KTurtle/C3/Special-Commands-in-KTurtle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:55, 11 July 2014 by PoojaMoolya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 அனைவருக்கும் வணக்கம். சிறப்பு Commandகள் KTurtle ல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
  • “learn” command மற்றும்
  • “random” Command
00:15 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நாம் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04. KTurtle பதிப்பு 0.8.1 beta.
00:28 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00:33 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00:39 ஒரு புது KTurtle Application ஐ திறப்போம்.
00:42 Dash homeல் சொடுக்கவும்.
00:44 Search bar ல், டைப் செய்க KTurtle.
00:47 KTurtle icon மீது சொடுக்கவும்.
00:50 “learn” command பற்றி முதலில் காண்போம்
00:53 உங்கள் சொந்த commandகளை உருவாக்க உதவுவதால் learn ஒரு சிறப்பு command.
01:01 'learn' Command உள்ளீட்டை கொண்டு வெளியீட்டைத் திருப்புகிறது
01:05 எவ்வாறு ஒரு புதிய command உருவாக்கப்படுகிறது என காண்போம்.
01:10 தெளிவான பார்வைக்கு program ஐ பெரிதாக்குகிறேன்.
01:14 ஒரு சதுரத்தை வரைய editor ல் code ஐ டைப் செய்வோம்:
01:19 repeat 4... curly bracketகளினுள்

{ forward 10

turnleft 90

}

01:31 இங்கே எண் 10 சதுரத்தின் பக்க நீளத்தைக் குறிக்கிறது.
01:37 learn command ஐ பயன்படுத்தி ஒரு சதுரத்தை வரைய ஈடுபடும் commandகளை இப்போது கற்போம்.
01:45 ஒரு சதுரத்தை வரையும் இந்த commandகளின் தொகுதியை square என பெயரிடுவோம்.
01:50 command 'learn' ஐ தொடர்ந்து வரும் command ன் பெயர்.... கற்றுக்கொள்ளப்பட வேண்டியது, இங்கே அது square.
01:59 பின்வரும் code ஐ டைப் செய்வோம்
02:02 learn space square space $x
02:10 curly bracketகளை சேர்ப்போம்


02:13 10$x ஆக மாற்றுவோம்
02:19 நாம் define செய்த புதிய command... square எனப்படுகிறது.
02:23 square ஒரு உள்ளீட்டு argument ஐ ஏற்கிறது, square ன் அளவை அமைக்க $x.
02:31 இந்த code ஐ இயக்கும்போது, square... வெளியீடு ஏதும் திருப்பவில்லை என்பதை கவனிக்கவும்.
02:37 command learn பின் பயன்பாட்டிற்காக வெறுமனே மற்ற command களை கற்றுக்கொள்கிறது.
02:43 square command இப்போது மீதி code ல் சாதாரண command போன்றே பயன்படுத்தப்படும்.
02:51 இங்கே மேலும் பல வரிகளைச் சேர்ப்போம்.
02:54 டைப் செய்வோம்


go 200,200

square 100

03:04 command square 100 ஐ பயன்படுத்தி Turtle அளவு 100 ல் ஒரு சதுரத்தை வரைகிறது.
03:11 இப்போது code ஐ இயக்குவோம்
03:13 Turtle canvas ல் ஒரு சதுரத்தை வரைகிறது.
03:17 இப்போது 100 ஐ 50 ஆக்குவோம்.
03:22 மீண்டும் இயக்குவோம்
03:23 Turtle மற்றொரு சதுரத்தை அளவு 50 வரைகிறது.
03:28 இந்த command இந்த program இனுள் மட்டும் பயன்படும் என்பதை கவனிக்கவும்
03:35 editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன்.
03:38 “clear” command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run செய்யவும்.
03:44 அடுத்து “random” command பற்றி அறிவோம்.
03:48 random command உள்ளீட்டைப் பெற்று வெளியீ்ட்டை திருப்புகிறது.
03:52 random command க்கான Syntax “random X,Y”
03:57 இங்கே X மற்றும் Y இரு உள்ளீடுகள்.
04:01 X குறைந்த பட்ச வெளியீட்டையும் Y அதிகபட்ச வெளியீட்டையும் அமைக்கிறது.
04:07 X மற்றும் Y க்கு இடையே ஏதேனும் ஒரு எண் வெளியீடாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
04:13 இந்த application ஐ பயன்படுத்த “random” command ஐ பார்ப்போம்.
04:18 text editor ல் நான் ஏற்கனவே code ஐ வைத்துள்ளேன்.
04:22 அந்த code ஐ விளக்குகிறேன்.
04:24 “reset” command... Turtle ஐ அதன் முன்னிருப்பு நிலைக்கு கொண்டுவருகிறது
04:29 இங்கே, command random 1,20 ஆனது 1 க்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ மற்றும் 20 க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து அதைvariable xக்கு assign செய்கிறது.
04:44 repeat command... curly bracketகளினுள் உள்ள commandகள் ஒரு வட்டத்தை வரையும்
04:51 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle's editor னுள் ஒட்டுகிறேன்.
04:58 டுடோரியலை இடைநிறுத்தி program ஐ உங்கள் KTurtle editor ல் டைப் செய்யவும்.
05:03 program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
05:08 இந்த code ஐ நாம் இயக்கும்போது,
05:10 1 க்கும் 20 க்கும் இடையேயான ஆரத்தில் Turtle ஒரு வட்டத்தை வரைகிறது.
05:16 இந்த code ஐ சில முறை இயக்குவோம்,
05:20 ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அளவுகளில் வட்டம் உருவாக்கப்படுவதை காணலாம்.
05:26 ஒவ்வொரு முறை இந்த code ஐ இயக்கும்போது, canvas ல் ஒரு வட்டம் வித்தியாசமான ஆரத்தில் வரையப்படுகிறது.
05:33 இப்போது learn மற்றும் random இரு commandகளை ஒரு உதாரணத்தில் பயன்படுத்துவோம்.
05:39 editor ல் இருந்து நடப்பு code ஐ துடைப்போம். clear command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்கவும் to clean the .
05:48 Text editor ல் ஏற்கனவே program ஐ கொண்டுள்ளேன்.
05:52 இப்போது code ஐ விளக்குகிறேன்.
05:55 “reset” command Turtle ஐ அதன் முன்னிருப்பு நிலைக்கு கொண்டுவருகிறது.
06:00 canvassize 300,300 canvas ன் அகலம் மற்றும் நீளம் ஒவ்வொன்றுக்கும் 300 pixelகளை அமைக்கிறது.
06:09 $R, $G, மற்றும் $B ஆகியவை ஒவ்வொன்றுக்கும் 0 மற்றும் 255க்கு இடையேயான ஏதெனும் மதிப்புகளை நான் assign செய்யும் variableகள் ஆகும்
06:19 command canvascolor $R,$G, and $B ல், சிவப்பு-பச்சை-நீலத்தின் கலவை... முன் படியில் variableகள் R, G, மற்றும் B க்கு assign செய்யப்பட்ட மதிப்புகளால் மாற்றப்படுகிறது
06:34 இந்த command இயக்கப்படும்போது canvas ன் நிறம் தோராயமாக அமைக்கப்படுகிறது.
06:41 $red, $blue, $green ஆகியவை மற்றொரு variableகளின் தொகுதி
06:45 இதில் 0 மற்றும் 255க்கு இடையேயான ஏதெனும் மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும் assign செய்யப்படுகின்றன
06:53 pencolor $red, $blue $green
சிவப்பு-நீலம் -பச்சையின் கலவை மதிப்புகள்...  variableகளால் மாற்றப்படுகின்றன
07:02 $red, $green மற்றும் $blue க்கு தோராய மதிப்புகள் முன்படியில் assign செய்யப்பட்டது
07:10 command இயக்கப்படும் போது pen ன் நிறமும் தோராயமாக அமைக்ப்படுகிறது.
07:18 penwidth 2 pen ன் அகலத்தை 2 pixelகளுக்கு அமைக்கிறது.
07:25 அடுத்து ஒரு வட்டத்தை வரைய கற்றுக்கொள்ள code ஐ எழுதியுள்ளேன்.
07:30 இங்கே $x வட்டத்தின் அளவு குறித்துக்காட்டுகிறது.
07:35 repeat command ஐ தொடர்ந்து curly bracketகளில் உள்ள code ஒரு வட்டத்தை வரைகிறது.
07:43 அடுத்த commandகளின் தொகுதி... அதாவது go commandகளை தொடர்ந்துவரும் circle commandகள் குறிப்பிட்ட அளவுகளில் வட்டங்களை வரைகின்றன.
07:54 உதாரணமாக: அளவு 5 உடன் உள்ள circle... அளவு 5 கொண்ட வட்டத்தை வரைகிறது
08:01 go command ல் X மற்றும் Y நிலைகளில் குறிப்பிடப்பட்ட co-ordinateகளில்.
08:09 ஒவ்வொரு வட்டத்திற்கும், canvas ல் வெவ்வேறு நிலைகளைக் குறித்துள்ளேன்.
08:16 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor ல் ஒட்டுகிறேன்.
08:23 இங்கே டுடோரியலை நிறுத்தி KTurtle editor னுள் program ஐ டைப் செய்க.
08:29 program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்.
08:33 முழு வேகத்தில் இந்த code ஐ இயக்குகிறேன்.
08:37 Run option ல் குறிப்பிட்டுள்ள எந்த வேகத்திலும் நீங்கள் code ஐ இயக்கலாம்.
08:43 சில முறைகள் இந்த இயக்குகிறேன்
08:46 pen color மற்றும் canvas color ல் அமைக்கப்பட்ட எதேர்ச்சை மதிப்புகளில் வித்தியாசத்தைக் காணலாம்.
08:54 pen மற்றும் canvas ன் நிறம் ஒவ்வொரு இயக்கத்திலும் மாறுவதைக் காண்க.
09:01 இந்த code எத்தனை முறை வேண்டுமானாலும் இயக்கலாம்.

pen மற்றும் canvas ல் அமைக்கப்பட்ட எதேர்ச்சை மதிப்புகளில் மாற்றத்தைக் காண்க.

09:15 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:20 சுருங்க சொல்ல
09:22 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
  • “learn” command மற்றும்
  • “random” command.
09:30 இப்போது பயிற்சி,
09:32 learn command ஐ பயன்படுத்தி,
  • ஐங்கோணம்
  • சதுரம்
  • செவ்வகம்
  • அறுங்கோணம் ஆகியவற்றை
canvas ன் நான்கு மூலைகளிலும் வரைந்து 
09:45 canvas ன் மத்தியில் ஒரு வட்டத்தை வரைக.
09:49 “random” command ஐ பயன்படுத்தி வெவ்வேறு நிறங்களை உருவாக்கி
09:55 வடிவியல் வடிவங்கள் மற்றும் canvas ஐ தனிப்பயனாக்குக.
10:00 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
10:04 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:08 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:13 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
10:15 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:19 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:22 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:29 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:33 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:40 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:50 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst