Geogebra/C3/Tangents-to-a-circle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:43, 28 October 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 வணக்கம் "Tangents to a circle in Geogebra" tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த tutorial லின் இறுதியில் வட்டத்துக்கு தொடுகோடுகள் வரைய முடியும், தொடுகோடுகளின் பண்புகளை புரிந்து கொள்ளலாம்.
00:17 Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்
00:22 இல்லையானால் பொருத்தமான tutorialகளை எங்கள் வலைத்தளத்தில் காணவும் http://spoken-tutorial.org.
00:27 இந்த டுடோரியலை பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10, Geogebra Version 3.2.47.0 .
00:41 பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் Tangents, Perpendicular Bisector, Intersect two Objects, Compass, Polygon, Circle with Center and Radius.
00:58 புதிய Geogebra window வை திறப்போம் .
01:01 இதற்கு Dash home .. Media applications..., Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும்
01:13 வட்டத்தின் 'தொடுகோடு' ஐ வரையறுப்போம்.
01:16 தொடுகோடு என்பது வட்டத்தை ஒரே ஒரு புள்ளியில் தொடும் கோடு.
01:22 அப்படி தொடும் புள்ளி "தொடுநிலைப்புள்ளி" எனப்படும்.
01:27 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது "Axes" க்கு பதில் "Grid" layout... drawing pad மீது வலது சொடுக்கவும் .
01:35 "Axes" ஐ uncheck செய்து "Grid" ஐ தேர்க.
01:39 வட்டத்துக்கு தொடுகோடு வரைவோம்
01:42 முதலில் வட்டத்தை வரைவோம்
01:45 “circle with Center and radius” tool ஐ toolbar இலிருந்து தேர்க
01:49 புள்ளி 'A' ஐ drawing pad இல் குறிக்கவும்
01:52 dialog box திறக்கிறது.
01:53 ஆரத்தின் மதிப்பு '3' என உள்ளீடுக; ஓகே செய்க
01:58 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3' cm உடைய வட்டம் வரையப்படும்
02:04 புள்ளி 'A' ஐ நகர்த்தி வட்டம் அதே ஆரத்துடன் இருப்பதை காண்க.
02:09 "New point" tool மீது சொடுக்கவும், புள்ளி 'B' ஐ வட்டத்தின் வெளியே குறிக்கவும்
02:15 "Segment between two points " tool ஐ தேர்க. புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி AB வரையப்படும்
02:25 "Perpendicular Bisector" tool ஐ தேர்க , புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி 'AB' க்கு செங்குத்து சமவெட்டி வரையப்படும்
02:37 வட்டப் பகுதி 'AB' மற்றும் செங்குத்துச் சமவெட்டி ஒரு புள்ளியில் வெட்டிகொள்கின்றன. "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.
02:44 இந்த வெட்டுப்புள்ளியை 'C' எனக்குறிக்கலாம். புள்ளி 'B' ஐ நகர்த்தி எப்படி செங்குத்துச் சமவெட்டி மற்றும் புள்ளி 'C' புள்ளி 'B' உடன் நகர்கிறது என காண்க
02:59 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என்று எப்படி காண்பது?
03:02 "Distance" tool மீது சொடுக்கவும். பின் புள்ளிகள் 'A' , 'C'. 'C' ,'B' மீது சொடுக்கவும். 'AC' = 'CB' சமம் என்பது 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என நிரூபிக்கிறது.
03:20 "Compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க. புள்ளிகள் 'C', 'B' மீது சொடுக்கவும். மீண்டும் 'C' மீது... படம் பூர்த்தி ஆகிறது.
03:30 இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் வெட்டிகொள்கின்றன.
03:33 "Intersect two objects" tool மீது சொடுக்கவும். வெட்டு புள்ளிகளை 'D' மற்றும் 'E' எனக்குறிக்கலாம்.
03:42 "Segment between two points " tool ஐ தேர்க.
03:45 புள்ளிகள் 'B', 'D' மற்றும் 'B' , 'E' ஐ சேர்க்கவும்
03:53 வட்டப் பகுதிகள் 'BD' மற்றும் 'BE' ... வட்டம் 'c' க்கு தொடுகோடுகள்.
03:59 வட்டத்தின் தொடுகோடுகளின் சில பண்புகளை பார்க்கலாம்.
04:05 "Segment between two points " tool ஐ தேர்க.
04:08 புள்ளிகள் 'A', 'D' மற்றும் 'A', 'E' ஐ சேர்க்கவும்
04:14 முக்கோணங்கள் 'ADB' மற்றும் 'ABE' இல்... வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE' (இவை வட்டம் 'c' இன் ஆரங்கள்). Algebra view வில் காண வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE'.
04:34 '∠ADB'= '∠BEA' வட்டம் 'D' இன் அரை வட்டத்தின் கோணம்.  இந்த கோணத்தை அளக்கலாம்.
04:48 "Angle" tool மீது சொடுக்கவும் ... புள்ளிகள் 'A', 'D', 'B' மற்றும் 'B', 'E', 'A' மீது சொடுக்கவும். கோணங்கள் சமம்.
05:03 வட்டப் பகுதி 'AB' இரண்டு முக்கோணங்களுக்கும் ஒன்றே, ஆகவே "SAS சர்வ சம விதி"ப்படி '△ADB' '≅' '△ABE'
05:20 அதாவது தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம்!
05:26 Algebra view விலிருந்து தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம் எனக்காணலாம்.
05:33 தொடுகோடு... தொடுபுள்ளியில், வட்டத்தின் ஆரத்துக்கு எப்போதுமே செங்குத்தாக இருக்கிறது என்பதையும் காண்க. புள்ளி 'B' ஐ நகர்த்தி... தொடுகோடுகள் அதனுடன் நகர்வதை காணவும்.
05:50 file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்
05:54 file name ஐ "Tangent-circle" என இட்டு "Save"மீது சொடுக்கவும்
06:08 ஒரு தேற்றத்தை கூறலாம்.
06:11 "வட்டத்தின் தொடு கோட்டின் தொடு புள்ளி வழியே... ஒரு நாண் வரையப்பட்டால்... அந்த நாண்... தொடுகோட்டுடன் ஏற்படுத்தும் கோணங்கள் முறையே ஒவ்வொன்றும்... தனித்தனியாக மாற்று வட்டத்துண்டுகளில் அமைந்த கோணங்களுக்கு சமம்". தொடு கோடுகளுக்கும் நாணுக்கும் இடையேயான கோணம் DFB = நாண் BF இன் உட்கோணம் FCB .
06:34 தேற்றத்தை சோதிக்கலாம்.
06:38 புதிய Geogebra window வை திறப்போம் . “File” >> "New"மீது சொடுக்கவும். ஒரு வட்டத்தை வரைவோம்
06:48 tool bar இலிருந்து "circle with center through point " toolமீது சொடுக்கி புள்ளி 'A' ஐ மையமாக இடுக; மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' ஐ பெறவும்.
06:59 "New point" tool ஐ தேர்க. புள்ளி 'C' ஐ பரிதியில் குறிக்கவும்; மேலும் 'D' வட்டத்தின் வெளியில்.
07:06 "Tangents" tool ஐ toolbar இலிருந்து தேர்க. புள்ளி 'D' மீதும் பரிதியிலும் சொடுக்கவும் .
07:14 இரண்டு தொடுகோடுகள் வட்டத்துக்கு வரையப்பட்டன.
07:16 தொடுகோடுகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன.
07:20 "Intersect two objects" tool மீது சொடுக்கவும். தொடும் இடத்தில் புள்ளிகளை 'E' மற்றும் 'F' எனக்குறிக்கலாம்
07:28 ஒரு முக்கோணத்தை வரையலாம். "Polygon" tool மீது சொடுக்கவும்.
07:31 புள்ளிகள் 'B' 'C' 'F' மற்றும் மீண்டும் 'B' மீது சொடுக்கி பூர்த்தி செய்க
07:41 படத்தில் 'BF' தான் வட்டம் 'c' யின் நாண்.
07:45 '∠FCB' என்பது வட்டம் 'c' யின் நாண் உண்டாக்கும் உட்கோணம்.
07:53 '∠DFB' வட்டம் 'c' யின் நாண் மற்றும் தொடுகோட்டுக்கு இடையேயான கோணம்.
08:01 கோணங்களை அளக்கலாம். "Angle" tool மீது சொடுக்கவும்; புள்ளிகள் D' 'F' 'B' மற்றும் 'F' 'C' 'B' மீது சொடுக்கவும்.
08:14 '∠DFB' = '∠FCB' என்பதை காண்க. புள்ளி 'D' ஐ நகர்த்தி தொடுகோடுகள் மற்றும் நாண்கள் புள்ளி 'D' உடன் நகர்வதை காண்க.
08:31 file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்
08:36 file பெயரை "Tangent-angle" எனத்தருகிறேன். "Save" மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:50 சுருங்கச்சொல்ல இந்த tutorial லில், நாம் சோதிக்க கற்றது;
08:57 "ஒரு வெளிப் புள்ளியிலிருந்து வரைந்த தொடுகோடுகள் சமம்."
09:01 " தொடுகோடு மற்றும் வட்டத்தின் ஆரத்தின் இடையே உள்ள கோணம் 90^0"
09:07 " தொடுகோடு மற்றும் நாணிடையே உள்ள கோணம் நாண் தாங்கும் உட்கோணத்துக்கு சமம். "
09:14 assignment ஆக நீங்கள் சோதிக்க வேண்டியது:
09:17 "ஒரு வட்டத்துக்கு வரையப்பட்ட தொடுகோடுகள் இடையே உள்ள கோணம், மையத்தையும் தொடுபுள்ளிகளையும் சேர்க்கும் கோட்டுத்துண்டு தாங்கும் கோணத்துக்கு மிகை நிரப்பல் ஆகும்.”
09:30 சோதிக்க ஒரு வட்டம் வரைக. வெளிப்புள்ளியிலிருந்து தொடுகோடுகள் வரைக .
09:37 தொடுகோடுகளின் தொடு புள்ளிகளை குறிக்கவும். வட்டத்தின் மையத்தை தொடு புள்ளிகளுடன் இணைக்கவும்.
09:44 மையத்தில் கோணத்தை அளக்கவும். தொடுகோடுகள் இடையே கோணத்தை அளக்கவும்.
09:49 இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? மையத்தையும் வெளிப் புள்ளியையும் இணைக்கவும்.
09:55 கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக மையத்தில் வெட்டுகிறதா? குறிப்பு- Angle Bisector tool ஐ பயன்படுத்துக
10:05 output இப்படி இருக்க வேண்டும்.
10:08 கோணங்களின் கூட்டுத்தொகை 180^0. கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக வெட்டுகிறது
10:16 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/
10:19 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. வேகமான இணைப்பு இல்லையானல் தரவிறக்கி காண்க
10:27 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
10:32 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
10:35 மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org.
10:42 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்
10:47 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
10:54 மேலும் விவரங்கள் இந்த தொடுப்பில் உள்ளன http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:59 மூல பாடம் SNDT Mumbai இலிருந்து Neeta Sawant
11:04 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, PoojaMoolya, Priyacst, Ranjana