Difference between revisions of "Joomla/C2/Installing-Joomla-on-a-local-server/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) (Created page with " {| border=1 || '''Time''' || '''Narration''' |- || 00:01 || வணக்கம். '''Local serverல் Joomlaஐ நிறுவுவது''' குறித்த Spok...") |
Venuspriya (Talk | contribs) |
||
Line 11: | Line 11: | ||
|- | |- | ||
||00:07 | ||00:07 | ||
− | || இந்த tutorial ல் நாம் கற்கபோவது '''Joomla''' ஐ பெறுவது, '''database''' ஐ உருவாக்குவது , | + | || இந்த tutorial ல் நாம் கற்கபோவது '''Joomla''' ஐ பெறுவது, '''database''' ஐ உருவாக்குவது , Permission கள் மற்றும் '''Joomla''' ஐ நிறுவுவது. |
|- | |- | ||
Line 465: | Line 465: | ||
|| 12:08 | || 12:08 | ||
|| இது '''Joomla''' upgrade செய்யப்படும்போது database ல் உள்ளது போல் ஒரேமாதிரியான பெயர்களை கொண்ட table களை backup செய்வதற்காகும் | || இது '''Joomla''' upgrade செய்யப்படும்போது database ல் உள்ளது போல் ஒரேமாதிரியான பெயர்களை கொண்ட table களை backup செய்வதற்காகும் | ||
+ | |||
+ | |- | ||
+ | || 12:17 | ||
+ | || மேலே வலதுபுறம் Next button ஐ click செய்யவும். | ||
+ | |||
+ | |- | ||
+ | || 12:21 | ||
+ | || நாம் இப்போது Finalisation and Overview page ல் உள்ளோம். | ||
|- | |- | ||
Line 472: | Line 480: | ||
|- | |- | ||
|| 12:32 | || 12:32 | ||
− | || முன்னிருப்பாக, radio button களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டிருக்கும். | + | || முன்னிருப்பாக, radio button களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டிருக்கும்.. |
|- | |- |
Latest revision as of 21:34, 29 July 2018
Time | Narration |
00:01 | வணக்கம். Local serverல் Joomlaஐ நிறுவுவது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial ல் நாம் கற்கபோவது Joomla ஐ பெறுவது, database ஐ உருவாக்குவது , Permission கள் மற்றும் Joomla ஐ நிறுவுவது. |
00:17 | Joomla ஐ நிறுவ உங்கள் கணினி பின்வருவனவற்றை கொண்டிருத்தல் வேண்டும்: Apache 2.x plus அல்லது IIS 7 plus MySQL 5.0.4 plus மற்றும் PHP 5.2.4 plus. |
00:35 | MySQL 6 மற்றும் higher version கள் தற்பொழுது ஒத்துழைக்கவில்லை என்பதை கவனிக்கவும். |
00:42 | இவற்றை தனியாகவோ அல்லது XAMPP WAMP அல்லது LAMPP போன்ற web-server distribution களை பயன்படுத்தி சேர்த்தோ நிறுவலாம் |
00:52 | Web-server distribution கள் Apache, MySQL மற்றும் PHP ஆகியவற்றை ஒன்றுசேர்த்து கொடுக்கிறது. |
01:00 | XAMPP ஐ நிறுவுதல் பற்றிய அதிக விவரங்களுக்கு PHP & MySQL spoken tutorials ஐ அணுகவும் . |
01:08 | இந்த tutorial ல் நான் பயன்படுத்துவது Ubuntu 14.04 Joomla 3.4.1, XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும் PHP. |
01:25 | முதலில் , என் கணினியில் XAMPP நிறுவப்பட்டுள்ளதா என்று பார்க்கிறேன். |
01:30 | Ctrl + Alt + T key களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கலாம். |
01:37 | மாற்றாக , launcher bar ல் உள்ள “Terminal” icon ஐ click செய்யவும். |
01:42 | sudo space slash opt slash lampp slash lampp space startஎன type செய்து XAMPP ஐ தொடங்கவும் |
01:53 | கேட்கப்படும்போது administrative password ஐ enter செய்து Enter ஐ அழுத்தவும். |
01:59 | இப்பொது browser க்கு சென்று type செய்க http colon double slash localhost . |
02:08 | முதன்முதலில் நிறுவும்போது , நீங்கள் மொழியை தேர்வு செய்யவேண்டும். |
02:15 | ஆகவே , Englishஐ தேர்வு செய்யலாம் . |
02:19 | Menu ல் திரையின் இடதுபுறத்தில் , phpinfo() ஐ click செய்யவும். |
02:26 | Ctrl + F key களை அழுத்தி DOCUMENT underscore ROOT ஐ தேடவும். |
02:35 | அது "Apache Environment" table ல் இருக்கும். |
02:40 | DOCUMENT underscore ROOT ன் மதிப்பு slash opt slash lampp slash htdocs அல்லது slash var slash www ஆக இருக்கும். |
02:54 | என் கணினியில் அது slash opt slash lampp slash htdocs ஆகும். |
03:01 | நாம் இந்த path ல் 'Joomla ஐ நிறுவப்போகிறோம். |
03:06 | முதலில் Joomla ஐ தரவிறக்கலாம். |
03:10 | ஆகவே ,www dot joomla dot org எனும் Joomla ன் official website க்கு செல்லவும் . |
03:20 | Webpage ன் Download button ஐ click செய்யவும். |
03:24 | நாம் மற்ற webpage க்கு திருப்பிவிடப்படுவோம் . |
03:28 | இங்கே, “Download Joomla 3.4.1 Full Package, ZIP” என்று கூறும் ஒரு button ஐ காணலாம். |
03:37 | அந்த button ஐ click செய்யவும். |
03:39 | உடனே , ஒரு சிறிய dialog box திறக்கும். |
03:43 | இங்கே Save File option ஐ click செய்து பிறகு OK ஐ click செய்யவும். |
03:49 | அது Joomla ஐ தரவிறக்கம் செய்யும். |
O3:52 | இந்த tutorial ஐ பதிவுசெய்யும்போது , சமீபத்திய நிலையான பதிப்பு 3.4.1 ஆகும். |
03:59 | இந்த tutorial ன் உள்ளடக்கம் 3.4.x version உடன் பொருந்தும். |
04:06 | நான் அதை முன்னரே தரவிறக்கியுள்ளேன். அது எனது Downloads folder ல் உள்ளது. |
04:12 | அடுத்து, DOCUMENT underscore ROOT ல் joomla எனும் புதிய folder ஐ உருவாக்கவேண்டும். |
04:20 | terminal window க்கு செல்லவும். |
04:22 | ஆகவே, prompt ல் type செய்க sudo space mkdir space slash opt slash lampp slash htdocs slash joomla |
04:37 | பிறகு Enter ஐ அழுத்தவும். |
04:39 | கேட்கும்போது உங்கள் admin password ஐ enter செய்யவும். |
04:43 | எப்போதெல்லாம் கேட்கப்படுகிறதோ நாம் முன்னரே செய்தது போல் செய்யவும். |
04:48 | இப்போது நாம் directory ஐ Downloads க்கு மாற்றவும். |
04:52 | தேவையான pathஐ காண , folder window க்கு வரவும். |
04:57 | Home folder ல் Downloads folder க்கு cursor ஐ நகர்த்தி tool-tip ஐ காணவும் . |
05:04 | எனது கணினியில் அது , slash home slash fossee slash Downloads. |
05:10 | ஆகவே , terminal ல் , நான் cd space slash home slash fossee slash Downloads எனும் command ஐ type செய்கிறேன். |
05:20 | பிறகு Enter ஐ அழுத்தவும். |
05:22 | உங்கள் கணினியில் காட்டப்பட்டுள்ள path ஐ type செய்யவும் . |
05:26 | zip file ன் content களை extract செய்து joomla folder உள் வைக்கவும். |
05:32 | Command prompt ல் type செய்க : sudo space unzip space Joomla file ன் பெயர் space hyphen d space slash opt slash lampp slash htdocs slash joomla slash. |
05:50 | பிறகு Enter ஐ அழுத்தவும். |
05:53 | Ctrl + L key களை அழுத்துவதன் மூலம் terminal ஐ நான் clear செய்கிறேன். |
06:00 | joomla folder ன் permission களை குறிப்பிட,நாம் DOCUMENT underscore ROOT க்கு செல்லலாம். |
06:08 | Type செய்க , cd space slash opt slash lampp slash htdocs. |
06:16 | பிறகு Enter ஐ அழுத்தவும். |
06:18 | இந்த directory ல் உள்ள file களை பட்டியலிட type செய்க ls பிறகு Enter ஐ அழுத்தவும். |
06:25 | joomla ன் group members மற்றும் ownerக்கு read, write மற்றும் execute permissions ஐ கொடுக்கலாம். |
06:34 | ஆகவே type செய்க sudo space chmod space 777 space joomla slash |
06:44 | பிறகு Enter ஐ அழுத்தவும். |
06:47 | நிறுவுவதற்கு முன் Joomla க்கான database ஐ நாம் உருவாக்க வேண்டும். |
06:54 | நாம் இதை phpmyadmin ல் செய்யலாம். |
06:58 | Phpmyadmin என்பது MySQL க்கான graphical user interface ஆகும். |
07:04 | அது XAMPP நிறுவுதலோடு சேர்ந்து வரும். |
07:08 | Browser க்கு சென்று type செய்க http colon double slash localhost. |
07:17 | XAMPP page ல் இடது புறத்தில் உள்ள Menuல் , Tools ன் கீழ் phpmyadmin ஐ click செய்யவும். |
07:27 | Top menu ல் Users ஐ click செய்து பிறகு Add User ஐ click செய்யவும். |
07:34 | Joomla hyphen 1 எனும் username ஐ enter செய்யவும். |
07:39 | Host dropdown list ல் இருந்து Local ஐ தேர்வு செய்யவும். |
07:44 | Password text-box ல் password ஐ enter செய்யவும். உதாரணமாக joomla123 |
07:51 | நீங்கள் தேர்வு செய்த password ஐ enter செய்யவும். |
07:55 | Re-type textbox ல் அதே password ஐ enter செய்யவும். |
07:59 | Generate Password prompt க்கு இப்பொது பதில் அளிக்க வேண்டாம். |
08:06 | Database for user ன் கீழ் , நாம் Create a database with the same name and grant all privileges எனும் option ஐ காணலாம் |
08:16 | அந்த option ஐ check செய்து , page ன் கீழ் வலதுபுறத்தில் உள்ள Go button ஐ click செய்யவும். |
08:25 | இது Joomla hyphen 1 எனும் பெயருடைய user மற்றும் database ஐ உருவாக்கும். |
08:35 | username, password மற்றும் database ன் பெயர்களை குறித்துகொள்ளவும் . |
08:42 | அவை பின்னர் Joomla நிறுவுதல் முடிவடையும்போது தேவைப்படும். |
08:49 | Database ன் பெயர் மற்றும் username ஒரே மாதிரியாக இருக்க தேவையில்லை என்பதை கவனிக்கவும். |
08:55 | வெவ்வேறு பெயர்களுக்கு, நீங்கள் முதலில் database ஐ உருவாக்கியபிறகு அந்த database க்கான user ஐ உருவாக்கவும். |
09:04 | பெயரிடும் வழக்கத்தின்படி username க்கு இடையில் இடைவெளி இருத்தல் கூடாது. |
09:12 | இப்போது நாம் Joomla ஐ நிறுவ தயாராக உள்ளோம். |
09:15 | நமது XAMPP இயங்கிக்கொண்டிருக்கிறது மற்றும் நமது database தயாராக உள்ளது. |
09:20 | நாம் Joomla ஐ DOCUMENT underscore ROOT ல் உள்ள joomla folder உள் extract
செய்துவிட்டோம். |
09:28 | Browser க்கு செல்லவும். Type செய்க http colon double slash localhost slash joomla. |
09:38 | joomla எனும் folder ல் நாம் extract செய்துள்ளோம் என்பதை நினைவுகூரவும். |
09:44 | Enter ஐ அழுத்தவும் பிறகு Joomla நிறுவுதல் பக்கத்தை காணலாம். |
09:50 | முன்னிருப்பாக நாம் படி எண் ஒன்றில் அதாவது Configuration ல் உள்ளோம். |
09:56 | Joomla ஐ பல மொழிகளில் நிறுவலாம். |
10:00 | நாம் இங்கே English (United states) ஐ தேர்வு செய்கிறோம். |
10:05 | மேலே வலதுபுறத்தில் Next button ஐ click செய்க. |
10:08 | நாம் இப்போது main configuration page ல் உள்ளோம். |
10:12 | நீங்கள் விரும்பும் sitename ஐ enter செய்யவும். |
10:18 | நான் "Digital India" என enter செய்கிறேன். |
10:22 | Email-id என்பது கட்டாயமாகும் . |
10:25 | சரியான Email-id ஐ enter செய்யவும். |
10:29 | நான் "priyanka@spoken-tutorial.org" எனும் id ஐ கொடுக்கிறேன். |
10:37 | அடுத்து, Joomla Administrative page க்கான username ஐ enter செய்யவும் . |
10:44 | நான் admin எனும் username ஐ enter செய்கிறேன். |
10:48 | Joomla Administrator க்கான password ஐ enter செய்யவும். |
10:52 | நான் எனது admin password ஆக admin123 ஐ enter செய்கிறேன். |
10:58 | Confirmation box ல் password ஐ மீண்டும் type செய்யவும். |
11:02 | Site Offline (Yes/No) க்கு No option ஐ தேர்வு செய்யவும். |
11:08 | Global configuration ன் மூலம் பின்னர் இந்த தளம் online ல் அமைக்கப்படும். |
11:14 | நாம் description ஐ காலியாக ஆக விடலாம். |
11:17 | இப்போது , மேலே வலது புறத்தில் உள்ள Next button ஐ click செய்யவும். |
11:21 | ஆகவே , Database Configuration page க்கு நாம் வருகிறோம். |
11:26 | Database Type ஆக "MySQL" ஐ தேர்வு செய்யவும். |
11:31 | Host Name ஆக"localhost" ஐ enter செய்யவும். |
11:34 | இப்போது , நாம் username, password மற்றும் database name களை enter செய்யலாம். |
11:41 | இவை phpmyadmin ல் நாம் முன்னரே உருவாக்கியதாகும். |
11:46 | நான் username ஆக Joomla hyphen 1 ஐ enter செய்கிறேன். |
11:51 | பிறகு password ஆக joomla123. |
11:55 | database name ஆக Joomla hyphen 1 . |
11:59 | Table Prefix ஐ அப்படியே விட்டுவிடலாம். |
12:02 | Old Database Process ல் , Backup ஐ தேர்வு செய்யவும். |
12:08 | இது Joomla upgrade செய்யப்படும்போது database ல் உள்ளது போல் ஒரேமாதிரியான பெயர்களை கொண்ட table களை backup செய்வதற்காகும் |
12:17 | மேலே வலதுபுறம் Next button ஐ click செய்யவும். |
12:21 | நாம் இப்போது Finalisation and Overview page ல் உள்ளோம். |
12:26 | Finalisation section ல் Install Sample Data ஐ கண்டறியவும். |
12:32 | முன்னிருப்பாக, radio button களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டிருக்கும்.. |
12:37 | இங்கே பட்டியலிடப்பட்டுள்ள option கள், சில sample article கள் , menu கள் , plugin கள் மற்றும் site ல் உள்ளவைகளையும் நிறுவும். |
12:47 | தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு Joomla ஐ புரிந்துகொள்ள இவை பயன்படும். |
12:52 | முதல் முறை Joomla ஐ நிறுவும்போது option களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். |
12:58 | நான் அதை செய்ய விரும்பவில்லை. ஆகவே None option ஐ நான் தேர்வு செய்கிறேன். |
13:04 | page ஐ கீழே scroll செய்து, காட்டப்பட்டுள்ள Overview தகவலை சரிபார்க்கவும். |
13:10 | மேலே வலதுபுறத்தில் உள்ள Install button ஐ click செய்யவும். |
13:15 | இந்த படி சிறிது நேரம் எடுக்கும் |
13:18 | "Congratulations! Joomla is now installed" என்ற செய்தியை காண்பீர்கள். |
13:26 | Message ன் கீழ் , Remove Installation Folder button இருக்கும். |
13:31 | Installation folder ஐ நீக்க அதை click செய்யவும். |
13:35 | இந்த படியில் ஏதேனும் பிழை வந்தால், அதை நாமாகவே நீக்கவேண்டும். |
13:41 | எனக்கு பிழை வந்துள்ளது ஏனெனில் நான் linux superuser ஆக log-in செய்யவில்லை. |
13:47 | என்னிடம் delete permission ம் இல்லை. |
13:51 | ஆகவே நாம் terminal க்கு செல்லலாம் . |
13:55 | நாம் joomla folder ல் இருந்து installation folder ஐ நாமாகவே நீக்கவேண்டும். |
14:01 | இது கட்டாயமாகும். ஆகவே இந்த படியை தவிர்க்க வேண்டாம். |
14:06 | Type செய்க cd joomla. |
14:10 | பிறகு type செய்க sudo space rm space hyphen rf space installation slash. |
14:20 | Enter ஐ அழுத்தவும். |
14:22 | கேட்கப்படும்போது administrative password ஐ enter செய்யவும். |
14:26 | Installation folder வெற்றிகரமாக நீக்கப்பட்ட பிறகு , browser க்கு செல்லவும். |
14:32 | Type செய்க localhost slash joomla. |
14:36 | நாம் நமது வலைத்தளத்தை அடைந்துவிட்டோம். |
14:40 | நான் sample data ஐ நிறுவாததால், menus, articles போன்றவைகளை தற்சமயம் காண முடியாது . |
14:48 | நமது வலைத்தளத்தை நிர்வாகிக்கக்கூடிய administrator page க்கு செல்லலாம். |
14:56 | ஆகவே, localhost slash joomla slash administrator க்கு செல்லவும். |
15:02 | Enter ஐ அழுத்தவும். |
15:05 | administrator login மற்றும் password உடன் login செய்க. |
15:09 | நான் admin ஐ username எனவும் password ஐ admin123 எனவும் type செய்கிறேன். |
15:16 | நமது வலைத்தளம் நிறுவப்பட்டுள்ளதால் , நாம் administrator access ஐ கொண்டுள்ளோம். |
15:22 | நாம் கற்றதை நினைவுகூருவோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது
Joomla websiteல் இருந்து Joomla ஐ நிறுவுதல் phpmyadmin ல் database ஐ உருவாக்குதல் மற்றும் local server ல் Joomla ஐ நிறுவுதல். |
15:38 | இப்போது பயிற்சிக்கு வருவோம். |
15:41 | Joomla ஐ sample data உடன் நிறுவவும்.
Joomla ஐ uninstall செய்து, sample data இல்லாமல் புதிய Joomla ஐ நிறுவவும் . விித்தியாசத்தை ஒப்பிடவும் |
15:55 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
16:05 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
16:15 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
16:19 | Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. |
16:27 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
|