Difference between revisions of "Linux/C2/Redirection-Pipes/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
{| border=1 | {| border=1 | ||
!Time | !Time |
Revision as of 08:55, 24 September 2013
Time | Narration |
---|---|
00:00:00 | ரிடிரக்ஷன் மற்றும் பைப்ஸ் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:00:07 | நான் உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
00:00:09 | லீனக்ஸ் OS மற்றும் அடிப்படை காமான்ட்கள் குறித்து உங்களுக்கு அறிமுகம் இருக்கும் என எண்ணுகிறேன். |
00:00:16 | உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அவை இதே தளத்தில் மற்ற டிடோரியல்களில் உள்ளன. |
00:00:22 | லீனக்ஸ் case sensitive ஆனவை. |
00:00:25 | மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் கீழ் நிலை எழுத்துக்களே பயன்படும். |
00:00:32 | லீனக்ஸில் முனையத்தில் பல வேலைகள் செய்கிறோம். |
00:00:35 | ஒரு கட்டளையை செயலாக்க விசைப்பலகையால் உள்ளிடுகிறோம். |
00:00:39 | தேதி நேரம் இவற்றை அறிய விரும்பினால்... |
00:00:41 | விசைப்பலகை மூலம் டேட் என உள்ளிடுகிறோம். |
00:00:46 | சாதாரணமாக விசைப்பலகை மூலம் உள்ளிடுகிறோம். |
00:00:48 | கமாண்டின் அவுட்புட் டெர்மினலில் கிடைக்கிறது. |
00:00:56 | சில சமயம் கமாண்ட் செயலாகும் போது பிழை ஏற்படுகிறது. |
00:00:59 | உதாரணமாக உள்ளிக: கேட் ஸ்பேஸ் ஏஏஏ என்டர். |
00:01:05 | அப்படி எந்த பைலும் இல்லை என பிழை செய்தி சொல்லுகிறது. |
00:01:10 | இந்த பிழை டெர்மினலில் காணப்படுகிறது. பிழை அறிவிப்பும் டெர்மினலிலேயே நிகழ்கிறது. |
00:01:20 | உள்ளீடு, வெளியீடு, பிழை அறிவிப்பு... கமான்ட்களுடன் தொடர்புள்ள சிறப்பு செயல்கள். |
00:01:24 | ரிடிரக்ஷன் பற்றி அறியும் முன் ஸ்ட்ரீம் மற்றும் பைல் டிஸ்க்ரிப்டர் கோட்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும். |
00:01:31 | பாஷ் போன்ற லீனக்ஸ் ஷெல் உள்ளீட்டை வாங்கி ஒரு ஸ்ட்ரீம் எழுத்துருக்களாக வெளியீட்டை அனுப்புகிறது. |
00:01:37 | ஒவ்வொரு எழுத்துருவும் அதற்கு முன் பின் உள்ள எழுத்துருவில் இருந்து சுதந்திரமானது. |
00:01:41 | ஸ்ட்ரீம்கள் பைல் ஐஓ நுட்பத்தால் அணுகப்படுகின்றன. |
00:01:44 | உண்மையில் எழுத்துருக்கள் பைல், கீபோர்ட், விண்டோ இவற்றில் இருந்து, வருகிறதோ போகிறதோ - இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. |
00:01:51 | லீனக்ஸில் திறந்திருக்கும் எந்த ஒரு ப்ராசசின் பைலும் ஒரு முழு எண்ணுடன் பொருத்தப்பட்டது. |
00:01:57 | இந்த எண் மதிப்பு பைல் டிஸ்க்ரிப்டர் எனப்படும். |
00:02:05 | ஷெல்கள் மூன்று ஸ்டாண்டர்ட் ஐ/ஓ ஸ்ட்ரீம்களை பயன்படுத்தும். |
00:02:08 | மூன்றும் நன்கு அறியப்பட்ட பைல் டிஸ்க்ரிப்டருடன் தொடர்புள்ளவை. |
00:02:12 | எஸ்டிடிஐஎன்[stdin] என்பது ஸ்டாண்டர்ட் இன்புட் ஸ்ட்ரீம். |
00:02:15 | கட்டளைகளுக்கு உள்ளீடு தரும்... |
00:02:17 | இதன் பைல் டிஸ்க்ரிப்டர் 0 |
00:02:19 | எஸ்டிடிஅவுட்[stdout] ஸ்டாண்டர்ட் அவுட்புட் ஸ்ட்ரீம். |
00:02:22 | கட்டளைகளின் வெளியீட்டை தரும் இதன் பைல் டிஸ்க்ரிப்டர் 1. |
00:02:26 | எஸ்டிடிஇஆர்ஆர்[stderr] என்பது ஸ்டாண்டர்ட் எரர் ஸ்ட்ரீம். கட்டளைகளின் பிழை வெளியீட்டை தருமிதன் பைல் டிஸ்க்ரிப்டர் 2. |
00:02:36 | இன்புட் ஸ்ட்ரீம் ப்ரோக்ராம்களுக்கு இன்புட்டை தரும். |
00:02:40 | முன்னிருப்பாக அவை டெர்மினலில் கீபோர்ட் இடுகைகளை ஏற்கும். |
00:02:44 | அவுட்புட் ஸ்ட்ரீம்கள் எழுத்துக்களை அச்சிடுகின்றன. முன்னிருப்பாக டெர்மினலில் அச்சடிக்கப்படும். |
00:02:47 | ஆரம்பத்தில் டெர்மினல் ஆஸ்கி ப்ரின்டர் அல்லது ஒரு திரை டெர்மினலாக இருந்தது. |
00:02:52 | இப்போது வரைகலை டெஸ்க்டாப்பில் உரை விண்டோவாக இருக்கிறது. |
00:02:56 | மூன்று ஸ்ட்ரீம்களும் முன்னிருப்பாக சில பைல்களுக்கு இணைந்துள்ளன. |
00:03:01 | இந்த நடத்தையை லினக்ஸில் மாற்றலாம். |
00:03:04 | மூன்று ஸ்ட்ரீம்களையும் வேறு சில பைல்களுக்கு இணைக்கலாம். |
00:03:07 | இது ரிடிரக்ஷன் ஆகும். |
00:03:09 | இந்த மூன்று ஸ்ட்ரீம்களில் எப்படி ரிடிரக்ஷன் செய்யப்படுகிறது என காணலாம். |
00:03:14 | முதலில் ஸ்டாண்டர்ட் இன்புட் ரிடிரக்ஷன் |
00:03:17 | பைலில் இருந்து ஸ்டாண்டர்ட் இன் ஐ இட முனை அம்புக்குறி ஆபரேட்டர் வழியாக அனுப்புகிறோம். எப்படி? |
00:03:22 | டபில்யுசி கமாண்ட் ஒரு பைலில் வரிகள், சொற்கள், எழுத்துருக்களை எண்ணும் என அறிவோம். |
00:03:28 | டெர்மினலில் டைப் செய்க: டபில்யுசி |
00:03:31 | என்டர் செய்க. |
00:03:32 | ஒரு கண் சிமிட்டும் கர்சரை காணலாம். நாம் விசைப்பலகையால் ஏதேனும் உள்ளிட வேண்டும். |
00:03:37 | உள்ளிடலாம். "திஸ் டுடோரியல் இஸ் வெரி இம்பார்டன்ட்" |
00:03:46 | என்டர் செய்க. |
00:03:48 | கண்ட்ரோல், டி[d] விசைகளை ஒன்றாக தட்டலாம். |
00:03:52 | நாம் உள்ளிட்ட வரிகள் மீது கமாண்ட் வேலை செய்து... |
00:03:55 | வெளியீட்டை டெர்மினலில் கொடுக்கும். |
00:03:57 | இங்கு ஒரு பைலும் டபில்யுசி கமாண்ட் க்குப் பிறகு தரவில்லை. |
00:04:01 | அதனாலது ஸ்டாண்டர்ட் இன்புட் ஸ்ட்ரீம் இலிருந்து இன்புட்டை எடுக்கும். |
00:04:04 | அது முன்னிருப்பாக விசைப்பலகைக்கு பிணைந்துள்ளதால் டபில்யுசி இன்புட்டை அங்கிருந்து எடுத்துக்கொள்கிறது. |
00:04:12 | இப்போது இப்படி எழுத: "டபில்யுசி ஸ்பேஸ் 'இட முனை அம்புக்குறி' ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி " |
00:04:19 | டபில்யுசி... பைல் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி இன் வரி, சொற்கள், எழுத்துருக்களை எண்ணி சொல்கிறது. |
00:04:27 | இப்போது டைப் செய்க: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி " |
00:04:34 | அதே விடை கிடைக்கிறது. |
00:04:37 | என்ன வித்தியாசம்? |
00:04:39 | "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி" என்று எழுதியபோது கமாண்ட் பைல் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி ஐ திறந்து படித்தது. |
00:04:46 | ஆனால் நாம் "டபில்யுசி ஸ்பேஸ் 'இட முனை அம்புக்குறி' டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி ", என உள்ளிட்ட போது டபில்யுசி க்கு திறக்க பைல் கிடைக்கவில்லை. |
00:04:53 | ஆகவே அது இன்புட்டை ஸ்டாண்டர்ட் இன் லிருந்து எடுத்தது. |
00:04:57 | அந்த ஸ்டாண்டர்ட் இன் ஐ நாம் பைல் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி க்கு காட்டினோம். |
00:05:01 | ஆகவே கமாண்ட் டெஸ்ட்1 லிருந்து படிக்கிறது. |
00:05:04 | ஆனால் அதற்கு ஸ்டாண்டர்ட் இன் க்கு தரவு எங்கிருந்து வருகிறதென தெரியாது. |
00:05:12 | இப்போது ஸ்டாண்டர்ட் அவுட்புட்டை, ஸ்டாண்டர்ட் எரர் ஐ ரிடிரக்ட் செய்யலாம் . |
00:05:17 | அவுட்புட் அல்லது எரர் ஐ ஒரு பைல் க்கு அனுப்ப இரண்டு வழிகளுண்டு: |
00:05:20 | ”n என்பது பைல் டிஸ்க்ரிப்டர். nஒற்றை வல அம்புக்குறி... அவுட்புட் ஐ பைல் டிஸ்க்ரிப்டர் n இலிருந்து ஒரு பைல் க்கு ரிடிரக்ட் செய்கிறது. |
00:05:29 | அந்த பைல் க்கு எழுத அதிகாரம் தேவை. |
00:05:32 | ஒரு வேளை பைல் இல்லையெனில் உருவாக்கப்படும். |
00:05:35 | பைல் இருந்தால் அதன் உள்ளடக்கங்கள் எச்சரிக்கை ஏதும் இல்லாமல் காணாமல் போகும். |
00:05:40 | 'n' இரட்டை வல அம்புக்குறி' யும் அவுட்புட் ஐ பைல் டிஸ்க்ரிப்டர் n இலிருந்து ஒரு பைல் க்கு ரிடிரக்ட் செய்கிறது. |
00:05:47 | மீண்டும், பைல் க்கு எழுத அதிகாரம் தேவை. |
00:05:50 | பைல் இல்லையெனில் அது உருவாக்கப்படும். |
00:05:52 | பைல் இருந்தால் அதன் உள்ளடக்கங்களின் பின்னால் அவுட்புட் சேர்க்கப்படும். |
00:05:59 | n ஒற்றை வல அம்புக்குறி அல்லது n இரட்டை வல அம்புக்குறி என்பதில் "n" என்பது பைல் டிஸ்க்ரிப்டர் ஐ குறிக்கிறது. |
00:06:05 | அதை விட்டுவிட்டால் ஸ்டாண்டர்ட் அவுட்புட் ஆன பைல் டிஸ்க்ரிப்டர்1 என கொள்ளப்படும். |
00:06:10 | ஆகவே வெறும் வல அம்புக்குறியானது, 1, வல அம்புக்குறிக்கு சமம். |
00:06:15 | ஆனால் எரர் ஸ்ட்ரீம் ஐ ரிடிரக்ட் செய்ய, 2 வல அம்புக்குறி அல்லது 2 இரட்டை வல அம்புக்குறியை பயன்படுத்துக. |
00:06:22 | இதை செயலில் பார்க்கலாம். |
00:06:24 | டபில்யுசி கமாண்ட், பைல் அல்லது ஸ்டாண்டர்ட் இன் இலிருந்து செயலாக்கி விடைகளை டெர்மினல் விண்டோவில் காட்டுகிறது. |
00:06:31 | டெர்மினலில் இதை காட்ட வேண்டாமெனில் என்ன செய்வது? |
00:06:34 | பின்னால் தகவலை பயன்படுத்த ஒரு பைலில் அதை சேமிக்க விரும்புகிறோம். |
00:06:38 | டபில்யுசி முன்னிருப்பாக அவுட்புட்டை ஸ்டாண்டர்ட்அவுட் க்கு எழுதும். |
00:06:42 | அது முன்னிருப்பாக டெர்மினலுக்கு இணைந்துள்ளதால்.... |
00:06:45 | அவுட்புட் டெர்மினலில் காட்டப்பட்டது. |
00:06:48 | ஸ்டாண்டர்ட்அவுட் ஐ ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்ய முடிந்தால் டபில்யுசி கமாண்ட் அந்த பைலுக்கு எழுதும். |
00:06:57 | எழுதுவோம்: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி 'வல அம்புக்குறி' டபில்யுசி_ ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி". |
00:07:09 | என்டர் செய்க. |
00:07:11 | உண்மையில் நடந்ததா என்றறிய கேட் கமாண்டை பயன்படுத்தி டபில்யுசி _ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி இன் உள்ளடக்கத்தை காட்டலாம். |
00:07:23 | நடந்துள்ளது. |
00:07:24 | அதே டிரக்டரியில் இன்னொரு பைல் டெஸ்ட்2 என வைத்துள்ளதாக கொள்வோம். |
00:07:30 | அதே கமாண்ட் ஐ டெஸ்ட்2 பைலுக்கு செய்வோம். டைப் அடிக்கலாம்: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்2 டாட் டிஎக்ஸ்டி 'வல அம்புக்குறி'டபில்யுசி _ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி" |
00:07:44 | பைல் டபில்யுசி _ரிசல்ட்ஸ் இன் உள்ளடக்கங்கள் மேலெழுதப்படும். |
00:07:48 | இதை பார்க்கலாம். |
00:07:56 | முன்பு எழுதினதற்கு பதில் "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட் 1 டாட் டிஎக்ஸ்டி இரண்டு முறை'வல அம்புக்குறி' டபில்யுசி அண்டர்ஸ்கோர் ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி" என எழுத... |
00:08:07 | பைல் டபில்யுசி அண்டர்ஸ்கோர் ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி இன் உள்ளடக்கத்தை மாற்றாமல் புதிய உள்ளீடு பின்னால் ஒட்டப்படும். |
00:08:15 | இதையும் பார்க்கலாம். |
00:08:26 | ஸ்டாண்டர்ட் எரர் ஐ ரிடிரக்ட் செய்வதும் அதேபோல்தான். |
00:08:29 | ஒரே மாற்றம்... ஸ்டாண்டர்ட் எரர் இன் பைல் டிஸ்க்ரிப்டர் எண்ணை அம்புக்குறி அல்லது இரட்டை வல அம்புக்குறி க்கு முன்னால் குறிப்பிட வேண்டும். |
00:08:38 | நமக்கு பைல் ஏஏஏ என ஒன்றும் இல்லை என தெரியும். எழுதுகிறோம். "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ" |
00:08:46 | ஷெல் எரர் “நோ சச் பைல் ஆர் டிரக்டரி” என காட்டும். |
00:08:50 | இந்த எரர் திரையில் தெரிய வேண்டாமெனில் வேறு ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்துவிடலாம். |
00:08:55 | இதற்கு கமாண்ட் "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ ஸ்பேஸ் 2 'வல முனை அம்புக்குறி' எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி " |
00:09:06 | இப்போது எரர் டெர்மினலில் தெரியாது, அது பைல் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி க்கு எழுதப்படும். |
00:09:12 | இது நடந்துள்ளதை பார்க்கலாம். கமாண்ட் "கேட் ஸ்பேஸ் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி " |
00:09:22 | இப்போது நான் இன்னொரு பிழை செய்கிறேன். இயக்கும் கமாண்ட் "கேட் ஸ்பேஸ் பிபிபி[bbb] ஸ்பேஸ் 2 'வல அம்புக்குறி' எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி ". |
00:09:34 | முந்தைய எரர் புதிய எரர் ஆல் மேலெழுதப்படும். |
00:09:39 | பார்க்கலாம். "கேட் ஸ்பேஸ் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி" |
00:09:46 | நமக்கு எல்லா எரர்களும் பார்க்கப்பட வேண்டுமானால் கமாண்ட் "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ ஸ்பேஸ் 2 'வல அம்புக்குறி' இரு முறை; எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி" |
00:09:58 | கேட் கமாண்ட் ஐ பயன்படுத்தி சோதித்துவிடலாம். |
00:10:06 | எப்படி இந்த மூன்று ஸ்ட்ரீம்கள் ஸ்டாண்டர்ட் அவுட், ஸ்டாண்டர்ட் இன், ஸ்டாண்டர்ட் எரர் ஆகியன திசை திருப்பப்பட்டு தனித்தனியாக கையாளப்பட்டன என கண்டோம். இவை அனைத்தும் ஒன்றாக கையாளப்பட்டு இயக்கப்படும் போது இவற்றின் உண்மை சக்தி எப்போது விளங்கும். |
00:10:20 | இந்த செயலுக்கு பைப்லைனிங் எனப்பெயர். |
00:10:22 | பைப்கள் ஒரு கமாண்ட் சங்கிலியை உருவாக்கப்பயன்படும். |
00:10:25 | பைப் ஒரு கமாண்ட் இன் அவுட்புட் ஐ சங்கிலியில் உள்ள அடுத்த கமாண்டின் இன்புட்டுக்கு தருகிறது. |
00:10:30 | அதை பார்க்கலாம். கமாண்ட்1 செங்குத்துக்கோடு கமாண்ட்2 ஹைபன் ஆப்ஷன்(-option) செங்குத்துக்கோடு கமாண்ட்3 ஹைபன் ஆப்ஷன்1 ஹைபன் ஆப்ஷன்2 செங்குத்துக்கோடு கமாண்ட்4 |
00:10:46 | நடப்பு டிரக்டரியில் உள்ள மொத்த பைல்கள் மற்றும் டிரக்டரிகளின் எண்ணிக்கை தெரிய வேண்டும் என்போம். |
00:10:51 | என்ன செய்யலாம். "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல்" நடப்பு டிரக்டரியில் உள்ள மொத்த பைல்ஸ் மற்றும் டிரக்டரிகளின் எண்ணிக்கையை காட்டும். |
00:10:58 | இந்த அவுட்புட்டை ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்யலாம். "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் 'வல அம்புக்குறி' பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" |
00:11:08 | "கேட் ஸ்பேஸ் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" ஐ இயக்குவோம். |
00:11:14 | இப்போது ஒவ்வொரு வரியும் ஒரு பைல் அல்லது டிரக்டரி இன் பெயர். |
00:11:17 | ஆகவே இந்த பைலில் உள்ள வரிகளை எண்ண முடிந்தால் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி ஐ நமக்கு பயனாக்கலாம். |
00:11:24 | இதை பின் வரும் கமாண்ட் ஆல் சாதிக்கலாம். "டபில்யுசி ஸ்பேஸ் ஹைபன் எல் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" |
00:11:32 | இதில் சில பிரச்சனைகள் உள்ளன |
00:11:35 | இடையில் ஒரு பைல் வேண்டி இருக்கிறது. இங்கே அது பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி . |
00:11:40 | ஒரு வேளை முதல் கமாண்ட் நிறைய வெளியீட்டை கொடுத்தால் வட்டின் நினைவகம் அதிகரிக்ககூடும் |
00:11:46 | பல கமாண்ட்களை சேர்க்க நினைத்தால் இது மெதுவாகவே வேலை செய்யும். |
00:11:50 | பைப்களை பயன்படுத்தி இதை சுலபமாக செய்யலாம். எழுதுவோம்: "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் 'செங்குத்துக்கோடு' டபில்யுசி ஸ்பேஸ் ஹைபன் எல்" |
00:12:01 | வெகு சுலபமாகவே அதே வேலையை செய்துவிட்டோம். |
00:12:06 | எல்எஸ் கமாண்ட் இன் அவுட்புட் டபில்யுசி கமாண்ட் க்கு இன்புட் ஆகிறது. |
00:12:10 | கமாண்ட்களை பைப்களை பயன்படுத்தி இயக்கலாம். |
00:12:15 | பைப்கள் இன் வழக்கமான பயன் பலபக்க காட்சியை படிப்பது. |
00:12:19 | டைப் செய்க: "சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர் ச்லாஷ் பின்[bin]". |
00:12:24 | இப்போது பின்[bin] டிரக்டரியில் இருக்கிறோம். |
00:12:28 | "எல்எஸ் ஹைபன் எல்" ஐ இயக்குவோம். |
00:12:31 | அவுட்புட் ஐ சரியாக பார்க்க முடியாததால் பைப் ஆல் மோர் க்கு இணைத்தால் பார்க்க முடியும். |
00:12:37 | பட்டியலில் ஸ்க்ரால் செய்து படிக்கலாம். |
00:12:41 | "க்யு[q]" ஐ அழுத்தி வெளியேறலாம். |
00:12:45 | இவை பைல்களுடன் வேலை செய்ய உதவ சில கமாண்ட் கள். |
00:12:48 | இன்னும் பல கமாண்ட் களும் உள்ளன. |
00:12:50 | கண்ட கமாண்ட் களுக்கு பல் வேறு ஆப்ஷன்கள் உள்ளன. |
00:12:54 | 'மேன்[man]' கமாண்ட் ஐ பயன்படுத்தி இவற்றை காணுங்கள் |
00:12:58 | ஒரு கமாண்ட் பற்றி நன்கு அறிய அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துக |
00:13:04 | இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. |
00:13:07 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
00:13:15 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
00:13:19 | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி. |