Advanced-Cpp/C2/Inheritance/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:35, 3 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். C++ ல் Inheritance குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:09 Inheritance, inheritance ன் வகைகள்
00:12 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்.
00:16 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00:19 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,
00:24 g++ compiler பதிப்பு 4.6.1
00:28 Inheritance ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:32 ஒரு object மற்றொன்றின் பண்புகளை பெறுவது inheritance எனப்படுகிறது
00:38 இது ஏற்கனவே உள்ள ஒரு class ல் எதையும் மாற்றாமல் அதை திரும்பவும் பயன்படுத்தும் செயல்முறை ஆகும்.
00:44 Inheritance ன் வகைகள், Single level inheritance
00:48 Multiple level inheritance
00:50 Hierarchical Inheritance
00:52 Multilevel inheritance
00:55 Hybrid Inheritance
00:57 முதலில் base class மற்றும் derived class பற்றி கற்போம்
01:02 base class அதன் சொந்த பண்புகள் மற்றும் செயல்பாடுகளை கொண்டுள்ளது.
01:06 இது parent class எனவும் அழைக்கப்படுகிறது
01:09 அனைத்து objectகளும் inherit செய்யக்கூடிய பொதுவான பண்புகளை இது கொண்டுள்ளது.
01:14 child class ஆனது derived class ஆகும்
01:18 base class ன் பண்புகளையும் செயல்பாடுகளையும் Derived class inherit செய்கிறது
01:23 single level inheritance பற்றி காண்போம்
01:27 single level inheritance ல் ஒரே ஒரு base class மற்றும் ஒரு derived class தேவைப்படுகிறது.
01:34 Multiple inheritance
01:37 multiple inheritance ல் ஒன்றுக்கும் மேற்பட்ட base class லிருந்து derived class inherit செய்கிறது.
01:44 Hierarchical Inheritance
01:47 Hierarchical Inheritance ல் ஒரு base class லிருந்து பல derived classகள் inherit செய்கின்றன
01:55 Multilevel inheritance
01:57 Multilevel inheritance ல் subclass ஆனது மற்ற classகளுக்கு base class போன்று செயல்படும்.
02:05 Hybrid inheritance
02:08 hybrid inheritance ல் ஒன்றுக்கும் மேற்பட்ட inheritance வடிவங்கள் சேர்ந்திருக்கும்.
02:14 இப்போது single level inheritance க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்
02:18 ஏற்கனவே எடிடரில் code ஐ டைப் செய்துவைத்துள்ளேன்.
02:21 அதை விளக்குகிறேன்.
02:23 file பெயர் exam_inherit.cpp என்பதை கவனிக்கவும்
02:28 இந்த உதாரணம் மாணவரின் பெயர் வரிசை எண் மற்றும் மதிப்பெண்களை காட்டுகிறது
02:35 இது நம் header file iostream
02:38 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
02:42 இங்கே class student உள்ளது
02:44 class student ன் private memberகளாக ஒரு integer variable roll_no மற்றும் character array name ஐ கொண்டுள்ளோம்.
02:53 Function input மற்றும் function display ஆகியவை class student ன் public functionகளாகும்.
02:59 மாணவரின் வரிசை எண் மற்றும் பெயரை ஏற்க இங்கே input function ஐ பயன்படுத்துகிறோம்.
03:06 பின் வரிசை எண் மற்றும் பெயரை காட்ட display function உள்ளது.
03:11 இங்கே exam_inherit என்ற மற்றொரு class உள்ளது
03:16 இது derived class.
03:18 class student ன் function மற்றும் dataஐ இது inherit செய்கிறது
03:23 பின் class exam_inherit ன் private variableகளாக sub1, sub2, sub3 மற்றும் total ஐ declare செய்துள்ளோம்
03:33 இங்கே public functionகளாக input_exam மற்றும் display_exam ஐ கொண்டுள்ளோம்
03:41 இங்கே class exam_inheritஐ மூடுகிறோம்
03:44 இப்போது மூன்று பாடங்களின் மதிப்பெண்களை ஏற்க input_exam function ஐ பயன்படுத்துகிறோம்.
03:52 மூன்று பாடங்களின் கூட்டலைக் கணக்கிட display_exam function ஐ இங்கு பயன்படுத்துகிறோம்.
03:59 பின் மொத்தத்தை அச்சடிக்கிறோம்.
04:01 இது நம் main function.
04:03 இங்கு class exam_inherit ன் ஒரு object ex ஐ உருவாக்குகிறோம்
04:10 பின் object ex ஐ பயன்படுத்தி அனைத்து function களையும் call செய்கிறோம்
04:15 இது நம் return statement.
04:18 ப்ரோகிராமை இயக்குவோம்
04:20 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
04:30 compile செய்ய டைப் செய்க
04:31 g++ (space) exam_inherit.cpp (space)-o (space) exam
04:41 எண்டரை அழுத்துக
04:43 டைப் செய்க ./ (dot slash)exam எண்டரை அழுத்துக
04:46 வெளியீடு, Enter Roll no.:
04:49 1 ஐ கொடுக்கிறேன்
04:51 Enter Name: Arya என கொடுக்கிறேன்
04:55 Enter marks of subject1
04:57 60 ஐ கொடுக்கிறேன்
05:00 subject 2 க்கு 70
05:02 subjec 3 க்கு 80
05:06 வெளியீடு காட்டப்படுகிறது
05:08 Roll no is: 1 Name is: Arya
05:11 Total is: 210
05:13 இப்போது இதே உதாரணத்தில் multilevel inheritance ஐ காண்போம்.
05:18 code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன்.
05:20 நம் எடிடருக்கு வருவோம்.
05:22 நம் file பெயர் multilevel.cpp என்பதை காண்க
05:28 இங்கே class exam_inherit ன் public variable ஆக variable total ஐ declare செய்துள்ளோம்.
05:38 ஏனெனில் private memberகளை derived class மூலம் அணுக முடியாது
05:44 இங்கே grade என்ற மற்றொரு class உள்ளது
05:49 இது class exam_inherit ஐ inherit செய்கிறது
05:53 Class grade ஆனது derived class
05:56 class exam_inherit ஆனது class grade க்கான base class.
06:02 class exam_inherit ன் அனைத்து functionகளும் data உம் class grade க்கு inherit செய்யப்படும்.
06:11 இங்கே class grade ன் private member ஆக avg ஐயும் public function ஆக function average ஐயும் declare செய்துள்ளோம் .
06:21 பின் இந்த class ஐ மூடுகிறோம்.
06:23 இங்கே சராசரியைக் கணக்கிட average function ஐ பயன்படுத்துகிறோம்.
06:27 பின் சராசரியை அச்சடிக்கிறோம்
06:30 main function ன் உள் class grade ன் ஒரு object ஆக gd ஐ உருவாக்குகிறோம்
06:36 பின் object gd ஐ பயன்படுத்தி அனைத்து functionகளையும் call செய்கிறோம்.
06:40 gd.input()
06:42 input_exam
06:44 display, display_exam
06:46 மற்றும் average function.
06:49 இது நம் return statement.
06:52 இப்போது class grade ஆனது derived class என்பதை காணலாம்
06:56 exam_inherit ஆனது class grade க்கான base class
07:01 இங்கே class exam_inherit ஆனது derived class.
07:06 class student ஆனது class exam_inherit க்கான base class
07:12 ப்ரோகிராமை இயக்குவோம்.
07:14 நம் terminalக்கு வருவோம்.
07:18 compile செய்ய டைப் செய்க g++ (space) multilevel.cpp (space) -o (space) mul
07:26 எண்டரை அழுத்துக
07:30 டைப் செய்க ./mul எண்டரை அழுத்துக
07:32 இங்கே காண்பது Enter Roll no.:
07:34 2 ஐ கொடுக்கிறேன்
07:36 Enter Name:
07:38 Pratham என கொடுக்கிறேன்
07:41 Enter marks of subject1
07:43 65 ஐ கொடுக்கிறேன்
07:46 subject2 க்கு 67 ,
07:48 subject3 க்கு 82
07:52 காட்டப்படும் வெளியீடு:
07:54 Roll no is: 2
07:56 Name is: Pratham
07:59 Total is: 214 மற்றும், Average is: 71
08:01 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:05 நம் slideகளுக்கு வருவோம்.
08:07 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
08:10 Inheritance மற்றும் inheritance ன் வகைகள்
08:15 பயிற்சியாக ஒரு class Shape ஐ உருவாக்க ஒரு ப்ரோகிராம் எழுதுக.
08:18 பின் Area மற்றும் Perimeter என அந்த class க்கு இரு functionகளை உருவாக்குக.
08:23 சதுரம், செவ்வகம் மற்றும் வட்டம் போன்ற பல்வேறு வடிவங்களுக்கு பரப்பளவு மற்றும் சுற்றளவை கண்டறியவும்.
08:31 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:34 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:37 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:47 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:51 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:02 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:09 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
09:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst