Tux-Typing/S1/Getting-started-with-Tux-Typing/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:20, 6 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:00 | Introduction to Tux Typing குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! |
00:04 | இந்த tutorial லில் நீங்கள் Tux Typing மற்றும்Tux typing interface குறித்து கற்கலாம். |
00:10 | ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்... |
00:12 | பிழையில்லாமல், வேகமாக, செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம் |
00:19 | மேலும் கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்ய கற்போம் |
00:25 | Tux Typing என்பதென்ன? |
00:27 | Tux Typing ஒரு தட்டச்சு ஆசான். |
00:30 | அது ஊடாடும் விளையாட்டுகளால் வெவ்வேறு character களை type செய்ய கற்பிக்கிறது. |
00:38 | typing ஐ உங்களுக்கு தோதான வேகத்தில் கற்கலாம் |
00:41 | typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம். |
00:46 | Tuxtyping... பயிற்சிக்கு புதிய சொற்களை சேர்க்க உதவுகிறது. மேலும் பயிற்சி மொழியையும் அமைக்க உதவுகிறது. |
00:54 | இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் Tux Typing 1.8.0 |
01:02 | Tux Typing ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம். |
01:07 | Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க |
01:16 | Tux Typing. ஐ திறக்கலாம். |
01:19 | Dash Home அதாவது கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை சொடுக்கவும் |
01:26 | Search box தோன்றுகிறது. Search box இல் Dash Home க்கு அடுத்து type செய்க: Tux Typing. |
01:34 | Search box இன் கீழ் Tux Typing icon தோன்றுகிறது |
01:39 | Tux Typing icon மீது சொடுக்கவும். |
01:42 | Tux Typing window தோன்றுகிறது. |
01:46 | Tux Typing இல் கீழ் காணும் மெனு உள்ளது: |
01:50 | Fish Cascade – ஒரு விளையாட்டு தளம்.
Comet Zap – இன்னொரு விளையாட்டு தளம். |
01:56 | பாடங்கள் – character களை கற்க வெவ்வேறு பாடங்கள் உள்ளன. |
02:01 | Options – menu க்கள் உள்ளன. அவை சொற்களை திருத்த சொற்றொடர்களை டைப் செய்ய tux typing project குறித்த தகவல்களை பெற, மற்றும் மொழியை அமைக்க பயனாகிறது. |
02:13 | Quit – விளையாட்டிலிருந்து வெளியேற சொடுக்கவும். |
02:16 | பாடங்களை பயன்படுத்தி type பயிலுவோம். |
02:20 | Main menu வில் பாடங்களை சொடுக்கவும். |
02:23 | பாடமுள்ள window தோன்றுகிறது |
02:26 | முதல் பாடத்தை பயிலுவோம். |
02:30 | basic_lesson_01.xml ஐ சொடுக்கவும்.. |
02:35 | குறிப்புகள் உள்ள window தோன்றுகிறது. குறிப்புகளை படிக்கவும். |
02:41 | space bar ஐ அழுத்த பாடம் துவங்குகிறது. |
02:45 | keyboard ஐ காட்டும் window தோன்றுகிறது. |
02:48 | எழுத்து a ஐ type செய்யத்துவங்கலாம். |
02:52 | p ஐ அழுத்தி பயிற்சியை ஆரம்பிக்கலாம்.. |
02:56 | type செய்ய வேண்டிய characters உள்ள window தோன்றுகிறது.. |
03:01 | ‘aaa aaa…..’ என்று காட்டும் வரி சொல்வதென்ன? |
03:07 | இந்த எழுத்துக்களை நாம் டைப் செய்ய வேண்டும். |
03:10 | இதை Teacher’s line என்போம். |
03:13 | நாம் காண்பது English keyboard இதுவே நம்மில் பலருக்கும் standard keyboard . |
03:19 | a ஐ சுற்றி சிவப்பு சதுரம் தெரிகிறதா ? இது இப்போது டைப் செய்ய வேண்டிய எழுத்தை காட்டுகிறது. |
03:27 | விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை |
03:35 | type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும் |
03:39 | விசைப்பலகையில் மூன்று வரிகள் அகர முதலான எழுத்துக்கள் எண்கள், மற்ற characters, உள்ளன. |
03:51 | விசைப்பலகையின் இரண்டாம் வரியில் அகர முதல எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Enter விசைகள் உள்ளன.. |
03:58 | அடுத்த வரிக்கு போக Enter விசையை அழுத்தவும் |
04:02 | விசைப்பலகையின் மூன்றாம் வரியில் உள்ளவை அகர முதல எழுத்துக்கள், colon/semicolon, மற்றும் caps lock key. |
04:10 | capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும் |
04:14 | விசைப்பலகையின் நான்காம் வரியில் உள்ளவை alphabets, special characters, மற்றும் shift விசைகள். |
04:21 | எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும் |
04:27 | ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும் |
04:34 | உதாரணமாக, 1 எண்ணுடைய விசை மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது. |
04:39 | அதை டைப் செய்ய Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும் |
04:44 | விசைப்பலகையின் ஐந்தாம் வரியில் Ctrl, Alt, மற்றும் Function விசைகள், space bar உம் உள்ளன |
04:52 | Tux Typing keyboard... laptop மற்றும் desktop விசைப்பலகைகள் இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம். |
05:00 | Tux Typing விசைப்பலகை மற்றும் desktop விசைப்பலகை மற்றும் laptop ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன. |
05:10 | விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம். |
05:14 | இந்த slide ஐ பாருங்கள்.. |
05:16 | அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது. இடமிருந்து வலம் விரல்களின் பெயர் : |
05:21 | சுண்டுவிரல்,
மோதிர விரல், நடுவிரல், சுட்டு விரல் மற்றும் கட்டை விரல் |
05:27 | விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும். |
05:32 | சுண்டுவிரல் alphabet ‘A’ மீது |
05:35 | மோதிர விரல் alphabet ‘S’ மீது |
05:38 | நடுவிரல் alphabet ‘D’, |
05:41 | சுட்டு விரல் alphabet ‘F’. |
05:44 | விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது கையை வைக்கவும். |
05:49 | சுண்டுவிரல் colon/semi-colon விசையில் இருக்கட்டும். |
05:54 | மோதிர விரல் alphabet ‘L’. மீது |
05:56 | நடுவிரல் alphabet ‘K’. மீது, |
06:00 | சுட்டு விரல் alphabet ‘J’. மீது |
06:03 | வலது கட்டை விரலால் space bar ஐ அழுத்தவும். |
06:08 | character ஐ type செய்ய சரியான விரலை இந்த இரு கைகள் படம் காட்டுகிறது. |
06:14 | இடது சுண்டு விரலை சுற்றி ஏன் சிவப்பு வட்டம் உள்ளது? |
06:19 | ஆமாம், நாம் டைப் செய்ய வேண்டியது அந்த விரலால் a வை. |
06:23 | உங்கள் விரல்களை முன்னே பாடத்தில் சொல்லிய படி keyboard இல் வைக்கவும். |
06:29 | typing ஐ துவக்கலாம். |
06:32 | type செய்யும்போது, characters ..Teacher’s line க்கு கீழே காட்டப்படுகின்றன |
06:39 | இதை Student’s line என்போம். |
06:42 | இப்போது Teacher’s Line இல் காட்டாத character ஒன்றை டைப் செய்யலாம். |
06:47 | mistype செய்த character .. student’s line இல் தெரிகிறதா? இல்லை. |
06:53 | அதற்குப்பதிலாக ஒரு X mark... mistype செய்த character மீது கண நேரம் தோன்றுகிறது. |
06:59 | இன்னும் சில எழுத்துக்களை டைப் செய்யலாம். |
07:02 | நம் typing இன் metrics ஐ பார்க்கலாம். |
07:07 | இதற்குள் இடது பக்க field கள் காட்டுவது என்ன என்று கண்டு பிடித்திருப்பீர்கள். |
07:13 | Time – உங்கள் typing வேகம். |
07:17 | Chars – எத்தனை characters டைப் செய்து இருக்கிறிர்கள் என்பது. |
07:21 | CPM- டைப் செய்த character per minutes |
07:26 | WPM – டைப் செய்த சொற்களின் எண்ணிக்கை. |
07:31 | Errors – செய்த பிழைகளின் எண்ணிக்கை. |
07:34 | Accuracy – உங்கள் typing இன் துல்லியம். |
07:40 | Escape key ஐ இரு முறை அழுத்த main menu க்கு போகலாம். |
07:45 | நம் முதல் typing பாடம் முடிந்தது! |
07:47 | ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது. |
07:52 | துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின் typing வேகத்தை அதிகரிக்கலாம்.. |
07:59 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
08:03 | இந்த டுடோரியலில் நாம் கற்றது Tux Typing இடைமுகம் . நம் முதல் பாடத்தையும் முடித்தோம். |
08:11 | இதோ ஒரு assignment. |
08:13 | basic_lesson_02.xml க்கு செல்லவும். |
08:19 | இந்த மட்டத்தில் பழகவும். |
08:21 | இந்த மட்டத்தில் எல்லா character களையும் டைப் செய்து பின் Enter key ஐ அழுத்தவும். |
08:26 | இதே போல வெவ்வேறு பாடங்களையும் பழகலாம். |
08:30 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
08:36 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
08:41 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
08:46 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:50 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
08:56 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:00 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:08 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:19 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |