Netbeans/C2/Introduction-to-Netbeans/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். |
00:02 | Netbeans IDE அறிமுகத்திற்கான டுடோரியலுக்கு நல்வரவு. . |
00:06 | இந்த டுடோரியலில் Netbeans ன் அடிப்படைக்கு நம்மை அறிமுகப்படுத்திக்கொள்வோம். |
00:13 | Netbeans என்பது இலவச open-source Integrated Developement Environment ஆகும். இது www.netbeans.org ல் கிடைக்கும் |
00:23 | இது.... வெவ்வேறு componentகளின் integrationக்கு அனுமதிக்கிறது. |
00:27 | வெவ்வேறு scripting languageகள் மற்றும் advanced text editorகளை ஆதரிக்கிறது. |
00:31 | projectகளை உருவாக்கவும் design செய்யவும் GUI ஐ தருகிறது மேலும் databaseகளை ஆதரிக்கிறது. |
00:39 | இந்த டுடோரியலை முடிக்க, Java Programming Language ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:47 | Standard programming terminologyகள் இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
00:52 | Netbeans ஐ ஆரம்பிக்க, |
00:55 | நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 |
01:00 | மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
01:05 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது Netbeansஐ நிறுவுதல், |
01:11 | Netbeansன் interfaceஐ அறிமுகம் செய்துகொள்ளுதல், |
01:16 | மற்றும் ஒரு உதாரண Java Project ஐ உருவாக்குதல். |
01:19 | முதலில் IDE ஐ நிறுவ கற்போம். |
01:22 | Netbeans ஐ netbeans.org ல் இருந்து தரவிறக்கலாம் |
01:27 | இது Netbeans ன் மூல வலைத்தளம் |
01:31 | வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் Download link ஐ க்ளிக் செய்க. |
01:36 | திறக்கப்படும் அடுத்த பக்கத்தில், |
01:39 | IDE க்கு தேவைப்படும் Glassfish Server உட்பட அனைத்து technologyகளையும் கொண்ட கடைசி download linkஐ க்ளிக் செய்க |
01:53 | Netbeans ஐ நிறுவ Java Development Kit, (JDK) ஐயும் நிறுவ வேண்டும் அதை java.sun.com ல் இருந்து தரவிறக்கலாம் |
02:05 | இங்கே Get Java link ஐ க்ளிக் செய்க. Netbeans மற்றும் JDK ஐ கொண்ட தொகுப்பை தரவிறக்க link ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:15 | திறக்கப்படும் அடுத்தப் பக்கத்தில் |
02;19 | உங்கள் கணினிக்கு ஏற்ற setup file ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:24 | Ubuntu ல், .sh (dot sh) file, |
02:29 | அதாவது ஒரு shell script file ஆக setup file தரவிறங்குகிறது. |
02:33 | டெர்மினக்கு சென்று இந்த file ஐ இயக்கவும். |
02:38 | தரவிறக்கப்பட்ட set up file ஐ கொண்ட window அல்லது directory க்கு டெர்மினலில் செல்லவும் |
02:46 | டைப் செய்க sh பின் தரவிறக்கப்பட்ட fileன் பெயர். எண்டரை அழுத்துக |
02:54 | இது installer ஐ துவக்கும் இது சிறிது நேரம் எடுக்கும். |
03:04 | installer திரையில் தோன்றுகிறது |
03:06 | உங்கள் கணினியில் IDE ஐ நிறுவ காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும் |
03:13 | இப்போது installer ஐ மூடுகிறேன் |
03:17 | அடுத்து Netbeans Window ஐ காண்போம். |
03:21 | உங்கள் உபுண்டு இயங்குதளத்தில் Netbeans ஐ துவக்க |
03:25 | applications க்கு சென்று, Programming ல் Netbeans IDE icon ஐ க்ளிக் செய்க |
03:34 | முதலில் IDE ஐ துவக்கும் போது அது Netbeans start page ஐ திறக்கும் |
03:41 | IDE window ல் இருப்பவை |
03:43 | menu bar ல் menuகள் |
03:46 | toolbarகள் மற்றும் |
03:48 | file system window போன்ற workspaceகள் |
03:52 | runtime window மற்றும் |
03:53 | output window |
03:57 | Netbeans ஐ பயன்படுத்த தேவையான பெரும்பான்மையான commandகளை main menu தருகிறது அவை |
04:03 | உங்கள் Projectகளை உருவாக்க, edit செய்ய, compile செய்ய, இயக்க மற்றும் debug செய்ய. |
04:10 | menu barக்கு கீழே உள்ள tool bar அடிக்கடி பயன்படுத்தப்படும் சில commandகளின் buttonகளை கொண்டுள்ளது. |
04:18 | Workspace ஆனது குறிப்பிட்ட செயல்களைச் செய்ய பயன்படுத்தப்படும் windowக்களின் தொகுப்பு ஆகும் |
04:23 | அவை workspace window ல் edit செய்தல் , இயக்குதல், output, அல்லது debug செய்தல். அது workspaceக்கு கீழே உள்ளது |
04:35 | அடுத்து ஒரு Sample Java Project ஐ உருவாக்குவோம். |
04:40 | ஒரு java project ஐ உருவாக்க File menu ல் New Project மீது க்ளிக் செய்க |
04:47 | new project Wizard box ல் Categories ன் கீழ் |
04:51 | java ஐ தேர்ந்தெடுத்து பின் Projects ன் கீழ், Java Applications ஐ தேர்ந்தெடுத்து Next ல் க்ளிக் செய்க |
04:58 | wizard ன் name மற்றும் location பக்கத்தில் |
05:02 | உங்கள் Project பெயரை KeyboardReader என கொடுக்கவும் |
05:08 | Set as Main Project checkbox ஐ குறியிடவும் |
05:12 | Finish ஐ க்ளிக் செய்க. |
05:15 | project உருவாக்கப்பட்டு IDE ல் திறக்கப்படுகிறது. |
05:20 | project உருவாக்கப்பட்டவுடன் IDE windowகளின் இடப்பக்கம் projects window ஐ காணலாம் |
05:27 | இது project componentகளின் ஒரு tree view ஐ கொண்டுள்ளது, அதில் உங்கள் code க்கு சம்பந்தமான source fileகள், libraryகள் இருக்கும், |
05:36 | வலப்பக்க Source Editor ல் KeyboardReader.java என்ற file திறக்கப்பட்டுள்ளது |
05:43 | இப்போது main class ல், sample java code ஐ எழுதுவோம், |
05:49 | இந்த code... input ஐ keyboard ல் இருந்து read செய்து input ஆனது முழு எண்ணா அல்லது தசம எண்ணா என output ஆக தருகிறது |
05:58 | இப்போது இந்த code ஐ என் clipboard ல் copy செய்து, IDE workspace ல் ஏற்கனவே உள்ள code ல் paste செய்கிறேன். |
06:11 | அடுத்த படி நம் project ஐ இயக்குவது. |
06:14 | Netbeans IDE ல் ஒரு project ஐ இயக்க மூன்று வழிகள் உள்ளன |
06:20 | முதல் வழி Projects window ல், project node ஐ க்ளிக் செய்து வரும் menu ல் Runஐ தேர்ந்தெடுக்கவும் |
06:29 | அல்லது toolbarக்கு சென்று Run Project button ஐ க்ளிக் செய்யவும் |
06:34 | அல்லது projectகளை இயக்க உங்கள் keyboard ல் F6 key ஐயும் அழுத்தலாம். |
06:40 | Project node ல் ரைட் க்ளிக் செய்து Run Option ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
06:45 | ஒரு Java application ஐ இயக்கும்போது IDE ஆனது application code ஐ கட்டமைத்து Compile செய்து Workspace க்கு கீழே உள்ள output window ல் program ஐ இயக்குகிறது |
06:57 | இப்போது IDE ஏதேனும் எண்ணை உள்ளிடச்சொல்லி கேட்கிறது |
07:01 | ஏதேனும் எண்ணை உள்ளிட்டு எண்டரை அழுத்துகிறேன் |
07:06 | இது input ஆனது முழு எண்ணா அல்லது தசம எண்ணா என சொல்கிறது |
07:11 | இப்போது பயிற்சி |
07:15 | KeyboardInputReader project ல் மேலும், |
07:19 | மற்றொரு project ஐ அதாவது temperatures converter application ஐ சேர்க்கவும் அது ஒரு input temperature ஐ ஏற்று |
07:27 | அதை Celcius ல் இருந்து Fahrenheit ஆகவும் Fahrenheit ல் இருந்து Celcius ஆகவும் மாற்ற வேண்டும் |
07:31 | பின் மாற்றப்பட்ட temperature ஐ output window ல் காட்ட வேண்டும். |
07:36 | இந்த பயிற்சியை நான் ஏற்கனவே முடித்துவிட்டேன். |
07:40 | அதை இயக்குகிறேன் |
07:47 | இந்த program ஆனது output window ல் input temperature ஐ உள்ளிட சொல்லி கேட்கிறது |
07:52 | ஒரு sample temperature -40 ஐ Fahrenheit ல் கொடுக்கிறேன் இது Celcius ல் மாற்றப்பட்ட temperature ஐ காட்டுகிறது |
08:07 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
08:10 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
08:14 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
08:20 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
08:27 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
08:31 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:38 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:49 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:00 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |