LaTeX/C2/What-is-Compiling/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:07, 3 October 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 லேடக் ஐ பயன்படுத்தி எளிய ஆவணம் தயாரிப்பது குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு
0:08 மேக் ஓஎஸ் X ஆபரேடிங் சிஸ்டத்தில் இதை செய்து காட்டுகிறேன்.
0:13 லீனக்ஸ் மற்றும் விண்டோஸ் OS களுக்கும் இதே போன்ற முறைகள் உண்டு..
0:19 முதலில் உரை திருத்தியால் ஒரு மூல பைலை உருவாக்க வேண்டும்.
0:24 என் விருப்பமான திருத்தி இமேக்ஸ். இந்த பைலை ஹெலோ.tex என்று பெயரிட்டு இருக்கிறேன். இந்த பைலின் நீட்சி டெக். இதை டி-இ-எக்ஸ் என்று எழுதினாலும் டெக் என்றே உச்சரிக்க வேண்டும். லேடக் க்கு இதுவே முன்னிருப்பாகும்.
0:40 முதலில் லேடக் க்கு நாம் எந்த ஆவண கிளாஸ் இல் ஆர்வம் காட்டுகிறோம் என்று சொல்ல வேண்டும்.
0:46 முதலில் நான் ஆர்டிகில் கிளாஸ் ஐ பின்வருமாறு பயன்படுத்துகிறேன்.
1:01 சேமிப்போம்.
1:03 இது போல இன்னும் நிறைய கிளாஸ்கள் உள்ளன.
1:06 வேறு டுடோரியல்களில் அவற்றை காண்போம்.
1:10 எழுத்துருவின் அளவாக நான் 12 புள்ளிகளை பயன்படுத்துகிறேன்.
1:14 லேடக் இல் இன்னும் சிறிய 11 அல்லது 10 பாய்ன்ட்கள் கூட பழக்கம்.
1:23 ஆவணத்தை ஆரம்பிக்கிறேன்.
1:29 உரையை ‘ஹலோ வோர்ல்ட்!’ என எழுதுகிறேன்.
1:34 ஆவணத்தை முடிக்கலாம்.
1:36 சேமிக்கிறேன்
1:39 பிகின் என்ட் கட்டளைகள்.... இவற்றுக்கு நடுவில் உள்ளது மட்டுமே ஆவணத்தின் கடைசி வெளியீட்டில் இருக்கும்.
1:47 இதுவே மூல பைல். இதை ஹெலோ.tex என்று பெயரிடுகிறேன்.
1:51 இதை பிடிஎஃப் லேடக் என்ற கட்டளையால் தொகுக்கிறேன்.
1:55 இங்கே வந்து ‘பிடிஎஃப் லேடக் ஹெலோ. Tex’ என்ற கட்டளையை பார்க்கலாம்.
2:08 ’டெக்’ என்ற நீட்சி இல்லாமலும் ‘பிடிஎஃப் லேடக் ஹெலோ’ என தொகுக்கலாம்.
2:23 அப்படி செய்தால் முன்னிருப்பு நீட்சியான டெக் என்பது சேர்க்கப்படும்.
2:28 லேடக் மூல பைலில் இருந்து பிடிஎஃப் லேடக் என்ற கட்டளையை பயன்படுத்தி ஒரு பிடிஎஃப் பைலை தொகுத்தோம்.
2:35 கட்டளையை நிறைவேற்றும் போது, லேடக் சில பயனுள்ள தகவல்களையும் கொடுக்கிறது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஹெலோ.லாக் என்ற பைலில் சேமிக்கப்படும். அதை இங்கே காணலாம்.
2:48 இது வரை உருவாக்கிய பைல்களில் ஹெலோ என்று வருவதை கவனிக்கலாம்.
2:53 பைல் ஹெலோ.பிடிஎஃப் ஐ திறக்கலாம்.
2:57 என் மேக் கணினியில் இதை செய்ய ‘ஸ்கிம் ஹெலோ.பிடிஎஃப்’ என்று கட்டளை கொடுக்கிறேன்.
3:12 ‘ஸ்கிம்’ என்பது மேக் ஓஎஸ் X க்கான இலவச பிடிஎஃப் ரீடர் ஆகும்..
3:18 கட்டளை கிடைத்ததும் ஸ்கிம் ஹெலோ.பிடிஎஃப் ஐ திறக்கிறது.
3:22 எதிர் பார்த்தது போல ஒரே ஒரு வரிதான் இருக்கிறது. இதை ஜூம் செய்து அணுகி பார்க்கலாம்.
3:33 ஸ்கிம் காட்டுவது பிடிஎஃப் பைலின் மிக சமீபத்திய பதிப்பு.
3:37 உதாரணமாக அதை மாற்றிப் பார்க்கலாம். நான் இன்னொரு ‘ஹெலோ வேர்ல்ட்’ ஐ இங்கு சேர்க்கிறேன்.
3:48 அதை சேமித்து தொகுக்கிறேன்.
3:56 இதற்கு அனுமதி கொடுக்கிறேன். இது புதுப்பிக்கப்பட்டு விட்டது.
4:01 இதை அழித்து, சேமித்து, தொகுக்கிறேன். இப்போது இது பழைய அசல் பைல் ஆகிவிட்டது.
4:14 எப்போதுமே சேமித்த பின்பே தொகுக்கிறேன் என்பதை கவனியுங்கள்.
4:21 எப்போதுமே சேமித்து பின் தொகுக்க வேண்டும். சேமிக்காவிட்டால் தொகுத்ததில் கடைசி சேமிப்புக்கு பின் செய்த மாற்றங்கள் இருக்காது.
4:30 இந்த மூன்று விண்டோகளையும் டுடோரியல் ஐ உருவாக்க அமைத்து இருக்கிறேன்.
4:36 ஆவணங்களை தயாரிக்க இப்படி அமைக்க வேண்டும் என்றில்லை. மேலும் பிடித்த திருத்தியையும் பிடிஎஃப் ரீடரையும் பயன்படுத்தலாம்.
4:45 லேடக் ஐ பயன்படுத்த மூன்று நிலைகளை தாண்டி போக வேண்டும: மூல பைலை உருவாக்குவது, தொகுப்பது, பிடிஎஃப் பைலாக காண்பது.
5:08 மூல பைலை இப்படி மாற்றி இந்த மூன்று நிலைகளை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
5:12 உரையில் இன்னும் சில வரிகளை பிகின் மற்றும் என்ட் டாக்குமென்ட் கட்டளைகளுக்கு நடுவில் சேர்க்க நீங்கள் நினைக்கலாம்.
5:20 ஹெலோ.log பைலையும் பாருங்கள்.
5:24 டுடோரியல் ஐ ஒரு முன் வைப்புடன் தொடரலாம்.
5:28 முதலில் இதை அழிக்கிறேன்.
5:38 லேடக் இன் லாபங்களுடன் ஆரம்பிக்கலாம்..
5:42 டைப் செட் செய்வதற்கு லேடக் மிகச்சிறந்த மென்பொருள்.
5:47 லேடக் தயார் செய்யும் ஆவணங்களின் தரம் மிகச்சிறந்தது.
5:51 லேடக் இலவச திறந்த மூலத்துடன் கிடைக்கிறது.
5:53 அது விண்டோஸ் மற்றும் எல்லா லீனக்ஸ், மேக் போன்ற யுனிக்ஸ் சிஸ்டம்களுக்கும் கிடைக்கிறது .
6:00 லேடக் இல் பிரமாதமான அம்சங்கள் உள்ளன. சமன்பாடுகள், அத்தியாயங்கள், செக்ஷன்கள், படங்கள் அட்டவணைகளுக்கு தானியங்கியாக எண் இடும்.
6:08 நிறைய கணக்கு சமன்பாடுகள் உள்ள ஆவணங்களையும் சுலபமாக உருவாக்கலாம்.
6:13 உசாத்துணை பட்டியல்களையும் போகிற போக்கில் மாற்றக்கூடிய ஒழுங்கில் உருவாக்கலாம்.
6:19 லேடக் ஆவணத்தை ஒழுங்கு செய்வதை கவனித்துக்கொள்கிறது. அதனால் எழுத வேண்டியது என்ன, எண்ணங்களை சீராக அமைத்தல் போன்ற இன்னும் முக்கிய செயல்கள் மீது நாம் கவனம் செலுத்தலாம்.
6:31 லேடக் குறித்து இன்னும் டுடோரியல்கள் moudgalya.org இல் உள்ளன: தொகுப்பது என்றால் என்ன, கடிதம் எழுதுவது, அறிக்கை எழுதுவது, கணக்கு வகைப்படுத்தல், சமன்பாடுகள், அட்டவணைகள், மற்றும் படங்கள், உசாத்துணை உருவாக்கம், உசாத்துணையின் கதை ஆகியன உள்ளன.
6:53 நல்ல புரிதலுக்கு இந்த வரிசையில் டுடோரியல்களை கற்கவும்.
6:57 டுடோரியல்களை உருவாக்க பயன்படுத்திய மூல பைல்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளன.
7:03 இன்னுமொரு டுடோரியல்,லேடக் ஐ விண்டோஸ் ஓஎஸ் இல் நிறுவுவது குறித்து சேர்க்க திட்டமுள்ளது.
7:09 இன்னும் பல டுடோரியல்கள், உதாரணமாக ஸ்லைட் காட்டுவதற்கு பீமர் குறித்து, சில நாட்களில் வரும்.
7:15 லேடக் ஐ பயன்படுத்தித்தான் இந்த முன் வைப்பு பீமரில் உருவாக்கப்பட்டுள்ளது..
7:21 சில குறிப்புகள்: எவ்வளவு டுடோரியல்கள் முடியுமோ அத்தனையும் பாருங்கள்.
7:26 கூடவே பயிற்சி செய்து பாருங்கள்.
7:28 முதலில் ஒரு வேலை செய்யும் லேடக் பைலுடன் ஆரம்பியுங்கள்.
7:31 ஒரு முறைக்கு ஒரு மாறுதல் மட்டும் செய்து பாருங்கள். சேமித்து, தொகுத்து செய்தது வேலை செய்கிறது என்று உறுதிபடுத்திக்கொண்டு அடுத்த மாறுதலை செய்யுங்கள்.
7:40 மூல கோப்பை தொகுக்கும் முன் சேமிக்க வேண்டுமென்பது நினைவிருக்கட்டும்.
7:45 லேடக் குறித்து நிறைய புத்தகங்கள் இருந்தாலும் இரண்டை பரிந்துரைக்கிறோம்.
7:48 முதலில் லேடக் ஐ உருவாக்கியவர் எழுதியது. Leslie Lamport.
7:53 இது குறைந்த விலைக்கு இந்திய பதிப்பாகவும் கிடைக்கிறது.
7:57 அதிகம் பயின்று மேல் பாடங்கள் கற்க புத்தகம் லேடக் கம்பானியன்.
8:03 முதல் சொன்ன புத்தகமும் வலைத்தேடலும் பெரும்பாலான தேவைகளுக்கு போதும். இருப்பினும் எல்லா லேடக் குறித்த விஷயங்களும் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும்: ctan.org.
8:15 ஸ்போகன் டுடோரியல் க்கு ஆதரவு இந்திய அரசின் MHRD துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
8:24 இந்த திட்டத்துக்கு URL sakshat.ac.in. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். ஒருங்கிணைப்பாளர் CDEEP, IIT Bombay: cdeep.iitb.ac.in.
8:39 ஸ்போகன் டுடோரியல் வெகுஜன பயன்பாட்டுக்கு செல்ல fosse.in வழியாக ஒருங்கிணைக்கப்படும்.
8:47 ஃபோசீ என்பது ஃப்ரீ அன்ட் ஓபன் சோர்ஸ் ஸாப்ட்வேர் இன் சைன்ஸ் அன்ட் எஞ்சினீரிங் எஜுகேஷன்.
8:52 தேசிய கல்வித்திட்டமும் இதற்கு ஆதரவு கொடுக்கிறது.
8:57 இந்த தொடுப்புக்களை மேலும் பல ஸ்போகன் டுடோரியல்கள் மற்றும் அவற்றின் மொழி பெயர்ப்புக்கள் ஆகியவற்றுக்கு கவனித்திருங்கள்.
9:05 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. மூல பாடம் CDEEP, IIT Bombay இலிருந்து Kannan Moudgalya. மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst