேமிப்பு போல்டரை தேர்ந்தெடுக்கலாம்.
07:26 “Desktop” இல் சொடுக்குகிறோம்.
07:28 file desktop இல் சேமிக்கப்படும்.
07:34 உரையாடல் பெட்டியில் “File type” தேர்வில் சொடுக்கவும்.
07:37 இது பைலை சேமிக்கக்கூடிய பைல் type பட்டியல் அல்லது பைல் extension பட்டியலை காட்டும்.
07:46 Calc இல் முன்னிருப்பு பைல் வகை “ODF Spreadsheet”. இதன் பைல் நீட்சி “dot ods”.
07:56 ODF என்பது Open Document Format. இது திறந்த standard format.
08:01 LibreOffice Calc இல் திறக்கக்கூடிய dot ods format தவிர file ஐ Excel இல் திறக்ககூடிய dot xml, dot xlsx மற்றும் dot xls formatல் சேமிக்கலாம்.
08:20 இன்னொரு பிரபலமான, பல நிரல்கள் திறக்கும் file நீட்சி dot csv.
08:28 இது spreadsheet தரவை text file format இல் வைத்திருக்கிறது. இதனால் file அளவு வெகுவாக குறைகிறது. சுலபமாக எடுத்துச்செல்லலாம்.
08:38 நாம் “ODF Spreadsheet” தேர்வில் சொடுக்குவோம்.
08:43 file வகையை பார்க்கலாம், “ODF Spreadsheet மற்றும் bracket இல், dot ods” - “File type” தேர்வுக்கு அடுத்து காணப்படுகிறது.
08:53 “Save” மீது சொடுக்கவும்.
08:55 இது பைல் பெயர், தேர்ந்தெடுத்த பின்னொட்டுடன் title bar இல் காணும்படி Calc window வுக்கு பின் இட்டுச்செல்லும்.
09:03 மேலே பார்த்த format களுடன் spreadsheet களை “dot html” ஆகவும் சேமிக்கலாம். இது வலைப்பக்க format.
09:13 இது முன் சொன்ன வழியிலேயே செய்யப்படும்.
09:18 menubar இல் “File” பின், “Save As” மீது சொடுக்கவும்.
09:24 இப்போது ”File Type” பின், “HTML Document – அடைப்புக்குள் OpenOffice dot org Calc” தேர்விலும் சொடுக்கவும்.
09:36 இது ஆவணத்துக்கு “dot html” பின்னொட்டை தருகிறது.
09:41 “Save” மீது சொடுக்கவும்.
09:44 உரையாடல் பெட்டியில் “Ask when not saving in ODF format” தேர்வில் குறியிடுக.
09:50 கடைசியாக “Keep Current Format” தேர்வில் சொடுக்கவும்.
09:54 dot html பின்னொட்டுடன் ஆவணம் சேமிக்கப்படுகிறது.
10:00 இந்த format எந்த browser இலும் spreadsheet ஐ திறக்கும்படி அமைக்கும்.
10:10 ஆவணத்தை PDF ஒழுங்குக்கு ஏற்றுமதி செய்யலாம். standard tool bar இல் “Export Directly as PDF” தேர்வில் சொடுக்கவும். முன்போல்,
10:20 சேமிக்கும் இடம் தேர்வு செய்க.
10:24 இதையே menu bar இல் “File” , பின் “Export as pdf” தேர்வில் சொடுக்கியும் செய்யலாம்.
10:33 உரையாடல் பெட்டியில் “Export” மீதும் பின் “Save” button இலும் சொடுக்கவும்.
10:40 pdf file உருவாக்கப்படும்.
10:44 இதை “File”, பின் “Close” மீது சொடுக்கி மூடுவோம்.
10:50 அடுத்து இருக்கும் ஒரு ஆவணத்தை Calc இல் திறப்பதை காணலாம்.
10:56 இருப்பிலுள்ள ஆவணத்தை திறக்க மேலே menubar இல் “File” பின் “Open” தேர்வை சொடுக்கவும்.
11:06 திரையில் உரையாடல் பெட்டியை காணலாம்.
11:09 இங்கே ஆவணத்தை சேமித்த அடைவை கண்டு பிடிக்கவும்.
11:14 உரையாடல் பெட்டியின் மேல்- இடது மூலையில் காணும் pencil button ஐ சொடுக்கவும். “Type a file Name” என இருக்கிறது.
11:23 “Location Bar” புலம் திறக்கும்.
11:25 வேண்டிய பைலின் பெயரை உள்ளிடவும்.
11:30 நாம் “Personal Finance Tracker” என உள்ளிடுகிறோம்.
11:35 தோன்றும் பட்டியலில் “Personal Finance Tracker dot ods” ஐ தேர்ந்து எடுக்கிறோம்.
11:43 “Open” ஐ சொடுக்கவும்.
11:45 Personal Finance Tracker.ods file திறக்கிறது.
11:51 மாறாக, இருப்பிலுள்ள ஆவணத்தை திறக்க மேலே toolbar இல் “Open” icon ஐ சொடுக்கி முன் சொன்ன வழியிலேயே திறக்கலாம்.
12:02 Excel பயன்படுத்தும் “dot xls” மற்றும் “dot xlsx” பின்னொட்டுள்ள பைல்களையும் Calc ஆல் திறக்கலாம்.
12:13 அடுத்து ஒரு file ஐ மாற்றி பின் அதே பெயரில் சேமிப்பதை பார்க்கலாம்.
12:20 நாம் தலைப்புகளை தடிமனாகவும், அளவை கூட்டியும் மாற்றலாம்.
12:26 முதலில் A1 cell மீது சொடுக்கலாம். தலைப்புகள் “SN”, “Cost”, “Spent”, “Received”, “Date” மற்றும் “Account” ஆகியவற்றின் மீது இடது சொடுக்கியால் இழுத்து தேர்ந்தெடுங்கள்.
12:42 இது உரையை தேர்ந்தெடுத்து முன்னிலை படுத்தும். இடது சொடுக்கி பட்டனை விடவும். உரை இப்போதும் முன்னிலை படுத்தப்பட்டு இருக்கும். இப்போது standard toolbar இல் “Bold” icon இல் சொடுக்கவும்.
12:56 தலைப்புகளின் உரை தடிமனாகிவிடும்.
12:59 தலைப்புகளின் font அளவை கூட்டலாம்.
13:03 தலைப்புகளை தேர்ந்தெடுத்து toolbar இல் “Font Size” கீழ் அம்பு விசையை சொடுக்கலாம்.
13:09 கீழிறங்கும் menu வில் “14” மீது சொடுக்கலாம்.
13:13 தலைப்புகளின் font இன் அளவு உயருகிறது.
13:17 பயன்படுத்தும் font பாங்கை மாற்றலாம்.
13:21 “Font Name” field இல் கீழ் அம்பு விசையை சொடுக்கலாம். பின் “Bitstream Charter” என்பதை font name ஆக்கலாம்.
13:31 மாற்றங்களை செய்து “Save” icon ஐ சொடுக்கவும்.
13:36 ஆவணத்தை சேமித்து மூட விரும்பினால், menu bar இல் “File” பின் “Close” தேர்வில் சொடுக்கவும்.
13:46 இது file ஐ மூடும்.
13:50 இத்துடன் Calc குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
13:54 சுருங்க சொல்ல நாம் கற்றது:
13:57 LibreOffice Calc க்கு அறிமுகம்,
14:01 Calc இல் பலவித toolbarகள்,
14:04 Calc இல் புதிய ஆவணத்தை திறப்பது,
14:07 இருப்பில் இருக்கும் ஆவணத்தை திறப்பது.
14:10 ஆவணத்தை சேமிப்பது, மூடுவது.
14:14 முழுமையான பயிற்சி:
14:17 புதிய ஆவணத்தை Calc இல் திறத்தல்,
14:20 “Spreadsheet Practice.ods” என்ற பெயரில் ஆவணத்தை சேமித்தல்,
14:25 “Serial number”, “Name”, “Department” மற்றும் “Salary” என தலைப்புகள் இடுதல்,
14:30 தலைப்புகளுக்கு அடிக்கோடிட்டு, font அளவை 16 ஆக்குதல்.
14:36

File ஐ மூடுதல்.

14:38 தொடுப்பில் விடியோவை காணவும்.
14:40 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
14:45 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
14:50 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
14:56 இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
15:00 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
15:06 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
15:10 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
15:18 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
15:30 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst