C-and-C++/C4/Function-Call/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 09:01, 8 May 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00.01 C மற்றும் C++ ல் Function calls குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00.07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது function call ன் வகைகளான
00.13 மதிப்பு மூலம் call செய்வது.
00.14 reference மூலம் call செய்வது.
00.16 இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம்.
00.19 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10
00.26 gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1
00.31 மதிப்பு மூலம் call செய்யும் functionகளின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00.35 இது function க்கு arguments ஐ அனுப்பும் ஒரு வழி ஆகும்.
00.40 மதிப்பு மூலம் ஒரு variable ஐ அனுப்பும் போது... function க்கு அனுப்பும் முன் அது variable ஐ ஒரு பிரதி எடுக்கும்.
00.48 function க்குள் arguments ல் செய்யப்பட்ட மாற்றங்கள் function ல் இருக்கும்.
00.54 இது function க்கு வெளியில் எதையும் பாதிக்காது.
00.58 மதிப்பு மூலம் call செய்யும் function க்கு ஒரு program ஐ காண்போம்.
01.02 Editor ல் ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். அதை திறக்கிறேன்.
01.08 நம் file பெயர் callbyval.c என்பதைக் கவனிக்க
01.13 இந்த program ல் ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிடுவோம். இப்போது code ஐ விளக்குகிறேன்.
01.19 இது நம் header file
01.21 இங்கே ஒரு argument int x உடன் ஒரு function cube உள்ளது
01.27 இந்த function ல் x ன் கனத்தைக் கணக்கிட்டு x ன் மதிப்பைத் திருப்புவோம்.
01.33 இது நம் main function.
01.36 இங்கே n ன் மதிப்பை 8 என கொடுப்போம். n ஒரு integer variable
01.43 பின் function cube ஐ call செய்வோம்.
01.45 பின் n ன் மதிப்பையும் n ன் கனத்தையும் அச்சடிப்போம்.
01.49 இது நம் return statement.
01.52 இப்போது program ஐ இயக்குவோம்.
01.54 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவைத் திறப்போம்.
02.02 கம்பைல் செய்ய டைப் செய்க gcc space callbyval.c space hyphen o space val. எண்டரை அழுத்துக
02.12 இப்போது டைப் செய்க ./val (dot slash val). எண்டரை அழுத்துக
02.16 வெளியீடு Cube of 8 is 512 என காட்டப்படுகிறது
02.23 இப்போது reference மூலம் function ஐ call செய்வதைக் காண்போம்.
02.26 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
02.29 இது function க்கு arguments ஐ அனுப்பும் மற்றொரு முறை ஆகும்.
02.33 இந்த முறை... மதிப்பிற்கு பதில் argument ன் address ஐ பிரதி எடுக்கிறது..
02.39 Function க்குள் argumentகளில் செய்யப்படும் மாற்றங்கள் வெளியேயும் அவற்றை பாதிக்கலாம்.
02.45 இதில் argumentகளை pointer type யாக declare செய்ய வேண்டும்.
02.50 Reference மூலம் function ஐ call செய்வதற்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்.
02.54 நம் file பெயர் callbyref.c என்பதை கவனிக்க
02.59 இது நம் header file stdio.h
03.03 பின் function swap உள்ளது
03.06 இந்த function... variable களின் மதிப்பை இடமாற்றும்.
03.10 a ன் மதிப்பு b ல் சேமிக்கப்படும். b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படும்.
03.15 Function க்கு அனுப்பப்பட்ட arguments... pointer type என்பதைக் காண்க
03.21 இங்கே ஒரு integer variable t ஐ declare செய்துள்ளோம்
03.25 a ன் முதல் மதிப்பு t ல் சேமிக்கப்படுகிறது.
03.28 பின் b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படுகிறது.
03.32 பின் t ன் மதிப்பு b ல் சேமிக்கப்படுகிறது
03.37 இவ்வாறு மதிப்புகள் இடமாற்றப்படுகின்றன.
03.40 இது நம் main function.
03.42 இங்கே இரு integer variableகளை i மற்றும் j என declare செய்துள்ளோம்.
03.49 பின் i மற்றும் j ன் மதிப்புகளை பயனரிடமிருந்து வாங்குகிறோம்.
03.53 Ampersand i மற்றும் Ampersand j... i மற்றும் j ன் memory address ஐ தரும்.
03.59 முதலில் இடமாற்றுதலுக்கு முன் மதிப்புகளை அச்சடிப்போம்.
04.04 பின் function swap ஐ செய்வோம்
04.06 பின் இடமாற்றியபின் மதிப்புகளை அச்சடிப்போம்.
04.10 இது நம் return statement.
04.13 இப்போது program ஐ இயக்குவோம்
04.16 நம் டெர்மினலுக்கு வருவோம்.
04.19 கம்பைல் செய்ய டைப் செய்க gcc space callbyref dot c space hyphen o space ref. எண்டரை அழுத்துக
04.29 இப்போது டைப் செய்க dot slash ref. எண்டரை அழுத்துக
04.33 Enter the values என காண்கிறோம். நான் 6 ஐயும் 4 ஐயும் தருகிறேன்
04.40 காட்டப்படும் வெளியீடு, Before swapping 6 and 4
04.44 After swapping 4 and 6
04.48 இப்போது அதே Program ஐ C++ ல் எவ்வாறு இயக்குவது என காணலாம்.
04.53 என்னிடம் அந்த code உள்ளது, அதை பார்ப்போம்.
04.57 இது இரண்டாவது program... reference மூலம் function ஐ call செய்வது.
05.01 நம் file பெயர் callbyref.cpp என்பதைக் காண்க
05.06 code ஐ காண்போம்
05.08 இது நம் header file iostream
05.12 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
05.16 Function ஐ declare செய்வது C++ லும் ஒன்றே.
05.19 இதில் argumentகளை ampersand x மற்றும் ampersand y என அனுப்புகிறோம்.
05.25 இது x மற்றும் y ன் memory address ஐ தரும்.
05.29 பின் மதிப்புகளை இடமாற்றுவோம்.
05.32 மீதமுள்ள code நம் C code போன்றதே.
05.36 printf statement க்கு பதில் cout உம் scanf statement க்கு பதில் cin ம் இட வேண்டும்
05.44 இப்போது program ஐ இயக்குவோம். நம் டெர்மினலுக்கு வருவோம்
05.48 கம்பைல் செய்ய டைப் செய்க; g++ space callbyref.cpp space hyphen o space ref1, எண்டரை அழுத்துக
06.00 இப்போது டைப் செய்க dot slash ref1, எண்டரை அழுத்துக
06.05 இங்கே இது காட்டுவது:
06.07 Enter values of a and b
06.10 4 மற்றும் 3 என தருகிறேன்
06.13 வெளியீடு காட்டப்படுகிறது
06.15 Before swapping a and b 4 and 3
06.19 After swapping a and b 3 and 4
06.23 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06.26 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06.30 சுருங்க சொல்ல நாம் கற்றது:
06.32 மதிப்பு மூலம் function ஐ call செய்வது.
06.34 Reference மூலம் function ஐ call செய்வது.
06.37 பயிற்சியாக
06.38 C++ ல் மதிப்பு மூலம் call செய்வதைப் பயன்படுத்தி ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிட இதுபோன்ற ஒரு program எழுதுக.
06.46 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06.49 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
06.52 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06.56 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07.01 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07.05 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07.11 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07.15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07.23 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07.27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst