GChemPaint/C2/Edit-Preferences-Templates-and-Residues/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம் (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் Preferences ஐ edit செய்தல், Templateகள் மற்றும் Residues - எச்சங்கள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:10 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:13 | * Preferences ஐ edit செய்தல் |
00:15 | * Templateகளை கையாளுதல் |
00:17 | * இருக்கும் Templateகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் |
00:20 | * ஒரு புது Template ஐ சேர்த்தல். |
00:24 | மேலும் கற்பது |
00:26 | * எச்சங்களின் பயன்கள் மற்றும் |
00:28 | * எச்சங்களை edit செய்தல். |
00:31 | இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:38 | (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் பதிப்பு 0.12.10. |
00:44 | இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு, |
00:49 | (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:53 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:59 | நான் ஏற்கனவே ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் அப்ளிகேஷனை திறந்துள்ளேன். |
01:03 | Preferences ஐ edit செய்வதுடன் இந்த டுடோரியலை ஆரம்பிக்கலாம் |
01:07 | Edit menu ல், Preferences க்கு சென்று அதன் மீது க்ளிக் செய்க. |
01:13 | GChemPaint Preferences விண்டோ திறக்கிறது. |
01:16 | முதல் புலம், Default Compression Level For GChemPaint Files, fileகளை சேமிக்கும்போது பயன்படுகிறது. |
01:24 | முன்னிருப்பாக இது பூஜ்ஜியம். |
01:28 | பூஜ்ஜியம் இல்லையெனில், gzip ஐ பயன்படுத்தி அந்த file... compress செய்யப்படும் |
01:33 | Invert wedge hashes பற்றி மற்றொரு டுடோரியலில் சொல்கிறேன். |
01:40 | (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் ஒவ்வொரு ஆவணத்திற்கும் அது தொடர்பான ஒரு theme உள்ளது. |
01:46 | Default Theme GChemPaint ஆகவே இருக்கட்டும் |
01:50 | இப்போது, Themes பகுதியில் உள்ள Arrows பற்றி விளக்குகிறேன். |
01:58 | tool box ல் உள்ள வெவ்வேறு வகையான அம்புகளைக் கவனிக்கவும் |
02:02 | * Add an arrow for an irreversible reaction. |
02:06 | * Add a pair of Arrows for a reversible reaction. |
02:10 | * Add an arrow for a retrosynthesis step. |
02:14 | * Add a double headed arrow to represent mesomery. |
02:19 | இந்த 4 அம்புகளையும் காட்சி பகுதியில் சேர்போம் |
02:24 | Add an arrow for an irreversible reaction tool மீது க்ளிக் செய்து, |
02:28 | பின் காட்சி பகுதியில் க்ளிக் செய்க |
02:31 | அதேபோல மற்ற வகை அம்புகளையும் காட்சி பகுதியில் சேர்கிறேன். |
02:41 | Preferences dialog box ல் Themes புலத்தில் இருந்து Arrows ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:47 | அதற்கேற்ற ஒரு menu திறக்கிறது. |
02:50 | இங்கே அம்புகளின் நீளம், அகலம் மற்றும் தூரத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். |
02:57 | மேல் அல்லது கீழ் அம்பு முக்கோணங்களை mouse ஆல் க்ளிக் செய்க. |
03:02 | அம்புகளின் மாற்றங்களை காட்சி பகுதியில் கவனிக்கவும் |
03:10 | இப்போத அம்பு தலைகள் பற்றி கற்போம். |
03:14 | A, B மற்றும் C ன் முன்னிருப்பு மதிப்புகள் இங்கே காட்டப்படுகின்றன. |
03:21 | A, B மற்றும் C parameterகள் அம்புத்தலைகளின் வடிவத்தை மாற்ற உதவுகின்றன. |
03:28 | ஒவ்வொன்றையும் அதிகரித்து அல்லது குறைத்து அம்புத்தலைகளில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கவும். |
03:38 | விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்க |
03:42 | காட்சி பகுதியை துடைப்போம் |
03:46 | அனைத்து object களையும் தேர்ந்தெடுக்க CTRL +A ஐ அழுத்துக. |
03:49 | Edit menu க்கு சென்று, Clear மீது க்ளிக் செய்க |
03:53 | அடுத்து, Templateகளை கையாளுவதைக் காண்போம். |
03:58 | Use or manage templates tool மீது க்ளிக் செய்க. |
04:01 | கீழே property dialog box திறக்கிறது. |
04:05 | Property dialog box ஆனது ஒரு கீழிறங்கும் பட்டியலுடன் Templates ஐ கொண்டுள்ளது. |
04:10 | பட்டியலில் உள்ளவை Amino acids, Aromatic hydrocarbons, Nucleic bases, Nucleosides மற்றும் Saccharides |
04:19 | ஒவ்வொன்றும் ஒரு துணைmenu ஐ கொண்டுள்ளது |
04:23 | Aromatic Hydrocarbons ஐ தேர்ந்தெடுத்து துணைmenu ல் Benzene மீது க்ளிக் செய்வோம் |
04:31 | பென்சீன் (Benzene) அமைப்பு, property பக்கத்தில் காட்டப்படுகிறது. |
04:35 | இப்போது பென்சீன் (Benzene) அமைப்பை காட்ட காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
04:40 | அதேபோல (நாப்தலின்)Naphtalene அமைப்பை தேர்ந்தெடுத்து காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க |
04:49 | உங்களுக்கு விருப்பமான மற்ற அமைப்புகளையும் தேர்ந்தெடுத்து காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
04:55 | இப்போது file ஐ சேமிப்போம். |
04:57 | toolbar ல் Save the current file ஐகான் மீது க்ளிக் செய்க. |
05:01 | Save as dialog box திறக்கிறது |
05:04 | Benzene என file பெயரை கொடுத்து Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
05:10 | இப்போது ஏற்கனவே இருக்கும் Template பட்டியலில் ஒரு புது template ஐ சேர்க்க கற்போம். |
05:16 | toolbar ல் உள்ள Open a file ஐகான் மீது க்ளிக் செய்க. |
05:20 | fileகள் மற்றும் folderகள் உள்ள ஒரு விண்டோ திறக்கிறது. |
05:24 | பட்டியலில் “Hexane” என்ற file ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:27 | Open பட்டன் மீது க்ளிக் செய்க. |
05:31 | template ன் property பக்கத்தில் உள்ள Add பட்டன் மீது க்ளிக் செய்க. |
05:35 | New template property பக்கம் திறக்கிறது. |
05:38 | Property பக்கத்தில் இரு புலங்கள் உள்ளன – Name மற்றும் Category |
05:42 | Category புலத்தில் ஒரு கீழிறங்கும் பட்டியல் உள்ளது. |
05:47 | இந்த பட்டியலில் இருந்து நாம் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நம் சொந்த category ஐ சேர்க்கலாம். |
05:52 | text புலத்தில் Hydrocarbons என டைப் செய்வதன் மூலம் ஒரு புதிய Category ஐ சேர்ப்போம். |
05:58 | Name புலத்தில், சேர்மத்தின் பெயரை “Hexane” என கொடுக்கவும். |
06:03 | காட்சி பகுதியில் Hexane (ஹெக்சேன்) அமைப்பு மீது க்ளிக் செய்க |
06:07 | அது New template property பக்கதில் காட்டப்படும். |
06:12 | Ok பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:15 | இப்போது, Templates ன் கீழ் முக்கோணத்தில் க்ளிக் . |
06:19 | Hydrocarbons category ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:22 | Template பட்டியலில் Hexane அமைப்பு சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
06:27 | Hydrocarbons category ல் Octane (ஆக்டேன்) அமைப்பை நீங்களே சேர்த்து பார்க்கவும். |
06:32 | “hexane” file ஐ மூடுவோம். |
06:35 | file ஐ மூட File menu க்கு சென்று, Close ஐ க்ளிக் செய்க. |
06:41 | Templates property பக்கத்தை மூடSelect one or more objects tool ஐ க்ளிக் செய்க. |
06:47 | இப்போது Residues-எச்சங்கள் பற்றி கற்போம் |
06:51 | எச்சங்களின் பயன்களாவன, |
06:53 | * கார்பன் சங்கிலியில் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டு தொகுதியின் தன்மையை கண்டறிய |
06:58 | * செயல்பாட்டு தொகுதியின் அமைப்பை தெரிந்துகொள்ள |
07:01 | * database க்கு ஒரு புதிய செயல்பாட்டு தொகுதியின் சேர்க்க. |
07:04 | Tools menu க்கு சென்று Edit residues மீது க்ளிக் செய்க |
07:09 | Residues விண்டோ திறக்கிறது. |
07:12 | இதில் 3 பட்டன்கள் உள்ளன - New, Save மற்றும் Delete. |
07:18 | New பட்டனில் ஒரு கீழிறங்கும் பட்டியல் உள்ளது. |
07:21 | பட்டியலில் n-Pr ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:25 | Symbol மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எச்சத்தின் Name ஐ Identity tab காட்டுகிறது. |
07:32 | தேர்ந்தெடுக்கப்பட்ட எச்சத்தின் தோராய அமைப்பை Formula tab காட்டுகிறது. |
07:38 | அதேபோல, இரண்டாம் நிலை ப்யூட்டைல்(Butyl) க்காக s-Bu ஐ தேர்ந்தெடுப்போம். |
07:44 | தேர்ந்தெடுக்கப்பட்ட எச்சத்தின் Symbol, Name................. மற்றும் தோராய அமைப்பை கவனிக்கவும். |
07:52 | இப்போது ஒரு புதிய எச்சம் - ஹைட்ராக்சி (Hydroxy) தொகுதியை சேர்ப்போம். |
07:57 | ஒரு புதிய எச்சத்தை சேர்க்க, New பட்டன் மீது க்ளிக் செய்க. |
08:02 | Symbol புலத்தில் டைப் செய்க O-H. |
08:06 | Hydroxy என பெயரிடுக. |
08:09 | Formula tab ல் க்ளிக் செய்க. |
08:11 | ஒரு பொட்டுகுறியிட்ட பிணைப்பைக் காணலாம். |
08:14 | கர்சரை பிணைப்பிற்கு அருகில் வைத்து capital O ஐ அழுத்துக. |
08:19 | O மற்றும் Os உடன் ஒரு துணை menu திறக்கிறது. O ஐ தேர்ந்தெடுக்கவும் |
08:24 | O-H தொகுதி பிணைப்பில் இணைக்கப்படுகிறது. |
08:28 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
08:31 | இப்போது பட்டியலைக் காண New பட்டன் மீது க்ளிக் செய்க. |
08:35 | பட்டியலில் O-H எச்சம் சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க. |
08:40 | விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்க |
08:44 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:48 | சுருங்க சொல்ல |
08:50 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
08:53 | * Preferences ஐ edit செய்தல் |
08:55 | * Templateகளை கையாளுதல் |
08:56 | * இருக்கும் Templateகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் |
08:59 | * ஒரு புது Template ஐ சேர்த்தல் |
09:01 | * எச்சங்களின் பயன்கள் மற்றும் எச்சங்களை edit செய்தல். |
09:07 | பயிற்சியாக Templates பட்டியலில் இருந்து Saccharides ஐ தேர்ந்தெடுத்து பயன்படுத்துக. |
09:12 | * மற்ற எச்சங்களை ஆராய்ந்தறிக. |
09:16 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:20 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:24 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:29 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:33 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:37 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:45 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:50 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:57 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |