Linux-Old/C2/Ubuntu-Software-Center/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:05, 6 September 2018 by Nancyvarkey (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 Ubuntu Software Center குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
0:04 இந்த tutorial லில் நாம் Ubuntu Software Center ஐ பயன்படுத்தி Ubuntu Operating System இல்
0:09 மென்பொருட்களை download, install, update மற்றும் uninstall செய்வதை கற்கலாம்
0:16 Ubuntu Software Center என்பதென்ன?
0:18 அது Ubuntu OS இல் மென்பொருட்களை மேலாளும் tool
0:23 அதைக்கொண்டு மென்பொருட்களை search, download, install, update அல்லது uninstall செய்யலாம்
0:30 Ubuntu Software Center ஒவ்வொரு மென்பொருளுக்கும் மதிப்புரை, மதிப்பீடு ஆகியவற்றையும் கொண்டுள்ளது
0:36 இதனால் மென்பொருளை பயன்படுத்து முன்னரே அதைப்பற்றி அறியலாம்
0:41 மென்பொருள் நிறுவல் குறித்த வரலாற்றையும் இது சேமிக்கிறது
0:45 இந்த tutorialலில் நாம் Ubuntu Software Center ஐ Ubuntu version 11.10 இல் பயன்படுத்துகிறோம்
0:52 மேலே போகலாம்
0:54 நீங்கள் Internet இல் இணைய வேண்டும்
0:56 மென்பொருட்களை நிறுவ System Administrator அலல்து Administrator rights இருக்க வேண்டும்
1:04 Launcher இல், Ubuntu Software Center icon ஐ சொடுக்கவும்
1:08 Ubuntu Software Center window தோன்றுகிறது
1:12 All Software, Installed மற்றும் History buttons ... window வின் மேல் இடது பக்கம் தெரிகிறது
1:19 Search field... மேல் வலது மூலையில் உள்ளது
1:23 Ubuntu Software Center window இரண்டு Panel களாக உள்ளது
1:28 இடது panel software categories ஐ காட்டுகிறது
1:33 வலது panel புதியது மற்றும் அதிகம் மதிக்கப்படுவதை காட்டுகிறது
1:38 What’s New panel புதிதாக பட்டியலிட்ட மென்பொருளை காட்டுகிறது
1:42 Top Rated panel ... user rating அதிகமாக உள்ள, அடிக்கடி download செய்யப்பட்ட மென்பொருட்களை பட்டியலிடுகிறது
1:51 software க்கு category வாயிலாக browse செய்யலாம்
1:55 இடது panel லில், Internet மீது சொடுக்கவும்.
1:58 Internet software list மற்றும் Internet category க்கு top rated software காட்டப்படுகிறது
2:05 சில மென்பொருட்கள் tick mark உடன் கூடிய ஒரு சிறுவட்டத்துடன் உள்ளன.
2:10 இதன் பொருள் இந்த மென்பொருள் ஏற்கெனவே கணினியில் நிறுவப்பட்டுள்ளது
2:15 Internet category இல் மேலும் மென்பொருட்களை காண All icon ஐ சொடுக்கவும்
2:21 Internet category இல் கிடைக்கக்கூடிய எல்லா மென்பொருட்களும் விண்டோவில் தெரிகிறது
2:26 மென்பொருட்களை sort செய்யலாம்: By Name, By Top Rated அல்லது புதியது முதலில்
2:32 மேல்-வலது மூலையில் drop-down ஐ சொடுக்கவும்
2:36 list இல் By Top Rated ஐ select செய்க
2:40 Internet software ....ratings order இல் அமைக்கப்படும்
2:45 கணினியில் நிறுவப்பட்ட எல்லா software இன் list ஐ காண....
2:50 Installed button ஐ சொடுக்கவும்
2:53 software category தோன்றுகிறது
2:56 Sound மற்றும்Video க்கு முன்னுள்ள சிறு முக்கோணத்தை சொடுக்கவும்
3:02 Sound மற்றும் Video க்கு கணினியில் நிறுவியுள்ள எல்லா மென்பொருட்களும் காண்கின்றன.
3:08 All Software மீதும்... பின் drop-down இல் Provided by Ubuntu மீதும் சொடுக்கவும்
3:14 Ubuntu தரும் எல்லா மென்பொருட்களும் பட்டியலில் தோன்றுகின்றன.
3:19 VLC media player ஐ நிறுவலாமா?
3:24 windowவில் மேலே -வலது பக்கமுள்ள Search box இல் VLC என type செய்க.
3:29 VLC media player காட்டப்படும்
3:33 Install ஐ சொடுக்கவும்
3:35 Authentication dialog box தோன்றுகிறது
3:38 system password ஐ உள்ளிடவும்
3:42 Authenticate ஐ சொடுக்கவும்
3:44 VLC install ஆவதை progress bar காட்டுகிறது.
3:50 Installation packages இன் எண்ணிக்கை, அளவை பொருத்து நேரமாகும்.
3:57 progress மேலேயுள்ள button ஆல் காட்டப்படுகிறது
4:02 மற்ற applications ஐ installation நடக்கும் போது ஆராயலாம்.
4:07 VLC install ஆனதும் சிறு tick mark ... VLC க்கு எதிரில் இடப்படும்.
4:13 Remove button வலது பக்கம் காண்கிறது.
4:17 VLC ஐ uninstall செய்ய நினைத்தால் இந்த Remove button ஐ சொடுக்கவும்.
4:23 இதே போல எல்லா மென்பொருட்களையும் தேடி நிறுவலாம்.
4:29 இப்போது History ஐ காணலாம்
4:31 இது installations ன் போது நாம் செய்த மென்பொருள் updates மற்றும் removal கள் உட்பட எல்லா மாற்றங்களையும் காட்டுகிறது
4:40 History ஐ சொடுக்கவும். History dialog box தோன்றுகிறது
4:45 நம் வரலாற்றை - All Changes, Installations, Updates, மற்றும் Removals ஐ காணலாம்
4:51 All Changes ஐ சொடுக்கவும்
4:53 எல்லா மாற்றங்களின் - அதாவது, installations, updates மற்றும் removals இன் list காட்டப்படுகிறது
5:01 install செய்த software ஐ regular ஆக update செய்யலாம்
5:07 Ubuntu மற்றும் Ubuntu Software Center குறித்து மேலும் தகவல்களை Ubuntu Website இல் காணலாம். <Pause>
5:17 இத்துடன் இந்த tutorial முடிகிறது
5:21 இந்த tutorial இல் Ubuntu Software Center ஐ பயன்படுத்துவதை கற்றோம்.
5:26 நாம் Ubuntu Operating System இல் software .. download, install, update மற்றும் un-install செய்ய கற்றோம்.
5:36 உங்களுக்கு ஒரு assignment .
5:39 Thunderbird ஐ Ubuntu Software Center மூலம் Download செய்து install செய்க
5:46 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
5:49 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
5:52 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்
5:57 Spoken Tutorial திட்டக்குழு
5:59 spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
6:02 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
6:06 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
6:12 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
6:17 Iஇதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
6:24 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
6:28 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
6:35 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Nancyvarkey, Pravin1389, Priyacst