Difference between revisions of "Health-and-Nutrition/C2/Football-hold-for-breastfeeding/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
|||
Line 421: | Line 421: | ||
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | + | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி. | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|} | |} |
Latest revision as of 16:54, 5 August 2020
Time | Narration |
00:01 | பாலூட்டுவதற்கான Football பிடிப்பு முறை குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorialல் நாம் கற்கபோவது- குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்ற சரியான பாலூட்டும் பிடிப்பு முறையை தேர்ந்தெடுத்தல் |
00:15 | பாலூட்டும் முன் தாய் செய்யவேண்டியவை மற்றும் Football பிடிப்பு முறைக்கான படிப்படியான வழிமுறைகள். |
00:23 | இதை ஆரம்பிக்கலாம். |
00:24 | உலகம் முழுவதும் பல்வேறு பிடிப்பு முறைகளை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுக்கிறார்கள். |
00:31 | முன் டுடோரியலில் சொன்னது போல, தாய்க்கும் சேய்க்கும் பாலூட்டுவதற்கான சிறந்த பிடிப்பு முறையானது பாலூட்டி முடிக்கும் வரை தாயும் சேயும் வசியாக இருப்பதே ஆகும். |
00:48 | குழந்தை தாயின் மார்பகத்துடன் சேர்த்து அணைத்து போதுமான அளவு பால் பெறுமாறு இருக்க வேண்டும் |
00:56 | Football பிடிப்பு என்ற ஒருவகை பிடிப்பு முறை பற்றி கற்போம். |
01:01 | Football பிடிப்பு முறையானது, குறிப்பாக பின்வரும் தாய்மார்களுக்கு சிறந்ததாகும்: அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடைப்பெற்றிருந்தால் |
01:08 | பெரிய மார்பகங்கள் இருந்தால் |
01:10 | சிறிய அல்லது குறைப்பிரவத்தில் குழந்தை பிறந்திருந்தால் |
01:14 | அல்லது இரட்டைக் குழந்தைகள் இருந்தால். |
01:15 | பாலூட்டுவதற்கு முன், தாய் தன் கைகளை சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும் |
01:22 | பின்னர் சுடவைத்து குளிர்விக்கப்பட்ட நீரை அருந்த வேண்டும். |
01:27 | பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 750 முதல் 850 மில்லி லிட்டர் வரை பாலை உற்பத்தி செய்கிறார்கள். |
01:34 | அதனால், அவர்கள் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். |
01:38 | அடுத்து, தாயின் நிலை பற்றி காண்போம். |
01:43 | தாய் தரையில் அல்லது கட்டிலில் கால்களை மடக்கி உட்கார வேண்டும். |
01:48 | அல்லது நாற்காலியில் பாதங்கள் தரையில் படியுமாறு உட்கார வேண்டும். |
01:51 | நாற்காலி உயரமாக இருந்தால் காலுக்கு சிறிய நாற்காலியோ அல்லது தலையணையோ வைத்து உட்கார வேண்டும். |
02:02 | உட்காரும் போது, முதுகு நேராக உள்ளதா என கவனிக்கவும் - இத முதுகு வலியை தவிர்க்கும் |
02:09 | தோள்கள் தூக்கியோ அல்லது வளைத்தோ இல்லாமல் தளர்ந்து இருக்கவேண்டும் |
02:13 | பாலூட்டி முடிக்கும் வரை இவ்வாறே தளர்ந்து இருக்க வேண்டும். |
02:19 | தாய் தான் பாலூட்டவிருக்கும் மார்பகத்திற்கு பக்கமாக 3 4 தலையணைக்களை வைக்க வேண்டும் |
02:26 | மேல் இருக்கும் தலையணை, மற்ற தலையணைகளுக்கும் தாயின் தொடைக்கும் குறுக்கே சமமாக இடையே இருக்க வேண்டும் |
02:32 | தாய் பாலூட்டவிருக்கும் மார்பகத்தை திறந்து வைக்க வேண்டும். |
02:38 | மார்பகத்தை உள்ளாடை அல்லது ரவிக்கை கொண்டு அழுத்தம் கொடுக்க கூடாது. |
02:45 | வசதியாக உட்கார்ந்த பிறகு, குழந்தையை தூக்க வேண்டும். |
02:49 | குழந்தையின் முதுகை தலையணை மீது வைக்க வேண்டும் |
02:53 | தாய் பாலூட்டவிருக்கும் மார்பகம் உள்ள அதே பக்க கையால் குழந்தையின் தலையை பிடிக்க வேண்டும். |
03:01 | குழந்தையின் கால்கள், தாயின் அதே கையின் அக்குளின் வழியாக தலையணையின் மீது இருக்க வேண்டும். |
03:08 | தாய் தன் இந்த கையையும் குழந்தையின் கால்களையும் தலையணையின் மீது வைக்க வேண்டும் |
03:13 | இங்கு காட்டப்படும் தாய், தன் வலது மார்பகத்தில் பாலூட்டுகிறார். |
03:18 | அதனால், குழந்தையின் கால்கள் அவரின் வலது அக்குளின் வழியாக உள்ளது. |
03:23 | குழந்தையின் தலையின் அடிப்பாகத்தை பிடிக்க தாய் தன் வலது கையின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை பயன்படுத்துகிறார். |
03:31 | மார்பகத்தை குழந்தைக்கு அருகில் கொண்டுவர தாய் குனியக்கூடாது என்பதை நினைவு கொள்க. |
03:37 | இது வசதியாக இருக்காது. முதுகு வலியும் ஏற்படும். |
03:42 | எப்போதும் நேராக அமர்ந்து குழந்தையை தூக்கியே மார்பகத்திற்கு கொண்டு வரவேண்டும். |
03:48 | அடுத்து, குழந்தையின் தலையை தூக்குவதற்கான தாயின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலையைக் காண்போம். |
03:56 | தாயின் கட்டைவிரல் குழந்தையின் ஒரு காதின் பின்புறமும், மற்ற விரல்கள் மற்றொரு காதின் பின்புறமும் இருக்க வேண்டும். |
04:03 | குழந்தையின் காதின் பின்புறத்தில் இருந்து விரல்களை கழுத்திற்கு நகர்த்தக் கூடாது. |
04:09 | தாயின் மணிக்கட்டு குழந்தையின் தோள்களுக்கு இடையே இருக்க வேண்டும். |
04:13 | குழந்தையின் முதுகில் தாயின் கையால் அழுத்தத்தைக் கொடுக்க கூடாது. இது குழந்தைக்கு பால் குடிக்கும்போது வசதியாக இருக்கும். |
04:23 | அடுத்து, குழந்தையின் உடலை எவ்வாறு சரியாக வைப்பது என பார்ப்போம். |
04:27 | குழந்தையின் முகம் தாயை பார்த்தவாறு இருக்க வேண்டும் |
04:31 | குழந்தையின் உடல் தாயின் உடலோடு சற்று அழுந்தி இருக்க வேண்டும். |
04:36 | இருவருக்குமான இடைவெளி குறைவதால் மார்பகத்தை எட்ட குழந்தைக்கு கடினமாக இருக்காது. |
04:41 | மேலும் குழந்தையின் வாய் நன்றாக மார்பத்துடன் இணையவும் எளிமையாக இருக்கும். |
04:47 | இரண்டாவது குழந்தையின் உடலை ஒழுங்காக வைப்பது. |
04:51 | நாம் சாப்பிடும் போது, எப்போதும நம் தலை, கழுத்து மற்றும் உடல் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். |
04:57 | அதேபோல பால்குடிக்கும் போது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடல் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும் |
05:06 | இதனால் குழந்தை எளிதாக பாலை விழுங்க முடியும். |
05:10 | இப்போது குழந்தையின் உடலை வைப்பதற்கான மூன்றாவது விஷயத்தைக் காண்போம். |
05:16 | தாய் குழந்தையின் முழு உடலையும் தாங்க வேண்டும். |
05:22 | இல்லையெனில் குழந்தை மார்பகத்துடன் நன்றாக இணைய அதிகமான முயற்சி எடுக்க வேண்டிவரும். |
05:30 | அடுத்து, குழந்தையின் மூக்கு மற்றும் தாடையின் நிலையைக் காண்போம். |
05:34 | குழந்தையின் மூக்கு, மார்பக காம்பிற்கு நேராக இருக்க வேண்டும். |
05:39 | தாடையானது மேல்நோக்கி மார்பகத்திற்கு மிக அருகில் இருக்க வேண்டும். |
05:44 | இது பாலூட்டும்போது areola ன் கீழ்பெரும்பகுதி குழந்தையின் வாயினுள் செல்வதை உறுதிசெய்யும். இதனால், குழந்தை அதிகமாக பால் குடிக்க கீழ் தாடையை பயன்படுத்தும். |
05:55 | குறிப்பு- Areola என்பது மார்பக காம்பை சுற்றி இருக்கும் கருப்பு பகுதி. |
06:00 | இப்போது குழந்தை சரியான நிலையில் உள்ளது, அடுத்து மார்பகத்தை எவ்வாறு பிடிப்பது என காண்போம். |
06:07 | மற்றொரு கையின் விரல்களை பயன்படுத்தி தாய் தன் மார்பகத்தை C வடிவத்தில் பிடிக்க வேண்டும். |
06:15 | படத்தில் காட்டப்படும் தாய் தன் வலது மார்பகத்தை பிடிக்க இடது கையை பயன்படுத்துகிறார். |
06:21 | கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலைகளை புரிந்துகொள்ள, தாயின் வலது மார்பகக் காம்பை கடிகாரத்தின் மையமாக கற்பனைசெய்து கொள்க. |
06:30 | தாய் தன் இடது கட்டைவிரலை இந்த கடிகாரத்தில் 12 ல் வைக்க வேண்டும். |
06:35 | இடது ஆட்காட்டி மற்றும் நடு விரல்களை 6 ல் வைக்க வேண்டும். |
06:42 | விரல்களை எப்போதும் குழந்தையின் உதடுகளுக்கு இணையாக வைக்க வேண்டும். |
06:47 | ஏன்? இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம். |
06:52 | வடாபாவ் அல்லது burgerஐ நாம் சாப்பிடும்போது, நமது உதடுகள் கிடைமட்டமாக திறக்கிறது. |
06:58 | வடாபாவ் அல்லது burgerஐ பெரியதாக கடிக்க அதை கிடைமட்டாக பிடிக்கிறோம். |
07:03 | இங்கே, கட்டைவிரல் மற்று மற்ற விரல்கள் உதடுகளுக்கு இணையாக வைக்கப்படுகிறது. |
07:10 | வடாபாவ் அல்லது burgerஐ செங்குத்தாக வைத்தால், அதை பெரியதாக கடிக்க முடியாது. |
07:16 | அதேபோல, குழந்தையின் உதடுகளின் திசையை கவனிக்கவும். |
07:21 | இங்கு உதடுகள் கிடைமட்டமாக உள்ளன. |
07:24 | எனவே, விரல்கள் மற்றும் கட்டை விரல்களை மார்பத்தின் மீது கிடைமட்டமாக வைக்க வேண்டும். |
07:32 | இது areola ன் பெரும் பகுதி குழந்தையின் வாயினுள் செல்ல உதவும். |
07:39 | குழந்தையின் உதடுகளுக்கு இணையாக இருப்பது தவிர, மார்பக காம்பில் இருந்து 3 விரல் இடைவெளியில் தாயின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்கள் இருக்க வேண்டும். |
07:50 | வடாபாவ் அல்லது burgerஐ சாப்பிடும்போது, அதை மிக அருகில் வைத்தால் பெரிதாக கடிக்க முடியாமல் நமது விரல்கள் தடுத்து விடும். |
08:00 | மிக தூரத்தில் வைத்தால், வாயில் வைக்க சரியான வடிவில் இருக்காது. |
08:07 | எனவே, பெரிதாக கடிக்க சரியான தூரத்தில் வைக்க வேண்டும். |
08:13 | அதேபோல குழந்தைக்கும், இங்கு காட்டப்படுவது போல மார்பக காம்பில் இருந்து 3 விரல் இடைவெளி சரியானதாக இருக்கும். |
08:21 | இந்த இடைவெளி, குழந்தையின் வாயில் areolaன் பெரும்பகுதி செல்ல தாயின் விரல்கள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் |
08:31 | மார்பக காம்பை மட்டும் தாய் அழுத்தக்கூடாது, அது குறைந்த அளவு பால் கொடுக்கும் |
08:36 | areola க்கு அடியில் இருக்கும் பெரிய பால் சுரப்பிகளில் இருந்து பால் வெளிவர அதை அழுத்த வேண்டும் |
08:42 | குழந்தை நன்றாக மார்பகத்துடன் இணைந்திருக்க மார்பகத்தை சரியான வடிவில் வைக்க வேண்டும். |
08:50 | படத்தில் காட்டியுள்ளபடி, தாயின் கட்டை விரல் மார்பகத்திற்கு மேல் பக்கமாக இருக்க வேண்டும் |
08:55 | இரண்டு விரல்கள் மார்பகத்தின் கீழ் பக்கமாக இருக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க |
09:01 | மீண்டும் வடாபாவ் அல்லது burger உதாரணத்திற்கு செல்வோம். |
09:06 | வடாபாவ் அல்லது burger ஐ சரியாக பிடித்த பிறகு, பெரிதாக கடிக்க அதை எப்போதும் அழுத்துகிறோம். |
09:12 | அதேபோல, தாயும் தன் மார்பகத்தை சற்று அழுத்தி C வடிவத்தில் பிடிக்க வேண்டும். |
09:18 | இது குழந்தையின் வாயில் மார்பகத்தின் பெரும்பகுதி செல்ல உதவும். |
09:23 | ஆனால் தாய் தன் மார்பகத்தை கத்திரி வடிவில் பிடித்து அழுத்தக்கூடாது என்பதை நினைவுகொள்க. |
09:30 | கத்திரி வடிவ அழுத்தம், மார்பகத்தை குறைத்து மார்பக காம்பை மட்டும் வாயில் செலுத்தும். |
09:36 | மார்பகத்தின் இருபுறமும் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்கள் கொண்டு சமமான அழுத்தம் கொடுக்க வேண்டும். |
09:43 | இல்லையெனில், மார்பக காம்பு மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ சாய்ந்து சரியாக வாயினுள் செல்லாது. |
09:51 | சிலநேரங்களில், தாய் தன் குழந்தையை வேறு நிலையில் பிடிக்க விரும்பலாம் |
09:56 | இந்த படத்தில் குழந்தை தாயை பார்த்தவாறு இல்லை |
10:00 | குழந்தையின் தலை, மார்பகத்தை நோக்கி கீழ் இருந்து அல்லாமல் மார்பகத்த்தின் பக்கமாக
கொண்டுவரப்பட்டுள்ளது |
10:07 | குழந்தையின் உதடுகள் இப்போது செங்குத்தாக உள்ளன. எனவே தாய் தன் மார்பகத்தை U வடிவில் பிடிக்குமாறு தன் விரல்களை வைக்க வேண்டும் |
10:17 | எந்த பாலூட்டும் முறையிலும், குழந்தையின் உதடுகள் உள்ள திசையில்தான், தாய் தன் மார்பகத்தை பிடித்திருக்கும் விரல்கள் மற்றும் கட்டை விரல் இருக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க. |
10:28 | இப்போது, குழந்தை, Football பிடிப்பு முறையில் மார்பகத்தை வாயினுள் செலுத்தி பால் குடிக்க தயாராக உள்ளது. |
10:34 | சரியாக மார்பகத்தை வாயினுள் செலுத்துவதற்கான வழிமுறை இந்த தொடரின் மற்றொரு tutorialல் விளக்கப்படுகிறது. |
10:41 | குழந்தையின் வாயினுள் சரியாக மார்பகத்தை செலுத்தியபின், மார்பகம் பெரியதாகவோ அல்லது கணமாக இல்லையெனில்- தாய் தன் கையில் இருந்து மார்பகத்தை விடுவித்து கொள்ளலாம். |
10:53 | இத்துடன் இந்த tutorial முடிகிறது.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி. |