Git/C2/Basic-commands-of-Git/Tamil
From Script | Spoken-Tutorial
00:01 | Gitல் அடிப்படை commandகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, Git repository மற்றும் Gitன் சில அடிப்படைcommandகள் . |
00:13 | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் 'gedit' Text Editor. |
00:23 | உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம். |
00:27 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminalலில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:33 | இல்லையெனில், அதற்கான Linux டுடோரியலுக்கு எங்கள் வளைதளத்தை பார்க்கவும். |
00:40 | இப்போது, Git repository பற்றி காண்போம். |
00:44 | Git repository என்பது ஒரு folder, அதில் நம் project-ன் தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படும். |
00:50 | அது ஒரு local machine அல்லது remote machine என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். |
00:55 | Git repositoryக்கும், சாதாரண folderக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் |
01:00 | சாதாரண folderலில், files, directories மட்டுமே இருக்கும். |
01:04 | ஆனால், Git repositoryல் file மற்றும் directoryகளின் மொத்த வரலாறும் இருக்கும். |
01:11 | இப்போது, நம் கணினியில், ஒரு Git repositoryயை எப்படி உருவாக்குவது என பார்ப்போம். |
01:17 | Terminal-லை திறக்க, Ctrl+Alt+Tkeys-யை ஒன்றாக அழுத்தவும். |
01:22 | என் கணினியில், Git repositoryக்கு ஒரு directoryயை, என் home directory-யில் உருவாக்குகிறேன். |
01:28 | நீங்கள், உங்கள் கணினியில், எங்கு வேண்டுமானாலும் directoryயை உருவாக்கலாம். |
01:33 | Terminalலில் முன்னிருப்பாக, நாம் home directoryல் உள்ளோம். |
01:37 | டைப் செய்க: mkdir space mywebpage, பின் Enterஐ அழுத்தவும். |
01:44 | இப்போது, home directory-யில், mywebpage என்கிற directory-யை உருவாக்கிவிட்டோம். |
01:49 | இந்த directoryனுள் செல்ல, டைப் செய்க:cd space mywebpage , பின்Enter அழுத்தவும். |
02:00 | mywebpage directoryயை, Git repository ஆக மாற்ற, டைப் செய்க: git space init, பின் Enterஐ அழுத்தவும். |
02:08 | Initialized empty Git repository என்கிற செய்தியை காண்பீர்கள். |
02:13 | Git தொடங்கிவிட்டது என்பதை இது குறிக்கும். |
02:17 | நம் கணினியில் Git repository உருவாக்கப்பட்ட path இது தான். |
02:24 | அதன் பிறகு, dotgit என்ற hidden folder, mywebpage folderலில் உருவாக்கப்படும். |
02:32 | அந்த hidden folderரை பார்க்க, டைப் செய்க: Is space hyphen a, பி்ன் Enterஐ அழுத்தவும். |
02:39 | அது dotgit folderரை காண்பிக்கும். அதை நீக்கினால், மொத்த repositoryயும் அழிந்துவிடும். |
02:47 | அதனால் இந்த dotgit folderஉடன் கவனமாக இருக்க வேண்டும். |
02:51 | இப்போது, Gitக்கு ஓரு identityஐ பொருத்த வேண்டும். |
02:55 | Email address ஐ பொருத்த, டைப் செய்க: git space config space hyphen hyphen global space user dot email space priya[dot]spoken@gmail.com, பி்ன்Enter அழுத்தவும். |
03:12 | இங்கு, நான், priya[dot]spoken[at]gmail[dot]comஐ பயன்படுத்தி இருக்கிறேன். |
03:18 | உங்கள் சொந்த, email முகவரியை பயன்படுத்தவும். |
03:21 | Username-ஐ பொருத்த, டைப் செய்க:git space config space hyphen hyphen global space user dot name space Priya, பி்ன் Enter அழுத்தவும். |
03:37 | Priya என, username-ஐ, பயன்படுத்துகிறேன். நீங்கள், உங்கள் பெயரை பயன்படுத்தவும். |
03:43 | நாம் பொருத்தும் பெயரும், email addressம், Gitல் வேலை செய்யும் நபரின் அடையாளம் ஆகும். |
03:51 | அடுத்து, commit messageஐ கொடுப்பதற்க்கு, getit text editorஐ configure செய்கிறேன். |
03:57 | டைப் செய்க: Git space config space hyphen hyphen global space core dot editor space gedit, பின் Enter அழுத்தவும். |
04:09 | இப்போது, Git'க்கு, gedit configure ஆகிவிட்டது. |
04:14 | இங்கு, 'global' flag optional ஆகும். |
04:18 | Global flag பற்றி மேலும் அறிய slideகளுக்கு வருவோம் |
04:22 | ஒரே கணினியில், பல repositoryகளை உருவாக்கலாம். |
04:26 | Hyphen hyphen global flagஐ பயன்படுத்தினால், அதே setting, கணினியில் உள்ள எல்லா repositoryகளிலும் செயலாக்கப்பட்டுவிடும். |
04:34 | அதனால், எங்கு புது Git repository உருவாக்கினாலும், இந்த setting தானாகவே செயலாக்கப்பட்டுவிடும். |
04:42 | ஒரு குறிப்பிட்ட repository-க்கு மட்டும் identity வேண்டுமென்றால், hyphen hyphen global flag-ஐ பயன்படுத்தக் கூடாது. |
04:49 | terminalலுக்கு திரும்பி வரவும். |
04:51 | முன்னதாக அமைத்த identityயின் configuration விவரங்களை பார்க்கலாம். |
04:57 | டைப் செய்க: Git space config space hyphen hyphen list, பின் Enterஐ அழுத்தவும். |
05:04 | இங்கு editor name, email address மற்றும் username-ஐ பார்க்கலாம். |
05:10 | செயல் விளக்கத்திற்கு, நான் html fileகளை பயன்படுத்துகிறேன். |
05:14 | உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, text files அல்லது doc files. |
05:22 | terminalலுக்கு திரும்பி வரவும். promptஐ சுத்தம் செய்கிறேன். |
05:26 | டைப் செய்க: gedit space mypage.html space ampersand. |
05:34 | நீங்கள் வேறு fileஐ பயன்படுத்தினால், அதன் பெயரைக் கொடுக்கவும். |
05:41 | Promptலிருந்து வெளிவர, '&'(ampersand)ஐ பயன்படுத்துகிறேன். Enterஐ அழுத்தவும். |
05:47 | Writer documentல் நான் முன்னதாக சேமித்து வைத்திருந்த சில codeகளை copy, paste செய்கிறேன். |
05:54 | நீங்களும் அதே போல், சில தகவல்களை உங்கள் file-லில் சேர்க்கவும். |
05:58 | fileஐ சேமிக்கவும். |
06:01 | என்னிடம் code உள்ள html file உள்ளது. |
06:06 | கவனிக்கவும்: mypage.html வரும் இடங்களில் எல்லாம், உங்கள் file பெயரை கொடுக்கவேண்டும். |
06:14 | Gitஐ '"mypage.html fileஐ பின் தொடர சொல்வோம். |
06:18 | terminal-லுக்கு திரும்பி வந்து, டைப் செய்க: git space add space mypage.html. பின் Enterஐ அழுத்தவும். |
06:27 | இப்போது Gitன் statusஐ சரி பார்த்துக் கொள்வோம். டைப் செய்க: git space status, பின் Enterஐ அழுத்தவும். |
06:36 | new file: mypage.html என காண்பீர்கள். mypage.htmlன் மாற்றங்களை Git, பின்பற்றுகிறது என்பதை இது குறிக்கிறது. |
06:48 | இது tracking எனப்படும். |
06:51 | Mypage.html fileலுக்கு திரும்பி வருவோம். |
06:55 | இங்கு, இன்னும் சில code வரிகளை சேர்ப்போம். |
06:58 | முன்னர் செய்தது போல, Writer file-ல் இருந்து, copy-paste செய்கிறேன். |
07:06 | Fileஐ சேமித்து மூடவும். |
07:10 | terminal-லுக்கு திரும்பி வந்து, Gitன் statusஐ சரி பார்க்க, டைப் செய்க git space status, பின் Enterஐ அழுத்தவும். |
07:21 | changes not staged for commit என்றும், modified:mypage.html என்றும் காட்டுகிறது. |
07:28 | நாம் செய்த மாற்றங்கள், staging areaவில் சேர்க்கப்படவில்லை என்பதை இது குறிக்கும். |
07:34 | Staging area பற்றி மேலும் அறிந்து கொள்ள, slideகளுக்கு திரும்பி வருவோம். |
07:39 | Staging area என்பது ஒரு file. அது, நாம் commit, செய்ய வேண்டிய திருத்தங்களின், தகவல்களை, சேகரித்து வைக்கும். |
07:46 | Commit செய்வதற்கு முன், file-ன் content, staging areaவிற்கு சேர்க்கப்பட வேண்டும். |
07:51 | பின்வரும் டுடோரியல்களில், commit பற்றி மேலும் அறியலாம். |
07:56 | பழைய Git version-னில், staging areaவிற்கு பதிலாக, index என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கும். |
08:01 | இப்போது file-ன் புதிய மாற்றங்களை, staging areaவிற்கு, சேர்க்க கற்போம். |
08:07 | terminalலுக்கு திரும்பி வரவும். promptஐ சுத்தம் செய்கிறேன். |
08:11 | டைப் செய்க:Git space add space mypage dot html, பின் Enterஐ அழுத்தவும். |
08:19 | Git-ஐ சரி பார்க்க, டைப் செய்க : git space status, பின் Enterஐ அழுத்தவும். |
08:26 | changes to be committed, என்ற தகவலைப் பார்க்கலாம். |
08:30 | இதன் பொருள்- file, staging areaல் சேர்க்கப்படடு, commit ஆவதற்கு, தயாராக உள்ளது. |
08:37 | இப்போது, நாம் code-ஐ, இவ்விடத்தில், freeze செய்வோம். |
08:40 | நம் வேலையில், ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு, அதை, repositoryயில் சேமிக்கலாம். இது commit எனப்படும் |
08:49 | ஒவ்வொரு commitடும், username, email-id, date, time, commit message ஆகிய தகவல்களோடு, சேமிக்கப்படுகிறது. |
08:57 | அடுத்து Commit செய்ய கற்போம். terminal-லுக்கு திரும்பி வந்து, டைப் செய்க: git space commit, பின் Enterஐ அழுத்தவும். |
09:07 | Commit messageஐ பெற, getit text editor தானாக திறக்கும். |
09:13 | முதல் வரியில், “initial commit”, என்ற commit messageஐ எழுதுகிறேன். |
09:18 | எந்த பயனுள்ள தகவலையும், நீங்கள் எழுதலாம். |
09:22 | இங்கு, hashவுடன் தொடங்கும் சில வரிகளைப் பார்க்கலாம். நீங்கள் அவற்றை நீக்கலாம், அல்லது அப்படியே விட்டு விடலாம். |
09:30 | Hash வரிக்கு முன்போ அல்லது பின்போ, commit messageஐ எழுதவும். |
09:35 | பிற்காலத்தில், இந்த commit messageஐ வைத்து, இந்த நிலை வரையில், நாம் என்ன செய்தோம் என்பதை கண்டறியலாம். |
09:41 | Editorரை சேமித்து மூடுகிறேன். |
09:44 | இங்கு சில விவரங்களைப் பார்ப்பீர்கள், உதாரணத்திற்கு -commit message -எவ்வளவு fileகளை மாற்றி இருக்கிறோம் -எவ்வளவு புகுத்தல்கள் செய்து இருக்கறோம் மற்றும் -file-ன் பெயர். |
09:56 | இப்போது, git log command-ஐ பயன்படுத்தி, commit விவரங்களை அறிந்து கொள்வோம். |
10:00 | டைப் செய்க: Git space log, பின் Enterஐ அழுத்தவும். |
10:06 | நமது repository-யில் ஒரே ஒரு commit தான் இருக்கிறது. |
10:09 | அது ஒரு தனித்த id-ஐ காண்பிக்கும் - அது, commit hash அல்லது SHA-1 hash எனப்படும். |
10:16 | SHA-1 hash பற்றி மேலும் தெரிந்து கொள்ள, slide-க்கு வருவோம். |
10:20 | SHA-1 hash என்பது 40 alpha numeric characterகளை கொண்ட ஒரு தனித்த id ஆகும். |
10:25 | Git, database-ல், எல்லா தகவல்களையும், hash value கொண்டு தான் சேமிக்கும். |
10:31 | SHA-1 hashஐ வைத்து தான், Git commitsஐ, கண்டறிய முடியும். |
10:35 | பின்வரும் டுடோரியல்களில், SHA-1 hashன் முக்கியத்துவத்தை, புரிந்து கொள்ள இயலும். |
10:41 | terminal-லுக்கு திரும்பவும். |
10:45 | இங்கு நாம் பார்ப்பது author name, email address, date, time மற்றும் நாம் முன்னர் கொடுத்த commit message போன்றவை. |
11:00 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: -Git repository மற்றும் -Gitன் அடிப்படை commandகளாகிய, git, init, status, commit மற்றும் log. |
11:14 | பயிற்சியாக- உங்கள் கணினியில், ஒரு directoryஐ உருவாக்கி, அதை repository ஆக்கவும். |
11:20 | ஒரு text file உருவாக்கி, அதில் சில விவரங்களை சேர்க்கவும். |
11:25 | Git repositoryன் , staging areaவிற்கு, fileஐ சேர்க்கவும். |
11:29 | File-ஐ repository-க்கு commit செய்யவும். |
11:32 | Git log command-ஐ பயன்படுத்தி, commitன் விவரங்களை பார்க்கவும். |
11:35 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:43 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:54 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. |
12:01 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
12:08 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |