PERL/C2/Variables-in-Perl/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:11, 13 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00:01 Perl ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், Perl ல் Variableகள் குறித்துக் கற்போம்
00:12 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும்
00:18 Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
00:26 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:30 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:34 Perl ல் Variableகள்:
00:37 Variableகள் பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றன

text stringகள், எண்கள் அல்லது arrayகள்

00:44 ஒரு variable declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும்.
00:50 Scalar என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது. அது scalarகளை மட்டும் சேமிக்கும்.
00:56 Scalar variableகள் $ (dollar) குறி மூலம் declare செய்யப்படுகின்றன.
01:00 Variable ஐ Declare செய்வதைக் காண்போம்:
01:03 ஒரு variable பின்வருமாறு declare செய்யப்படுகிறது: dollar priority semicolon


01:09 Perl ல் Variable பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். Variableகள் ஒரு எழுத்து அல்லது underscore உடன் ஆரம்பிக்க வேண்டும்
01:18 எழுத்துகள், எண்கள், underscoreகள் அல்லது இவை மூன்றின் கலவையாகவோ இது இருக்கலாம்.
01:24 பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட Variableகள் Perl ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும்
01:30 எனவே variableகளை பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும்.
01:34 இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க gedit variables dot pl ampersand
01:44 ampersand... டெர்மினலில் command prompt ஐ விடுவிக்கும். இப்போது எண்டரை அழுத்தவும்.
01:50 இது gedit text editor ல் variables.pl file ஐ திறக்கும்.
01:56 dot pl ஆனது Perl file க்கான முன்னிருப்பு extension ஆகும்.
02:01 பின்வருவதை file ல் டைப் செய்க; dollar priority semicolon எண்டரை அழுத்துக.
02:10 எனவே variable priority ஐ declare செய்துள்ளோம்.
02:13 ஒரு variable ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை;
02:18 அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம்.
02:21 இப்போது variable priority க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம்.
02:25 அதற்கு டைப் செய்க dollar priority space equal to space ஒன்று semicolon
02:32 எண்டரை அழுத்துக.
02:34 அடுத்து டைப் செய்க
02:36 print space இரட்டை மேற்கோள்களில் Value of variable is: dollar priority slash n semicolon எண்டரை அழுத்துக
02:50 slash n என்பது புது வரிக்கான character.
02:53 இப்போது இந்த file ஐ variables.pl என எங்கேனும் சேமிக்கவும்.
03:02 நான் இதை home/amol directory ல் சேமிக்கிறேன். இந்த file ஐ சேமிக்கிறேன்
03:10 நாம் இப்போது உருவாக்கிய variables.pl file ன் உரிமைகளை இப்போது மாற்றுவோம்
03:18 அதற்கு டெர்மினலில் டைப் செய்க, chmod 755 variables dot pl
03:27 இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும்.
03:32 இந்த Perl script ஐ compile செய்ய,
03:36 டெர்மினிலில் டைப் செய்க;perl hyphen c variables dot pl
03:42 Hyphen c switch ஏதேனும் compilation அல்லது syntax பிழைக்காக Perl script ஐ compile செய்கிறது.
03:49 எண்டரை அழுத்துக
03:51 நம் script ல் syntax பிழை ஏதும் இல்லை என இது சொல்கிறது.
03:56 இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம்.

டைப் செய்க perl variables dot pl

எண்டரை அழுத்துக.
04:06 முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது.
04:10 நாம் declare செய்த variable க்கு ஒரு string மதிப்பையும் assign செய்யலாம்.
04:15 Text editor window க்கு மீண்டும் வருவோம்.
04:18 dollar priority equal to ஒன்று; க்கு பதிலாக டைப் செய்க
04:22 dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high
04:28 assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
04:34 ஒரு scalar எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு string அல்லது ஒரு எண்
04:38 இந்த file ஐ சேமித்து script ஐ மீண்டும் compile செய்யலாம்


04:45 perl hyphen c variables dot pl
எண்டரை அழுத்துக.
04:51 இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது.


04:55 script ஐ இயக்க டைப் செய்க perl variables dot pl
எண்டரை அழுத்துக.
05:03 வெளியீடு காட்டப்படுகிறது.
05:07 இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம்.


05:10 இரட்டை மேற்கோள்களில் strings என நாம் scalar களையும் பயன்படுத்தலாம்.
05:15 dollar priority = இரட்டை மேற்கோள்களில் String


05:19 இந்த file ஐ சேமித்து மூடவும்.
05:22 பல்வேறு variableகளை எவ்வாறு declare செய்வது என காண்போம்.
05:27 அதை செய்ய Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும்.
05:31 டெர்மினிலில் டைப் செய்க- gedit multivar dot pl space ampersand
எண்டரை அழுத்துக.
05:42 இது multivar dot pl file ஐ text editor ல் திறக்கும்
05:48 டைப் செய்க -
05:50 dollar firstVar comma dollar secondVar semicolon

எண்டரை அழுத்துக.

06:00 variable ன் மதிப்பை dollar firstVar லிருந்து dollar secondVar க்கு பிரதி எடுக்க, டைப் செய்க -
06:07 dollar firstVar space equal to space dollar secondVar semicolon

எண்டரை அழுத்துக.

06:19 கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம்
06:30 Perl ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம்.
06:34 text editor க்கு வருவோம்.
06:36 இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம்,
06:41 dollar firstVar equal to dollar secondVar equal to பத்து semicolon எண்டரை அழுத்துக.
06:51 இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க
06:55 print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n semicolon
எண்டரை அழுத்துக.
07:17 file ஐ சேமிப்போம்.
07:19 இப்போது இரு variableகளில் உள்ள மதிப்புகளையும் சேர்ப்போம்.
07:23 அதற்கு டைப் செய்க
07:25 dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon
எண்டரை அழுத்துக.
07:43 variable addition ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும்.
07:47 மீண்டும் variable addition ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க
07:53 print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n semicolon
08:05 file ஐ சேமிப்போம்
08:07 இந்த file ஐ compile செய்ய டெர்மினலில் டைப் செய்க
08:12 perl hyphen c multivar dot pl
08:18 syntax பிழை ஏதும் இல்லை எனவே script ஐ இயக்கலாம்...
08:24 டைப் செய்க perl multivar dot pl
08:30 காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும்.
08:34 அதே போல, கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும்.
08:38 இங்கே code ஐ எழுதியுள்ளேன்.
08:41 இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும்.
08:46 இப்போது file ஐ compile செய்வோம்
08:48 perl hyphen c multivar dot pl
08:54 syntax பிழை ஏதும் இல்லை.
08:55 எனவே இந்த script ஐ இயக்கலாம் perl multivar dot pl
09:01 இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும்.
09:06 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:11 இந்த டுடோரியலில் நாம்
09:14 Perl' ல் scalar variable களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம்
09:18 இப்போது பயிற்சி
09:20 ஒரு எண் variable ஐ declare செய்க.
09:22 அதற்கு 10 ஐ Assign செய்க.
09:24 declare செய்யப்பட்ட variable ஐ அச்சடிக்கவும்.
09:26 இரு string variableகளை declare செய்க.
09:29 “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க.
09:34 இந்த இரு variableகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும்.
09:38 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:42 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:45 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:50 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
09:53 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:56 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:01 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:08 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:13 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:23 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:29 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst