C-and-C++/C2/Tokens/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | 'C மற்றும் C-Plus-Plus ல் Tokens பற்றிய spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial-லில், tokens ஐ எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம் |
00:12 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம் |
00:15 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:20 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1. |
00:33 | ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:37 | Token என்பது Data types, Variables, Constants மற்றும் Identifiers க்கான ஒரு பொதுவான வார்த்தை. |
00:46 | நம் program உடன் ஆரம்பிக்கலாம் |
00:49 | editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன் |
00:53 | அதை திறக்கிறேன். file பெயர் Tokens .c என்பதை கவனிக்கவும் |
01:04 | இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம் |
01:09 | code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file. |
01:16 | இது நம் main function. |
01:20 | இங்கே, int என்பது keyword |
01:22 | keywords ன் பொருள் compiler க்குத் தெரியும். |
01:26 | a என்பது integer variable |
01:29 | இதற்கு மதிப்பு 2 ஐ assign செய்கிறோம் |
01:32 | இதுதான் initialization எனப்படும். |
01:35 | variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும். |
01:43 | இங்கே , b என்பது constant. |
01:46 | b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம். |
01:53 | read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது |
01:58 | keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம் |
02:06 | Keywords என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும் |
02:11 | Keywords ஐ variable பெயராக பயன்படுத்த முடியாது |
02:15 | C ல் 32 keywords உள்ளன |
02:18 | அவற்றில் சில, auto, break, case, char, const, default, enum extern |
02:28 | Constants என்பவை நிலையான மதிப்புகள். |
02:34 | program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன ,
Numeric constants மற்றும் Character constants. |
02:45 | program க்குப் போகலாம். |
02:47 | 'இங்கே, float என்பது variable c ன் data type. |
02:52 | மதிப்பு 1.5 உடன் இதை assign செய்துள்ளோம் |
02:57 | Data type என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும் |
03:05 | இங்கே, d என்பது variable |
03:07 | Char மற்றும் single quotes... நாம் character ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன. |
03:13 | எனவே, d என்பது மதிப்பு 'A' ஐ சேமிக்கும் character variable |
03:20 | int, double float மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது. |
03:30 | a, c மற்றும் d ஆகியவை variables |
03:36 | slideகளுக்கு வருவோம். |
03:38 | datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம் |
03:48 | integer data type உடன் ஆரம்பிப்போம் |
03:51 | இது int என declare செய்யப்படுகிறது |
03:53 | integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம் |
04:01 | அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f |
04:09 | character data type க்கு, char மற்றும் %c |
04:15 | double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம் |
04:25 | இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம் |
04:29 | இது Integerdata type ன் வீச்சு -32,768 to 32,767 |
04:34 | இது Floating point ன் வீச்சு 3.4E +/-38 |
04:39 | இது Character ன் வீச்சு -128 to 127 |
04:42 | மற்றும் இது Double ன் வீச்சு 1.7E +/-308 |
04:48 | variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது. |
04:56 | இப்போது variables ஐ பார்ப்போம். |
05:00 | Variable என்பது data பெயர். |
05:03 | இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம். |
05:06 | மதிப்புகள் program இயங்கும் போது மாறலாம். |
05:10 | variable ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும் |
05:15 | variables க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும் |
05:19 | உதாரணமாக john, marks, sum போல |
05:24 | நம் program க்கு வருவோம். |
05:27 | இங்கே, printf என்பது function க்கான identifier பெயர் |
05:32 | slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம். |
05:38 | Identifiers என்பவை user defined பெயர்கள் |
05:41 | identifier ... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை |
05:46 | மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை |
05:51 | முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும். |
05:55 | நம் programக்கு வருவோம் |
05:58 | இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம் |
06:05 | இது return statement. save ஐ சொடுக்கவோம். |
06:10 | program ஐ இயக்குவோம் |
06:12 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
06:21 | compile செய்ய எழுதுக gcc tokens.c -o tok பின் Enter செய்க |
06:30 | execute செய்ய எழுதுக ./tok |
06:35 | வெளியீடு காட்டப்படுகிறது |
06:39 | தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம் |
06:44 | மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன |
06:48 | இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம். |
06:54 | இது ஏனேனில் இங்கே இருப்பது %.2f. |
06:59 | தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது |
07:04 | இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும் |
07:09 | அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம் |
07:16 | Save ஐ சொடுக்கவும் |
07:20 | terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம் |
07:29 | தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம் |
07:33 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் |
07:37 | program க்கு வருவோம் |
07:40 | இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன் |
07:42 | முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும் |
07:50 | file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும் |
07:58 | header file ஐ iostream என மாற்றுவோம |
08:03 | using statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும். |
08:11 | ஒரு வரியை print செய்ய C++ ல் cout<< function' பயன்படுத்துவதால் printf statement ஐ cout statement ஆக மாற்றவும் |
08:21 | Search for and replace text option ஐ சொடுக்கவும் |
08:28 | இங்கே எழுதுக printf opening bracket “(” |
08:33 | பின் இங்கே எழுதுக, |
08:35 | cout இரண்டு opening angle brackets “<<”. |
08:40 | Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும். |
08:45 | format specifier /n நமக்கு தேவையில்லை |
08:50 | அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம். |
08:54 | பின் இரண்டு opening angle brackets ஐ இடவும். |
09:01 | Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும் |
09:06 | மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம் |
09:09 | double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும் |
09:20 | program ஐ இயக்குவோம். terminal வருவோம். |
09:24 | compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1 |
09:35 | இங்கே tok1 உள்ளது |
09:36 | ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க |
09:48 | இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க |
09:55 | வெளியீடு காட்டப்படுகிறது |
09:59 | நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் |
10:03 | program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம். |
10:13 | Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம் |
10:15 | terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன் |
10:22 | முன்பு போல compile செய்வோம் |
10:26 | tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம். |
10:36 | program க்கு வருவோம் |
10:40 | இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை |
10:46 | program இயங்கும்போது அவை மாறாது. |
10:49 | அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம் |
10:54 | இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம் |
10:57 | மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம் |
11:01 | முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
11:09 | இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம் |
11:12 | program க்கு வருவோம். |
11:15 | இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும் |
11:21 | execute செய்வோம். terminal க்கு வருவோம். |
11:25 | முன்போல Compile செய்வோம் |
11:28 | tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம். |
11:34 | program க்கு வருவோம். |
11:40 | ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும். |
11:47 | இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம். |
11:53 | பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும் |
11:59 | Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம் |
12:02 | terminal க்கு வருவோம் |
12:04 | முன்போல Compile செய்து இயக்குவோம். |
12:06 | ஆம் வேலை செய்கிறது |
12:14 | slideகளுக்கு வருவோம். |
12:15 | இந்த tutorial-லில் நாம் கற்றது |
12:18 | Data types உதாரணமாக int, double, float |
12:24 | Variables உதாரணமாக int a=2; |
12:29 | Identifiers உதாரணமாக printf() |
12:34 | Constant உதாரணமாக double const b=4; |
12:41 | இப்போது பயிற்சி எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக. |
12:45 | குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100 |
12:51 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
12:57 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
13:01 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
13:11 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
13:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:30 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
13:35 | தமிழாக்கம் பிரியா. நன்றி |