Ruby/C3/for-and-each-Looping-Statements/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:52, 23 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Ruby ல் for மற்றும் each Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:07 “loop” என்றால் என்ன, Ruby ல் உள்ள பல்வேறு வகை loopகள்
00:11 “for” loop ன் பயன், “each” looping construct ன் பயன்.
00:14 இங்கே நாம் பயன்படுத்துவது
00:16 உபுண்டு பதிப்பு 12.04
00:19 Ruby 1.9.3
00:22 இந்த டுடோரியலை தொடர உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
00:25 லினக்ஸ் commandகள், டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:30 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:34 இப்போது Ruby ல் “loop” என குறிப்பிடப்படுவதை விளக்குகிறேன்
00:38 எத்தனை முறை இயக்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஒரு command அல்லது commandகளின் தொகுப்பு loop ஆகும்.
00:44 Ruby பின்வரும் முக்கிய looping statementகளை கொண்டுள்ளது.
00:47 for, each
00:49 while, until
00:50 இந்த டுடோரியலில் for மற்றும் each looping constructகளை பயன்படுத்த கற்போம்.
00:55 தொடங்குவதற்கு முன், உங்கள் home directory ல் பின்வரும் folderகளை உருவாக்கவும்,
01:02 ttt, ruby hyphen tutorial, looping hyphen statements.
01:07 இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதை போல துணை folderகளை உருவாக்கவும்
01:11 இப்போது தேவையான folderகளை உருவாக்கியுள்ளோம்.
01:13 அடுத்து செல்வோம்.
01:15 Ruby ல் “for” loop க்கான syntax பின்வருமாறு:
01:19 for “variable” in “objectகளின் தொகுப்பு”
01:22 ruby code , end
01:25 இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
01:28 Ruby டுடோரியல்களில் காட்டியது போல gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்கி
01:32 அதற்கு “for hyphen loop dot rb” என பெயரிடுக
01:36 “for” loop க்கான ஒரு உதாரணத்தைக் கொண்டுள்ளேன்.
01:39 இந்த உதாரணத்தில் உள்ள code ஐ டைப் செய்யலாம்.
01:44 இந்த உதாரணத்தில் ஒரு “for” loop ஐ declare செய்துள்ளோம் .
01:47 1 முதல் 20 வரை எண்களின் ஒரு தொகுப்பை கொணடுள்ளோம்.
01:50 “for” loop னுள் “i” என்ற ஒரு variable ஐ declare செய்துள்ளோம்.
01:55 1 முதல் 20 வரையான எண்களில் முதல் எண்ணுக்கு variable “i” .... initialize செய்யப்படுகிறது.
02:00 “for” loop declaration ஆனது 1 முதல் 20 வரையான எண்களின் மீதும் code ஐ iterate செய்யவைக்கிறது.
02:07 “for” loop னுள் declare செய்யப்பட்டிருக்கும் “puts” method வெளியீட்டை உருவாக்கும் பொறுப்புடையது.
02:14 இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க
02:17 ruby space for hyphen loop dot rb பின் வெளியீட்டை காண்க
02:22 வெளியீடு 1 முதல் 20 வரையான எண்களின் ஒரு array ஆக இருக்கும்.
02:26 இந்த உதாரணத்தில், ஒரு inclusive range க்காக “for” loop ஐ declare செய்துள்ளோம்.
02:31 இது 1 முதல் 20 வரையான அனைத்து எண்களையும் கொண்டுள்ளது.
02:35 அடுத்து, ஒரு non-inclusive range க்காக “for” loop ஐ செயல்படுத்துவதை காண்போம்.
02:41 code ன் அடுத்த பகுதியை டைப் செய்வோம்.
02:44 Non-inclusive என்பதில் objectகளின் தொகுதியில் கடைசி element சேர்க்கப்படமாட்டாது.
02:49 இங்கே 1 முதல் 20 வரையான எண்களின் non-inclusive range க்கு “for” loop செயல்படுத்தப்படுகிறது.
02:55 வெளியீட்டில் எண் 20 அச்சடிக்கப்படவில்லை என்பதை விரைவில் காண்பீர்கள்.
02:59 எண்களுக்கு இடையே மூன்று புள்ளிகளை வைக்கும்போது கடைசி எண் சேர்க்கப்படுவதில்லை.
03:04 இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க ruby space for hyphen loop dot rb
03:13 பின் வெளியீட்டை காண்க.
03:17 இப்போது வெளியீடு எண்களின் ஒரு array ஆக இருக்கும் ஆனால் எண் 20 அதில் இல்லை.
03:22 இப்போது, உங்கள் சொந்த “for” loop ஐ எழுத உங்களால் முடியும்.
03:27 Ruby ல் “each” loop க்கான syntax பின்வருமாறு:
03:31 “objectகளின் தொகுப்பு” dot each do item
03:36 ruby code end
03:38 இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
03:42 basic level Ruby டுடோரியல்களில் காட்டியது போல gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்கி
03:46 அதற்கு each hyphen loop dot rb என பெயரிடுக
03:50 நான் ஏற்கனவே each loop க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்.
03:53 இந்த உதாரணத்தில் உள்ள code ஐ டைப் செய்யலாம்.
03:58 இந்த உதாரணத்தில் ஒரு each loop ஐ declare செய்துள்ளேன்.
04:03 1 முதல் 20 வரையான எண்களை கொண்டுள்ளோம்.
04:06 each loop னுள் “i” என்ற ஒரு variable ஐ declare செய்கிறோம்.
04:11 1 முதல் 20 வரையான எண்களில் முதல் எண்ணுக்கு variable “i” .... initialize செய்யப்படுகிறது.
04:17 each loop declaration ஆனது 1 முதல் 20 வரையான எண்களின் மீதும் code ஐ iterate செய்யவைக்கிறது.
04:23 each loop னுள் declare செய்யப்பட்டிருக்கும் “puts” method வெளியீட்டை உருவாக்கும் பொறுப்புடையது.
04:30 இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க ruby space each hyphen loop dot rb
04:39 பின் வெளியீட்டை காண்க.
04:43 வெளியீடு 1 முதல் 20 வரையான எண்களின் ஒரு array ஆக இருக்கும்.
04:46 மேலுள்ள உதாரணத்தில் ஒரு inclusive range க்காக each loop ஐ declare செய்தோம்.
04:51 இது 1 முதல் 20 வரையான அனைத்து எண்களையும் கொண்டுள்ளது.
04:54 அடுத்து, ஒரு non-inclusive range க்காக each loop ஐ செயல்படுத்துவதை காண்போம்.
05:00 code ன் இந்த பகுதியை டைப் செய்ய தொடங்குவோம்.
05:04 Non-inclusive என்பதில் objectகளின் தொகுதியில் கடைசி element சேர்க்கப்படமாட்டாது.
05:10 இங்கே 1 முதல் 20 வரையான எண்களின் non-inclusive range க்கு “each” loop செயல்படுத்தப்படுகிறது.
05:16 வெளியீட்டில் எண் 20 அச்சடிக்கப்படவில்லை என்பதை விரைவில் காண்பீர்கள்.
05:20 எண்களுக்கு இடையே மூன்று புள்ளிகளை வைக்கும்போது கடைசி எண் சேர்க்கப்படுவதில்லை.
05:25 இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க ruby space each hyphen loop dot rb
05:34 பின் எண்டரை அழுத்துக.
05:39 இப்போது, உங்கள் சொந்த “each” loop ஐ எழுத உங்களால் முடியும்.
05:44 எந்த looping construct ஐ தேர்ந்தெடுப்பது என்பதை எவ்வாறு தீர்மானிப்போம்?
05:48 for loop construct ஐ ஞாபகப்படுத்த முயற்சிப்போம்.
05:53 முதல் உதாரணத்தில், for ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரையான எண்களின் மீது iterate செய்தோம்.
05:59 டெர்மினலில் ruby space for hyphen loop dot rb ஐ இயக்கி வெளியீட்டை காண்க.
06:08 இப்போது gedit ல் code ஐ காண்க
06:11 for loop ஐ செயலாக்கும்போது, Ruby உண்மையில் each method யே பின்புலத்தில் அழைக்கிறது.
06:16 மேலும் each அல்லது for ஐ அழைப்பது ஒரே வெளியீட்டையே தரும்.
06:21 for ஐ அழைத்தாலும் அது each ஐ அழைப்பதால், அதற்கு பதிலாக each loop ஐ பயன்படுத்துவதே தகுந்தது.
06:28 இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது.
06:30 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:33 for loop ன் பயன்
06:35 each construct ன் பயன்
06:38 for க்கு பதிலாக each ஐ பயன்படுத்துவதற்கான காரணம்
06:41 மேலுள்ள looping constructகளை பயன்படுத்தி உதாரணங்கள்
06:45 பயிற்சியாக
06:47 1 முதல் 20 வரையான எண்களில் இரட்டை படை எண்களை வெளியீடாக பெற அதற்கான loop construct ஐ பயன்படுத்தி ruby program எழுதுக
06:56 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:00 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:03 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:08 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:14 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:18 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:23 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:26 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:33 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:41 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst