CellDesigner/C2/Getting-Started-with-CellDesigner/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:54, 22 January 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | Getting started with CellDesigner குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:05 | இந்த tutorialஇல், நாம் கற்கப் போவது :
CellDesigner, CellDesigner இல்Menu மற்றும் Tool barகள் |
00:13 | CellDesigner workspaceஇல் உள்ள பற்பல areas |
00:17 | Species மற்றும் Reactions உள்ளடங்கிய, CellDesignerஇன் Componentகள் |
00:23 | மேலும், ஒரு எளிய network ஐ எவ்வாறு உருவாக்குவது |
00:27 | networkஐ Save செய்வது |
00:29 | Imageஇனை export செய்வது |
00:30 | ஒரு network இனை எவ்வாறு zoom செய்வது என்பது பற்றியும் கற்போம் |
00:33 | CellDesigner என்பது மரபணு-ஒழுங்குமுறை மற்றும் உயிர்வேதியியல் networkகள் வரைவதற்கான process diagram editor ஆகும். |
00:40 | Process diagram, Kitano மூலம் முன்மொழியப்பட்டது. இந்த diagramகள், Systems Biology Markup Language (SBML) இனைப் பயன்படுத்தி சேமிக்கப்படுகின்றன. |
00:50 | நான் பயன்படுத்துவது Windows XP மற்றும் CellDesigner Version 4.2. Linux மற்றும் Mac OS X இலும் கூட CellDesigner ஐ செயல்படுத்தலாம் |
01:00 | CellDesignerஐ திறக்க, desktopஇல் உள்ள CellDesigner shortcut iconமீது double-click செய்யவும். |
01:07 | இது CellDesignerஐ திறக்கும். இப்போது அதனை ஆராயலாம். |
01:12 | நீங்கள் Menu barஇல், File, Edit, Component ,View, Database போன்றவை உள்ளிட்ட, பற்பல Menu optionகளைப் பார்க்கலாம். |
01:24 | Main Menu வின் கீழ், நீங்கள் பல Toolbarகளைக் காணலாம். |
01:30 | Editing, species, reactions, compartments உள்ளிட்டவைகளுக்கான Toolbarகள் உள்ளன. |
01:38 | நாம் இங்கே தொடரும் போது , அவற்றில் சிலவற்றைக் கற்போம். |
01:42 | CellDesigner workspaceஇன் பல்வேறு areas பற்றி கற்கலாம் |
01:48 | இங்கு 5 areas உள்ளதை நீங்கள் பார்க்கலாம் |
01:52 | வலது பக்கம் காணப்படுவது Draw area. |
01:55 | இங்கே தான் நாம் networkகளை வரையவிருக்கிறோம். |
01:58 | Draw areaவில் காணப்படும் ஒவ்வொரு வடிவமும், எடுத்துக்காட்டாக, செவ்வகம், ஓவல், கோட்டுப் பகுதி ஆகியவை Componentஎன அழைக்கப்படுகின்றன. |
02:08 | Component என்பது, species, reactions அல்லது compartmentஇனைக் குறிக்கும் பொதுவான பதமாகும். |
02:14 | இந்தக் குறியீடுகளின் பட்டியல் மற்றும் அவற்றின் அர்த்தங்களை, CellDesigner websiteஇல் காணலாம்- அதாவது www.celldesigner.org |
02:29 | நான் Documents மீது click செய்கிறேன். |
02:33 | இப்போது Startup guide மீது click செய்யலாம். அது மற்றொரு tabஇலும் உள்ளது. |
02:40 | நாம் நேரடியாக பக்க எண் 82ற்கு செல்லலாம். |
02:45 | இங்கு நீங்கள் பல குறியீடுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்களைப் பார்க்கலாம். |
02:51 | நாம் CellDesigner windowவிற்கு திரும்பலாம். |
02:55 | Draw areaவிற்கு கீழிருப்பது List area. |
02:59 | இங்கே ஒரு modelஇன் componentகள் மற்றும் functionகளின், பட்டியலைக் காண்பிக்கவோ, திருத்தவோ முடியும். |
03:06 | Notes பகுதி, componentஇன் குறிப்புகளைக் காண்பிக்கவும், திருத்தவும் பயன்படுகிறது. |
03:12 | இடது பக்கம் காணப்படும் Tree area, tree structureஇல் உள்ள componentகளைப் பட்டியலிடுகிறது. |
03:21 | அதற்கு கீழிருக்கும் Layer area, modelஇன் அனைத்து layerகளையும் காண்பிக்கும். |
03:27 | Borderlineகளை இழுப்பதன் மூலம், areaக்களின் அளவினை மாற்றலாம். |
03:33 | நான் cursorஐ borderlineமீது வைக்கிறேன். நீங்கள் double headed arrowவைப் பார்க்கலாம். அதனை இழுப்பதால் areaவை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். |
03:45 | List மற்றும் Notes areaவின் நிலையை மாற்ற |
03:50 | View optionக்கு சென்று>> Listமீது click செய்து, Rightஐத் தேர்ந்தெடுக்கவும்.. |
03:56 | அது listஐ வலப்பக்கம் மாற்றும். Down, default நிலையாகும். |
04:00 | Slideற்குத் திரும்பலாம் |
04:05 | இது நாம் உருவாக்கும் எளிய network ஆகும். |
04:10 | இந்த networkஇல், புரோட்டீன் A, புரோட்டீன் Cஇன் வினையூக்கத்தால், புரோட்டீன் B எனும் நிலை மாற்றத்திற்கு உள்ளாகிறது. |
04:21 | மேலும் புரோட்டீன் B நிலை மாற்றத்திற்கு உள்ளாகி, புரோட்டீன் D ஆகிறது |
04:27 | இந்த மாறுதல், புரோட்டீன் Eயால் தடுக்கப்படுகிறது |
04:32 | நாம் இந்த networkஐ உருவாக்கலாம் |
04:34 | நான் இப்போது CellDesigner windowவிற்குத் திரும்புகிறேன் |
04:39 | இப்போது Fileஇல் clickசெய்து, பிறகு Newவை சொடுக்கவும். |
04:43 | ‘New Document’ எனப் பெயரிட்ட, சிறிய dialog box திறக்கப்படும். |
04:48 | இது name field ஆகும். |
04:50 | நான் “simple network” என type செய்கிறேன். |
04:53 | நம் தேவைக்கேற்ப, உயரம் மற்றும் அகலத்தை மாற்ற முடியும். எனினும், நான் defaultஆன உயரம் மற்றும் அகலத்தையே வைத்துள்ளேன். |
05:03 | OK, click செய்யவும். Draw areaவின் மேல் இடது மூலையில் பெயர் தோன்றுவதைக் காணலாம். |
05:12 | இப்போது Editற்கு சென்று, Grid snap மற்றும் Grid visibleஐ செயல்படுத்தவும். |
05:21 | Draw areaவில் ஒரு grid காணப்படும். |
05:25 | Grid snap, componentகளை gridஉடன் சரியாக ஒன்றுபடுத்தும். |
05:29 | Network முழுமையான பின்பு, நீங்கள், Grid visibleஐ தேர்வுநீக்கம் செய்யலாம். |
05:34 | Componentகளை சேர்க்கத் தொடங்கும் முன்பு, species மற்றும் and reactionகளுக்கான எடுத்துகாட்டுகளைக் காண்பிக்கிறேன். |
05:42 | முதலில் speciesஐ பார்ப்போம். |
05:45 | இங்கு காணப்படும் சின்னங்கள், generic protein, receptor, ion channel, truncated protein, gene, RNA ஆகிவற்றிற்கானதாகும். |
05:58 | State transition, Heterodimer association, Dissociation, Catalysis, Inhibition முதலான reactionகளைப் பார்ப்போம், |
06:11 | நாம் Species toolbarஇல் முதல் iconஐ click செய்து, அதனைத் தேர்வு செய்வோம். இந்த icon புரோட்டீனுக்கானதாகும் |
06:22 | Speciesஐ எங்கு வைக்க வேண்டுமோ, அதற்குத் தகுந்தவாறு Draw Areaவில் click செய்யவும். |
06:28 | நான் Draw areaவிற்கு இடது பக்கமாக அதனை வைக்கிறேன். |
06:33 | ஒரு சிறிய dialog box திறக்கப்பட்டு, species இன் பெயர் கேட்கப்படும். |
06:39 | நான் புதிய speciesஐ A எனப் பெயரிட்டு, OKவை click செய்கிறேன். |
06:46 | மாற்றத்தை List areaவிலும் பார்க்கவும். |
06:50 | நீங்கள் பார்ப்பது போல், Draw areaவில், புதிய speciesஐ சேர்த்துள்ளோம். அவ்வாறே Bயை சேர்க்கலாம். |
06:58 | நீங்கள் ஒரு componentஐத் திருத்துவதற்கு அல்லது நகர்த்துவதற்கு முன், அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். |
07:03 | Componentஐ click செய்து அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு முன், select icon செயலாக்க நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்தவும். |
07:12 | நான் Aவிற்கு அடுத்து, Bயை வைக்க விரும்புகிறேன். எனவே B மீது click செய்து, அதனைத் தேர்ந்தெடுக்கவும். |
07:17 | அதனை இழுத்து, Aவிற்கு அடுத்து வைக்கவும். |
07:21 | இப்போது, componentஇன் அளவை எவ்வாறு மாற்றுவது எனப் பார்க்கலாம். |
07:24 | நான் Aவை click செய்கிறேன். அதில் சிறிய சதுரங்களைக் காண்கிறோம். |
07:29 | இவை அளவை மாற்றுவதற்கான, handleகள் ஆகும். |
07:32 | நான் இந்த விளிம்பில் cursorஐ வைத்து இழுத்து விடுகிறேன். |
07:36 | Aவின் அளவு மாற்றப்பட்டுள்ளதைக் காணலாம். |
07:39 | Component இன் அளவை மாற்றும் மற்றொரு முறையை, பிந்தைய tutorialஇல் கற்கலாம். |
07:46 | நீங்கள் 'Ctrl-Z' மூலம் முந்தைய செயல்களை “undo" செய்யலாம். |
07:52 | “re-do” செய்ய வேண்டுமெனில், Ctrl-Yயை அழுத்தவும். |
07:54 | நேரடியாக undo மற்றும் redo iconகளை click செய்வதன் மூலமும் இதனை செய்யலாம் |
08:03 | இப்போது reactionகளை சேர்ப்போம். |
08:06 | Reaction என்பது இரண்டு objectகளுக்கிடையேயான செயலெதிர்ச்செயல் ஆகும். |
08:09 | இது state transition reaction ஆகும். |
08:12 | எனவே Reaction toolbarஇல் உள்ள State transitionக்கான icon மீது click செய்கிறேன். |
08:18 | Aவின் எந்த விளிம்பிலாவது click செய்து, பின்னர் B மீது click செய்யவும் |
08:23 | இவ்வாறு, reaction arrow, A மற்றும் Bயை இணைப்பதைக் காணலாம். |
08:30 | முதலில் தேர்ந்த்தெடுக்கப்பட்ட component, reactantஆகக் கருதப்படுகிறது. |
08:35 | எனவே எப்போதும், reactantகளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. |
08:39 | re1, default reaction id ஆகிறது. |
08:43 | இப்போது species C யை சேர்த்து, முந்தைய slideஇல் காட்டப்பட்டுள்ளபடி, பொருத்தமான நிலையில் அதனை வைக்கலாம். |
08:54 | நான் Reaction toolbarஇலிருந்து, இந்த iconஐ, Catalysisற்காகத் தேர்வு செய்கிறேன். |
09:00 | நான் Cயின் விளிம்பில் click செய்து, State transition reactionஇன் சதுர சின்னத்திலும் சொடுக்குகிறேன். |
09:08 | இப்போது species Dயை சேர்த்து, அதனை Bயின் அருகில் வைக்கிறேன். |
09:15 | Bயிலிருந்து Dற்கு, ஒரு State transition reactionஐ சேர்க்கலாம். Default reaction id, re2 ஆகும். |
09:26 | நான் species E யை இணைத்து, முந்தைய slideஇல் காட்டியபடி, தகுந்த இடத்தில் அதனை வைக்கிறேன். |
09:35 | நான் இப்போது Inhibition reactionஐக் குறிக்கும் இந்த iconஐ, Reaction toolbarஇலிருந்து தேர்ந்தெடுக்கிறேன். |
09:44 | நான் Eயின் விளிம்பில் click செய்து, State transition reactionஇன் இந்த சதுர சின்னத்திலும் சொடுக்குகிறேன். இரண்டு புள்ளிகளையும் இது இணைக்கும். |
09:54 | இப்போது simple networkஐக் காணலாம் |
09:57 | நாம் செய்த பணிகளை save செய்யலாம். |
10:00 | Fileக்கு சென்று, Save asஐ click செய்யவும். |
10:04 | நான் “Simple Network” எனப் பெயரிடுகிறேன். |
10:06 | இது நாம் செய்த பணிகளை .xml formatஇல் Save செய்யும். . Saveஇனை சொடுக்கவும். |
10:12 | இப்போது நாம் imageஇனை எவ்வாறு export செய்வது எனக் கற்போம். இதற்கு செல்க: File>Export Image |
10:22 | நீங்கள் imageஇனை, pdf, png, jpeg முதலான வெவ்வேறு formatகளில் save செய்யலாம். |
10:29 | நான் jpeg imageஆக save செய்கிறேன். Saveஇனை சொடுக்கவும். |
10:35 | நாம் networkஇனை zoom செய்வது எவ்வாறு எனப் பார்ப்போம். |
10:38 | Zoom செய்வதற்கான 4 தேர்வுகள் - Zoom In, Zoom Out, Zoom Fit. Zoom Reset |
10:47 | நான் Zoom In icon ஐ இரண்டு முறை click செய்கிறேன். Image பெரிதானதை நாம் காணலாம். |
10:54 | இப்போது Zoom Resetஐ click செய்கிறேன். Network, உண்மையான அளவிற்கு மீண்டும் வருகிறது |
11:02 | இத்துடன் நாம் Getting started with CellDesignerக்கான spoken tutorial இன் முடிவிற்கு வருகிறோம். |
11:08 | சுருக்கமாகப் பார்ப்போம். நாம் கற்றது CellDesignerஇல், Menu மற்றும் Tool bar |
11:14 | CellDesignerஇல் பல்வேறு areas. Species மற்றும் Reactions முதலான componentகள். |
11:20 | நாம் species மற்றும் reaction componentகளைப் பயன்படுத்தி, ஒரு simple network ஐ உருவாக்கினோம். |
11:26 | மேலும் networkஇனை எவ்வாறு zoom செய்வது, save செய்வது மற்றும் imageஇனை export செய்வது எனக் கற்றோம். |
11:32 | ஒரு பயிற்சியாக, CellDesigner 4.2வினைப் பயன்படுத்தி, ஒரு networkஇனை உருவாக்கவும். |
11:39 | இந்த networkஇல், A மற்றும் B புரோட்டீன்கள் இணைந்து, வினையூக்கி புரோட்டீன் C உள்ள போது, ஒரு complexஇனை (Complex1) அமைக்கின்றன. |
11:51 | இந்த complex, வினையூக்கி புரோட்டீன் D இருக்கும் போது சிதைகிறது. |
11:58 | இது போன்றொரு networkஇனை நீங்கள் பெற வேண்டும். |
12:01 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும் |
12:13 | Spoken Tutorial திட்டக்குழு, spoken tutorialகளைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, contact at spoken hyphen tutorial dot orgக்கு மின்னஞ்சல் செய்யவும் |
12:28 | Spoken Tutorial பாடங்கள், Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும். இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது |
12:41 | இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:53 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .. |