Xfig/C2/Simple-block-diagram/Tamil
From Script | Spoken-Tutorial
Timing | Narration |
---|---|
00:01 | Xfig -ல் block diagram வரைதலுக்கானப் Spoken Tutorial -க்கு நல்வரவு. |
00:07 | இதில் கீழே கொடுக்கப்பட்ட வகை block diagram -களை உருவாக்குவதை விவரிப்போம். |
00:17 | இதற்கு |
00:19 | Xfig என்னும் block diagram கையாளும் கருவியை பயன்படுத்துகிறேன். |
00:24 | இதில் version 3.2, patch level 5 -ஐப் பயன்படுத்துகிறேன். |
00:29 | Terminal மற்றும் pdf browser -யும் பயன்படுத்துகிறேன். |
00:37 | நான் tutorial ஐ Max OS X -ல் உருவாக்குகிறேன். |
00:41 | Xfig -ஐ Linux மற்றும் Windows -லும் பயன்படுத்தலாம். |
00:45 | இவற்றில் Linux -ல் நிறுவுவது மிகவும் சுலபம் |
00:50 | அனைத்திலும் Xfig -ஐ உபயோகிக்கும் முறை ஒன்றே. |
00:56 | Xfig -க்கு மூன்று button சொடுக்கியை பயன்படுத்துவது சிறந்தது. |
01:00 | ஆனால் ஒன்று அல்லது இரண்டு button சொடுக்கியையும் வடிவமைத்து பயன்படுத்தலாம். |
01:07 | Xfig -ன் பயனர் கையேடு இணையத்தில் கிடைக்கும். |
01:16 | அதை காணலாம். இந்தப் பக்கத்தில் Xfig -ன் அறிமுகத்தை காணலாம். |
01:23 | இங்கு கையேட்டின் உள்ளடக்க அட்டவணையைக் காணலாம். |
01:28 | அதை சொடுக்குவோம். |
01:31 | இங்கே Xfig -ஐ உருவாக்கியவர்கள் குறித்த தகவலைப் பெறலாம். |
01:36 | இந்தப் பக்கத்தைப் பார்க்கலாம். |
01:40 | இந்த டுடோரியலுக்கான திரை வடிவமைப்பு பற்றிக் கூறுகிறேன். |
01:46 | இதில் slides, Xfig, வலையுலாவி Firefox மற்றும் terminal உள்ளன |
01:58 | இது Xfig -ஐ Mac -ல் பயன்படுத்துவதற்கான Command. |
02:04 | இவை சுலபமாகத் தேர்ந்தெடுக்கும்படி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. |
02:10 | கேட்பவர் மாறுதலை சுலபமாக அறிந்து கொள்ளலாம். ஊகிக்க தேவையில்லை. |
02:17 | இப்பொழுது Xfig -உடன் தொடங்கலாம். |
02:20 | Xfig worksheet ன் இடப்பக்கத்தில் "drawing mode panel" உள்ளது. |
02:26 | இந்த panel -ன் மேல்பாதியில் உள்ள buttonகள் மூலம் பலவகை objectகள் உருவாக்கப்படுகின்றன. |
02:33 | கீழே உள்ளவை இவற்றுடன் பயன்படுத்தப்படுகின்றன. |
02:39 | மேலே உள்ள buttonகளைப் பயன்படுத்தி file வேலைகள், திருத்தங்கள் ஆகியவற்றை செய்ய முடியும் |
02:46 | நடுவில் உள்ள இந்த காலி இடம் canvas எனப்படுகிறது. |
02:50 | இதில்தான் படம் வரையப்படும். |
02:53 | இப்பொழுது வரைய ஆரம்பிக்கலாம். |
02:55 | முதலில் இந்த canvas பகுதியில் Grid -ஐப் பொருத்தலாம். |
03:01 | கீழே உள்ள 'Grid mode' -ஐ click செய்வதன் மூலம் இதைப் பொருத்தலாம். |
03:05 | இதில் பலவகையான Grid அளவை தேர்ந்தெடுக்கலாம். நான் நடுவில் உள்ளதை தேர்வு செய்கிறேன். |
03:11 | Grid நாம் வைக்கும் பல Objectகளை ஒழுங்காக வைக்க உதவுகிறது. |
03:16 | இதில் சொடுக்கு என்று சொன்னால் அது இடப்பக்க சொடுக்கி button -ஐ சொடுக்கி விடுவதைக் குறிக்கும். |
03:21 | இதேபோல் button ஐ தேர்வு செய்தல் என்பது அதை இடப்பக்க சொடுக்கி பட்டனால் சொடுக்குவதைக் குறிக்கும். |
03:29 | வேறு செயல் தேவைப்பட்டால் நான் தெளிவாக கூறுகிறேன். |
03:34 | நம் படத்தில் ஒரு பெட்டி தேவை, அதற்கு இடப்பக்க panel -ல் இருந்து கூரான விளிம்புகளுடன் உள்ள 'box symbol' -ஐத் தேர்வு செய்யலாம். |
04:43 | இப்பொழுது அந்த பெட்டியை வைக்க நினைக்கும் இடத்திற்குச் செல்லலாம். |
03:50 | இங்கே சொடுக்கியால் சொடுக்குவோம். |
03:53 | இது பெட்டியின் வடமேற்கு மூலையைத் தேர்வு செய்கிறது. |
03:57 | நாம் விரும்பும் பெட்டி அளவு வரும் வரை சொடுக்கியை எதிர் முனைக்கு நகர்த்தவும். |
04:12 | சரியான அளவுக்கு பெட்டி வந்தவுடன் சொடுக்கியை மறுபடியும் சொடுக்கவும். |
04:16 | பெட்டி இப்பொழுது உருவாகிவிட்டது. |
04:18 | இப்பொழுது Xfig இல் 'Edit' ஐ பயன்படுத்தும் முறையைப் பார்க்கலாம். இதைப்பயன்படுத்தி பெட்டி கோட்டை தடிமனாக்கலாம். |
04:26 | இடப்பக்க panel -ல் உள்ள 'edit button' -ஐ சொடுக்கவும். |
04:31 | பெட்டியின் எல்லா key points -ம் இருப்பதைக் காணலாம். |
04:36 | தேர்வு செய்ய ஏதாவதொரு key point -ஐ சொடுக்கவும். |
04:41 | ஒரு உரையாடல் பெட்டி தெரிகிறது. |
04:43 | அதில் சொடுக்கியை “Width” பெட்டிக்குள் கொண்டு போவோம். |
04:47 | cursor பெட்டியுள் இருப்பதை உறுதி செய்க. |
04:51 | முன்னிருப்பு மதிப்பான 1 ஐ நீக்கலாம். |
04:55 | cursor பெட்டியுள் இல்லாவிட்டால் அதை மாற்ற இயலாது. |
05:01 | cursor வெளியே நகர்ந்து விட்டால் மீண்டும் உள்ளே கொண்டு வந்து உள்ளிடுக. |
05:07 | 2 -ஐ உள்ளிடவும். |
05:13 | “Done” ஐ சொடுக்குகிறோம். அதை காட்டுகிறேன். |
05:17 | ”Done” ஐ சொடுக்கி உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறுக. |
05:20 | பெட்டி படத்தின் கோட்டின் கனம் அதிகமாகிவிட்டது. |
05:24 | இப்பொழுது அம்புக்குறி கோட்டை சேர்க்கலாம் |
05:28 | இடப்பக்க panel -ல் polyline button -ஐத் தேர்ந்தெடுக்கவும். |
05:34 | கீழே உள்ள panel attributes panel எனப்படும். |
05:40 | இதில் உள்ள buttonகள் மூலம் ஒவ்வொரு object -ன் parameter களை மாற்றலாம். |
05:45 | நாம் தேர்ந்தெடுக்கும் object -ஐப் பொருத்து button களின் எண்ணிக்கை வேறுபடும். |
05:52 | Attribute panel -ல் “Arrow mode” button -ஐத் தேர்வு செய்க. |
05:57 | இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்யலாம். கோட்டின் இறுதியில் ஒரு அம்புக்குறி கிடைக்கும் |
06:04 | “Arrow Type” button -ஐ சொடுக்கலாம். |
06:08 | தோன்றும் சாளரத்தில் விருப்பமான அம்புக்குறியை தேர்ந்தெடுக்கலாம். |
06:14 | கோடு தொடங்க வேண்டிய இடத்தில் சொடுக்கலாம். |
06:23 | விரும்பும் கோட்டின் முடிவு புள்ளிவரை சொடுக்கியை நகர்த்தலாம். |
06:31 | அங்கே சொடுக்கியின் நடு பட்டனால் சொடுக்கலாம். |
06:36 | ஒரு அம்புக்குறியுடன் கூடிய கோடு உருவாகிறது. |
06:39 | அம்புக்குறியை முடிக்க நடுபட்டனை சொடுக்க வேண்டும் என்பதை நினைவில்கொள்க. |
06:43 | இடதோ வலதோ அல்ல. |
06:45 | ஏதாவது தவறு செய்தால் Edit -ல் Undo -ஐ அழுத்தவும். |
06:52 | Copy செய்வதன் மூலம் பெட்டியின் வெளியீட்டுடன் மற்றொரு கோட்டை வரையலாம். |
06:59 | இடப்பக்க panel -ல் 'copy button' -ஐத் தேர்வு செய்யவும். |
07:05 | கோட்டை தேர்வு செய்யவும். |
07:09 | சொடுக்கியை தேவையான இடத்திற்கு நகர்த்தி சொடுக்கவும். |
07:15 | கோடு பிரதி எடுக்கப்பட்டது. |
07:18 | இப்பொழுது கொஞ்சம் உரையை இடலாம். |
07:21 | இடப்பக்க panel ல் உள்ள T எனக் குறிக்கப்பட்ட "Text Box” -ஐ சொடுக்கவும். |
07:29 | உரையின் எழுதுரு அளவை தேர்வு செய்யலாம். |
07:35 | “Attributes panel” -ன் "Text size” -ஐ சொடுக்கிய பின் உரையாடல் சாளரத்தை காண்கிறோம். |
07:41 | சொடுக்கியை value பெட்டிக்கு எடுத்துச் சென்று அங்கேயே வைக்க வேண்டும். |
07:46 | முன்னிருப்பு மதிப்பான 12 -ஐ நீக்கி 16 -ஐ உள்ளிடவும். |
07:52 | “Set” button ஐ தேர்வு செய்யவும். |
07:56 | உரையாடல் பெட்டி மூடப்பட்டு “Text Size” ... 16 என “attributes panel” இல் காண்கிறது. |
08:05 | உரையை நடு ஒழுங்கு செய்யலாம். |
08:08 | Attributes panel -ல் "Text Just” button -ஐ சொடுக்கவும் . |
08:13 | ஒரு உரையாடல் பெட் டி தோன்றுகிறது. |
08:15 | நடு ஒழுங்குக்கு மிடில் என தேர்வு செய்வோம். |
08:21 | பெட்டியின் நடுவே சொடுக்குவோம் |
08:29 | “Plant” என எழுதி சொடுக்கியை சொடுக்குகிறேன். |
08:36 | உரை உருவாக்கப்பட்டது |
08:38 | தேவைப்பட்டால் இடப்பக்க panel -ல் உள்ள "Move” விசையைப் பயன்படுத்தி உரையை நகர்த்த முடியும். |
08:50 | படத்தை சேமிக்கலாம். |
08:52 | Xfig -ன் இடப்பக்க மூலையில் உள்ள "file” பட்டனை சொடுக்கி "save” -இல் சொடுக்கவும். |
09:04 | முதல் முறை என்பதால் Xfig , File -ன் பெயரை கேட்கிறது. |
09:09 | directory பின் file பெயரையும் தேர்வு செய்யலாம். |
09:12 | இதில் பெயரை "block” என உள்ளிட்டு save ஐ தேர்க |
09:27 | block.fig என file சேமிக்கப்படுகிறது. |
09:30 | அந்த பெயரை மேலே பார்க்கலாம். |
09:34 | File -ஐ export செய்யலாம் |
09:36 | மீண்டும் "file” ஐ சொடுக்கி "export” -இல் சொடுக்கவும் |
09:47 | “language” க்கு அடுத்துள்ள பெட்டியில் சொடுக்கி, “PDF” இல் சொடுக்கவும். “PDF Format” தேர்ந்தெடுக்கப்படும். |
09:59 | இப்போது "export” ஐ சொடுக்கி "block.pdf” -ஐ பெறலாம். |
10:05 | Terminal ல் "open block.pdf” என்ற கட்டளை மூலம் அந்த pdf -ஐ திறக்கலாம் |
10:18 | தேவையான block diagram கிடைத்துவிட்டது. |
10:21 | நம் நோக்கத்தை நிறைவேற்றி தேவையான படத்தைப் பெற்றுள்ளோம். |
10:30 | இப்பொழுது உங்களுக்கு ஒரு வேலை. |
10:33 | பெட்டியை வேறு பல object களாக மாற்றவும். |
10:36 | Polyline -ஐப் பயன்படுத்தி செவ்வகம் வரையவும். படத்தின் அளவை மாற்றவும்; அம்புக்குறியின் திசையை மாற்றவும். |
10:43 | வெவ்வேறு இடத்திற்கு உரை , கோடு மற்றும் பெட்டி -ஐ மாற்றவும். |
10:48 | File -ஐ "eps format” க்கு எக்ஸ்போர்ட் செய்து பார்க்கவும். |
10:51 | Block.fig என்ற file -ஐ திருத்தியில் பார்த்து பலவகை components ஐ கண்டறியவும். |
10:58 | புதிய பல block diagram களை உருவாக்கவும். |
11:02 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
11:06 | Spoken Tutorial என்பது இந்திய அரசின் ICT , MHRD ன் National Mission on Education -ஆல் உதவிசெய்யப்படும் Talk To a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும். இதைப்பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐக் காணவும். |
11:28 | நான் மேலும் சில இணைய பக்கங்களை தரவிறக்கி உள்ளேன். |
11:38 | spoken tutorial pproject ன் இணையதளம் http://spoken-tutorial.org. |
11:48 | இந்த திட்டம், “What is a Spoken Tutorial” என்ற இணைப்பில் உள்ள video மூலம் விவரிக்கப்படுகிறது. |
11:57 | spoken-tutorial.org/wiki, இல் நம் திட்டம் ஆதரிக்கும் FOSS கருவிகளை காணலாம். |
12:12 | அதில் Xfig -க்கான பக்கத்தைக் காணலாம்.. |
12:27 | உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம். மூல பாடம் Kannan Moudgalya . நன்றி. |